Sunday, August 2, 2009

சுவீற் அன்ட் சவர் டால்

பருப்பு வகைளிலே பாசிப்பருப்பிற்கு தனி ஒரு இடம் உண்டு. முழுப் பாசிப் பருப்பாகவும் உடைத்த பாசிப் பருப்பாகவும் பயன்படுத்திக் கொள்கிறோம்.

பச்சையாகவும், வறுத்தெடுத்தும் சமையல் செய்யலாம். வறுத்தெடுத்த பருப்பு நல்ல மணத்தையும் சுவையையும் கொடுக்கும்.

பாசிப்பருப்பில் குழம்பு, சுண்டல், இனிப்புத் துவையல், பொரியல், சட்னி, சாம்பார், கூட்டு, போன்ற கறிவகைகளைச் செய்யலாம்.


அடை, கொழுக்கட்டை, மோதகம், பிட்டு, வடை, தோசை போன்ற சிற்றுண்டி உணவு வகைகளும் செய்து கொள்ளலாம்.

இன்றைய சமையல் வறுத்து உடைத்;தெடுத்து தோல் நீக்கிய பாசிப்பருப்பில், மாங்காய் சேர்த்து சுவைக்கு வெல்லங் கலந்து சுவீற் அன்ட் சவர் டாலாக செய்தது.

காரச் சுவைக்கு சிறிது மிளகாய்ப் பொடி சேர்த்து ரொட்டி , தோசை, சாதம். பிரியாணி, சப்பாத்தி, நாண், என எதற்கும் ஏற்றது. சைட் டிஸ்சாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

1. பாசிப்பருப்பு வறுத்து உடைத்தெடுத்தது – ½ கப்
2. மாங்காய் - 1
3. மிளகாய்ப் பொடி - 1 ரீ ஸ்பூன்
4. மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்பூன்
5. கறுவாப் பொடி – சிறிதளவு
6. உப்பு தேவைக்கு ஏற்ப
7. வெல்லம் - 2 கட்டி

தாளிக்க

ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
பூண்டு – 3
செத்தல் - 2
கடுகு சிறிதளவு
உழுத்தம் பருப்பு சிறிதளவு
கறிவேற்பிலை சிறிதளவு

செய்முறை


முற்றிய புளிப்பான மாங்காயை தோலுடன் நடுத்தரத் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

வெங்காயம் பூண்டு செத்தல் சிறியதாக வெட்டி எடுங்கள்.

பருப்பை 2 ½ கப் நீரில் அவிய வைத்து, வெந்ததும் மாங்காய்த் துண்டங்களைப் போட்டு அவிய விடுங்கள்.


பின்பு மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, கறுவாப் பொடி, தேவைக்கு ஏற்ப உப்பு கலந்து கிளறி ஒரு கொதிவிட்டு, வெல்லம் சேர்த்து இறக்குங்கள்.

ஓயிலில் செத்தல், கடுகு, உழுத்தம் பருப்பு தாளித்து, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி இறுதியில் கறிவேற்பிலை சேர்த்து பருப்பில் கொட்டிக் கிளறி விடுங்கள்.

வறுத்த பருப்பும் தாளித வாசமும் கமகமக்க சுவை தரும்.

மாதேவி.


6 comments:

  1. சமையல் சூப்பர்.
    உங்கள் புளக்கின் புதிய வடிவமைப்பு மிக அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி Rubini. சின்னுவின் கைவண்ணம்தான் புதிய மாற்றம்.

    ReplyDelete
  3. மாதேவி எப்படி இருக்கீங்க, பிளாக்கை திறந்ததும் படம் ரொம்ப அருமை.

    சுவையா சோர் தாலும் சூப்பர்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்