Tuesday, March 26, 2013

'பூரான் சலட்' சீன உணவு அல்ல

தமிழர்களின் வாழ்க்கையில் பல காலமாக முக்கியத்துவப் பொருளாகிவிட்டது தேங்காய். மங்கலப் பொருளின் அடையாளமாகவும் பேணப்பட்டு வருகிறது.

பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து வழிபட்ட பின்னரே விசேட நிகழ்ச்சிகள் தொடங்குவார்கள்.

கோவிலுக்குச் செல்வதென்றாலும் தேங்காயுடன்தான் செல்கின்றார்கள். கோயில்களில் நேர்த்திக்காக சிதறு தேங்காய் அடிப்பார்கள். பண்டிகைகள் விழாக்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது.


நிறைகுடம் வைத்து தேங்காய்,மாவிலை,பூக்களால் அலங்கரித்து சந்தணம்,குங்குமம் வைத்து வரவேற்பார்கள்.

நவராத்திரியில் இலட்சுமியைத் துதித்து கலசத் தேங்காய் வைக்கப்படுகின்றது. சித்திரைப் பொங்கல் அன்று மாலையில் போர்த் தேங்காய் அடிக்கும் போட்டியும் நடக்கும்.


மஞ்சள் பூசிய தேங்காய் ஆரத்தி பூப்புநீராட்டு விழாக்களில் எடுக்கப்படுகின்றது. மஞ்சள் இட்ட தேங்காயின்மேல் திருமணத் தாலிவைத்து பூசிக்கப்படுகின்றது.

இளநீர், தேங்காய், காய்ந்தபின் கொப்பரை என முழுதாகவே இது பயன்படுகிறது.

தேங்காயில் நெய்யை நிறைத்து விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.

ஓமகுண்டலங்களிலும் தேங்காய் இட்டு வழிபடுகின்றார்கள்.

கார்த்திகை தீப நாளில் வீட்டு வாசலில் வாழை மரக்குத்தியை நாட்டி கொப்பரைத் தேங்காயில் எண்ணெயை ஊற்றி விளக்கு ஏற்றி வைப்பார்கள். பலமணி நேரம் விளக்கு எரியும்.


எங்கள் நாட்டில் தேங்காய் இல்லாமல் சமையலே இல்லை. கிராமங்களில் வீட்டைச் சுற்றி தென்னைமரங்கள் நாட்டியிருப்பார்கள். அதிலிருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய்கள் தேவைக்குப் போதுமானதாக இருக்கும்.வெப்ப காலம் ஆரம்பித்துவிட்டது. இக்காலத்திற்கு உடல் வெப்பத்தைத் தணிக்க தாகத்தைத் தீர்க்க நீராகாரங்களை அருந்துவதும் உடலுக்கு குளிரச்சியைத் தரும் காய்கறிகள், கீரைவகைகள், பழவகைகள், சலட் வகைகள், கஞ்சி வகைகள்,மோர் கூழ்,பால்சோறு வகைகள் உண்பதும் சிறந்தவை.

கோடையில் உடலிலுள்ள நீர் வியர்வையாக அதிகஅளவில் வெளியேறுவதால் அதை ஈடு செய்ய நீர்ச் சத்து மிக்க உணவுகளை கூடியளவு எடுப்பது அவசியம். நீராகரங்களை போதிய அளவில் எடுத்துக் கொண்டு எமது உடல் வெப்பத்தைப் பேணிக் கொள்ள வேண்டும்.

பனம் பழம் முளைக்கும் காலத்தில் கிடைப்பது பனம் பூரான். இதுவும் வெட்டிச் சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும். இது மஞ்சள் வெள்ளை நிறத்தில் இருக்கும்.உடைத்த தேங்காயில் பூ இருந்தால் அதை மங்கலமாகக் கொள்வார்கள்.

இதை தேங்காய்ப் பூரான், தவுன், சிதவல் என்றும் பெயர் சொல்லி அழைக்கின்றார்கள். தேங்காய் பூரான்களும்;

தெருவீதிகளில் விற்பனைக்காகக் காத்திருப்பதைக் காணலாம்.

நன்றி:- வீடு திரும்பல் மோகன்குமார்
இதிலுள்ள நீர்ச் சத்து நாவிற்குக் குளிர்ச்சியைத் தரும். தாகத்தையும் தீர்க்கும். காபோஹைதரேட் புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கல்சியம், பொஸ்பரஸ், விற்றமின்கள், அடங்கியுள்ளது.

வாய்ப் புண்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. வயிற்று நோய்களுக்கும் நல்லது என்கிறார்கள். இதை நேரடியாக உண்பதுடன் கோடை சலட்டாகவும் பயன்படுத்தலாம்.


தினந்தோறும் வெங்காயதயிர் பச்சடி, வெண்டைக்காய் தயிர்பச்சடி, வெள்ளரிக்காய் தயிர்பச்சடி என சலிப்போருக்கு சற்று வித்தியாசமாக மிக இலகுவாக செய்துகொள்ள சிறந்தது. பச்சலர் சமையலுக்கு ஏற்றது.

தேங்காய் பூரான் தயிர் சலட்.

தேங்காய் பூரானில் உப்பும் இனிப்பும் இயற்கையாகவே இருக்கின்றது அதனால் ஒருகப் தயிரை அடித்து எடுத்து வெட்டிய பூரான் துண்டுகளை கலந்துவிட்டால் சலட்தயார். விரும்பினால் குளிரவைத்து பரிமாறலாம்.

கோடை வெப்பத்துக்கு வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். 

காரம் எதுவும் சேர்க்கவில்லை காரம் விரும்பினால் சேர்த்துக் கொள்ளுங்கள்.


சலட் எனது முன்னைய பதிவுகள் இரண்டு:-

கீரை வித் மாங்காய் சலட்
குட மிளகாய் சலட்

-: மாதேவி :-