Saturday, July 20, 2013

கொக்கரக்கோ கோழி அக்கா... சின்னுவின் ஹொஸ்டல் சமையல்


சிறுவயதிலிருந்தே கோழிக் குஞ்சுகள் என்றால் அப்படி ஒரு ஆசை. மஞ்சள், சிகப்பு, ஆரெஞ் கலர் பூசிய கோழிக் குஞ்சுகள் சந்தையில் விற்பனைக்கு வரும்.


ஆசை தீர பார்த்து நிற்பேன். எத்தனையோ தடவை அம்மாவைக் கேட்டும் வாங்கித் தரவில்லை. அதனால் கவலைதான். இப்பொழுதும் ஆசைதான் என்ன செய்ய?



'கொத்தித் திரியும் அந்தக் கோழி அதைக் கூட்டி விளையாடு பாப்பா' என்றான் பாரதி. பாடல் படித்தவுடன் சரி. அவற்றைக் கூட்டி விளையாட என்னால் முடியவில்லையே. கோழிக் குஞ்சுகளை அம்மாக் கோழி தனது செட்டைகளால் அணைத்து அழைத்துச் செல்லும் அழகே தனிதான்.


கால்களால் நிலத்தைக் கிண்டி தனது குஞ்சுகளை கொக்.... கொக் என அழைத்து உணவு கொடுப்பதைக் கண்டு மயங்கியிருக்கின்றேன்.

அண்மையில் ஒரு வீட்டில் கோழிக் குஞ்சுகளைக் கண்டேன். படம் எடுத்துக் கொண்டேன்.


சில நாட்களின் பின் வளர்ந்து இருப்பார்கள் என்று ஆவலுடன் சென்றேன். அங்கு பார்த்தால் கோழிக் குஞ்சுகள் சட்டிகளில் ஏறாமலே வயிற்றுக்குள் சென்றுவிட்டன என்றார்கள்.

அட!!!

பூனையாருக்கு ரெம்பப் பிடித்து எல்லாக் குஞ்சுகளையும் நாள்வீதம் பிடித்து விழுங்கிவிட்டாராம்.

கோழி முட்டையும் பொரித்துச் சாப்பிட எனக்குப் பிடிக்கும். கோழிக் கறியும் விரும்பிச் சுவைப்பேன். புரெய்லர் கோழிகள் நாட்டுக் கோழிகள் பிடிக்கும்.

புரெய்லர் இனம் 42 நாட்கள் வளர்த்து இறைச்சிக்காக விற்கப்படுகிறது.


நெருப்புக் கோழி முட்டை மிகவும் பெரிதாக இருக்கும். இதன் முட்டை 12 பேருக்கு போதுமானதாக இருக்கும்.

வான்கோழி முட்டையும் பெரியது.

சிறிலங்கன், தாய், வியட்னாம் சமையல்களில் லெமன் கிராஸ் முக்கிய இடத்தை வகிக்கிறது. சதன் ஏசியன் சமையல்களில் பொதுவாக உபயோகிப்பார்கள்.


விருந்துசாப்பிட வருகிறீர்களா ?

இலகுவான லெமன் கிராஸ் போட்ட ஹொஸ்டல் சமையல் செய்திருக்கின்றேன்.

சிக்கன் லெமன் கிராஸ்


எலும்பில்லாத கோழி இறைச்சி -  ¼ கிலோ
பச்சை மிளகாய் அல்லது செத்தல் - 1
பூண்டு -2 பல்லு
லேமன் கிராஸ் - 1
மிளகாய்த் தூள் - ½ தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
மசாலாத் தூள ;- ¼ தேக்கரண்டி
லெமன்¬ - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
ஓயில் - 2 ரீ ஸ்பூன்
தண்ணி அல்லது தேங்காய் பால் - ¼ கப் அளவில்.

செய்வோமா 


லெமென் கிராசை 3 - 4 அங்குல நீளமாக வெட்டி எடுங்கள்.

வெங்காயம் பூண்டு மிளகாய் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இறைச்சியை மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு. லெமென் கிராஸ் கலந்து 15-20 நிமிடங்கள் ஊறவிடுங்கள்.

பானில் ஓயில் விட்டு வெங்காயம், பூண்டு, மிளகாய், லேசாக வதக்குங்கள்.

ஊறிய இறைச்சியை கொட்டிப் பிரட்டுங்கள்.

2 நிமிடம் வேகவிடுங்கள்.

மீண்டும் பிரட்டி தண்ணீர் அல்லது பால் விட்டு தட்டுப் போட்டு மூடிவிடுங்கள்
5 நிமிடத்தில் திறந்து மசாலாத் தூள் போட்டு கிளறுங்கள்

இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்திருந்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
லெமன்சாறு விட்டு பிரட்டிவிடுங்கள்.


இரண்டு துண்டை எடுத்து சுவைத்துப் பாருங்கள்.

தோழி பூனைகள் வந்து களவாடுவதற்கு முன்
கறியை உள்ளே எடுத்து வைத்துவிடுங்கள்.

- சின்னு -

0.0.0.0.

41 comments:

  1. சுவைத்துப் பார்த்து விட வேண்டியது தான்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல்வருகை என எண்ணுகின்றேன் நல்வரவு.

      மகிழ்ச்சியும் நன்றியும்.

      Delete
  2. சிக்கன் லெமன் கிராஸ் செய்முறைக்கு நன்றி...

    படங்கள் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அழகழகான குஞ்சுகள். படங்கள், காணொளி அனைத்தும் அழகு.

    ReplyDelete
  4. படங்கள் இயற்கையாக உள்ளன! சமையல் முறையை எழுதியுள்ள முறை நன்று!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

      Delete
  5. லெமன் கிராஸ் பக்கமே இதுவரை போனதில்லை. விரைவில் செய்துபார்க்கிறேன். அழகான கோழிக்குஞ்சுப் படங்கள் மனம் கொள்ளை கொண்டன. நன்றி மாதேவி.

    ReplyDelete
    Replies
    1. செய்து சுவைத்து பிடித்ததா என சொல்லுங்கள்.

      மிக்க நன்றி.

      Delete
  6. சிக்கன் லெமன் கிராஸ் செய்முறைக்கு நன்றி...

    வீட்டுக்கு போனதும் செஞ்சி சாப்பிடனும்... படங்களும், ஆரம்பித்த கதையும் அழகாக உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. "வீட்டுக்கு போனதும் செஞ்சி சாப்பிடனும்..." உங்களுக்கு சமைக்க வருமா ? நன்று. செய்து வயிறு முட்ட ஒரு பிடி பிடியுங்க :))

      வருகைக்கு நன்றி.

      Delete
    2. அஞ்சி வருசமா சமச்சிதான் சாப்பிட்டுகிட்டு இருக்கேன்... உங்க தளத்துல போடுற எல்லா வித சமையலையும் செஞ்சி சாப்பிடுரதுக்குன்னே, சீக்கிரம் ஒரு பொண்ண பார்க்கணும்னு இருக்கேன்... சரிதானே!

      Delete
  7. அழகான கோழிகளையும் குஞ்சுகளையும் பார்க்கப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி!

    மிகுதி எனக்கு வேண்டாம்....;)

    ReplyDelete
    Replies
    1. உங்களால் பார்க்கத்தான் முடியும் சாப்பிட முடியாதோ ? ரசனைக்கு நன்றி.

      Delete
  8. காணொளி அருமையாக இருக்கு..... ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. கண்டு களித்ததற்கு மகிழ்கின்றேன். நன்றி.

      Delete
  9. நான் சிக்கன் சாப்பிபிடறதுண்டு... ஓட்டல்கள்ல மட்டும்! வீட்ல கேட்டா... கிடைக்கறது வேற... அதப்பத்திக் கேக்காதீங்கோ...! ஹி... ஹி...! அதனால இங்க இருக்கற செய்முறையை படிச்சு ரசிக்கறேன்.

    ReplyDelete
  10. "வீட்ல கேட்டா... கிடைக்கறது வேற......" ஹா....ஹா.... ரசித்து எழுத உங்களால்தான் முடியும்.

    ஹோட்டலில் கோழிகறி சுவையாக இருக்குமே. நன்றாக சாப்பிடுங்கள்.

    நானும் ஆடு, கோழி சாப்பிட்டு பலவருடங்கள்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  11. அட ஞாயிற்றுக் கிழமை வெளியில எல்லாக் கடைகளும்
    மூடிக் கிடக்குது .சத்தம் போடாமல் இங்கு கையை நனைக்க
    வேண்டியது தான் .அட கோழிக் கறி வாசனை எப்படிக்
    கழுவியும் போக மாட்டேங்குதே .இந்த வீட்டுக் கார அம்மா
    வரும் முன் ஓடிட வேண்டியது தான் :)))))

    ReplyDelete
    Replies
    1. சாப்பிட்டு முடித்துவிட்டீர்களா :))) துரத்தி பிடித்திடுவேனே :)))

      வந்து சுவைத்ததற்கு மிக்கநன்றி.

      Delete
  12. சுவாரஸ்யமான தகவல்கள். அருமையான படங்கள். தலைப்பையும் இரசித்தேன்:)! நேரமிருந்தால் இந்தக் கதை  வாசியுங்களேன்: அடைக்கோழி

    ReplyDelete
    Replies
    1. நன்றி .
      கதை இன்றுதான் படித்தேன். அருமை.

      Delete
  13. கோழி முட்டையிலிருந்து வெளி வரும் காணொளி அருமை.
    படங்கள் எல்லாம் அழகு மாதேவி.

    ReplyDelete
  14. வணக்கம் !
    தங்களின் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்
    முடிந்தால் தங்களின் வருகையினை உறுதிப் படுத்துங்கள் .
    தங்களை அறிமுகம் செய்ய எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பதனை
    நான் மிகவும் பெருமையாகக் கருதுகின்றேன் .மிக்க நன்றி படைப்பிற்கு !
    http://blogintamil.blogspot.ch/2013/07/3.html

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி.
      வலைசரத்துக்கு வருகின்றேன்.

      Delete
  15. வாசிக்கவே வாசனை பசிக்க வைக்குது.....படங்களும் அருமை மாதேவி !

    ReplyDelete
    Replies
    1. எடுத்து சாப்பிடுங்கள். :))

      Delete

  16. வணக்கம்!

    கோழி அமா்ந்தே அடைகாக்கும்
    கொள்ளை அழகைக் கண்ணுற்றேன்!
    சோழி போன்று சிறுகுஞ்சு
    சோக்காய் இருக்கு! சொக்குகிறேன்!
    தோழி! சமைக்கும் மாதேவி!
    சுவைக்கும் வண்ணம் பதிவேற்றி
    வாழி என்று வாழ்த்துகிறேன்!
    வண்ணத் தமிழ்போல் வளமுடனே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. கவிபாடி அசத்திவிட்டீர்கள். நன்றி.

      Delete
  17. கோழிகளின் அழகைக்காட்டி விட்டுஅதை சமைப்பது எப்படி என்பதையும் சொல்லி விட்டீர்களே/இதுதான் யதார்த்தமோ?

    ReplyDelete
    Replies
    1. கோழிகள் அழகுடன் சாப்பிட சுவையானதும் என்பதை ஏற்கத்தான் வேண்டும்.

      அழிந்துவரும் அழகிய புள்ளிமானையும் சிலர் வேட்டையாடுகிறார்களே :((

      வருகைக்கு நன்றி.

      Delete
  18. கோழியும்,சிக்கன் லெமன் க்ராஸ் சமையலும் சூப்பர்ர்ர்

    ReplyDelete
  19. சிக்கனுடன் லெமன் கிராஸ் மிக அருமை மாதேவி

    ReplyDelete
  20. உங்கள் சமையலில் அவ்வளவாக தக்காளி சேர்ப்பதில்லையே , புளி அல்லது எலுமிச்சை பழம் தான் சேர்ப்பீர்களா?

    ReplyDelete
    Replies
    1. இந்திய சமையலில் தக்காளி இல்லாமல் பெரும்பாலும் சமையல்கள் இருக்காது.

      நமது நாட்டு சமையலில் எலும்பிச்சை, புளி இரண்டுக்கும்தான் முக்கியத்துவம்.

      சிலர் தக்காளி அலர்ஜி எனக்கூறி தவிர்த்துவிடுவார்கள்.

      தக்காளியை தனித்து குழம்பாக செய்வார்கள். அல்லது உருளைக்கிழங்கு, கத்தரி,வெண்டை ,முருங்கை, குழம்புகளில் கலப்பார்கள்.

      Delete
  21. வணக்கம்

    வலைச்சர அறிமுகத்துக்கு எனது வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/08/2.html?showComment=1376968367370#c5655263963894551701

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  22. சின்னுவின் சமையல் பகிர்வு சூப்பர்.படங்கள் மிக அழகு.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்