சாப்பாட்டின் முன் பசியைத் தூண்டுவதற்காக அருந்தும் உணவாகக் கருதப்படுகிறது. அதே நேரம் பல்வேறு முறைகளில் தயாரித்துக் கொள்ளலாம். சேர்க்கும் பொருட்களுக்கு அமைய போஷாக்குச் செறிவும் வேறுபடும்.
குழந்தைகள் முதல் சகல வயதினருக்கும் உகந்தது. உண்ண விருப்பமின்றி இருக்கும் நோயாளர்களுக்கு சக்தியையும், விற்றமின்களையும் கொடுப்பதுடன், இலகுவாக அருந்தவும் கூடியது. எளிதில் ஜீரணமடையும்.
உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஹெல்த் சூப் பொருத்தமானது. அவை பசியைத் தணிப்பதுடன், கலோரி அளவும் குறைவாக இருப்பதால் எடையைக் குறைக்க உதவும்.
கிழங்கு பட்டாணி சூப்
தேவையான பொருட்கள்
1) கிழங்கு – 1
2) பச்சைப் பட்டாணி – ¼ கப் (சுடுநீரில் போட்டு எடுத்து வைக்கவும்)
3) கரட் - 1
4) பெரிய வெங்காயம் - ½
5) மிளகு – 3 -4
6) பூண்டு – 2
7) பிரியாணி இலை – 2
8) மார்ஜரின் - 1 ரீ ஸ்பூன்
9) உப்பு தேவையான அளவு
10) தண்ணீர் - 2 கப்
11) துவரம் பருப்பு அவித்த நீர்– 1 கப்
12) மிளகுப்பொடி சிறிதளவு
13) எலுமிச்சை துண்டுகள்
செய்முறை
காய்கறிகளை சிறியதாக வெட்டி எடுக்கவும். பாத்திரத்தை வைத்து மார்ஜரின் போட்டு மிளகு பிரியாணி இலை வதக்கவும்.
பூண்டு சேர்த்து வதக்கி காய்கறிகளையும் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
தண்ணீர்விட்டு அவியவிடவும். அவிந்ததும் இறக்கி வடி கொண்டு வடித்து, வடியில் விழும் மரக்கறிகளை நன்றாக மசித்துவிடவும்.
சூப்பை அடுப்பில் வைத்து, துவரம் பருப்பு அவித்த நீர், உப்பு, மிளகு பொடி போட்டுக் கலக்கி ஒரு கொதி விடவும்.
பட்டாணியைச் சேர்த்து இறக்கவும்.
கோப்பையில் ஊற்றி எலுமிச்சம் துண்டுகளுடன் பரிமாறுங்கள்.கண்ணைக் கவரும் வர்ணத்தில் சூப் தயார்.
சூப்புடன் இடையே கொறித்துக் கொள்ள சீஸ் பிஸ்கட் 2-3 வைத்துக் கொண்டால் சுவை சேர்க்கும்.
-: மாதேவி :-
kilangu means potato
ReplyDeleteur recipes are too gud.
thanks fo ur work.
Yes lalitha Kilanku is potato. Thanks for your comment
ReplyDeleteமார்ஜரின் - இது என்ன.
ReplyDeleteஇது இல்லையென்றால் இதுக்கு பதிலாக என்ன சேர்த்துக்கொள்ளலாம்.
நன்றி. மார்ஜரின் என்றால் தாவரக் கொழுப்பு.
ReplyDeleteஅதற்குப் பதிலாக பட்டர் - வெண்ணைய் சேர்த்துக் கொள்ளலாம்