Saturday, October 19, 2013

குண்டாவதைத் தடுக்கும் குண்டுப் பூசணிக்காய்


கொடிக்காய் இனத்தைச் சேர்ந்த படர்கொடித் தாவரம்.


பறங்கிக் காய் பிஞ்சாக இருக்கும்போது பச்சையாக இருக்கும். நன்றாக முற்றிய பின்னர் பழுப்பு நிறத்தில் இருக்கும். வெட்டினால் உள்ளே மஞ்சள் நிறச் சதைப் பகுதி இருக்கும். பறைபோன்று உள்ள காய் என்ற பொருளால் பறங்கிக்காய் ஆனது என்கிறார்கள்.

பூசணிக்காய் என்பது பச்சை நிறத்தின் மேல் வெண்படலாம் பூசியது போல இருக்கும். உள்ளே வெண்சதைப் பகுதி இருக்கும். இதை வெள்ளைப்பூசணி, நீர்த்துப்பூசணி எனவும் அழைப்பார்கள்.


பூசுணைக்காய் என்ற பெயர்தான் பூசணிக்காய் ஆகிவிட்டது. டுபாய் பூசணி என்ற சிறுவகை இனமும் இருக்கின்றது.


16ம் நூற்றாண்டில் குண்டு வடிவமான புதுவகைப் பூசணிக்காய் அறிமுகமானது. அது பறங்கியர் நிறத்தைப் போன்று இருந்ததால் பறங்கிப் பூசனி என அழைத்தார்கள்.

என்ன யெபர் வைத்தாலும் நம்ம பூசணிதான்

இலங்கையில் பறங்கிக் காயையும் பூசணி என்றே சொல்கிறார்கள். சிங்களத்தில் வட்டக்கா என்கிறார்கள்.

பல்வேறு மொழிகளிலும்  இவ்வாறு அழைக்கிறார்கள்.

Afrikaans - Pampoen
Arabic      - Kara' Safra
Chinese(Mandarin) Nangua
French   Potiron
Hindi Kaddu
Marathi Lal Bhopala
Japan Kabocha
Malayasia Labu
Russia  Tikba

ஆண் பூவும் பெண் பூவும்



இதன் தாயகம் வட அமெரிக்கா வடக்கு மெக்சிக்கோ என்கிறார்கள். தாவரவியல் பெயர் Banincasa hispida ஆகும்.

பேணிப் பாதுகாக்கப்படும் காய்களில் ஒன்று. பல மாதங்கள் வரை முழுக்காய்கள் பழுதடையாது இருக்கும்.

பூசணியின் பயன்கள்

இக்காய் பிதுர் விரத நாட்களுக்கு சிறப்பாகச் சமைக்கப்படும்.

அலங்காரக் கலைப் பொருளாகவும் அனைவரையும் கவர்ந்து இழுக்கின்றது. லாம் ஷேட், ப்ளவர் வாஸ் என பல அலங்காரங்கள் இருக்கின்றன.

முக அலங்காரத்திற்கும் சருமப் பொலிவிற்கும் பூசணிகாய் கூழ் பயன்படுத்தப்படுகின்றது.


கரட்டீன் சத்து அதிகம் இருக்கிறது. வெப்ப காலத்தில் உடலில் அதிகரிக்கும் வெப்பத்தை நீக்குகிறது.

நீர்ச் சத்து இருப்பதால் சிறுநீரக நோய்களுக்கு நல்லது. நார்ப் பொருள் இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும்.


பூசணி விதைகள் டயற்றில் இருப்போருக்கு சிறந்தது என்பார்கள். கலோரி குறைவாக இருப்பது காரணமாகும். கொழுப்பும் குறைந்தது.

பூசணியின் போசனை

கலோரி 33
கொழுப்பு 0.2 கிராம்
புரதம் 1.3 கிராம்
கல்சியம் 18 மிகி
இரும்பு 0.6 மிகி
நார்ப்பொருள் 0.5 கிராம்
சர்க்கரை 2.8 கிராம்
விற்றமின் சி -11 மி.கி
விற்றமின் பி1 - 0.06 மி.கி
கரோடின் 2400 மைக்ரோ கிராம்

பூசணியின் போசனை அளவுகளைக் கவனித்தால் அதில் உடலைக் குண்டாக்கும் கொழுப்புப் பொருள் இல்லை எனவும் அளவிற்கு (0.2 கிராம்) குறைவாகவே உள்ளது. அதேபோல எடை அதிகரிப்பிறகு மற்றொரு காரணியான  காலோரி அளவும் (கலோரி 33) மிகக் குறைவாகவே உள்ளது.

எனவே பூசணியானது தான் குண்டாக இருந்தாலும் எம்மைக் குண்டாக விடாது என்று நம்பலாம். தாராளமாகச் சுவைத்து  உண்ணலாம்.

பூசணியின் இலைகளும் உணவாக உண்ணப்படுகின்றன. அவித்து எடுத்து அவித்த கிழங்கு இறைச்சி மீன் வகைகளை வைத்து சுற்றி எடுத்து சோசில் தோய்த்து உண்ணலாம். கிராமத்தில் பொரியல் செய்துகொள்வோம். இங்கு கிடைப்பதில்லை.

பூசணிப் பூவும் பொரியல் செய்வோம். வெளிநாட்டில் ஸ்டாட்டர் ஆகவும் டீப் ப்ரை செய்து உண்கிறார்கள்.


ரோஸ்டட் விதையிலிருந்து ஓயில் தயாரிக்கிறார்கள். சமையலுக்கும், சலட் டிரெஸிங்கிக்கும்.      பூசணி விதைகளை பச்சையாகவும் வறுத்தும் சுட்டும் உண்ணலாம். சூப், சலட் வகைக்கும் கலந்து கொள்ளலாம்.

பிரபல பூசணி்கள்

அமெரிக்காவில் டல்லே பாரி பூசணிக்காய் எறியும் போட்டி ஒன்றும் நடாத்துகிறார்கள். ஆரம்பத்தில் கைகளால் தூக்கி எறிந்த போட்டி இப்பொழுது பீரங்கியில் வைத்து அடிக்கும் போட்டியாக மாறிவிட்டது. பீரங்கியில் வைத்து அடித்தபோது கால் மைலுக்கு மேல் சென்று விழுந்தது. ரீவி நிகழ்ச்சி ஒன்றில் காட்டினார்கள்.

மிகவும் பெரிய பறங்கிக் காய் அமெரிக்காவில் கிறிஸ்டீபன்ஸ் என்பவரது தோட்டத்தில் விளைந்தது. இதன் நிறை 821 கிலோகிறாம். பூசணியின் அகலம் 15 அடி.


இலங்கையில் முன்னேரியா கல்வானை பகுதியில் 30கிலோ எடையுடைய வெளிநாட்டு வகையைச் சேர்ந்த பூசணிக்காய் சரத் குருவிட்ட என்பவரது தோட்டத்திலே அண்மையில் விளைந்தது.

'பேக்ட் பம்கின் பை' ஐக்கிய ராச்சியத்தின் பாரம்பரியம் மிகவும் பிரபலமான உணவு. எமது நாடுகளில் எரிசேரி, பச்சடி, அல்வா, துவையல், என பலவும் செய்துகொள்கிறார்கள்.


இக்காரக்கறி சாதத்துக்கு ஏற்றது. இன்னுமொரு இலகுவழி இரவு ரொட்டி, சப்பாத்தி, தோசை,இட்லிக்கு பகல்வைத்த கறியை நன்கு மசித்து விட்டால் சட்னிபோல தொட்டுக்கொள்ளலாம் புளிப்பாகவும் இனிப்பாகவும, காரம்சேர்ந்தும்; இருக்கும்;.

பூசணிகாய் காரக்கறி


பழப்பூசணி காய் - ¼ கிலோ
வெங்காயம்  - 1
பூண்டு - 5 பல்லு
மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
மஞ்சள் தூள் -சிறிதளவு
கட்டித் தேங்காயப் பால் - 1 டேபிள் };பூன்
உப்பு புளி தேவைக்கு ஏற்ப
தண்ணீர் சிறிதளவு.

தாளிக்க

கடுகு - ¼ ரீ ஸ்பூன்
செத்தல் -  1
உழுத்தம் பருப்பு - ¼ ரீ ஸ்பூன்
வெங்காயம் சிறிதளவு
கறிவேற்பிலை, ரம்பை இலை


செய்முறை

காய்களை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் செத்தல் இரண்டையும்வெட்டி வையுங்கள்.

பூண்டை தட்டி எடுங்கள்.

காய், தண்ணீர், உப்பு, வெங்காயம,; பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் கலந்து வேக விடுங்கள்.

வெந்த பின் புளித் தண்ணி ஊற்றி கொதிக்க விட்டு தேங்காய்ப் பால் ஊற்றி கிளறிவிடுங்கள்.


தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொட்டிக் கிளறுங்கள்.

:- மாதேவி -:
0.0.0.0.0



50 comments:

  1. வணக்கம்
    பூசனிக்காய்க்கு அருமையான விளக்கம் ...எங்களுடைய ஊரில் சொல்வோம்..
    பச்சை நிறத்தில் இருக்கு உருண்டை வடிவானதை (பூசனிக்காய் என்றும் )நீங்கள் சொன்ன டுபாய் வகை(சின்னப்பூசனியை இந்தியா பூசனிக்காய் என்று அழைப்போம்.... இதுதான் இலங்கையில் கதைக்கும் தமிழில் உள்ளது...
    சமயல் குறிப்பு அருமை வாழ்த்துக்கள்.சிங்களத்தில் (வட்டக்கா)சரிதான்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிலுக்கு நன்றி.

      Delete
  2. எனக்கும் இதன் சுவையும் மனமும் ரொம்ப பிடிக்கும்

    ReplyDelete
  3. பூசணிகாய் காரக்கறி செய்ததில்லை... செய்முறைக்கு நன்றி சகோதரி...

    ReplyDelete
  4. பூசணிக்காட் சமையல் அசத்தியது ,,பாராட்டுக்கள்..

    ஆஸ்திரேலியாவில் நீளத்துண்டுகளை ஆலிவ் ஆயில் ஸ்பிரே செய்து
    அவனில் வைத்து பேக் செய்து உப்பு பெப்பர் தூள் தூவிக் கொடுத்தார்கள்..

    அதிகமான சமைக்கும் சிரமமில்லாமல் சுவையாக இருந்தது ..!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிட்ட குறிப்பும் சுவையானதே. நன்றி.

      Delete
  5. ஆஹா...ஆஹா... அட்டகாசமான பதிவு! நம்மூரில் வகைவகையானவை கொட்டிக்கிடக்கு. சிலசமயம் முழுப்பூசணியே 99 சென்டுக்குக் கிடைக்கும்.

    இனிமேல் தினமும் பூசணி தின்னு உடம்பை ஊசி போல ஆக்கப்போறேன்:-))))

    முழுப்பூச்ணி கெடாதுன்னு சொன்னது உண்மையே. மூணு வருசத்துக்கு முன் வாங்கியது இன்னுமப்படியே இருக்கு. ஒருநாளும் கெடப்போவதில்லை நான் கைதவறிக் கீழே போட்டால் ஒழிய:-))))

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சுவாரஸ்யமாக பதில்தந்துள்ளீர்கள். ரசித்தேன்.

      Delete
  6. பெரிய ஆராய்ச்சியே செய்துவிட்டீர்கள் .அருமை .

    ReplyDelete
  7. அட.. அட.. பூசணிக்காய் மகிமை மனதைப் பூரிக்கவைத்துவிட்டது!..

    அருமை பெருமைகளை அறிந்து உளம் மகிழ்ந்தேன்..
    காரக்கறியும் ஸ்.. அசத்தல்..:)

    நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. பூசணிக்காய் போன்றே, படங்களும் விளக்கங்களும் மிகப்பெரிய அளவில் ... அருமையாக ... ருசியாக இருந்தன. பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி.

      Delete
  9. சின்ன வயசில் அம்மா பூசணிக்காய் உறைப்புக் கறி செய்து தருவா. மிக ருசியாக இருக்கும்.தூள் போடாத வெள்ளைக் கறியை விட இதுவே எனக்கு நல்லாப்பிடிக்கும்.
    அதேவிதமான பக்குவத்தில் மனைவிக்கும் செய்யத் தெரிந்தமை எனக்கு கிடைத்த பேரதிஸ்டம்.
    நீங்கள் சொன்ன பூசணிகாய் காரக் கறியும் அதேபோலான சமையல் போலத்தான் தெரிகிறது. நல்ல பதிவு வாழத்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கொடுத்துவைத்தவர்தான் நீங்கள்.

      கருத்துக்கு நன்றி.

      Delete
  10. படங்களும் தகவல்களும் அருமை மாதேவி. செய்முறைக் குறிப்புக்கும் நன்றி.

    ReplyDelete
  11. பூசணிக்காய் படங்கள், செய்திகள், ருசியான காரக்கறி எல்லாம் மிக அருமை மாதேவி..
    இப்போது இங்கு (நியூஜெர்சியில்)எங்கும் வீடுகளில் அழகு அழகாய் பூசணி வாசலில் வைத்து இருக்கிறார்கள்.பார்த்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அட!!! உங்கு வீடுகளில் பூசணி கேட்கவே ஆனந்தம். . மகிழுங்கள்.

      Delete
  12. ஆவ்வ் பூசணி பற்றி மிக அருமையான தகவல்கள்.. அதன் இலைகளும் சமைக்கலாமா????? நம்ப முடியவில்லை. இங்கு கோடையில் நட்டேன்ன்.. ஒரு பூவும் வந்திருந்தது.. ஸ்லக் பிள்ளை ஊர்ந்து வந்து குறுக்கே கடித்து துண்டாக விழுத்திவிட்டார் கொடியை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    ReplyDelete
    Replies
    1. ஆ!........ அடுத்தமுறைநாட்டிப்பாருங்கள் முயற்சி திருவினையாக்கலாம் யாருக்கு? :))))

      Delete
  13. அடேயப்பா! பூசணி பற்றி இவ்வளவு தகவல்களா? அருமை

    ReplyDelete
  14. பூசணிக்காய், பரங்கி பற்றிய தகவல்கள், புகைப்படங்கள், சமையல் குறிப்புகள் அனைத்தும் அருமை மாதேவி!!

    ReplyDelete
  15. அருமையான யோசனை கொடுத்திருக்கிறீர்கள் மாதேவி.
    உடல் இளைக்க பூசணி சாறு குடிக்கலாம் என்று தெரியும். இத்தனை குணங்களை நீங்கள் பட்டியல் இட்டிருப்பதைப் படிக்கும்போது மனம் பரபரக்கிறது. அதுவும் பூசணிக்காய் காரக்கறி. யம்ம்ம்ம்ம்ம்ம்.நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. யம்ம்ம் :) ரொம்ப மகிழ்ச்சி.

      நன்றி.

      Delete
  16. விதைகளை வெய்யிலில் உலர்த்தி வறுத்து சாப்பிட சுவையானது. உடல் இளைக்க குண்டு பூசணி . தகவல்கள் அருமை மாதேவி

    ReplyDelete
  17. பம்கின் சூப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன். மிக சுலபமான குளிர்காலத்துக்கு ஏற்ற சுவை மிகுந்த பதார்த்தம் ஒன்று அது.

    தகவல்கள் யாவும் அருமை மாதேவி.

    ReplyDelete
    Replies
    1. பிறகு ஒருதடவை தருகின்றேன்.

      நன்றி.

      Delete
  18. ஓ... பூசணி காயில் இவ்வளவு இருக்கா...?!
    தெரிந்துக்கொண்டேன்.
    நன்றி தோழி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மகிழ்கின்றேன்.

      Delete
  19. தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  20. அருமையான குறிப்பு.நல்ல பகிர்வு.

    ReplyDelete
  21. தங்கள் தளத்திற்கு எனது முதல் வருகை.பயனுள்ள அருமையான குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  22. அருமையான தகவல்கள்,இலை,பூவெல்லாம் சமைப்பாங்களான்னு கூட தெரியாது..இது இனிப்பாக இருப்பதால் அவ்வளவா விரும்புவதில்லை..தங்கள் குறிப்பு சுவையாக இருக்கு.

    ReplyDelete
  23. THANKS A LOT FOR YOUR 100% ATTENDANCE FOR PART-1 TO PART-84 OF MY SERIAL .

    அன்புடன் VGK

    ReplyDelete
  24. அரிய பதிவு. பல தகவல்கள்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  25. பூசனிக்காயின் அனைத்து தகவல்களும் குறிப்பும் மிக அருமை

    ReplyDelete
  26. அடேயப்பா! பூசணிக்காய் பற்றி எத்தனை எத்தனை தகவல்கள்!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எனது பதிவு தேடி வந்து புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிய உங்களுக்கு எனது நன்றி!

    ReplyDelete

  27. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
  28. சிறக்கட்டும் 2014

    ReplyDelete
  29. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா!!

    ReplyDelete
  30. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  31. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  32. 14.01.2014 வலைச்சர அறிமுகத்துக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    என் மெகா தொடரின் பகுதி-1 முதல் பகுதி-106/2/3 வரை தொடர்ச்சியாக வருகை புரிந்து கருத்தளித்துள்ளீர்கள். மிக்க நன்றி..

    எனினும் தொடரின் கடைசி மூன்று பகுதிகளான பகுதி-106/3/3, 107 + 108 ஆகிய மூன்றுக்கும் மட்டும் தாங்கள் வருகை தர வேண்டியுள்ளது.

    அவசியம் விரைவில் வருகை தந்து 108/108 என்ற சிறப்பிடம் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  33. படிக்காத பழைய பதிவுகளை சேர்ந்த்து படித்து அருமையாக கருத்து சொல்லி உற்சாகபடுத்துவதற்கு நன்றி மாதேவி.
    உங்கள் வருகை மிக மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
  34. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :
    அன்பின் பூ - இரண்டாம் நாள்

    ReplyDelete
  35. அன்பு மாதேவி,பூசணிக்காயும் பறங்கிக்காயும் இல்லாத திருமணமே இல்லை. காசி அல்வா என்று திருமணத்திற்கு முதல் நாள் பரிமாறப் படும். எங்களனைவருக்கும் மிகப் பிடித்த உணவு பறங்கிக்காய் சாம்பார். அதைத் தின்றே நாள் கழியும். மேற்கொண்டவிவரங்கள் அத்தனையும் விரிவாகப் பூரணமாகக் கொடுத்திருக்கிறீர்கள். மிக மிக நன்றி. மாதேவியின் பதிவு என்றாலே பொக்கிஷம் என்று நினைப்பேன்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்