நன்கு எங்களுக்கு அழுக்குப் போக உடல் எங்கும் தேய்த்து குளிக்க வார்த்தார். நாங்களும் தலைநகர் பார்க்கும் மகிழ்ச்சியில் உடல்நோவையும் மறந்து இருந்தோம்.
எம்மைப் பார்க்க எமக்கே பெருமைபிடிபடவில்லை. தங்க விக்கிரகங்கள் போல ஆகிவிட்டோமே நாம். மறுநாள் பக்கத்து வீட்டு அக்காவுடன் பிரயாணித்து 200 மைல்களுக்கு மேல் பல ஊர்களையும் கடந்துகொழும்பு வந்து சேர்ந்தோம்.
வான் உயர்ந்த பெரிய மாடிக் கட்டிடங்களையும் தலைநகரையும் பார்த்த மலைப்பில் இருந்தோம் நாங்கள்.
எங்களையும் அழைத்துக் கொண்டு அக்கா தமது உறவினர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவர்கள் எம்மைக் கண்டதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தங்கங்களே வாருங்கள் எனஅன்பாக அணைத்து கூட்டிச் சென்றார்கள்.
யாழ்ப்பாணத்து தங்கங்கள் |
Thanks :- Stock food |
Thanks :- ourjaffna.com |
காலையில் தொடங்கும் வேலை சாயந்தரம் அளவில் முடிவிற்கு வரும். சில இடங்களில் அன்று பனம் பாத்திக்கு சோறு மாமிசம் சமைத்து வைத்து படையலும் நடக்கும். கார்த்திகை விளக்கீட்டு நாளில் பனம்பாத்திக்கும் விளக்கு ஏற்றிவைப்பார் அம்மா.
இரவு வீட்டில் திருவிழாத்தான். அன்று சுற்றுச் சூழ அக்கம் பக்கத்தார் மாமா, மாமி எனத் தொடங்கி சித்தப்பா குழந்தைகள் வரை உறவுக் கூட்டங்கள் யாவும் மாலை 6 மணிக்கு வந்து கூடிவிடுவார்கள்.வீடே நிறைந்திருக்கும்.
இரவு லைட் வெளிச்சம் இல்லாது போய்விட்டால் உதவுவதற்கு பெற்ரோமக்ஸ் இரண்டும் மாமாவின் கையால் தூசிதட்டி எண்ணெய் விட்டு புது மன்டில் கட்டித் தயாராகிவிடும். முற்றத்தில் பனங்கிழங்கு மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும்.
Thanks :- ta.wikipedia.org |
முற்றத்தில் கிடக்கும் கிழங்குகளில் நன்றாகவிளைந்த கிழங்குகளை எடுத்து பெண்கள் யாவரும் கூடிப் பேசி தோலுரித்து மூள் வெட்டி ஓரிடத்தில் வைப்பார்கள். சித்தப்பா மாமா அவற்றைச் சுமந்து சென்று அண்டாக்களுக்குள் இட்டு தாம்பாளத்தால் மூடிவிடுவர். பாட்டி அம்மா அடுப்பை மூட்டி வைப்பார்கள்.
அப்பா தன் பங்கிற்கு இலங்கை வானொலியைப் போட்டுவிடுவார். சௌந்தரராஜன் சுசீலாவின் பாடல்கள் அலறும். கூட்டு குழு வேலைகள் தொடரும்.
அவித்த கிழங்குகளை ஓலைப் பாயில் விறாந்தையின் ஓர் ஓரமாகக் கொட்டி வைப்பர். அடுத்த தொகுதி பச்சைக் கிழங்கு மீண்டும் அண்டாவிற்குள் அலறத் தொடங்கும். ஆறிய கிழங்கின் தோலைச் சீவி எடுப்பார்கள். சிறுவர்கள் நாம் கிழங்கைக் கிழித்து நடுவே உள்ள பீலியின் நுனியின் இனிப்பைச் சுவைத்து இன்புறுவோம்.
பெண்களின் வாய்கள் ஊர்க்கதைகள் பேச கைகளும் தம்பாட்டில் இயங்கும். அம்மா மணக்க மணக்கப் போட்ட காப்பி விநியோகம் ஆகும். இரவுச் சாப்பாட்டிற்காக புட்டும் குழம்பும் முட்டைப் பொரியலும் சம்பலும் அடுக்களையிலிருந்து சாப்பிட அழைக்கும்.
இரவு பத்து பன்னிரண்டு வரை வேலைகள் தொடரும். சிலர் வீடு செல்வர். சிலர் விடிய நான்கு ஐந்து மணிவரை விழித்திருந்து தோல்சீவிய கிழங்குளை புளுக்கொடியலுக்கென இரண்டாகக் கிழத்து வைப்பர். அன்றைய இரவுப் பொழுது பூங்காவனத் திருவிழாகத்தான் விடியும். சிறுவர்கள் நாமும் ஓடிப் பிடித்து விளையாடுவோம். அவித்த கிழங்கைச் சப்புவதும் ஓரிரு கிழங்குகளைச் சீவுவதும் தூங்கி வழிவதும் எழும்புவதுமாக இருப்போம்.
வீட்டில் முற்றத்தில் பாய்களை விரித்து அவித்த கிழங்குகளைக் கொட்டி வெயிலில் உலர விடுவர். கயிற்றில் கட்டியும் தொங்கவிடுவார்கள்.
அவிக்காமல் இருக்கும் நோஞ்சான் கிழங்குகளை மறுநாட்களில் கிழித்து வெயிலி;ல உலர வைத்துவிடுவர். காய்ந்த பின் மாவாக்கி ஒடியல் புட்டுமா, கூழுக்கு வைத்துக் கொள்வார்கள்.
பனங்கிழங்கில் காபோகைரேட், நார்பொருட்கள் இருக்கின்றன. மலச்சிக்கலுக்கு உகந்தது. சாயந்தர உணவாக சாப்பிடலாம்.
- பனங்கிழங்கு அவித்து குந்து (நார்) எடுத்து உடைத்து அப்படியே சாப்பிடலாம்.
- வட்டமாக வெட்டி எடுத்து தேங்காய்ப் பல்லுடன் சாப்பிடச் சுவைக்கும்.
- காரம் விரும்புவோர் உப்பு மிளகுதூளுடன் தொட்டுச் சாப்பிடலாம்.
- தீயில் சுட்ட பனங் கிழங்கு தேங்காய்ச் சொட்டுடன் சுவைத்திடுவோம் மாலை நேரச் சிற்றுண்டியாக.
- துவையல்கள் ( சிற்றுண்டியாக) செய்துகொள்ளலாம்.
உறைப்பு துவையல்
தேவையானவை
கிழங்கு - 10-15
பச்சை மிளகாய் - 4
உள்ளி - 4
சின்ன வெங்காயம் - 6
மிளகு - 10
உப்பு தேவையான அளவு
மிளகு பச்சை மிளகாய் உள்ளி வெங்காயம் உப்பு சேர்த்து இடித்து வெட்டிய கிழங்குகளை கலந்து நன்கு இடித்து உருண்டைகளாக உருட்டி எடுத்து சாப்பிடுங்கள்.
மேலேயுள்ளவை உறைப்பு உருண்டைகள் | கீழேயுள்ளவை இனிப்பு உறைப்பு உருண்டைகள் |
இனிப்பு
கிழங்கு- 10-15 சீனி 4 மேசைக் கரண்டி, உப்பு , தேங்காய்ப் பூ சேர்த்து இடித்துக் கொள்ளுங்கள்
இனிப்பு உறைப்பு
கிழங்கு - 10-15 உள்ளி 4, பச்சை மிளகாய் 4, சீனி 2 மேசைக் கரண்டி, உப்பு , தேங்காய்ப் பூ (துருவல்) 4 மேசைக் கரண்டி கலந்து இடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் மிகசுவையாக இருக்கும்.
விரும்பியவாறு செய்து சாப்பிடுங்கள்.
பனம் பணியாரம் சாப்பிட கிளிக் பனம் பணியாரம்
- மாதேவி -
தகவல்களும் குறிப்புகளும் அருமை. நன்றி. வட்டமாக வெட்டி தேங்காய்ப் பல்லுடன் சுவைக்கப் பிடிக்கும்:)!
ReplyDeleteவாருங்கள் ராமலஷ்மி.
Deleteஉங்களுக்கும் பிடித்தமானதுஎனஅறிந்துமகிழ்கின்றேன்.வருகைக்கு நன்றி.
இதுவரை கேள்விப் படாத செய்தி.......பனம்பாத்திக்கு படையிலிடுவது......வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteஆகா... படமே மனதை கவருகிறது...
ReplyDeleteஇங்கு அவ்வப்போது தான் கிடைக்கும்...
செய்முறை குறிப்பிற்கு நன்றி...
வாழ்த்துக்கள்...
மகிழ்கின்றேன்.
Deleteநீண்ட நாளையின் பின் பதிவு. அதுவும் நம்மூர் பனங்கிழங்கு ப்ற்றி .உண்மையிலே எங்களுக்கு அது தங்கம்தானே. பழைய நினைவுகளை அப்படியே படங்களுடன் எழுதி,காட்டியிருக்கிறீங்க. அந்நாள் நினைவுகள் மறக்கமுடியாது. இப்படித்தான் எங்கள்வீட்டிலும். மிக்க நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteபனங்கிழங்கு துவையல் பார்க்க சாப்பிடவேணும் போல இருக்குது.
பழையநாட்களை மறக்கமுடியுமா.... பனம்கிழங்கு உங்களையும் மகிழ்வித்திருக்கின்றது.
Deleteநன்றி.
சுவையான பதிவு. எனது அனுபவத்தை சொல்லத் தூண்டியது.
ReplyDeleteஅண்மையில் ஒரு நோயாளி வந்திருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து. சுமார் 10-12 வருடங்களுக்குப் பின் பார்த்த மகிழ்ச்சியில் தனது பையிலிருந்து ஒரு சிறிய பார்சலை எடுத்து நீட்டினார். நீங்கள் சொன்ன அதே 7-8 தங்க விக்கிரகங்கள் அதற்குள் இருந்தன.
அவற்றை மனைவி அவித்துத் தந்தார். சுவையோ சுவை.
உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
Deleteபனங்கிழங்கு சாப்பிட்டிருக்கிறேனே தவிர அதன் மூலக்கதை தெரியாது. ஒரு திருவிழா போல குடும்பமாய் இணைந்து பனம்பாத்தி கிண்டி கிழங்கெடுத்து அவித்து என்று காட்சிகளைக் கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள். அதன் ருசியை நாவோடு சேர்ந்து மனமும் அசைபோட்டு மகிழ்கிறது. சில ஊர்களில் குச்சிக்கிழங்கு என்றும் சொல்வார்கள். சுவையான பகிர்வுக்கு நன்றி மாதேவி.
ReplyDelete'குச்சிக்கிழங்கு' என்பார்கள் பெயர்நன்றாகஇருக்கின்றது அறியத்தந்ததற்கு மிக்கநன்றி.
Deleteமனதில் உறைந்த பசுமையான நினைவுகளை மணம் கொண்டு கிளறிய பதமான பனங்கிழங்கு பதிவு. சிறுவயது முதல் தற்போது வரை மிகவும் விருப்பமான உண்வு. தமிழ்நாட்டில் பொங்கல் பொழுது மட்டும்தான் மிகுதியாக கிடைக்கும். தற்போதைய நாகரீக காலத்தில் விவசாயம் செய்ய ஆளில்லாத நிலையினால் விளைச்சலும், சந்தையில் வரவும் குறைந்து கொண்டு இருப்பதைப் பார்த்தால் விரைவில் அரிய பொருளாகி விடுமோ என்னும் ஐயம் தோன்றுவதை தடுக்க முடியவில்லை.
ReplyDeleteநீங்கள் கூறியதுபோல இங்கும் அரிய பொருள்தான். முன்பெல்லாம்கிராமத்தில் ஒவ்வொருவீட்டிலும் பனைமரங்கள் இருந்தன. இப்பொழுது காண்பதில்லை. எங்காவது ஒரிரு பனம்காணிகள்தான்இருக்கின்றன.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தகவல்கள் நன்று.... வேகவைத்த பனங்கிழங்கு உண்டதுண்டு..... இப்படி உண்டதில்லை....
ReplyDeleteஒருதடவைசெய்து சாப்பிட்டுப்பாருங்கள் அப்புறம் துவையல்தான் வேண்டுமென்பீர்கள்.
Deleteநன்றி.
Nice
ReplyDelete.மகிழ்ச்சியும். வருகைக்கு நன்றியும்.
Deletemமமாதேவி, பனங்கிழங்கு வேக வைக்கும் மலரும் நினைவுகள் மிக அருமை.
ReplyDeleteநான் அந்த கூட்டத்தில் பழைய பாடல்களை கேட்டுக் கொண்டு ஐக்கியம் ஆகி விட்டேன்.
குழந்தைகள் குதுகலமாய் கூச்சலிடும் மொழிகள் கேட்கிறது.
பனங்கிழங்கின் நடுவில் உள்ள குச்சியில் மேலே உள்ள இள்ங்குறுத்து மிக நன்றாக இருக்கும். அந்த குச்சியை விரித்து பொம்மை செய்வார்கள்.
பாளைங்கோட்டையில் என் டீயூசன் டீச்சர் வீட்டில் வேக வைத்தை பனங்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நார் எடுத்து காயவைப்பார்கள் எதற்கு என்றால் மிளகாய்பொடி அதில் செய்வார்கள்.
பொங்களுக்கு சூரியனுக்கு படைக்கும் காய்கனியில் பனங்கிழங்கு முக்கிய இடம்பெறும்.
தங்கம்போல் மின்னும் பனங்கிழங்கு அழகு.
மலரும் நினைவுகளில் நனைந்தீர்கள் என அறிந்ததில் மகிழ்ச்சி. பலதகவல்களையும் அறியத்தந்தீர்கள் நன்றி.
Deleteஆஹா ...இதை உண்டு களித்த சுவை மீண்டும் வந்து சேர்ந்ததே என்
ReplyDeleteநாவினிலும் !படங்கள் மிகவும் தத்ரூபமாக அமைந்துள்ளது .வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தோழி பகிர்விற்கு .
பகிர்வோடு படிந்தது பழைய நினைவுகள் பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteதஞ்சை பெரிய கோவிலில் தனிக்கோவில் கொண்டருளும் வாராஹி அன்னைக்கு பூமிக்குக்கீழ் விளையும் பனங்கிழஞ்கு நிவேதனம் மிகவும் விஷேசம் என்று சொன்னார்கள்...!
ReplyDeleteஆனந்தமாய் மணக்கும் மலரும் நினைவுகள்.....!
அன்பு மாதேவி படிக்கவே இனிக்கும் நினைவுகள் ,. என்ன் ஒரு வளமான வாழ்வுஇ. அதை நீங்கள் எழுதி இருக்கும் விதம் அழகு சேர்க்கிறது. தென் இந்தியாவில் இருக்கையில் பனங்கிழங்கு வண்ட்யில் வரும். அம்மா விறகடுப்பை முற்றத்தில் அமைத்து சுட்டுத் தருவார்,. மிக மிக இனிமையான நாட்கள். அத்தனை விவரங்களுக்கும் நன்றி. உங்கள் சம்பல் பதிவை மீண்டும் படிக்கவேண்டும்.
ReplyDeleteபனங்கிழங்கு ஆசையத்தூண்டிவிட்டீர்கள். அருமையான காலம் ஒரு காலம்.ம்ம் எல்லாம் போய்விட்டது சுவைக்க.
ReplyDeleteமிக அருமையான பதிவு மாதேவி! பனங்கிழங்கு பற்றி நிறைய தெரிந்து கொண்ஃடேன். பனங்கிழங்கு சாப்பிடும் ஆசையும் வந்து விட்டது!
ReplyDeletesuper 'o' super
ReplyDeleteby
JOTHIDA EXPRESS
WWW.SUPERTAMILAN.BLOGSPOT.IN
வணக்கம்,
ReplyDeleteநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
padangal paartha udan, panan kilangu saapida aasai vanthu vittathu! nanri
ReplyDeletewww.piramu.tk
ஆஹா பனங்கிழங்கு பார்த்ததும் எனக்கு இப்பவே சாப்பிடனும் போல இருக்கு .
ReplyDeleteஆகா! எடுத்து சாப்பிடுங்கள்.
ReplyDeleteநன்றி ஜலீலா.
பனை பொருட்கள் எதுவும் வீணாவதில்லை எனச்சொல்வார்கள்/
ReplyDeleteமிக அருமையாகவும், சுவையாகவும் தெரிவித்துள்ளீர்கள்.
ReplyDeleteபனக்கிழங்கு தொகுப்பு மிக அருமை.
ReplyDeleteஇன்று நமது வலையில்: உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்!
ReplyDeleteதங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2015/01/blog-post_14.html
மிக்க நன்றி.
Deleteமாதேவி நலமா? பெண் நலமா? உங்களை பார்க்க முடியவில்லையே பதிவுலகத்தில்? வேலை அதிகமா? உடல்நலமாக இருக்கிறீர்களா?
ReplyDeleteமீண்டும் என் வலைத்தளத்தில் பார்த்தவுடன் நீங்களும் ஏதாவது பதிவு போட்டு இருப்பீர்கள் என்று வந்தேன்.
எழுதுங்கள் மீண்டும். நானும் ஊருகளுக்கு சென்று கொண்டு இருப்பதால் இடை இடையே தான் பதிவுலகம் பக்கம் வருகிறேன்.
அன்புடன்
கோமதி அரசு
மிகுந்த அன்புடன் நலம்விசாரித்துள்ளீர்கள் மிக்கமகிழ்ச்சி. நலமாகஇருக்கின்றோம். வேலைப்பழு அதிகம்அதனால் பதிவுலகப் பக்கம் வரமுடிவதில்லை.
ReplyDeleteமுடிந்தபோது .உங்கள்பக்கம் வருவேன். மிக்கநன்றி.