Thursday, November 1, 2012

வெங்காய பச்சை மிளகாய் ரொட்டி

வெளிநாட்டினரின் வருகையினால் அறிமுகமாகியதே இந்த மா. அமெரிக்கன் மா, வெள்ளைக்காரன் மா என எமது மூதாதையர்கள் சொன்னார்கள்.


பாண், பணிஸ், பிஸ்கட், கேக் என பேக்கரி உணவுகளை கீழைதேச மக்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன், கோதுமையில் சுத்திரிகரிக்கபட்ட கோதுமை மாவையும் (Refined wheat flour)எமக்கு அறிமுகமாக்கினார்கள்.

இன்று கோதுமை விளையும் பிரதான நாடுகளாக சீனா, சோவியத் யூனியன், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா,  மற்றும் கனடா ஆகியன விளங்குகின்றன.

கோதுமை விளையும் தேசங்கள்


எங்கள் மக்கள் எமது காலாசார அரிசிப் பண்ட உணவுகள் தயாரித்ததுபோல இம் மாவைகொண்டு பிட்டு, இடியப்பம், ரொட்டி சப்பாத்தி, தோசை, எனத் தயாரிக்கப் பழகினார்கள்.


முற்காலத்தில் மாரி காலத்தில் ஓரிரு மாதங்களுக்கு தொடர்ந்து அடை மழை பொழியும். அது வசதியற்ற காலம், ஓரிரு கடைகளே கிராமங்களில் இருக்கும். மழைகாலத்தில் இரண்டு மூன்று மைல்களுக்கு அப்பால் இருக்கும் நகரங்களுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது முடியாத காரியம்.

எனவே மழைக் காலத்திற்கான உணவுகளை மக்கள் முன்கூட்டியே வீடுகளில் சேமித்து வைத்திருப்பார்கள்.

பெரும்பாலும் மழைக்கால அவசர உணவாக ரொட்டி, கஞ்சி, களி, புட்டுகள், கூழ் இருந்தன. பலதடவைகள் இந்த மாவினால் தயாரிக்கபட்ட ரொட்டிதான் காலை, மாலை உணவாகக் கைகொடுக்கும்.


ஏழைகளின் உணவாகவும் இருக்கிறது. இன்றும் மலைநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதும் தேநீரும் ரொட்டியும்தான்.

இந்தியாவில் மைதா மா என்பார்கள். இலங்கையில் கோதுமை மா, அமெரிக்கன் மா எனவும் பெயரிட்டு அழைப்பார்கள்.

பச்சை மிளகாய் வெங்காயம், தேங்காய்த் துருவல், உப்பு என்பவற்றை மாவுடன் கலந்து செய்யும் ரொட்டி இலங்கையில் பிரபல்யம்.

அப்படியே தனித்தும் உண்பார்கள் சிலர். இதற்கு தேங்காய் இடிசம்பல் சேர்த்து தொட்டுக் கொண்டு சாப்பிடுவதும் வழக்கம்.


நல்ல கார விரும்பிகள் செத்தல் மிளகாய், சின்ன வெங்காயம் உப்பு மட்டும் சேர்த்து உரலில் இட்டு இடித்து அதை இந்த ரொட்டியுடன் சாப்பிடுவார்கள். நாக்கும் குடலும் பற்றி எரியும் காரமாக இருக்கும்.

மைதா மா காபோஹைதரேட் கூடியது என்பதால், இதனுடன் பருப்புக் கறி, கரட் பீன்ஸ் பட்டாணி மசாலா, சோயாக்கறி, கடலைக் கறி, பயறுக் குழம்பு போன்ற புரொட்டீன் உணவுகள், அல்லது காலி ப்ளவர், லீக்ஸ்,  முட்டைக்கோஸ்,கரட் மரக்கறி கறிகள் சாப்பிட உகந்தவை.


இறைச்சிக்கறி, மீன் தீயல், முட்டைச் சம்பல், ஏதாவது ஒன்றுடன் நாக்கின் சுவைக்கு சம்பல், வெங்காயச் சட்னி, மிளகாய் சட்னி, சீனிச் சம்பல் ஏதாவது செய்து கலந்து உண்ணலாம்.

நீரிழிவு, கொலஸ்டரோல், அதீத எடை உள்ளவர்கள் கோதுமை, கம்பு. ஆட்டா, குரக்கன் மாக்களில் இதே போல ரொட்டி செய்து சத்தான கறிவகைகளுடன் உண்ணலாம். அல்லது இலை வகைகளை மாவுடன் கலந்து ரொட்டியாகவும் சுடலாம்.

மைதா ரொட்டியுடன், அனைவரும் ஏதாவது பழவகைகளை சேர்த்து உண்ண வேண்டும். விற்றமின்கள் கிடைப்பதுடன் மலச்சிக்கலும் நீங்கும். வாழைப்பழம், பப்பாபழம், அல்லது புரூட்சலட் சிறந்தது.


பழங்களிலுள்ள இனிப்புச் சத்து குருதி சீனியின் அளவில் பெரிய மாற்றத்தைத் தராது என மருத்துவர்கள் சொல்கிறார்கள். நீரிழிவு நேயாளர்களும் மேலதிகமாக சீனி சேர்க்காமல் புரூட்சலட், பழங்கள் உண்ணலாம்.


Wheat என்பது தானிய உணவு. Ceycalgrain poaceae family யைச் சார்ந்தது. விட்டமின்ஸ் மினரல், புரொட்டீன் சேர்ந்துள்ள உணவு.

எகிப்தியர்கள் போறணை உணவான பாண் தயாரிப்பை அறிமுகம் செய்தார்கள்.

அதன் பின் 3000 BC இங்கிலாந்து ஸ்கன்டினெவியா என்பவற்றில் தயாரிக்கப்பட்டது.

சுத்திகரிக்பட்ட வெள்ளை மாவில் கூடுதலாக மாச் சத்துத்தான் (Starch) உள்ளது. முழு வீற் தானியத்திலிருந்து உடைத்து இராசாயனங்களால் வெளிற வைத்துச் சுத்திகரிக்கப்பட்டதே வெள்ளை மா.

வீற் கிரென் 100 கிறாமில் போசணையளவு

Energy 1506 KJகாபோஹைரேட் 51.8 கி, நார் 13.2 கி, கொழுப்பு 9.72 கி, புரொட்டின் 23.15 கி, இரும்பு 6.26 மைக்ரோகிராம். நியாசின் 6.813 மைக்கிரோகிறாம், தயமின் 1.882 மைக்கிரோகிறாம், கல்சியம் 39 மைக்கிரோகிறாம், பொட்டாசியம் 892 மைக்கிரோகிறாம்,மக்னீசியம் 239 மைக்கிரோகிறாம், பொஸ்பரஸ் 845 மைக்கிரோகிறாம்,

சுத்திகரிக்கப்படும் போது பல்வேறு விதமான போசனைப் பொருட்களும் சேதமாகி அகற்றபட்டுவிடுகின்றன. 


During refining process, about 50% of all calcium, 70% of phosphorus, 80% iron, 98% magnesium, 75% manganese, 50% potassium, and 65% of copper are lost. About 80% of thiamin, 60% of riboflavin, 75% of niacin, 50% of pantothenic acid, and about 50% of Pyridoxine is also lost. 14 different vitamins, 10 different minerals, and protein are lost. In essence, most of minerals and vitamins are lost.

 தேவையான பொருட்கள்

மைதா மா - 500 கிராம்
பச்சை மிளகாய் - 6-7
சின்ன வெங்காயம் - 15 -20
உப்பு  - சிறிதளவு
சீனி - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - ¼ கப்
ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்
 தண்ணீர் - தேவையான அளவு.
மாஜரின் அல்லது சூரியகாந்தி ஓயில் - தேவையான அளவு.செய்முறை

வெங்காயம் பச்சை மிளகாய்களை சிறியதாக வெட்டிக் கொள்ளவும்.
மாஜரின் தவிர்த்து அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும்.

தேவையான அளவு நீர் தெளித்து சப்பாத்தி மா பதத்திற்கு பிசைந்து வையுங்கள்.சிலர்  பிசைந்த உடனும் சுட்டு எடுப்பார்கள்.

சற்றுநேரம் வைத்து சுட்டால் சுவையாக இருக்கும்.

3-4 மணி நேரத்தின் பின்னே சிறிய உருண்டைகளாக எடுத்து கைகளால் தட்டி தோசை கல்லில் ஒரு தடவைக்கு 4 ரொட்டிகளாக போட்டு மாஜரின் அல்லது சூரியகாந்தி ஓயில் விட்டு மெல்லிய நெருப்பில் இருபுறமும் சிவக்க சுட்டு எடுங்கள்.

சாதாரணமாக ஒருவருக்கு 4 ரொட்டிகள் தேவைப்படும்.

ரொட்டி அண்டை அயலில் உள்ளோரையும் மணத்தில் சாப்பிட வரவழைக்கும். எனவே கூடுதலாகவே செய்து கொள்ளுங்கள்.


இல்லாவிட்டால் உங்களுக்குத்தான் வயிற்றில் அடி.

கறி ரொட்டி பற்றிய எனது பதிவு

-: மாதேவி :-

51 comments:

 1. // நல்ல கார விரும்பிகள் செத்தல் மிளகாய், சின்ன வெங்காயம் உப்பு மட்டும் சேர்த்து உரலில் இட்டு இடித்து அதை இந்த ரொட்டியுடன் சாப்பிடுவார்கள். நாக்கும் குடலும் பற்றி எரியும் காரமாக இருக்கும். //

  நானும் காரத்தை அதிகமாக சாப்பிடுபவன். வெங்காய பச்சை மிளகாய் ரொட்டி பற்றி நன்கு சுவையாகவே சொல்லி இருக்கிறீர்கள். கூடவே மைதாவைப் பற்றிய விவரங்கள்.

  இங்கு தமிழ்நாட்டில் ரொட்டி, பரோட்டா அல்லது புரோட்டா என்று சொல்கிறார்கள்; புரோட்டா கடையும் புரோட்டா மாஸ்டர்களும் இல்லாத ஊரே இல்லை.


  ReplyDelete
 2. மிக அருமையான டிபன் வகை
  சூப்பர்..
  உங்க வழக்கமும் எங்க வழக்கமும் ஒன்றாக தான் இருக்கு மாதேவி

  இதை நாங்க அரிசி மாவில் செய்வோம் அதுக்கு மாசி சம்பல்.

  இதே மைதாவில் தோசை போல் கரைத்து அடையாக செய்வோம் ,

  ReplyDelete
 3. இது சுடும் போது சூப்பரான மனம் வருமே..
  பார்த்ததும் இப்பவே சாப்பிடனும் போல் இருக்கு

  ReplyDelete
 4. ஒரு பதிவுக்கென தாங்கள் சேகரிக்கிற
  தகவல்களும் அதை படங்களுடன் கொடுக்கிற நேர்த்தியும்
  பிரமிப்பூட்டுகிறது.மனம் தொட்ட பயனுள்ள பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. ரொட்டி சுடும் வாசனை மூக்கைத் துளைக்கிறது.
  எனக்கு 4 போதாது போலிருக்கிறது.
  எனக்கு மிகவும் பிடித்த உணவு

  ReplyDelete
 6. மிகவும் ருசியான ஒரு சமையல் குறிப்பு.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 7. அடடா ரொட்டியும் தேங்காய் சம்பலும் பார்க்கவே வாய் ஊருகிறதே.. நம்ம பதிவும் இதப்பத்தித்தான்..

  நீங்கள் சொன்ன விதத்தில் செய்யும் ரொட்டியை கறியில்லாமலே சாப்பிடலாம்!

  முழுமையானதொரு பதிவு!

  ReplyDelete
 8. படங்களும் பகிர்வும் அருமை...

  குறிப்புகளுக்கு நன்றி சகோ...

  ReplyDelete
 9. வாவ்! சுடச் சுடச் சாப்பிட சூப்பராக இருக்கும்.தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 10. நான் அதிகம் காரம் சேர்ப்பதில்லை. இருந்தாலும் இதை செய்து பார்க்கலாம்னுதான் தோணுது. ரமணி ஸார் சொன்னது மிகச் சரி. அழகான படங்களும் விரிவான விளக்கங்களுமாக நீங்கள் பரிமாறுகிற அழகே தனி மாதேவி. அருமை.

  ReplyDelete
 11. ரொட்டியும் அதை பற்றிய தகவல்களையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

  இதை வட இந்தியாவில் பராட்டா என்று சொல்வார்கள்.

  ReplyDelete
 12. வாருங்கள் தமிழ் இளங்கோ.

  நீங்கள் கூறியதுபோல மக்கள் விரும்பி உண்ணும் உணவாக பரோட்டா, ரொட்டி, பிசா,பர்கர் வகைகள் இருப்பதால் இங்கு கூட்டத்தையும் காணலாம்.

  உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 13. வருகைகளுக்கு மகிழ்கின்றேன்.

  நாங்களும் அரிசிமாவில் ரொட்டி செய்வோம்.

  மைதா ரொட்டிக்கு நீங்கள் சொன்னதுபோல மாசிச்சம்பல் செய்வார்கள்.
  நன்றி ஜலீலா.

  ReplyDelete
 14. மிக்க நன்றி சிநேகிதி.

  ReplyDelete
 15. வாருங்கள் ரமணி.
  உங்கள் வாழ்த்துக்கள்தான் எழுதத் தூண்டுகின்றது. மகிழ்கின்றேன்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 16. வாருங்கள் Muruganandan M.K.

  நீங்கள் உணவுக்கட்டுப்பாடுகள் பற்றி விரிவாகத் தந்துகொண்டு எமக்கு பரீட்சை வைக்கின்றீர்களா?
  நாங்களும் அளவுடன்தான் சாப்பிடுவோம் :))

  உங்களுக்கும் ரொட்டி பிடித்த உணவு என்பதில் மகிழ்கின்றேன்.
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 17. வருகைக்கு நன்றி Latest Tamil News.

  ReplyDelete
 18. வாருங்கள் Riyas.
  உங்கள் வருகைக்கு மகிழ்கின்றேன். உங்கள் பகிர்வும் நன்றாக இருக்கின்றது.

  மிக்கநன்றி.

  ReplyDelete
 19. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

  ReplyDelete
 20. சுடச்சுடச் சாப்பிட சூப்பர்தான் நன்றி ஆசியா.

  ReplyDelete
 21. வாருங்கள் பாலகணேஷ்.
  பச்சை மிளகாயை அவரவர் தங்களுக்கு ஏற்ற அளவில் குறைத்து சேர்த்துக் கொள்ளலாம்.

  கருத்துகள் ஊக்கம் அளிக்கின்றன மிக்கநன்றி.

  ReplyDelete
 22. மிக்க நன்றி கோவை2தில்லி.

  ReplyDelete
 23. இந்த மழைக்காலம் ரொட்டியையும் தேங்காய் சம்பளையும் ஞாபகப் படுத்திட்டீங்களே எனக்கு இப்பவே சாப்பிடனும் போல இருக்குது

  ReplyDelete
 24. அருமையான குறிப்புக்கு நன்றி மாதேவி. கூடவே பல தகவல்களையும் அறிந்து கொள்ள முடிந்தது.

  ReplyDelete
 25. வாருங்கள் சிட்டுக்குருவி.

  எடுத்து சாப்பிடுங்கள்.:)

  வருகைக்கு மிக்கநன்றி.

  ReplyDelete
 26. மிக்கநன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 27. நாங்கலாம் சாப்பிடுறதோட சரி.., நீங்க அதை பற்றிய தகவலும் தர்றீங்க. பகிர்வுக்கு நன்றி தோழி

  ReplyDelete
 28. மிக அருமையான பதிவு
  வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
  உங்கள் வரவை விரும்புகிறது.
  தினபதிவு திரட்டி

  ReplyDelete
 29. வெங்காய மணத்தோட அருமையா இருக்குது இந்த ரொட்டி.

  ReplyDelete
 30. வருகைக்கு நன்றி ராஜி.

  ReplyDelete
 31. மிக்க நன்றி தினபதிவு.

  ReplyDelete
 32. மிக்க மகிழ்ச்சி அமைதிச்சாரல்.

  ReplyDelete
 33. அடடா அறுசுவை ரொட்டி அமர்க்கலமான படங்களுடன் செய்துட வேண்டியது தான்.

  ReplyDelete
 34. அழகான படங்கள். அருமையான செய்முறை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 35. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 36. இன்பம் பொங்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்நாள்
  என்றும் இனிக்கும் இனிய பொன்னாளாக அமையட்டும் !.......

  ReplyDelete
 37. எல்லாமே செய்து சாப்பிட்டால் நல்லாத்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்...!!!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் தோழி.

  ReplyDelete
 38. ரொட்டி என்றதுமே எனக்கு மலையக மக்கள் சுடும் ரொட்டிதான் வாசனையோடு ஞாபகம் வரும் மாதேவி.சும்மா பச்சைத் தண்ணியும் மாவும் கொஞ்சத் தேங்காய்பூவும்தான்....அதற்கொரு சம்பல்....சொல்லி முடியாது இப்ப நினைத்தாலும் வாயூறும்....நீங்கள் சொன்னதுபோலவே பச்சைமிளகாய்,வெங்காயம் போட்ட ரொட்டி எங்கள் வீட்டில் இபோதும் சுடுவோம்.நிறைந்த விளக்கங்களுடன் நல்லதொரு பதிவு !

  சுகம்தானே மாதேவி.என் அன்பான தீபத் திருநாள் வாழ்த்து உங்களுக்கு !

  ReplyDelete
 39. சுடச் சுட செஞ்சி சாப்பிடனும் போல இருக்கு...

  ReplyDelete
 40. மிகவும் அருமை நன்றி சகோ

  ReplyDelete
 41. செய்து பாருங்கள் சசிகலா.
  வருகைக்கு மிக்கநன்றி.

  ReplyDelete
 42. வருகைக்கு மகிழ்ச்சி வை.கோபாலகிருஷ்ணன்.

  மிக்கநன்றி.

  ReplyDelete
 43. வாழ்த்துக்கு நன்றி அம்பாளடியாள்.

  ReplyDelete
 44. மிக்கநன்றி அருணாசெல்வம்.

  ReplyDelete
 45. வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.

  ReplyDelete
 46. செய்து சாப்பிட்டு எப்படி இருக்கின்றது எனச் சொல்லுங்கள்.

  வருகைக்கு மிக்கநன்றி இரவின் புன்னகை.

  ReplyDelete
 47. மகிழ்கின்றேன்.

  மிக்கநன்றி desiyam Divyamohan.

  ReplyDelete
 48. பழங்களிலுள்ள இனிப்புச் சத்து குருதி சீனியின் அளவில் பெரிய மாற்றத்தைத் தராது என மருத்துவர்கள் சொல்கிறார்கள். நீரிழிவு நேயாளர்களும் மேலதிகமாக சீனி சேர்க்காமல் புரூட்சலட், பழங்கள் உண்ணலாம்

  பயனுள்ள பகிர்வுக்கும் சுவையான ரொட்டிக்கும் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 49. எளிமையான உணவு. குளிராய் இருக்கும் நாட்களில் சூடாய் ரொட்டியும் உறைப்பு தூக்கலாய் சம்பலும் சாப்பிடுவதைப்போல சுகம் வேறு எதிலும் கிடைக்காது.

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்