Fabaceae குடும்பத்தைச் சார்ந்தது. விஞ்ஞானப் பெயர் Phaseolus lunatus ஆகும்.
பீன்ஸ் இனத்தில் பலவகைகள் இருக்கினறன.பச்சை, மஞ்சள், ஊதாசிவப்பு நிறங்களில் காய்கள் கிடைக்கின்றன. இலங்கையில் போஞ்சிக்காய் எனச் சொல்வார்கள்.
Green Beans, ;Lima beans,
சீமைஅவரை (french beans ), பனி அவரை,
பால் அவரை, சிறகு அவரை ( winged beans)
கராம்பு அவரை,
கொத்தவரை, பயித்தங்காய் (Long beans) சோயா அவரை, மொச்சை, கெளபி,பட்டாணி போன்றனவும் இவ் இனத்தைச் சார்ந்தன.
fresh , frozen எனவும் விதைகள் பதப்படுத்தப்பட்டு டின்களில் அடைக்கப்பட்டும், உலரவைக்கப்பட்டும் கிடைக்கின்றன.
இதில் மிகுந்த சத்துக்கள் உள்ளன. புரதம் கூடியளவு உள்ளது 25 வீதம் புரதம், நார்ப் பொருள்களும் நிறைய இருக்கினறன. கொழுப்பு அற்றது.
போலிக் அமிலம், molybdenum கணிசமாகக் கொண்டுள்ளது. இரும்புச் சத்து,பொஸ்பரஸ், மக்னீசியம், D6, மங்கனீஸ் சத்துக்களையும் அளிக்கிறது.
அன்ரி ஒக்ஸ்சிடனட் இருதய நோய்களுக்கு சிறந்தது. நீரிழிவு இருதய நோயாளர்களுக்கு சிறந்த உணவு. இரத்தக் கொதிப்பையும் தடுக்கும் என்கிறார்கள்
மலிவான விலையில் நிறைந்த ஊட்டச் சத்துக்களைத் தருகிறது.பீன்ஸ் காய்களை பிஞ்சாக பறித்துச் சமைப்பது உகந்தது.
மணியாரம்பட்டி அவரை சுவைக்குப் பெயர் பெற்றதாமே ?
நுவரெலியா பட்டர் பீன்ஸ்க்கு இலங்கையில் நல்ல கிராக்கி இருக்கின்றது.
பலவிதமாக சமைத்துக் கொள்ளலாம்.
பீன்ஸ் முட்டை வறுவல், பீன்ஸ் இறால் வறை, பீன்ஸ் சிக்கன் மசாலா, ஸ்பைசி பீன்ஸ், சூப், சலட், பீன்ஸ் வித் அல்மன்ட், பேக்ட் பீன்ஸ், கசரோல், சொப்சி, எனப் பற்பல....... இத்துடன் கூட்டு, குருமா, பொரியல், வறை,அவியல்,சாம்பாரும் அடங்கும்.
பீன்ஸ் கிடைக்கும் காலத்தில் Blanchசெய்து Ice water இல் குளிரவிட்டு எடுத்து freezer bag இல் இட்டு பாதுகாத்து உபயோகிக்கலாம்.
100 கிராமில் கிடைக்கும் போசாக்கு
புரதம் 2.1 கிராம்
கொழுப்பு 0.9 கிராம்
கல்சியம் 63 மி.கிராம்
இரும்பு 1.5 மி.கிராம்
கரோட்டின் 362 மைக்ரோ கிராம்.
B1 0.70 மி.கிராம்
B 2 0.12 மி.கிராம்
நியாசின் 0.4மி.கி
விட்டமின் C 20மி.கி.
பீன்ஸ் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிப்போரை வரவழைக்க ஒரு வழி
தேங்காய்ப் பால் பட்டர் பீன்ஸ் கறிதான்.
தேங்காய்ப் பால் மணத்தில் பீன்ஸ்வாடை மறைய முகம் சுளிக்காமல் சாப்பிட வருவார்கள். நீங்களும் தப்பித்தீர்கள்.
தேங்காய்ப் பால் பட்டர் பீன்ஸ் செய்முறை
தேவையானவை
பட்டர் பீன்ஸ் - ¼ கிலோ
சின்ன வெங்காயம் - 7-8
உருளைக் கிழங்கு சிறியது - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்லு ( நசுக்கியது)
கடுகு - ¼ ரீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருஞ் சீரகத் தூள் - ¼ ரீ ஸ்பூன்
தேங்காய்ப் பால் -1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - வேகவைக்க.
ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேற்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேசிப்புளி - ½ ரீ ஸ்பூன்
செய்முறை -
பீன்சை நார் நீக்கி 2-3 அங்குல நீள் துண்டுகளாக வெட்டுங்கள்.
உருளைக் கிழங்கை சிறயதாக வெட்டுங்கள்.
சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் விருப்பம்போல வெட்டிக் கொள்ளுங்கள்.
ஓயிலில் கடுகு, பூண்டு வதக்கி சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் வதக்குங்கள்.
நன்கு வதங்கிய பின் கிழங்கைக் கொட்டிக் கிளறி சற்று உப்பு தூவி விடுங்கள்.
ஒரு பிரட்டு பிரட்டிய பின் பீன்சைக் கொட்டிக் கிளறுங்கள்.
ஒரு தட்டால் மூடி சிம்மில் இரண்டு நிமிடம் விடுங்கள்.
திறந்து தண்ணீர் ஊற்றி மஞ்சள் உப்பு போட்டு அவிய விடுங்கள்.
அவிந்த பின் பெருஞ் சீரகத் தூள் சேர்த்துப் பிரட்டுங்கள்.அடுப்பை நிறுத்திய பின் தேங்காய்ப் பால் ஊற்றி கறிவேற்பிலை சேர்த்து இறக்குங்கள்.
தேசிப் புளிவிட்டுக் கலந்து எடுத்து வையுங்கள். தேங்காய்ப் பால் கமகமக்க
பீன்ஸ் சாப்பிடத் தயாராகிவிட்டது.
மாதேவி.
0.0.0.0.0
சத்தான சமையல் குறிப்பிற்கு நன்றி...
ReplyDeleteமுழுமையான தகவல்கள். சுவையான குறிப்புக்கும் நன்றி.
ReplyDeleteபுது ரெசிப்பியாக இருக்கே செய்து பாத்துட வேண்டியதுதான்.படங்களில் காட்டியிருக்கும் சில காய் வகைகள் பற்றி இதுவரை தெரிந்திருக்கலே
ReplyDeleteசமையல் குறிப்போட இலவசமா ஹெல்த் டிப்சும் கிடைக்குது மாதேவிட்ட மட்டும. நன்றிங்க. ட்ரை பண்றேன்.
ReplyDeleteMeegahakula வில் நான் முதலாக பொறுப்பு மருத்து அதிகாரியாகச் சேர்ந்தபோது பூஞ்செடிகளுடன் போஞ்சிAம் பயிரிட்டிருந்தேன். காய்க்கும் காலத்தில் திருமணமாகி மனைவி அங்கு வந்திருந்தா. வீட்டில் போஞ்சி காய்த்திருந்த மகிழ்ச்சியில் ஒரு நாள் வெள்ளைக் கறி சமைதிருந்தாள். அதன் சுவை என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
ReplyDeleteவாருங்கள் திண்டுக்கல் தனபாலன்.
ReplyDeleteநீங்கள் கூறியதுபோல சத்தான உணவுதான்.
வருகைக்கு மிக்கநன்றி.
மிக்கநன்றி ராமலக்ஷ்மி.
ReplyDeleteவாருங்கள் லக்ஷ்மி.
ReplyDeleteசெய்து பாருங்கள். சில காய்கள் எல்லா இடமும் கிடைப்பது அரிது என்பதால் தெரியவாய்ப்பு குறைவுதான்.
சிறுவயதில் எங்கள் காணி வேலியில் ஒருஅவரைஇனம் காய்த்து தொங்கும் சற்று நீட்டாக சிறிய முருங்கைக்காய் போல இருக்கும் அதன்பெயர் மறந்துவிட்டது. அம்மா சமைத்துத்தருவார்கள் சாப்பிட்டிருக்கின்றோம்.இப்போது அந்தக் காயை கண்டதும் இல்லை.
வாருங்கள் பால கணேஷ்.
ReplyDeleteஹெல்த் டிப்ஸ் எழுதுவது சுலபம் கடைப்பிடிப்பதுதான் கஷ்டமானது:))
ட்ரை செய்து பாருங்கள். வருகைக்கு மிக்கநன்றி.
வாருங்கள் Muruganandan M.K.
ReplyDeleteமனைவி வந்த மயக்கத்தில் எதை செய்துபோட்டாலும் அமிர்தமாகத்தான் இருந்திருக்கும். :))))
இப்பொழுது மனைவி சமைத்து தருவதும் அதே சமையலாகத்தானே இருக்கும்.:)))
வருகைக்கும் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி.
படங்களும் சிறப்பான குறிப்பும் அருமை.... நிறைய காய்கறிகளை இப்போது தான் பார்க்கிறேன்....
ReplyDeleteநல்லதொரு சமையல் குறிப்பு. ஹெல்த் டிப்ஸும் அருமை. கராம்பு அவரை என்பதை இப்போது தான் பார்க்கிறேன்.
ReplyDeleteஊதா நிற பீன்ஸும்.
மிக அருமையான பதிவு
ReplyDeleteவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது
தினபதிவு திரட்டி
அருமையான சமையல் குறிப்பு மாதேவி. நீங்கள் சொல்லும் அத்தனை வகை பீன்ஸ் பார்த்ததில்லை. ஆனால் பட்டர் பீன்ஸ் எங்கள் வீட்டில் அனைவருக்கும் இஷ்டம். மிக நன்றி.இந்தக் குறிப்பு உபயோகப்படும்.
ReplyDeleteபடங்களுடன் சேர்ந்த குறிப்புகளும் அருமை...
ReplyDeleteவாழ்த்துகள், தொடருங்கள்...
சத்தான சமையல் இனி எனக்கு டீச்சர் நீங்க தான் தொடருங்கள் வருகிறேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.
ReplyDeleteவாருங்கள் கோவை2தில்லி.
ReplyDeleteஊரிலிருந்தபோது எங்கவீட்டு பின்புறத்திலே மஞ்சள், ஊதாநிறம் தவிர்ந்த ஏனைய இனங்களை மாற்றி மாற்றி நாட்டியிருப்போம்.நன்கு காய் தரும்.பிஞ்சாக சமைத்துக் கொள்வோம் சுவையாக இருக்கும்.
இப்போது மார்க்கட்டில் கண்டபோதுதான் வாங்கிக் கொள்வேன்.
மிக்கநன்றி.
நன்றி தினபதிவு.
ReplyDeleteவாருங்கள் வல்லிசிம்ஹன்.
ReplyDeleteஇன்னும் பல இனங்கள் இருக்கலாம். எனக்குத் தெரிந்த இனங்களைப் பகிர்ந்துள்ளேன். கோழிஅவரை என்று ஒரு இனம் இருந்ததாகவும் சிறுவயது ஞாபகம்.
கருத்துக்கு மிக்கநன்றி.
வாருங்கள் இரவின் புன்னகை. வருகைக்கு மிக்கநன்றி.
ReplyDeleteசசிகலா ரீச்சர் எல்லாம் வேண்டாம் அப்புறம் பயம்தான் வரும் :))) சகோதரி என்பதே சரியாக இருக்கும்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
இங்கு திருச்சியில் தொடர் மின்வெட்டு காரணமாக பதிவின் பக்கம் உடன் வர இயலவில்லை.தங்கள் பதிவில் அவரை, பீன்ஸ் படங்களோடு அவற்றைப் பற்றிய செய்திகளும் அருமை.
ReplyDeleteசாப்பிட்ட திருப்தி!
ReplyDeleteசுவையான குறிப்புக்கு நன்றி.
ReplyDeleteவாருங்கள் தி.தமிழ் இளங்கோ.
ReplyDeleteஉங்கள் சிரமம் தெரிகின்றது :( மின்சார வெட்டு இருந்தபோதும் வந்து ஊட்டம் போட்டதற்கு மிக்கநன்றி.
மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரப்போகின்றது ?
மிக்கநன்றி குட்டன்.
ReplyDeleteசுவைத்ததற்கு மிக்கநன்றி காஞ்சனா.
ReplyDeleteசெஞ்சி சாப்டா நல்லாத்தான் இருக்கும்... சமைத்து கொடுக்க ஆள் இல்லையே!!!
ReplyDeleteஅருமையான பகிர்வு.ரெசிப்பி சூப்பர்.
ReplyDeleteParticipate in my first event
http://www.asiyama.blogspot.com/2012/10/my-first-event-feast-of-sacrifice.html
சமையல் பதிவு ஆருமை! படித்தவுடன் சாப்பிட்ட உணர்வே ஏற்படுகிறது!
ReplyDelete