Wednesday, March 30, 2011

கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு

கரணை

Discoreaceae  குடும்பத்தைச் சேர்ந்தது. பலநாடுகளிலும் பல்வேறு இனங்களில் பயிரிடப் பட்டு வருகிறது.இவற்றில் 200 க்கு மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.


இலங்கையில் சட்டிக் கரணை அல்லது கரணைக்கிழங்கு எனவும் அழைப்பார்கள். இந்தியாவில் சேனைக்கிழங்கு என்கிறார்கள். மேல்தோல் மண்நிறத்தில் இருக்கும்.

ஆங்கிலப் பெயர் Elephant foot yam. யானையின் பாதம் போல பெரியதாக, சொரசொரப்பாக,  சட்டியை  போலவும், தோற்றமளிப்பதால் யானைப் பாதக்கிழங்கு Elephant foot yam.என அவர்களும் சட்டிக்கரணை என நாமும் அழைப்பது பொருத்தம் போலவே தோன்றுகிறது.

மரவள்ளி. வத்தாளை, மோதகவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு. இராசவள்ளிக் கிழங்கு, சிறுவள்ளிக் கிழங்கு போல இதுவும் ஒருவகை.   மஞ்சள் பயிரிடப் பட்ட தோட்டங்களில் வரம்பில் சேனை பயிரிட்டு இரட்டிப்புப் பலன் பெறலாம். இரண்டின் காலமும் ஒரேஅளவானது என்கிறார்கள். 


பயிரிடப் பட்டு 8 - 10 மாதங்களில் பலன் கொடுக்கும். சிறப்பான விடயம் விளைந்தபின் 6 மாதங்கள் வரை சேமித்து வைத்து உபயோகிக்க முடியும். மழைக்காலத்திற்கு வாங்கி வைத்துக்கொள்ளலாம். தோல் கடிக்கும் தன்மையுடையது.

முதன்முதல் ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் பயிரிடப் பட்டது என்கிறார்கள். மேற்கிந்திய பசுபிக் தீவுகளிலும் பயிரிடப் படுகிறது. காபோவைதரேற் அதிகமுள்ள உணவு இது. நார்ப் பொருள், பொற்றாசியம், மக்னீசியம், விற்றமின் சி அடங்கியுள்ளது. கொழுப்பு குறைந்த உணவு என்பதால் நல்லஉணவு. கொலஸ்ரோலைக் கட்டுப் படுத்தும் உடல்எடையையும் அதிகரிக்காமல் தடுக்கும்.

இன்று கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு செய்யலாம். எண்ணை தவிர்க்க விரும்புவோர் அவித்தெடுத்து சமைத்தபின் எலுமிச்சம் சாறு விட்டுப் பிரட்டுங்கள்.

இக்கிழங்கில் சிப்ஸ், தேங்காய்ப் பால் பிரட்டல், கூட்டு, அவியல், பொரியல், வறுவல், பொடிமாஸ், புட்டு, சாப்ஸ், கட்லட், வடை, எனப் பலவும் செய்து கொள்ளலாம்.



கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு

தேவையான பொருட்கள் -

கரணைக்கிழங்கு – 1/2 கிலோ
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு – 4
வெந்தயம் - ½ ரீஸ்பூன்
கடுகு – ¼ ரீஸ்பூன்
கறிவேற்பிலை – 2 இலைகள்.
மிளகாய்ப் பொடி – 1 ரீஸ்பூன்
தனியாப் பொடி - 1 ரீஸ்பூன்
சீரகப்பொடி  - ½ ரீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ ரீஸ்பூன்
தேங்காய்ப் பால் - 2 டேபல் ஸ்பூன்

வறுத்து பொடித்து எடுக்க – கறுவா, சோம்பு, கராம்பு
பொரிக்க எண்ணை - 4 -5 டேபல் ஸ்பூன்
புளி – தேவைக்கு
உப்பு - தேவைக்கு
தண்ணி – ½ கப்.

கிழங்கு கடிக்கும்!
பல்லு இருக்கா என்று கேட்காதீர்கள்.

சொரசொரப்பு என்பதால் கிளவுஸ் போட்டு கிழங்கின் தோலை சீவி எடுங்கள். துண்டங்களாக வெட்டி நன்கு கழுவி எடுங்கள்.
மெல்லிய சிறுதுண்டுகளாக வெட்டுங்கள்.

இதன் பின் கிளவுஸ் களட்டிக்கொள்ளலாம்.
கையில் எலுமிச்சம் புளி அல்லது எண்ணை தடவியும் வெட்டலாம்.

வெங்காயம்,பூண்டு சிறியதாக வெட்டுங்கள். மிளகாயை கீறிவையுங்கள்.

வெறும் தாச்சியில் வறுக்க வேண்டியதை வறுத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
பொரிக்கும் எண்ணையை விட்டு வெட்டிய கிழங்குகளைப் போட்டு மெல்லிய ப்ரவுண் நிறத்தில் பொரித்தெடுத்து வடிய வையுங்கள்.

சிறிது ஒயிலில் கடுகு தாளித்து, பூண்டு, வெங்காயம்,பச்சை மிளகாய் கறிவேற்பிலை தாளித்து இறுதியில் வெந்தயம் சேர்த்து சிவத்ததும் இறக்கி பிரஷர் குக்கரில் கொட்டுங்கள்.

பொரித்த கிழங்கு, பொடிகள், உப்பு, புளி, தண்ணி, தேங்காய்ப் பால் அனைத்தையும் விட்டு கலக்கி மூடிபோட்டு 3 விசில் வைத்து விடுங்கள்.

பொரித்த வாசத்துடன் குழம்பு மூடி திறக்க முன்பே கமகமக்கும்.
ஆற எடுத்து பரிமாறும் கோப்பையில் விடுங்கள். நன்கு அவிந்த மிகவும் மெதுவான கரணைக்கிழங்குக் குழம்பு விரைவில் காலியாகிவிடும.

(கிழங்கு பிஞ்சாக இருந்தால் பொரித்தபின் குழம்பை பிரஷர்குக்கரில் வையுங்கள். முற்றிய கிழங்கு என்றால்பொரித்த பின் பாத்திரத்தில் வைத்தும் எடுக்கலாம்.)


காரகுழம்புடன் சுவைசோ்க்க இனிப்பு பூசணி, இரும்புச்சத்துக்கு இலைப் பொரியல், ரசம் அல்லது மோருடன் சாப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

34 comments:

  1. சேனைக்கிழங்கு பொரித்த குழம்பு சூப்பர்,முதலில் கிழங்கை பிரட்டி பின்பு புளி சேர்த்து குக்கரில் வேக வைப்பதால் கிழங்கு உடையாமல் சாஃப்ட்டாக இருக்கும்,அருமை.காம்பினேஷனும் பரிமாறிய விதமும் சூப்பர்.

    ReplyDelete
  2. கருணைக்கிழங்கு பற்றியதகவல்கள், சுவையான குறிப்பு இரண்டுமே சூப்பர்.

    ReplyDelete
  3. கிழங்கைப் பற்றிய விவரங்களுடன் தந்திருக்கும் குறிப்பு அருமை. சொல்லிய விதமே செய்து சுவைக்கும் ஆசையை அளிக்கிறது.

    ReplyDelete
  4. கரணை கறி எனக்கு ரொம்ப பிடிக்கும் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. ம்ம்ம். சூப்பர். யம் யம்

    ReplyDelete
  6. வாருங்கள் ஆசியா.

    ஆமாம் கிழங்கு உடையாது.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  7. சித்ரா! உங்கள் ஊட்டமே ஹா...ஹா.
    ரசித்தேன்.

    ReplyDelete
  8. வாருங்கள் லஷ்மி.
    சூப்பர்க்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. என்வீட்டில் காசு மழைதான் லஷ்மி இருவரும் ஒன்றாகவே வந்துள்ளீர்கள் :-)

    ராமலஷ்மி ஒருதடவை செய்து பார்த்திட்டால் சுவைத்திடலாம் :)
    மிக்க நன்றி.

    ReplyDelete
  10. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி பிரஷா.

    ReplyDelete
  11. வாருங்கள் Anonymous.

    ”யம்...யம்..” மகிழ்ச்சி.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.

    ReplyDelete
  13. கிழங்கைப் பற்றிய விவரங்களுடன் தந்திருக்கும் குறிப்பு அருமை.

    ReplyDelete
  14. கிழங்கை பற்றிய தகவல்களுக்கும்,ரெசிபிக்கும் மிக்க நன்றி மாதேவி!!

    ReplyDelete
  15. போளூர் தயாநிதி உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.

    கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  16. சேனை கிழங்கு பொரித்த குழம்பு அருமை மாதேவி.

    சேனை சிப்ஸ் நல்லா இருக்கும்.
    சேனை செடி என்ன அழகு! பசுமை அழகு.

    ReplyDelete
  17. சேனைக்கிழங்கை சின்ன சின்னதாக கட் பண்ணி வேக வைத்து அதை கடலை மாவில் போட்டு பொரித்து எடுத்தால் செம டேஸ்ட்டா இருக்கும்

    ReplyDelete
  18. மிக அருமை , புளி குழம்புக்கு அடிக்கடி செய்வேன், மீன் மாதிரியும் பொரிப்பேன்
    இதில் சிப்ஸ் செய்தால் சூப்பராக இருக்கும்.

    ReplyDelete
  19. உடனே சாப்பிடனும் போல் இருக்கு மாதேவி

    ReplyDelete
  20. படத்தைப் பார்க்கவே பசி வருது.சாம்பார் வைக்கிற நேரத்தில கருணைக்கிழங்குக் கறி சூப்பர் !

    ReplyDelete
  21. வாருங்கள் கோமதி அரசு.

    நன்றி.

    சிப்ஸ் அனைவருக்கும் பிடித்தமானதே. செய்தால் உடன் காணாமல்போய்விடும் :-).

    ReplyDelete
  22. சி.பி.செந்தில்குமார் வருகைக்கு நன்றி.

    உங்களுக்கும் சமையல் தெரிந்திருக்கிறதே:)

    ReplyDelete
  23. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜலீலா.

    எடுத்துச் சாப்பிடுங்க :-)

    ReplyDelete
  24. சேனைக்கிழங்கைப்பற்றி இத்தனை விளக்கத்துடன் அழகான ரெஸிப்பியும் கொடுத்து இருக்கீங்க மாதேவி மிக்க நன்றி.

    ReplyDelete
  25. ஹே ஹே ஹே ஹே ஹே நானும் வந்துட்டேன் உங்க வீட்டுக்கு [[பிளாக்]]

    ReplyDelete
  26. ஸாதிகா! கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  27. நல்ல பதிவு.. சேனைக்கிழங்கு வேக வெச்சு ஆயில்ல பொரிச்சு சாப்பிட்டா செம டேஸ்ட்தான்

    ReplyDelete
  28. wave super mathevi. i really like this. poriyal, karakkulampu ena ithil seyyum ayittam ellam nalla irukkum.

    thanks to share

    ReplyDelete
  29. பார்க்கும் போதே சாப்பிட ஆசையாக உள்ளது. அருமையிலும் அருமை. மிக்க நன்றி மாதேவி.

    ReplyDelete
  30. உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்