Saturday, April 27, 2013

கோடையை குளிர்விக்கும் பழங்கள்


கோடையின் நடுப் பகுதிக்கு வந்துவிட்டோம் எனச் சொல்லலாம். இப்பொழுது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என்கிறார்கள்.

இடைநிலை பருவப் பெயர்ச்சிக் கால நிலையால் காற்றின் வேகம் குறைந்து காணப்படுகிறது. இதனால் உஷ்ணம் அதிகமாக உணரப்படும். பொலநறுவை மாவட்டத்தில் 32- 34 செல்சியஸ்சுக்கு மேல் வெப்பம் இருக்கிறது. ஏனைய இடங்களிலும் வெப்பத்துக்கு குறைவில்லை.

செரி பழம்

இந்நேரம் உடலுக்கு குளிர்சி தரும் பழவகைகள், சலட்ஸ், இளநீர், நுங்கு, மோர், மல்லித் தண்ணீர், நன்னாரி நீர், கூழ் வகைகள், கஞ்சி வகைகள், களி போன்ற நீராகாரங்கள் அதிக அளவில் பருகி உடல் வெப்பத்தைத் தணிக்கலாம்.


பழங்களில் தர்ப்பூசணியில் 98 வீத நீர்ச் சத்தும், வெள்ளரியில் 95 வீதமும், ஒரேஜ் 87 வீதமும், அப்பிள் 85 வீதமும், திராட்சை 81 வீதம், வாழைப்பழம் 75 வீதம் அளவில் இருக்கின்றன.

மனிதன் தோன்றிய காலத்தில் காடுகளில் கிடைத்த பழ வகைகள், கிழங்குகள், கீரை வகைகளை உண்டு வாழ்ந்து வந்தான்.

விழிம்பிக் காய்

காடுகளில் பாலைப்பழம், கூளாம் பழம், முரளிப் பழம், வீரைப் பழம், கரம்பைப் பழம், பனிச்சம் பழம், சூரைப் பழம், உலுவிந்தம் பழம், நறுவிலிப்பழம், கரையாக்கண்ணிப் பழம், துடரிப்பழம், அணிஞ்சில் பழம், ஈச்சம் பழம், என பல பழங்கள் இருந்திருக்கின்றன.

செரி காய்
 பெயர்களும் பலருக்குத் தெரிந்திருக்காது. இவற்றை எல்லாம் கதைகளில்தான் படித்திருப்போம். இப்பொழுது சில மிகவும் அரிதாகவே கிடைக்கும் என்றாகிவிட்டது.

நகர மயமாதலின் விளைவாக காடுகள் அழிந்து போய்விட்டன.


காடுகள், மலைகளிலிருந்து இயற்கை நமக்கு அளித்து வந்த பழ வகைகளும்; பெரிதும் அழிந்துவிட்டன.

பெலிங் பழம்

காட்டுப் பழங்களைத் தேடி ஓடிப்போக வேண்டாம்.


கிராமங்களில் கிடைக்கும் பலவித பழங்களையும், உடனுக்குடன் பிரஸ்சாக உண்டு நலமடைவோம். வீடுகளில் சிறிதளவு நிலம் இருப்போரும் பழமரங்களை நட்டு நலம்பெறலாம்.


குளிரூட்டியில் பல்நெடுங்காலமாக பேணப்பட்டு மருந்துகள் தெளிக்கப்பட்ட விற்றமின்கள் அழிந்து போன வெளிநாட்டுப் பழங்களைத் தவிர்த்து.........



.............. நம் ஊரில் சீசனில் கிடைக்கும் பழங்களை உண்டு மகிழ்வோம்.


"கொல்லையிலே கொய்யா மரம்..." என்ற நாட்டுப் பாடலும், "வில்வம்பழம் பித்தம் போக்கிடுமே பனம் பழம் பசியைத் தூண்டிடுமே" என்பவற்றையும் நினைவில் கொள்வோம்.

வில்வம் பழம்

நீரிழிவு நோயாளர்களும் தினமும் பழங்களை உண்ணும்படி அறிவுறுத்துகிறார்கள். பழங்களில் இருந்து விட்டமின்கள், தாதுப் பொருட்கள் கிடைக்கின்றன.


பழங்களை அதிகமாகச் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் எடை கூடாது. உடல் எடையைக் குறைக்க உதவும், மலச்சிக்கலைத் தடுக்கும்.


பெரும் குடல்புற்று நோய்கள் வராமல் தடுக்கும் சக்தியும் பழங்களுக்கு இருக்கின்றன.


"வாடா மாப்பிளே வாழைப்பழத் தோப்பிலே பொலிபோல் ஆடலாமா..."


ஆடலுடன் நிற்காமல் இயற்கை அள்ளித் தரும் பழங்களை நேரடியாகவும்,


புருட்சலட், ஜீஸ், மில்க் ஷேக், பஞ்சாமிருதமாகவும் உண்டு உடல் நலம் காப்போம்.

கோடை வெப்பத்திலிருந்து தப்புவோம்.

ஜம்பு பழம்

மரங்களை நாட்டி வளர்ப்போம். பழமுதிர்சோலைகளாக இல்லாதுபோனாலும் இருக்கும் மரங்களை அழியாது பொக்கிசமாகக் காப்போம். நலம்பெறுவோம்.


-: மாதேவி :-
0.0.0..0.0.0

62 comments:

  1. படங்களைப் பார்த்து நாக்குல நீர் சுரக்க வச்சுப்புட்டியளே....

    ReplyDelete
  2. பல்சுவைகள் அறுவை அருமைங்க.

    ReplyDelete
  3. அடேங்கப்பா... எங்க மாதேவி புடிச்சீங்க இத்தனை பழங்களோட படங்களை! அசத்தல்! கண்ணுக்குக் குளிர்ச்சியாவும் இருந்தது. நீங்க சொன்ன மாதிரி இன்று தென்படாமல் போன பல பழங்களை நினைத்தும் பெருமூச்சு வந்தது. இங்க கொளுத்தற வெயிலுக்கு இதமான பகிர்வு! சூப்பரு!

    ReplyDelete
  4. அருமையான பதிவு மாதேவி! எத்தனைப் பழங்கள்! அவற்றின் பெயர்கள்! மிக்க நன்றி!

    ReplyDelete
  5. காடுகளில் கிடைக்கும் பழம் என்று நீங்கள் சொன்னதில் ஈச்சம் பழம் மட்டும் தெரிகிறது மாதேவி.

    சீஸனில் கிடைக்கும் பழங்களை சாப்பிட்டாலே போதும் நீங்கள் சொல்வது போல் நலமாக வாழலாம்.

    படங்கள் எல்லாம் அழகு.
    மரங்களை அழிக்காது பொக்கிஷமாய் காப்பது நம் கடமை அழகாய் சொன்னீர்கள்.

    ReplyDelete
  6. குளிர்ச்சியான தகவல். காட்டு பழம்னு சொல்லியிருக்கிற சில பழங்களை பார்த்ததே இல்லை.

    ReplyDelete
  7. பழங்களைக் காட்டி பழைய நினைவுகளை மூட்டி
    எண்ணத்திலினிக்க எழுதிவிட்டீர்களே!
    கிளிமூக்கு மாம்பழமும் பதமான பலாப்பழமும்
    கிச்சிலி, கொய்யா மாதுளை மங்குஸ்தானென
    பசியைப்பெருக்கி மனதிற்கும் கண்ணுக்குமாய்
    மனம்மகிழ பதிவுகண்டு மகிழ்ச்சிமிகவாகிறதே...

    வாழ்த்துக்கள் பல தோழி!!

    ReplyDelete
  8. பொலிபோல் இல்லேம்மா. அது வாலிபால்!!

    பழங்களைக் கண்டு பசியாறினேன், நன்றி!!

    ReplyDelete
  9. நான் விரும்பிச் சுவைக்கும் ஐஸ்கிரீமோடு கலந்த செர்ரிப் பழமும், தேனில் தோய்த்து சுவைக்கும் மஞ்சள் பலாச் சுளைகளும், சின்ன வயதில் கல் விட்டெறிந்து பிடித்த புளியம் பழங்களும், நல்ல வாழைப் பழங்களும் இங்கே அருமையான வண்ணப் படங்களில் காண்கின்றேன். சுருக்கமான விவரங்கள். பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  10. பழங்களைப் பற்றிய நல்ல பகிர்வு. இவ்வளவு பழவகைகள் இருப்பது இப்பொழுதுதான் தெரிந்தது. வில்வப்பழம் சாப்பிடலாமா?

    ReplyDelete
  11. அழகான பழப் [படப்] பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. அருமையான பதிவு மாதேவி ... கோடைக்கு ஏற்ற பழங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி... ஆமாம் பழங்கள், குளிர்பானங்கள் பருகுவது மிகவும் நல்லது... அனைத்து படங்களும் அருமை... பலாப்பழம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ... நாக்கில் நீரூறிவிட்டது மாதேவி...

    ReplyDelete
  13. கோடைக்கு ஏற்ற பதிவு !காட்டு பழங்கள் பலவற்றை பார்பதே அரிது .அழகான படங்கள் ,அருமை.

    ReplyDelete
  14. Very nice !really I didn't know about some fruits you mentioned here .The photos are excellent .Thank you for your very useful post .

    ReplyDelete
  15. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
    நாவூறும் பழங்கள். அளவோடு நான் சாப்பிடலாம்.கொய்யா,தர்பூசணி,பப்பாளி எல்லாமே சுவை. மிக நன்றி மாதேவி. இத்தனை கண்குளிர்ச்சியாகப் படங்கள் போட்டதற்கும், பழங்களைச் சாப்பிட த் தூண்டியதற்கும்.

    ReplyDelete
  16. இங்கே கோடைப் பழங்களில் விழிம்பிக் காய் வண்டிகளில் விற்கிறார்கள். என்ன பழமோ என விழித்துக் கொண்டிருந்தேன்:). பெயர் சொல்லி உதவியுள்ளீர்கள். வாங்குகிறேன் இனி.

    மிக நல்ல பகிர்வு. படங்களெல்லாம் அருமை மாதேவி.

    ReplyDelete
  17. வாருங்கள் நாஞ்சில் மனோ.
    பழக்கடையை நோக்கி ஓடுங்கள் :))

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  18. நன்றி கவியாழி கண்ணதாசன்.

    ReplyDelete
  19. வாருங்கள் பாலகணேஷ்.

    கொழுத்திற வெயிலுக்கு சாப்பிடத் தூண்டத்தான் போட்டேன்.:) விழிம்பிக் காய்,புளியங்காய்,நெல்லி ஊருக்குப்போனபோது எடுத்திருந்தேன்.


    நன்றி.

    ReplyDelete
  20. வாருங்கள் மகிழ்கின்றேன் புலவர் இராமாநுசம்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  21. கோமதி அரசு வருகைக்கு மகிழ்ச்சி.

    எனக்கும் காட்டுப்பழங்களில் பாலைப்பழம், ஈச்சம் பழம் மட்டும் தெரியும். கிராமங்களில் வேலிகளில் சிறிய மஞ்சள் சிவப்புப் பழங்களாக காய்த்திருக்கும் அதுதான் காரை சூரை என நினைக்கின்றேன் சிறுவயதில் கண்ட ஞாபகம்.

    சில வருடங்களுக்கு முன்பும் யாழ் சென்று திரும்பும் வழியில் பாலைப்பழம் விற்றார்கள் வாங்கிவந்தேன்.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  22. மிக்க நன்றி உஷா அன்பரசு.

    ReplyDelete
  23. பகிர்வு உங்கள் நினைவுகளை மீள மீட்டியதற்கு மகிழ்கின்றேன்.
    நன்றி.

    ReplyDelete
  24. வாருங்கள் தேவ்.

    வாலிபோல் தெரியும் கவனப்பிழையாக எழுதிவிட்டேன் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

    வருகைக்கு மகிழ்கின்றேன்.

    ReplyDelete
  25. ரசித்து எழுதியுள்ளீர்கள் மிக்க நன்றி தமிழ் இளங்கோ.

    ReplyDelete
  26. அழகான படங்களை போட்டு நாவில் நீர் சுரக்க வைத்து விட்டீர்கள்....

    கிடைக்கும் பழங்களை அவ்வப்போது வாங்கி மகளை சாப்பிட வைப்பதுண்டு...:)நானும் தான்..:)

    ஜம்பு பழம் சாப்பிட்டிருக்கிறேன்.... விழிம்பி பழம், வில்வப் பழம் சாப்பிட்டதில்லை..

    ReplyDelete
  27. வாருங்கள் கும்மாச்சி.

    வில்வம்பழம் மருத்துவ பழங்களில் ஒன்று. வயிறுசம்பந்தமான நோய்கள், மூல வியாதிக்கு பெரும்பாலும் உண்கிறார்கள். கசப்பான பழம். நன்கு பழுத்தால் அதன்வாசம் நறுமணமாக சாப்பிடத்தூண்டும். சீனி அல்லது வெல்லம் சேர்த்து உண்பார்கள்.
    தலைநகரில் விற்கின்றார்கள் இந்தப்பழம். நாங்களும் வாங்கிச் சாப்பிட்டோம் சற்று சிரமம்தான்.

    ReplyDelete
  28. மிக்க நன்றி வை. கோபால கிருஷ்ணன்.

    ReplyDelete
  29. கருத்துக்கு மிக்க நன்றி விஜி.

    ReplyDelete
  30. நன்றி சிறீனி வாசன்.

    ReplyDelete
  31. நன்றி சதீஸ் குமார்.

    ReplyDelete
  32. வருகைக்கும் ரசித்து மகிழ்வுற்றதற்கும் மிக்க நன்றி வல்லிசிம்ஹன்.

    ReplyDelete
  33. வாருங்கள் ராமலஷ்மி.

    கண்டுகொண்டதற்கு நன்றி :))

    கோடைக்கு ப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். உப்பு மிளகாய்பொடி இட்டும் சாப்பிடலாம்.

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  34. என்னுடைய கருத்து எங்கே?

    ReplyDelete
  35. கோவை2 தில்லி உங்கள் மின்சாரத்தடை இணைய பிரச்சனையால் போலும் தாமதமாகத்தான் கிடைத்திருக்கின்றது. இப்பொழுது திறக்கும்போதுதான் கண்டேன்.

    சிறுவயதிலிருந்தே பழங்கள் சாப்பிடப் பழக்குவது நல்லது.

    நன்றி.

    ReplyDelete
  36. சிரமம் பாராது மீண்டும் வந்து கேட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  37. பழங்களை பற்றி சுவையான தகவல்கள்..சிறப்பாக இருக்குதுங்க மாதேவி, இதுல சில பழங்களை நானும் சுவைத்ததே இல்லை.

    ReplyDelete
  38. விழம்பிக்காய் இங்கு பார்த்திருக்கிறேன். பெயர் தான் தெரியாமல் இருந்தது! இனி வாங்கி சாப்பிட்டு பார்க்க வேண்டும். அத்தனை பழங்களின் புகைப்படங்களைப் போட்டு கோடைக்கால சூட்டை தற்போதைக்கு தணித்து விட்டீர்கள்! இனிய நன்றி!!

    ReplyDelete

  39. வணக்கம்!

    சுவைதரும் நற்கனிகள்! துாய தமிழும்
    அவைதரும் என்பேன் அறிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  40. பழங்களின் படங்களும் தகவல்களும் நாவூற வைக்கின்றன. நீங்க சொல்லியிருக்கும் பல பழங்களின் பெயர்கள் கேள்விப்பட்டது கூட இல்லை. :( இங்கே நிறைய பழங்கள் கிடைத்தாலும் சிலவற்றை எப்படி இருக்குமோ, எப்படி சாப்பிடுவதோ என்று பயந்து வாங்குவதே இல்லை.

    பயனுள்ள பகிர்வுக்கு நன்றி மாதேவி.

    ReplyDelete
  41. மிக்க நன்றி கலாகுமரன்.

    ReplyDelete
  42. மகிழ்கிறேன் மனோ சாமிநாதன்.

    ReplyDelete
  43. உங்கள் அழகான கருத்துக்கு மிக்க நன்றி பாரதிதாசன்.

    ReplyDelete
  44. வருகைக்கு நன்றி கீத மஞ்சரி.

    ReplyDelete
  45. கனியாய் கனிந்த பகிர்வுகள் அருமை..!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  46. all the posts are very useful , following your blog as a member :)

    ReplyDelete
  47. படங்களும் பதிவுமே
    எம்மைக் குளிர்வித்துப் போனது
    பயனுள்ள பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. மகிழ்ச்சி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  49. வாருங்கள் raz mohan.

    மகிழ்கின்றேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  50. ரமணி அவர்கட்கு நன்றி .

    ReplyDelete
  51. மிக அழகான பயனுள்ள பகிர்வு மாதேவி.

    ReplyDelete
  52. நிறைய தெரியாத பழங்களின் புகைப்படத்தை இப்போழுதுதான் பார்க்கிறென்...மிக்க நன்றிங்க!!

    ReplyDelete
  53. செரி பழங்களைத் தேடினால் உங்கள் பதிவில் கொண்டு விட்டது. முதல்முறையாக வந்து பழங்களை எடுத்துக்கொள்கிறேன். நன்றி.:))))

    ReplyDelete
  54. அறிந்துகொண்டதற்கு நன்றி மேனகா.

    ReplyDelete
  55. வாருங்கள் கீதா சாம்பசிவம்.

    பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

    வருகைக்கு மகிழ்கிறேன். மிக்கநன்றி.

    ReplyDelete
  56. ஜம்பு பழம் மற்றும் பன்னீர் கொய்யா - இரண்டும் ஒன்றா...?

    ReplyDelete
  57. இந்த ஜம்பு பழம் என்பது புதுமையாக உள்ளது. பன்னீர் கொய்யா நிச்சயம் வேறே தான். ஆனால் இந்த ஜம்பு பழம் போன்ற ஒன்று இங்கேயும் கிடைக்கிறது, பெயர் வேறே, வீட்டுக்கு வரவங்க உடலுக்கு நன்மை தரும்னு நிறைய வாங்கிட்டு வராங்க. நைமிசாரண்யத்திலும் வாங்கினேன். பெயர் தான் நினைவில் இல்லை! :))))

    ReplyDelete
  58. எனக்குத்தெரிந்தவரை இரண்டும்வேறு. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  59. பங்குசந்தை & பொருள்சந்தை பற்றி முழுமையாக
    அறிந்துகொள்ள உதவும் வலைத்தளம்....
    மேலும் விபரங்கள் அறிய அழைக்கவும்..
    9842746626,9842799622,9942792444
    http://panguvarthagaulagam.blogspot.in/

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்