இனிமேல் 'அடே வெங்காயமே' என கூறக் கூடாது.
யூதர்கள் 'அனியன'; என்று ஒரு நகரையே நிறுவியிருந்தார்களாம். பண்டைய எகிப்து நாட்டில் வெங்காயத்தை கடவுளாகவே வணங்கியுள்ளார்கள். வெங்காயத்தை முக்கிய நிகழ்ச்சிகளிலும், உறவினர் வீடுகளுக்கு செல்லும்போது பரிசுப் பொருளாகவும் எடுத்துச செல்வார்களாம்.
இங்கிலாந்தில் பிளேக் நோய் வந்து 1664ல் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள். ஆனால் வெங்காயம் பூண்டு விற்ற கடைக்கார்களை பிளேக் நோய் தாக்கவில்லை என்கிறார்கள். மம்மிகளிலும் வெங்காயத்தை வைத்து புதைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் இல்லாமல் நம் நாடுகளில் சமையல் இல்லை. பொன்விலைக்கு ஏறியது நினைவில் இருக்கின்றதுதானே. காய்கறி வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. அசம், நீருள்ளி எனவும் அழைப்பர். சிங்களத்தில் லுணு என்பார்கள்.
தாவரவியல் பெயர் alliumcepa ஆகும். அல்லியம் குடும்பத்தைச் சார்ந்தது. இலங்கை, இந்தியா,பாகிஸ்தான் ,ஈரான், ஆப்கனிஸ்தானில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. தாயகம் ஈரான் பாகிஸ்தான் என்கிறார்கள்.
மத்திய ஆசியாவில் தோன்றிய வெங்காயம் இலங்கை இந்தியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பண்டைய காலத்திலேயே பயிரிடப்பட்டுள்ளது.
கிராமத்தில் எங்கள் காணியில் வெங்காயத் தோட்டம் |
இலங்கை இந்தியர்களும் பண்டையகாலம் தொட்டே பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்று உலகம் முழுவதும் பயரிடப்படுகிறது. உலகில் வெங்காய உற்பத்தியில் சீனா ,இந்தியா முதலிடம் வகிக்கின்றன.
இராட்சத வெங்காயம் peter glaze brook என்பவரின் தோட்டத்தில் விளைந்தது.
Thanks:- big oni - keithfoster.wordpress
Thanks:- big oni - keithfoster.wordpress
வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பம்பாய் வெங்காயம் என வகைகள் இருக்கின்றன. சின்ன வெங்காயத்தில் பாலிபீனால் அதிகம் இருப்பதால் சிறந்தது என்கிறார்கள்.
வெங்காயம் உரிக்கும்போது வரும் கந்தக அமிலம் கண்ணீரை வரவழைக்கிறது. கண்களில் நீர் வருவதைத் தடுக்க தண்ணீரில்போட்டுவெட்டிக் கொள்ளுங்கள். பிரீசரில் 5-10 நிமிடங்கள் வைத்து எடுத்தும் கொள்ளலாம். அல்லது முதல் நாள் பிரிஜ்ஜில் வைத்தும் எடுக்கலாம்.
கந்தக அமிலம் வருவது பற்றிய விஞ்ஞானக் குறிப்பை கீழே ஆங்கிலத்தில் தருகிறேன்.
"Onions produce the chemical irritant known as syn-propanethial-S-oxide. It stimulates the eyes' lachrymal glands so they release tears. Scientists used to blame the enzyme allinase for the instability of substances in a cut onion. Recent studies from Japan, however, proved that lachrymatory-factor synthase, (a previously undiscovered enzyme) is the culprit (Imani et al, 2002)." Why does chopping an onion make you cry?
வெங்காயத்தில் உள்ள புரொட்டீன்கள் முதுமையைத் தடுக்கும். முகச் சுருக்கம், சர்ம நோய்கள் வராமல் தடுக்கும். என அழகுகலை நிபுணர்கள் கூறுகிறார்கள். மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தியும் இருக்கின்றது என்பது சிறப்பானது.
உடல் பருமனைக் குறைக்க பெருமளவு உதவுகின்றது. ஜீரண சக்தி அதிகரிக்கும், தொற்றுநோய்கள் வராமல் தடுக்கும், வாய்புண்கள் குணமாகும், இரத்தசோகையைத் தடுக்கும், கொலஸ்டரோலைக் குறைக்கும் தன்மையும் இருக்கிறது என்கிறார்கள். மூலவியாதிக்கும் நல்லது என்கின்றனர்.
உணர்வைத் தூண்டும் வேதிப் பொருள் இருப்பதால் கோவில் உணவுகளிலும் விரத உணவுகளிலும் தவிர்கிறார்கள்.
சூப், வெங்காயப் பச்சடி, வெங்காயச் சம்பல், வெங்காயக்குழம்பு, பகோடா, பஜ்ஜி, என சுவைக்கும்.
வெங்காயப் பொரியல் நமது நாட்டில் பிரபலமான உணவு.
வெங்காயப் பொரியலுக்கு இங்கே செல்லுங்கள்..... மண் சுமக்க வைத்தது
கிழங்கு, வாழைக்காய், இறால், மீன், கருவாடு, ஈரல் பொரிக்கும்போது அரைவேக்காட்டின் பின் உப்பு மிளகாய் தூள் பிரட்டிய வெங்காயத்தைக் கொட்டி பொரிய விட்டு எடுத்து சுவைத்துப் பாருங்கள். அதன் சுவையே தனிதான்.
பருவம் வந்ததும் வெங்காயத்தில் தாறு தோன்றி பூக்கும் இதை வெங்காயத்தாறு என்போம்.
வெங்காயம் என்றொரு படமும் வந்தது ஞாபகத்திற்கு வருகிறது.
வெங்காயத் தாறு முட்டை வறை
தேவையானவை
வெங்காயப்பூ -1கட்டு
முட்டை – 2 - 3
செத்தல் மிளகாய் -1
சின்னச் சீரகம் - ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப் பொடி -¼ ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
ஓயில் - 2 ரீ ஸ்பூன்
செய்முறை
வெங்காயத்தின் பூவையும் அடிப்பாகத்தையும் வெட்டி எறியுங்கள்
நன்கு ஓடும் நீரில் கழுவி எடுங்கள்.
வடிய வைத்து சிறிதாக வெட்டி எடுங்கள்.
செத்தல் மிளகாயை சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
ஓயிலில் செத்தல், சீரகம் தாளித்து வெட்டிய வெங்காயத்தாரை போட்டு பிரட்டுங்கள்
உப்பு, மிளகாய்ப் பொடி கலந்து வேகவிடுங்கள்.
முட்டையை உடைத்து சிறிதுஉப்பு, மஞ்சள் பொடி, கலந்து நன்கு அடித்து எடுங்கள்.
வெந்த வெங்காயத்தாறில் முட்டையை ஊற்றி நன்கு கிளறுங்கள்.
முட்டை வெங்காயத்தாறு பொரியல் சுருண்டு வரும். மணமும் கூடவே வரும்.
வெங்காயத் தாரின் போசனை
Principle | Nutrient Value | Percentage of RDA |
---|---|---|
Energy | 40 Kcal | 2% |
Carbohydrates | 9.34 g | 7% |
Protein | 1.10 g | 2% |
Total Fat | 0.10 g | 0.5% |
Cholesterol | 0 mg | 0% |
Dietary Fiber | 1.7 g | 4.5% |
Vitamins | ||
Folates | 19 µg | 5% |
Niacin | 0.116 mg | 1% |
Pantothenic acid | 0.123 mg | 2.5% |
Pyridoxine | 0.120 mg | 9% |
Riboflavin | 0.027 mg | 2% |
Thiamin | 0.046 mg | 4% |
Vitamin A | 2 IU | 0% |
Vitamin C | 7.4 mg | 12% |
Vitamin E | 0.02 mg | 0% |
Electrolytes | ||
Sodium | 4 mg | 0% |
Potassium | 146 mg | 3% |
Minerals | ||
Calcium | 23 mg | 2% |
Copper | 0.039 mg | 4% |
Iron | 0.0.21 mg | 3% |
Magnesium | 10 mg | 2.5% |
Manganese | 0.129 mg | 5.5% |
Phosphorus | 29 mg | 4% |
Zinc | 0.17 mg | 1.5% |
Phyto-nutrients | ||
Carotene-beta | 1 µg | -- |
Cryptoxanthin-beta | 0 µg | -- |
Lutein-zeaxanthin | 4 µg | -- |
-மாதேவி-
0.0.0.0.0.0
வெங்காயம் பற்றிய பல்வேறு பயனுள்ள மருத்துவ + சரித்திரத் தகவல்களுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteவெங்காயம் வெள்ளைபூண்டு இரண்டுமே கிருமி நாசினி . மேலும் பெரியாரே அடிக்கடி வெங்காயம் என்று சொல்லுவாரோ
ReplyDeleteவெங்காயம் உரிக்கும்போது கந்தக அமிலம் கண்ணீரை வரவழைக்கிறது என்கிறீர்கள் வெங்காயத்தில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள் விவரத்தில் கந்தகம் இடம் பெறவில்லையே!
ReplyDeleteவிரிவான விளக்கங்களுக்கும், செய்முறை குறிப்புகளுக்கும் நன்றி சகோதரி...
ReplyDeleteஉங்களுக்கே உரிய தனிப் பாணியில் வெங்காயம் பற்றிய தகவல்களும், அருமையான சமையல் குறிப்பும்! எங்கள் வீட்டு சமையலில் வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது. அதை ருசித்து சாப்பிடுகிறோம் என்றாலும் அதனுள்ளிருக்கும் இத்தனை வைட்டமின் பற்றிய தகவல்கள் எனக்குப் புதியவைதான். இதன் மகத்துவத்தை அறியத் தந்தமைக்கு நன்றி மாதேவி!
ReplyDeleteI wish to try this.
ReplyDeleteசிறப்பான தகவல்கள்......
ReplyDeleteஅருமையான தகவல்கள் நல்ல பயனுள்ள பதிவு மாதேவி. வெங்காய தாள் பற்றிய குறிப்பும் சமையலும் அருமை. இங்கு கிடைக்கிறது நான் செய்து பார்க்கிறேன்... நன்றி தோழி...
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி வை. கோபால கிருஷ்ணன்.
ReplyDeleteநன்றி கவியாழி கண்ணதாசன்.
ReplyDeleteஉங்கள் சுட்டிக் காட்டலுக்கு நன்றி புரட்சித் தமிழன்.
ReplyDeleteவிஞ்ஞான விளக்கத்தை தற்போது இணைத்திருக்கின்றேன்.
வருகைக்கு மகிழ்கின்றேன்.
நன்றி திண்டுக்கல் தனபாலன்.
ReplyDeleteவாருங்கள் பாலகணேஷ்.
ReplyDeleteஉங்கள் நீண்ட கருத்து மகிழ்ச்சியைத் தருகின்றது.
மிக்கநன்றி.
நன்றி சண்முகநாதன்.
ReplyDeleteவாருங்கள் வெங்கட்.
ReplyDeleteமகிழ்கின்றேன். நன்றி.
செய்து பாருங்கள் விஜி. சுவையாக இருக்கும்.
ReplyDeleteவருகைக்கு நன்றி.
எனது ஊரில் பெரும்பாலும் வெங்காயம்தான் பயிரிடுவார்கள்.
ReplyDeleteபச்சைத் கம்பளம் எனப் பரந்திருக்கும் தோட்டங்களை காணும் மகிழ்ச்சியை உங்கள் பதிவு தந்திருக்கிறது.
நன்றி
வெங்காயம் பற்றிய ப்கிர்வு அருமை.
ReplyDeleteஉங்கள் காணியில் வெங்காய செடி அருமை. கண்களுக்கு விருந்து.
வெங்காயத்தில் மலர்ந்த பூக்கள் வெகு அழகு.
மிக்க மகிழ்ச்சி டொக்டர்.
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி கோமதிஅரசு.
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை.மாதேவி.
ReplyDeleteநன்றி ஆசியா.
ReplyDeleteவெங்காயம் பற்றிய பதிவு சூப்பர்ர்..உங்கள் காணியில் விளைந்திருக்கும் வெங்காயம் கண்களுக்கு விருந்து.
ReplyDeleteஉங்கள் பதிவைப் படித்தவர்களுக்கு “ ஓகோ.கோ.. மனிதர்களே! ஓடுவது எங்கே சொல்லுங்கள்! ... ... உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது “ என்று பாடத் தோன்றாது. படங்களும் பதிவும் சிறப்பாக உள்ளன.
ReplyDeleteநன்றி மேனகா.
ReplyDeleteவாருங்கள் தமிழ் இளங்கோ.
ReplyDeleteஉங்கள் ஊட்டத்தை ரசித்தேன்.
மிக்க நன்றி.
மிகவும் பயனுள்ள முழுமையான பதிவு. உங்கள் உழைப்பு அதில் தெரிகிறது. ஒரு சிறு சந்தேகம். வெங்காய தார் என்பது சரியா இல்லை வெங்காய தாள் என்பது சரியா?
ReplyDeleteஉங்கள் முதல்வருகைக்கு மிக்க மகிழ்ச்சி நிஷா.
ReplyDeleteபேச்சு வழக்கில் ஊரில் வெங்காயத் தாறு என்பார்கள். நீங்கள் கூறியதுபோல் வெங்காயதாள் என்பதுதான் சரியானது என நினைக்கின்றேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
வெங்காயத்தை பற்றி அருமையான பதிவை போட்டு அசத்தியிருக்கிறீர்கள் மாதேவி. பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteவாருங்கள் கும்மாச்சி.
ReplyDeleteமகிழ்கின்றேன்.
வருகைக்கு நன்றி.
சிறப்பான சுவையான பகிர்வுகள் சத்தானவை .. பாராட்டுக்கள்..
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteஅன்பின் சின்னு ரேஸ்ரி - வெங்காயத்தார் முட்டை - பொறியல் செய்முறை விளக்கம் நன்று - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete