Tuesday, March 26, 2013

'பூரான் சலட்' சீன உணவு அல்ல

தமிழர்களின் வாழ்க்கையில் பல காலமாக முக்கியத்துவப் பொருளாகிவிட்டது தேங்காய். மங்கலப் பொருளின் அடையாளமாகவும் பேணப்பட்டு வருகிறது.

பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து வழிபட்ட பின்னரே விசேட நிகழ்ச்சிகள் தொடங்குவார்கள்.

கோவிலுக்குச் செல்வதென்றாலும் தேங்காயுடன்தான் செல்கின்றார்கள். கோயில்களில் நேர்த்திக்காக சிதறு தேங்காய் அடிப்பார்கள். பண்டிகைகள் விழாக்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது.


நிறைகுடம் வைத்து தேங்காய்,மாவிலை,பூக்களால் அலங்கரித்து சந்தணம்,குங்குமம் வைத்து வரவேற்பார்கள்.

நவராத்திரியில் இலட்சுமியைத் துதித்து கலசத் தேங்காய் வைக்கப்படுகின்றது. சித்திரைப் பொங்கல் அன்று மாலையில் போர்த் தேங்காய் அடிக்கும் போட்டியும் நடக்கும்.


மஞ்சள் பூசிய தேங்காய் ஆரத்தி பூப்புநீராட்டு விழாக்களில் எடுக்கப்படுகின்றது. மஞ்சள் இட்ட தேங்காயின்மேல் திருமணத் தாலிவைத்து பூசிக்கப்படுகின்றது.

இளநீர், தேங்காய், காய்ந்தபின் கொப்பரை என முழுதாகவே இது பயன்படுகிறது.

தேங்காயில் நெய்யை நிறைத்து விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.

ஓமகுண்டலங்களிலும் தேங்காய் இட்டு வழிபடுகின்றார்கள்.

கார்த்திகை தீப நாளில் வீட்டு வாசலில் வாழை மரக்குத்தியை நாட்டி கொப்பரைத் தேங்காயில் எண்ணெயை ஊற்றி விளக்கு ஏற்றி வைப்பார்கள். பலமணி நேரம் விளக்கு எரியும்.


எங்கள் நாட்டில் தேங்காய் இல்லாமல் சமையலே இல்லை. கிராமங்களில் வீட்டைச் சுற்றி தென்னைமரங்கள் நாட்டியிருப்பார்கள். அதிலிருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய்கள் தேவைக்குப் போதுமானதாக இருக்கும்.வெப்ப காலம் ஆரம்பித்துவிட்டது. இக்காலத்திற்கு உடல் வெப்பத்தைத் தணிக்க தாகத்தைத் தீர்க்க நீராகாரங்களை அருந்துவதும் உடலுக்கு குளிரச்சியைத் தரும் காய்கறிகள், கீரைவகைகள், பழவகைகள், சலட் வகைகள், கஞ்சி வகைகள்,மோர் கூழ்,பால்சோறு வகைகள் உண்பதும் சிறந்தவை.

கோடையில் உடலிலுள்ள நீர் வியர்வையாக அதிகஅளவில் வெளியேறுவதால் அதை ஈடு செய்ய நீர்ச் சத்து மிக்க உணவுகளை கூடியளவு எடுப்பது அவசியம். நீராகரங்களை போதிய அளவில் எடுத்துக் கொண்டு எமது உடல் வெப்பத்தைப் பேணிக் கொள்ள வேண்டும்.

பனம் பழம் முளைக்கும் காலத்தில் கிடைப்பது பனம் பூரான். இதுவும் வெட்டிச் சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும். இது மஞ்சள் வெள்ளை நிறத்தில் இருக்கும்.உடைத்த தேங்காயில் பூ இருந்தால் அதை மங்கலமாகக் கொள்வார்கள்.

இதை தேங்காய்ப் பூரான், தவுன், சிதவல் என்றும் பெயர் சொல்லி அழைக்கின்றார்கள். தேங்காய் பூரான்களும்;

தெருவீதிகளில் விற்பனைக்காகக் காத்திருப்பதைக் காணலாம்.

நன்றி:- வீடு திரும்பல் மோகன்குமார்
இதிலுள்ள நீர்ச் சத்து நாவிற்குக் குளிர்ச்சியைத் தரும். தாகத்தையும் தீர்க்கும். காபோஹைதரேட் புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கல்சியம், பொஸ்பரஸ், விற்றமின்கள், அடங்கியுள்ளது.

வாய்ப் புண்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. வயிற்று நோய்களுக்கும் நல்லது என்கிறார்கள். இதை நேரடியாக உண்பதுடன் கோடை சலட்டாகவும் பயன்படுத்தலாம்.


தினந்தோறும் வெங்காயதயிர் பச்சடி, வெண்டைக்காய் தயிர்பச்சடி, வெள்ளரிக்காய் தயிர்பச்சடி என சலிப்போருக்கு சற்று வித்தியாசமாக மிக இலகுவாக செய்துகொள்ள சிறந்தது. பச்சலர் சமையலுக்கு ஏற்றது.

தேங்காய் பூரான் தயிர் சலட்.

தேங்காய் பூரானில் உப்பும் இனிப்பும் இயற்கையாகவே இருக்கின்றது அதனால் ஒருகப் தயிரை அடித்து எடுத்து வெட்டிய பூரான் துண்டுகளை கலந்துவிட்டால் சலட்தயார். விரும்பினால் குளிரவைத்து பரிமாறலாம்.

கோடை வெப்பத்துக்கு வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். 

காரம் எதுவும் சேர்க்கவில்லை காரம் விரும்பினால் சேர்த்துக் கொள்ளுங்கள்.


சலட் எனது முன்னைய பதிவுகள் இரண்டு:-

கீரை வித் மாங்காய் சலட்
குட மிளகாய் சலட்

-: மாதேவி :-

26 comments:

 1. வித்தியாசமான சாலட்...

  ReplyDelete
 2. இதை தவுனு என்றுதான் நானும் சொல்லக்கேட்டிருக்கிறேன். ரொம்ப ருசியா இருக்கும்.

  ReplyDelete
 3. தேங்காய் 'தவுன்' பற்றி நீங்கள் எழுதியிருப்பவை மிகுந்த‌ சுவாரஸ்ய‌மாக இருந்தது படிக்க. படங்களும் அருமை!

  ReplyDelete
 4. தேய்காய்கள் பற்றி மிக நல்ல விரிவான அலசல்கள். படங்களும் எல்லாமே மிகவும் அழகாக உள்ளன.

  பகிர்வுக்குப்பாரட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  ReplyDelete
 5. தேய்காய்கள் பற்றி மிக நல்ல விரிவான அலசல்கள். படங்களும் எல்லாமே மிகவும் அழகாக உள்ளன.

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  தேங்காய் உடைத்ததும் சிலவற்றில் பூ இருக்கும். பார்த்துள்ளேன். தேங்காய்ப்பூரான் என்ப்து இதுவரைக் கேள்விப்பட்டதே இல்லை தேள், பாம்பு, பூரான் போலவோ என பயந்துகொண்டே படித்தேன். ;)

  ReplyDelete
 6. உடைத்ததேங்காயில் இவ்வளவு பெரிய பூ பார்த்தது இல்லை நெல்லிக்காய் அளவு பார்த்து இருக்கிறேன்.
  அருமையான சாலட்.
  படங்கள் எல்லாம் அழகு மாதேவி.

  ReplyDelete
 7. அடிக்கும் வெயிலுக்கு படங்களும் பகிர்வும் இதமாய் இருந்தது கண்களுக்கு...

  ReplyDelete
 8. நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 9. நம்ம நாட்டில் பூரான் :) என்றுதான் அழைப்போம்.
  நன்றி சாரல்.

  ReplyDelete
 10. நன்றி மனோ சுவாமிநாதன்.

  ReplyDelete
 11. வாருங்கள் வை. கோபாலகிருஷ்ணன்.

  உங்கள் கருத்துக்களுக்கு மி்க நன்றி.

  சுவாரஸ்யத்திற்காகத்தான் தலையங்கத்தை அப்படிப்போட்டேன். :)

  ReplyDelete
 12. உங்கள் கருத்துக்கு மகிழ்கின்றேன்.

  மிக்க நன்றி கோமதி அரசு.

  ReplyDelete
 13. கிடைத்தால் வெய்யிலுக்கு வாங்கி சாப்பிடுங்கள். :))

  நன்றி திண்டுக்கல் தனபாலன்.

  ReplyDelete
 14. வித்தியாசமாய் ஒரு சாலட்!

  ReplyDelete
 15. அட இப்படி ஒரு சாலட்டா

  ReplyDelete
 16. அருமையான சாலட் மாதேவி .....படங்கள் அனைத்தும் அருமை .... நலமா....

  ReplyDelete
 17. நன்றி வெங்கட்.

  ReplyDelete
 18. :) நன்றி பிரேம்.

  ReplyDelete
 19. நலம். வருகைக்கு நன்றி விஜி.

  ReplyDelete
 20. நல்ல பகிர்வு.எங்க ஊரில் பனை தவுன் விற்பனைக்கு வரும்.தேங்காயில் இத்தனை பெரிய தவுனை இப்பொழுது தான் பார்க்கிறேன்.எளிமையான அருமையான சாலட் குறிப்பு.கிடைக்கும் பொழுது செய்து பார்க்கிறேன் மாதவி..

  ReplyDelete
 21. தேங்காய் பற்றி விரிவாக சொல்லிருக்கீங்க,தேங்காய் பூரான் சாலட் சூப்பர்,இதுவரை சாப்பிட்டதில்லை..

  ReplyDelete
 22. தேங்காய் பூ இங்கு தலைநகரில் கிடைக்கும். சிங்களத்தில் பலபொல என்கிறார்கள். கிராமத்தில் கூட இவ்வளவு பெரியது கிடைப்பதில்லை.

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 23. வாருங்கள் மேனகா.
  கிடைக்கும்போது வாங்கி சாப்பிட்டு பாருங்கள்.
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 24. அட..அட எனக்கு மிகமிக பிடித்தமான பூரான். இந்த சைட் என் கண்ணில் இப்பதானே தெரிந்தது.எங்கட ஊர் உணவுகள்.பார்க்க சந்தோஷமாக இருக்கு.
  பழைய நினைவுகள் வந்தேவிட்டது. நல்ல பதிவு.

  ReplyDelete
 25. தேங்காய் பூரான் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன் தகவலுக்கு நன்றி

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்