குசினி என்றும் பலர் பேசிக் கொள்வார்கள். குசிய எனச் சிங்களத்தில் சொல்லுவார்கள். போர்திக்கீசிய மொழியிலிருந்து பெற்றதாக ஞாபகம். குசினி என்னும் இச்சொல் Cozinha (குசினா) என்ற போர்திக்கீசிய மொழியிலிருந்து இலங்கைக்கு வரப்பெற்றதாக( சமையலறை.) தமிழ் விக்கிபீடியா உறுதிப்படுத்துகிறது.
அடுக்களையில் மேலதிகமான பாத்திரங்களை வைத்தெடுக்கவும் அரிசி, பருப்பு பண்டங்களை வைக்கவும் நீண்ட பலகையால் செய்யப்பட்ட பரண்கள் குசினியில் தொங்கவிடப்பட்டிருந்தன. அவை பொருட்களை எட்டி எடுக்கக் கூடிய உயரத்தில் இருக்கும்.
நிலத்தில் இருந்து வேலை செய்வதற்கு பலகை ஆசனங்கள் வைத்திருந்தனர். பலகைக் கட்டை என்பர்.
மரத்தாலான அகப்பைக்கூடு துளைகள் உள்ளது தொங்கவிடப் பட்டிருக்கும். அகப்பை, மத்து ,கரண்டி, தட்டகப்பை, போன்றவற்றை அவசரத்திற்கு எடுப்பதற்காகச் செருகி வைத்திருப்பர்.
அகப்பை கூடு |
வெண்கலம், ஈயம், அலுமினியப் பொருட்களின் பிற்பாடு எனாமல் பூசப்பட்ட பாத்திரங்கள் பாவனைக்கு வந்தன.
கறிக் கோப்பைகள், பேசின், ரிபன் கரியர், கேத்தல், பிளேட்ஸ், ரீ யக் ( Jug ) ரீ பொட்; (Pot) இருந்தன. பல வர்ணங்களில் அழகாய் இருந்தன. ஒரே ஒரு குறை நிலத்தில் விழுந்து அடிபட்டால் எனாமல் எடுபட்டு அசிங்கமாகும். பின்னர் அவ்வடத்தில் பாத்திரத்தில் ஓட்டை வந்து விடும்.
சீன தயாரிப்புப் பீங்கான் பிரபலமாக விற்பனைக்கு வந்தது. சுத்தம் செய்வது இலகு என்பதால் பலரும் விரும்பி வாங்கிக் கொண்டனர். இவற்றில் ரீசெட், டினர்செற் பிரபலமாக அறிமுகமாகி இருந்தது. இப்பொழுதும் வீடுகளில் இடம் பிடித்து இருக்கிறது.
அடுத்து ஆட்கொல்லி பிளாஸ்ரிக் அறிமுகமாயிற்று . தொடக்கத்தில் மனிதரைக்கொல்லும் என்பதை அறிந்திருக்கவில்லை. உடையாது, இலகுவானது என வாங்கிக் கொண்டார்கள். இது பல் தொகையாகப் பெருகிகாணும்இடம் எல்லாம் இடம்பிடித்து சுற்றுச் சூழலையும் கேடாக்கி நிற்கிறது. இதைப்பற்றி தனிப் பதிவே போடலாம்.
ஸ்ரெயின்லெஸ் பாத்திரங்கள் வந்தன. இதற்கு ஏகக் கிராக்கி இருந்தது. மெலமின்கோப்பைகள்அறிமுக மாயின.
இதைத்தொடர்ந்து பைரக்ஸ் அவன் (oven) பாத்திரங்கள் பிரபல்யம் ஆகியது. நொன்ஸ்ரிக் சமைக்கும் பாத்திரங்கள், மைக்ரோ பாத்திரங்கள், என பல்வகையும் உபயோகத்தில் இருக்கின்றன.
அரிக்கன் லாம்பு (விளக்கு) |
நமக்கும் மின்சாரம் இல்லாத சண்டைக்காலத்தில் இவ்விளக்கு நல்ல அனுபவம்.
மண்ணெண்ணை லீற்றர் 250ரூபா விற்றது. அதுவும் கிடைப்பதற்கு அரிது. கண்ணாடி (ஜாம்) போத்தலின் அடியில் தண்ணீரை விட்டு அதன்மேல் தேங்காய் எண்ணை சிறிதளவு ஊற்றி சைக்கிள் ரியூப் வாலில் திரியைச் செருகி விளக்கு எரித்திருக்கிறோம். மேலே கம்பிகட்டி கைபிடியும் இருக்கும் எடுத்துச்செல்வதற்கு.
காஸ்,மின்சாரம், இல்லாதகாலம் விறகு அடுப்பொன்றும் அக்காலத்தில் புதிதாக அறிமுகமாகி அனைவருக்கும் கைகொடுத்தது.
இரு அடுப்புக்கள் ஒன்றுடன் ஒன்று பக்கத்தே தொடுத்ததாய் இருக்கும் முன்பகுதியில் எரித்தால் பக்கத்திலே சற்று உயர உள்ள சிறிய அடுப்பிலும் சூடுபரவி இரண்டு சமையல் செய்யலாம்.அத்துடன் விரைவில் சமையலும் முடியும்.
கைக் கோடரி |
விறகு தட்டுபாடான காலம் அது. . மறக்கக்கூடியவையா இவை எல்லாம்.
சமைப்பதற்கு ஆதியில் விறகு அடுப்பு. நிலத்தில் மூன்று கல்லை வைத்து பாத்திரத்தை அதன் மேல் வைத்துச் சமைப்பர்.
கல்லடுப்பு |
பின் களிமண்ணால் அடுப்பு பிடித்து வெப்பத்திற்கு உடையாதிருக்க அதன் மேல் சாணம்பூசி வைத்திருப்பார்கள். குமட்டி அடுப்பும் இருந்தது.
இரும்பு அடுப்பு |
குமட்டியில் தணலைப் போட்டு சமைத்த குழம்பை ஆறாமல் வைத்திருப்பார்கள். மரத்தூள் அடுப்பும் தகரத்தால் செய்யப் பட்டது இருந்தது. மரத்தூளை அடைந்து எரியவைத்துச் சமைப்பர்.
பின் இரும்பால் செய்த அடுப்புக்களை வைத்து சீமேந்தால் பூசிக் கட்டினார்கள். காலப் போக்கில் இவை வெப்பத்தால் வெடிக்கத்தொடங்கின. அத்துடன் மண்ணெண்ணை பாவனைக்கு வர இவையும் இல்லாது போயின.
மண்ணெண்ணை ஸ்ரவ், குக்கர், பாவனையில் இருந்தது. ப்ரஷர் குக்கர், ப்ரிஜ் வந்தன. இலகு மின்சார அடுப்புகள் வர பலரும் மின்சார, காஸ் அடுப்புகளுக்கு மாறினர். ரைஸ்குக்கர் குடியேறியது.
அம்மி |
ஆட்டுக்கல்லு |
திரிகை, பயறு, உழுந்துமா திரிக்கவும், உடைக்கவும் பயன்பட்டன.
உரல், உலக்கை அரிசி குத்தவும். மா இடிப்பதற்கும் உபயோகித்தனர்.
திரிகை |
பின் விறாந்தையில் கல்லுரல், திரிகை |
மிக்ஸி, கிரைண்டர், அரங்கேற கல்லுரல்கள் வீட்டின் பின் விறாந்தைகளில் தஞ்சம் புகந்தன. காலம் போக பின்புறம் வாழைப்பாத்திகளுக்குள்ளும் உட்கார்ந்திருந்து அழுதன..
இன்னும் சில கனவாகிப்போன அடுக்களைப் பண்ட பாத்திரங்கள்
பழையன ஒழிந்து சமையலறையும் புதுப்பொலிவுடன் கிச்சன் யூனிற் பூட்டப் பட்டு புதுப்பொலிவு பெற்றன. தூசி தட்டும் ஒட்டடைக் கம்புக்கும் வேலை இல்லாது போய் விட்டது. வக்கூம் க்ளீனரும் வந்தது.
இப்பொழுது மின்சார . காஸ்அடுப்புகளுடன். சூரிய அடுப்பு, மைக்ரோ. இன்டெக்சன் என பவனி தொடர்கிறது….
டிஸ்வோசர் பூட்டப் பட்டு கிச்சன் அழகிய மாளிகையாகியது. மாளிகையில் அழகிய பொருட்கள் கண்ணைச் சிமிட்டிநிற்கின்றன…
சமையலோ பல வீடுகளில் அம்போ…. ஆகிவிட்டது.
ரெஸ்ரோறன்ஸ் பக்கற்றுகள் ப்ரிஜ்ஜில்அடைக்கப்பட்டு மூச்சுத்திணறி… மைக்ரோவில் சூடேறி பலவீட்டு டைனிங் டேபல்களில் சிரித்திருக்கின்றன……
ஆஹா எங்கிருந்து படங்கள் கிடைத்தன
ReplyDeleteஇல்லை முன்பு எடுத்த சொந்த படமோ
படிக்கும் காலம் வரை ஓரளவுக்கு இதேலாம் பயன்படுத்தி இருக்கோம்
ReplyDeleteபுகுந்த வீடு வந்தும், சில காலம்
இது போல் கரி அடுப்பும், அம்மி,அரிக்கன், அகப்பை, பெரிய தேக்ஷா தான்...
பயன் படுத்தினோம்
இப்ப இதெல்லாம் கல்யாணத்துக்கு சமைப்பர்கள் வீட்டில் மட்டுமே காணப்படும்
தேடி எடுத்து, துர்சி துடைத்து புகைப்படங்களாக கலக்கியிருக்கறீர்கள். சுவைத்து மனம் நிறைந்து வாழ்ந்த வாழ்வை மறக்க முடியுமா? சில காலத்தில் கலைப் பொக்கிஸங்கள் ஆகிவிடும்.
ReplyDeleteகனவாகிப் போன அடுக்களை பொருட்கள் சுவாரசியமான, மறந்த பாண்டங்களை ஞாபகப் படுத்தியது..
ReplyDeleteI am saving this link... Very rare collection of photos. Thank you so much.
ReplyDeleteசமையலறையை யாழ் தமிழில் அடுப்படி மற்றும் அடுக்களை என்றும் சொல்லுவார்கள்//
ReplyDeleteஇப்போ, குசினி, கிச்சின், என்றெல்லாம் மாறிப் போச்சு...
குசினி என்றும் பலர் பேசிக் கொள்வார்கள். குசிய எனச் சிங்களத்தில் சொல்லுவார்கள். போர்திக்கீசிய மொழியிலிருந்து பெற்றதாக ஞாபகம். குசினி என்னும் இச்சொல் Cozinha (குசினா) என்ற போர்திக்கீசிய மொழியிலிருந்து இலங்கைக்கு வரப்பெற்றதாக( சமையலறை.) தமிழ் விக்கிபீடியா உறுதிப்படுத்துகிறது.//
ReplyDeleteஆஹா.. ஆஹா.. ஊர் ஞாபகங்களை இன்றும் நினைவில் வைத்திருக்கிறீர்கள் போல இருக்கே..
அடுப்படியை...
அடுப்புப் போட்டு.. என்றும் சொல்லுவார்கள் எங்கள் பிரதேசத்தி.
அடுக்களையில் மேலதிகமான பாத்திரங்களை வைத்தெடுக்கவும் அரிசி, பருப்பு பண்டங்களை வைக்கவும் நீண்ட பலகையால் செய்யப்பட்ட பரண்கள் குசினியில் தொங்கவிடப்பட்டிருந்தன. அவை பொருட்களை எட்டி எடுக்கக் கூடிய உயரத்தில் இருக்கும்//
ReplyDeleteபரண் கட்டி வைக்கிறது என்று எங்கள் ஊரில் சொல்லுவார்கள்.
அடுத்து ஆட்கொல்லி பிளாஸ்ரிக் அறிமுகமாயிற்று . தொடக்கத்தில் மனிதரைக்கொல்லும் என்பதை அறிந்திருக்கவில்லை. உடையாது, இலகுவானது என வாங்கிக் கொண்டார்கள். இது பல் தொகையாகப் பெருகிகாணும்இடம் எல்லாம் இடம்பிடித்து சுற்றுச் சூழலையும் கேடாக்கி நிற்கிறது. இதைப்பற்றி தனிப் பதிவே போடலாம்//
ReplyDeleteநாங்கள் வன்னியில் அகதிமுகாமில் இருக்கும் வரைக்கும் இந்தப் பிளாற்ரிக் கோப்பைகளில் தான் சாப்பாடு வரும்.
நமக்கும் மின்சாரம் இல்லாத சண்டைக்காலத்தில் இவ்விளக்கு நல்ல அனுபவம்//
ReplyDeleteபோத்தல் விளக்குப் பற்றிய நினைவுகளை என்றைக்குமே அழிக்க முடியாது, குப்பி விளக்கு/ போத்தல் விளக்கில் படிக்கும் போது விளக்கை நூர்க்க மறந்து நள்ளிரவில் தலை முடி எரித்தவர்களின் வரலாறுகளும் உண்டு.
இவையெல்லாம் காலத்தால் அழியாத எங்களின் கடந்த காலங்கள் சகோ.
ஆச்சி பாக்கிடிக்கிற சின்ன உரலைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். எங்களூர் அடுப்படி ரகளைகளை ஒரு அசத்தல் பதிவாகத் தந்துள்ளீர்கள்.
ReplyDeleteநன்றிகள் சகோ.
சூப்பர்ர் பகிர்வு மாதேவி..மறந்துபோன பாத்திரங்களை அழகா படத்தோடு சொல்லிருக்கீங்க.நன்றி!!
ReplyDeleteஅற்புதமான நினைவுகளைக் கிளப்பி விட்ட அருமையான பதிவு.
ReplyDeleteஅரிக்கேன் விளக்கு, சிம்னி விளக்கு, விறகு அடுப்பின் பக்கவாட்டில் கேஸ் அடுப்பில் ‘சிம்’ வைப்பது போன்ற பயன் பாட்டுக்கான அடுப்பு, நிரந்தரமாக வீட்டின் பின்பக்கம் குளிக்க வென்னீர் வைக்கும் மூன்றடி உயர ட்ரம்முக்கான அடுப்பு, ஆட்டுக்கல், திருவை, உரல், அம்மி அத்தனையும் எம் வீட்டில் இருந்தன.
நீங்கள் காண்பித்திருக்கும் உரல் படத்தில் பின்னால் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் பலகை, மாடுகள் கட்ட பயன்படுத்தப் படும். சுவற்றிலிருந்து ஓரடி தள்ளி பொருத்தப்பட்டு அதனிடையில் வைக்கோலைப் பரப்பி வைப்பார்கள்.
நல்லதொரு பகிர்வு. நன்றி மாதேவி:)!
எப்பவுமே ஓல்ட் இஸ் கோல்ட்தான்.
ReplyDeletegood post which remember the past
ReplyDeleteகாலம் மாறுது, கருத்தும் மாறுது, நாமும் மாறவேண்டும் என மாறிவிட்டோம்.
ReplyDeleteஅந்த காலத்துப் பொருட்கள் காலவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன.
பழையவகளை போட்டு வைக்க வீடு வசதிபடவில்லை.
அருங்காட்சிஅகத்தில் தான் பார்க்க வேண்டும், பழையப் போருட்களை.
கிராமங்களில் சிலவீடுகளில் இந்த பொருட்களை இன்னும் பார்க்க முடிகிறது.
எங்கள் பக்கமும் அடுக்களை, அடுப்படி என்றுதான் சொல்லுவோம் மாதேவி.
நல்ல பகிர்வு.
இங்கே தமிழகத்தில் உள்ள நீலகிரியில் எனது வயதான உறவினர் சமையலறையை குசினி என்று கூறக்கேட்டு நான் வியந்ததுண்டு. மேலும் தங்கள் பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் எனது பழைய நினைவுகளை மலரச்செய்தது.
ReplyDeleteவீட்டு ஞாபகத்தைக் கொண்டு வந்திட்டீங்கள் மாதேவி.அகப்பைக் காம்பால் எத்தனை அடி விழுந்திருக்கும்.
ReplyDeleteலாந்தர்,கடையடுப்பு,பலகைக்கட்டை,
உறி எல்லாம் இப்ப படங்களிலதானே பார்க்க முடியுது.
காலேல எழும்பினவுடன அவ்வளவு பாத்திரங்களையும் கிணத்தடி வாழைமரத்தடில அள்ளிப்போட்டு அடுப்புச் சாம்பலும் தும்புமா ஒவ்வொரு வீட்லயும் பாத்திரம் கழுவும் காலைக் காட்சி !
வாருங்கள் ஜலீலா.
ReplyDeleteஅண்மையில் கிராமத்துக்குச் சென்றபோது எங்கள் வீட்டுப் பழமைகளை விரும்பி கமராவில் அடக்கிய படங்கள்.
சில கூகிளாரின் படங்கள்.
இப்போது எல்லாம் பரணிலும் வீட்டுப் பின் விராந்தையிலும் இருக்கின்றன.
வருகைக்கு நன்றி Dr.எம்.கே.முருகானந்தன்.
ReplyDeleteநீங்கள் கூறியதுபோல இவை எல்லாம் இப்பொழுது காணக்கிடைக்காத பொக்கிஷங்கள்தாம்.
நன்றி ரிஷபன்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சித்ரா.
ReplyDeleteஎனக்கும் இவை எல்லாம் பிடித்தமானவை.கிராமத்து நினைவுகள் சிலவற்றை எடுத்து வைத்துள்ளேன்.
நிரூபன் உங்கள் ரசனைக்கு மகிழ்ச்சி.
ReplyDeleteசிரமத்தைப் பாராது தனித்தனியே ஊட்டங்கள் இட்டு உற்சாகப் படுத்தியுள்ளீர்கள்.
மிக்க நன்றி.
மிக்க மகிழ்ச்சி மேனகா.
ReplyDeleteஇவை எல்லாம் எங்க அம்மா உபயோகப்படுதியவை. என் சிறு வயது பருவத்திற்கு சென்று வந்த நிறைவு. பகிர்வுக்கு நன்றி சகோதரி.
ReplyDeleteவாருங்கள் ராமலஷ்மி.
ReplyDeleteஎல்லாமே இப்பொழுது காட்சிப் பொருட்கள்தான்.
எமது கிராமத்தில் சிலர் தென்னை, பனை, காணிகளில் கிடைக்கும் விறகை வீணாக்காது அடுப்பில் சமைக்கிறார்கள்.
மாடுகட்டப் பயன்படும் பலகை தகவலுக்கு நன்றி.
மிக்க நன்றி லஷ்மி.
ReplyDeleteசி.பி.செந்தில்குமார்.
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
வாருங்கள் கோமதிஅரசு.
ReplyDeleteவிரிவான ஊட்டத்திற்கு மிக்க நன்றி.
பொதிகை! நினைவுகளை மீட்டது மகிழ்ச்சி தருகிறது.
ReplyDeleteவரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பழைய ஞாபகங்கள் வந்ததில் மகிழ்ச்சி ஹேமா.
ReplyDeleteஇவை எல்லாம் என்ன என்ற கேள்விகள் எழும்நாளும் விரைவில் வந்துவிடும் போலும்.
மாதேவி,
ReplyDeleteஇப்பதான் ஊருக்கு போயிட்டு திரும்பியிருக்கேன். இங்க வந்து பாத்தா, மீண்டும் ஊருக்கு.... போக விட்ருவிங்க போல!
எங்க வீட்ல இப்பவும், உரல்,உலக்கை,மண் அடுப்பு , மத்து, அம்மி.... அப்பப்போ பயன்பாட்டுல இருக்கு.
உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்
ReplyDeleteஎன்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி
http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html
வாருங்கள் சிவகுமாரன்.
ReplyDeleteசிறுவயதுப் பருவத்து நினைவுகள் மீண்டதில் மகிழ்ச்சி.
சத்ரியன் ஊருக்குப் போய்வந்தீர்களா மகிழ்வாய் இருப்பீர்கள். ஊர்பற்றி எழுதுங்கள். அறியக் காத்திருக்கின்றோம்.
ReplyDeleteஇப்பொருட்களை இப்பவும் பயன்படுத்துவது மகிழ்வைத் தருகிறது.
வாருங்கள் சிநேகிதி.மகிழ்கிறேன்.
ReplyDeleteஅவாட்டுக்கு மிக்க நன்றி.
வந்து பெற்றுக்கொள்கிறேன்.
மாதேவி எங்கிருந்துதான் இத்தனைப்பொருட்களையும் தேடிபிடித்து படம் எடுத்துள்ளீர்களோ!!!!!!!!!!!பழங்கால பொருட்களைப்பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது.இனி இவை எல்லாம் காட்சியகத்தில்த்தான் காண முடியும் என்ற உண்மை மனதினை நோகச்செய்கின்றது.இன்னும் பட்ம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteஎங்க ஊரு மலை கோவில் போனப்ப, அங்க இருந்த கிராமத்து மக்கள் இந்த அகப்பை உபயோகிக்க்றதை பாத்து இருக்கேன்... நெறைய கேட்டிராத விசயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க... படங்களும் அருமை
ReplyDeleteDear Maadhevi,
ReplyDeletethanks for sharing so much information and rare photos.We also had Viraku aduppu, kari aduppu,and maraththool aduppu:)
Mothers day greetings come your way from us.
வருகைக்கு நன்றி ஸாதிகா.
ReplyDeleteஇன்னும் சில் படங்கள் இருக்கின்றன பகிர்ந்து கொள்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாவி தங்கமணி.
ReplyDeleteஇப்ப தான் அறிய பொக்கிஷமான இந்த பகிர்வை பார்க்கிறேன்.இன்னமும் எங்க மாமா வீட்டில் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒரு சில பொருட்கள் பழக்கத்தில் இருக்கின்றன.அருமை,உங்க போஸ்ட்டிங் எப்பவும் வித்தியாசமாக இருக்கும்,பாராட்டுக்கள்.
ReplyDeleteபடத்தில் சிலதுகள் எங்க வீட்டுல இன்னும் பயன்படுதுங்கோ1
ReplyDeleteவாருங்கள் வல்லிசிம்ஹன்.
ReplyDeleteமகிழ்ந்தேன்.
மிக்க நன்றி.
நன்றி ஆஸியா.
ReplyDeleteவாருங்கள் வலிபோக்கன்.
ReplyDeleteஇப்பவும் பயன்படுவது அறிந்து மகிழ்ச்சி.
படங்கள் பதிவுக்கு பெரும்பலம்.
ReplyDeleteசமையல் போர் அடித்துப் போய் விட்டது.. ஹோட்டல் போகலாம் என்று சுலபமாய் முடிவு எடுத்து விடுகிறார்கள்..
அடுக்களைப் பொருட்கள் மட்டும் அல்ல.. அடுக்களையே கனவாகிவிடும் நாள் வந்துவிடும்!
உங்களை வலைச்சரத்தில்
ReplyDeleteஅறிமுகப்படுத்தி இருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது
பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html
வாருங்கள் ரிஷபன்.
ReplyDelete"அடுக்களையே கனவாகிவிடும் நாள் வந்துவிடும்!" சரியாகச் சொன்னீர்கள்.
பலவீடுகளில் இப்படித்தான் ஆகிக்கொண்டிருக்கிறது....
மிக்க நன்றி ரிஷபன்.
மகிழ்கிறேன். அறிமுகத்துக்கு மிக்க நன்றி லஷ்மி.
ReplyDeleteநண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு