Wednesday, June 8, 2011

இமயமலை அடிவாரச் செடியில் எமது வீட்டில் பால்கறி

உச்சாணிக் கொப்பிலே உலக்கை கட்டித் தொங்குது!

அது என்ன?

அவர் இவர்தான்.

அனைத்து மண்ணிலும் வளரக் கூடிய மரம். சிறப்பாக வரட்சியான மணற்தரையில் சிறந்த பயன் தரும். இது 30 அடி உயரம் வரை வளரக் கூடியது. அதிக கிளைகளைக் கொண்டிருக்கும்.


வீ ட்டு வேலிகளிலும், முற்றத்திலும், கொல்லையிலும் நாட்டி இருப்பார்கள். தோட்டங்களிலும் பயிரிடப் படுகிறது. ஆறுமாதத்தில் பலன் கொடுக்கும்.


மரத்தின் பூர்வீகம் இமயமலையின் அடிவாரம் என்கிறார்கள். பின்பு பங்களாதேஸ், பாகிஸ்தான், அப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆபிரிக்கா,  இந்தியா,  இலங்கை எனப் பரவி தாய்லந்து, தாய்வானிலும் பயிரப்படுகிறது.

Moringa ceae குடுப்பத்தைச் சேர்ந்தது. Moringa Oleifera என்கிறார்கள். கோடையில் தாரளமாகக் கிடைக்கும் காய் இனம் இது. மழை இதற்கு எதிரி. விளைச்சல் பாதிக்கப்படும். பூக்களை உதிர்க்கும்.

இதில் சிறிய கட்டைக் காய் இனம், ஒரு மீட்டர் வரை நீண்ட காய் இனம், களிக்காய் என மொத்தமான காய்,  எனப் பல புதிய ரகங்கள் இருக்கின்றன.

செடி இனம். விதை வைத்துப் பயிரிடப்படும். ஏனையவை கொப்புகளை வெட்டிப் பதியிட்டு வளர்ப்பர்.

  • பெங்காளியில் shojne,  
  • தெலுங்கு Munagakaya,  
  • தமிழ் முருங்கைக் காய். 
  • மலையாளம் Muringa.   
  • ராஜஸ்தானியில் Shenano,  
  • பிலிப்பினோ Malunggay.

100 கிராமில் கொழுப்பு 0.1 கிராம், காபோஹாரேட் 3.7 கிராம், நார்ச்சத்து 4.8 கிராம், புரதம் 2.5 கிராம், விற்றமின் C 120 மி.கிராம். விற்றமின் A 110 மி.கிராம், கல்சியம் 30 மி.கிராம்,

இதில் பலவகையான பைரோநியூரியன்டஸ் (Phytonutrients) பல உண்டு. Alpha-carotene, Beta-Carotene, Beta-cryptoxanthin, Lutein, Zeaxanthin and Chlorophyll. இவை உடலிலுள்ள நச்சுப் பொருட்களை அகற்றி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் 46 மேற்பட்ட வகையான ஒட்சிசனெதிரிகள் (antioxidants) இருக்கின்றன.

மரத்தின் இலை, பூ, பட்டை என சகலதுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தக் கூடியது. மருத்துவப் பொக்கிஸங்கள் என்கிறார்கள். தமிழ் வைத்தியத்தில் நரம்புத் தளர்ச்சிக்கும், பசியின்மைக்கும் அருமருந்து என்கிறார்கள்.

குழம்பு,  வரட்டல்,  சாம்பார்,  தீயல்,  கூட்டு,  பொரித்த குழம்பு, முருக்கைக்காய்ப் பிரட்டல், காரக் கூட்டு முருக்கைக்காய்சரக்குத் தண்ணி - பத்திய உணவு , சூப்,  கட்லட்,  வடை,  வடகம்,  பொரியல்,  சாதம்,  அசைவம் கலந்த குழம்பு,  மிக்ஸ்ட் வெஜிற்றபில் சொதி எனப் பல வகையாக சுவை கொடுக்கும்.


தேங்காய்ப் பால்கறி
தேவையான பொருட்கள்

முருங்கைக் காய் - 2
பலாக்கொட்டை - 10
கிழங்கு - 1
பச்சை மிளகாய் - 2
சாம்பார் வெங்காயம் - 6-7
கட்டித் தேங்காய்ப்பால் - 4 டேபிள் ஸ்பூன்
தேசிப்புளி  -1 ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை - 1 இலை
உப்பு தேவையான அளவு

தாளிக்க

கடுகு - ¼ ரீ ஸ்பூன்
செத்தல் மிளகாய் - 1
கறிவேற்பிலை -1 இலை
எண்ணெய் - 1 ரீ ஸ்பூன்

செய்முறை


காயை விரலளவு துண்டங்களாக வெட்டி தோலை சீவி எடுங்கள். துண்டுகளை முக்காற் பாகம் வரை கீறிவிடுங்கள். 

பலாக்கொட்டையின் மேல்தோலை நீக்கி எடுத்து நீளவாட்டில் இரண்டாக வெட்டுங்கள்.

கிழங்கை தோல் சீவி விரும்பியபடி துண்டங்களாக வெட்டி மிளகாயைக் கீறி வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் நீள் துண்டுகளாக வெட்டிவிடுங்கள்.

பாத்திரத்தில் காய்களைப் போட்டு கிழங்கு பலாக்கொட்டை மிளகாய் வெங்காயம் உப்புச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி போட்டு, 5 நிமிடங்கள் அவியவிடுங்கள்.

பின்பு பிரட்டி மூடிவிடுங்கள். 2 நிமிடத்தில் திறந்து தண்ணீர் வற்றிய பின்  தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வர இறக்கி தேசிப்புளி விடுங்கள். பிரட்டிவிடுங்கள்.

தாளித்து கலந்துவிடுங்கள்.

( பத்தியக் கறியாகத் தயாரிக்கும்போது தாளிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்  )

முருங்கையின் பயன்கள் பற்றிய மேலும் பல தகவல்களை அறிய கீழே யூ ரியூப் கிளிக் பண்ணுங்கள்
முருங்கை அற்புதத் தாவரம்.

:- மாதேவி-:

36 comments:

  1. தேசிப்புளி, ரீ ஸ்பூன் அப்டின்னா என்ன?

    ReplyDelete
  2. முருங்கக்காய்க்குத்தான் இவ்வளவு பில்டப்பா? :)

    பதிவு அருமை சகோ.

    ReplyDelete
  3. பல அறியாத தகவல்களைத் தந்துள்ளீர்கள் முருங்கையைப் பற்றி. தேங்காய் பால்கறி குறிப்புக்கும் நன்றி மாதேவி.

    ReplyDelete
  4. வாருங்கள் சி.பி.செந்தில்குமார். முதல்மழை....மிக்க மகிழ்ச்சி.

    தேசிப்புளி - எலும்பிச்சைசாறு.

    ரீ ஸ்பூன் - தேக்கரண்டி. இலங்கையில் இப்படியும் சொல்வோம்.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்பர்.

    ReplyDelete
  6. நன்றி ராமலஷ்மி.

    ReplyDelete
  7. முருங்கைக்காயை எப்படிச் சமைத்தாலும் சுவைதான் மாதேவி.கருவாடும் முருங்கைக்காயும் எப்பிடி....!
    இங்க வத்தல் வதங்கலாத்தான் வருது.அதுவும் விலை கூட !

    ReplyDelete
  8. முருங்கை இதன் மகிமை இன்று சவுதியிலும், நம்மை போல் மலையாளிகளும் இதை விரும்புகிறார்கள் .

    ReplyDelete
  9. என் தலைவிதி,

    ‘கேன்டீன்’ சாப்பாடுதான்.

    சுவையான உணவு வேணும்னா மாதேவி உங்களோட இந்த வலைத்தளத்துல வந்து படிச்சி- ருசியாறிக்கிட்டு போயிடறேன்.

    முருங்கைக்காய் எப்படி சமைத்தாலும், சாப்பிட தனி சுவை தான்.

    ReplyDelete
  10. தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  11. தங்கள் தளத்தை கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி எல்லோருக்கும் பயன்படும் தளம் சகோதரி.

    உடனே எனது தளத்திலும் இணைப்புக் கொடுத்துள்ளேன்.

    வாழ்க வழமுடன்

    ReplyDelete
  12. ஹேமா!
    அசைவ உணவுப்பிரியர்களுக்கு நீங்கள் கூறியது போல கருவாடும் முருங்கைக்காயும் கூடுதல் சுவைதான்.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. வாருங்கள் தூயவன்.
    தகவல்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  14. சத்ரியன் வருகைக்கு நன்றி.

    கன்டீன் சாப்பாடு சுவைதருகிறதா? இதைப்பற்றியும் எழுதுங்களேன்.

    ReplyDelete
  15. அறிமுகத்துக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  16. வாருங்கள் மகாதேவன்-V.K .

    தள இணைப்பு கொடுத்ததற்கு மகிழ்கிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  17. பல அறியாத தகவல்களைத் தந்துள்ளீர்கள் முருங்கையைப் பற்றி. தேங்காய் பால்கறி குறிப்புக்கும் நன்றி

    ReplyDelete
  18. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மாலதி.

    ReplyDelete
  19. தகவல்களும் செய்முறையும் சூப்பர்.

    ReplyDelete
  20. நிறைய புது தகவல் முருங்கைகாய் பற்றி.
    படங்கள், பால்கறி குறிப்பு, தேசிப்புளி விளக்கம் அருமை.

    நன்றி மாதேவி.

    ReplyDelete
  21. நல்ல இருக்கு
    தொடருங்கள் ...

    அன்புடன்
    கருணா கார்த்திகேயன்

    ReplyDelete
  22. முருங்கை பற்றி தகவல்களுக்கு நன்றி.... நெய்வேலியில் எங்கள் வீட்டிலேயே முருங்கை மரம் இருந்ததால் நிறைய சாப்பிட்டு அலுத்த ஒரு விஷயம். கூடுதல் தகவல் - ஹிந்தியில் இதை “சஜ்னா ஃபலி” என்று அழைக்கிறார்கள் - பெரும்பாலும் தென்னிந்தியர்கள் தான் இதை சமைக்கிறார்கள். வட இந்தியர்கள் வாங்குவதில்லை... :))))

    ReplyDelete
  23. Arumaiyaaka irukku ungal mozhiyum murungaiyum.
    englishil comment poduvatharku mannikkanum.

    ReplyDelete
  24. nalla pathivu...
    valththukkal..


    can you come my said?

    ReplyDelete
  25. வாருங்கள் வெங்கட் நாகராஜ்.

    ஹிந்தியில் “சஜ்னா ஃபலி” தெரிந்துகொண்டேன். மிக்கநன்றி.

    ReplyDelete
  26. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வல்லிசிம்ஹன்.

    ReplyDelete
  27. நன்றி விடிவெள்ளி.

    ReplyDelete
  28. http://guideforgreece.blogspot.com/

    ReplyDelete
  29. enna mathevi. murungai kaikku appuram vera kai ethum kidaikka villaiya?.

    adutha pathivu eppo?.

    ReplyDelete
  30. அருமை ...மிக்க நன்றி சகோதரி தங்கள் சமையல்க் குறிப்புக்கு .

    ReplyDelete
  31. வருகைக்கு மிக்க நன்றி பித்தனின் வாக்கு.

    இமயமலை மட்டும் சென்று காய் பறித்து வந்ததில் களைத்துப் போய்வி்ட்டது :)) அடுத்து ஒருபுறம் சென்று தேடுகின்றேன்.

    தோள்மூட்டு வலியில் கம்பியூட்டருக்கு நீண்ட ஓய்வாகிவிட்டது.

    விரைவில் காயுடன் வருகின்றேன் :))

    ReplyDelete
  32. மிக்க நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  33. ஆபிரிக்காவிலும் உள்ளதாம், அவர்களும் சமைப்பதில்லையாம்.
    பிலிப்பையின் நண்பரும் இதைச் சமைப்பதில்லை எனக் கூறினார்.
    இந்தப் பால்கறிக்கு, கருவாடு, இறால் சுவை கூட்டும்.
    அத்துடன் இந்தப் பால்கறி இறக்குமுன்
    நற்சீரகம், மிளகு இடித்துப் போட்டுப் பிரட்டி விட்டால் வாசமும், சுவையும் இருக்கும்.
    என் வீட்டார் அப்படியே செய்வார்கள்.

    ReplyDelete
  34. //ஹிந்தியில் “சஜ்னா ஃபலி” தெரிந்துகொண்டேன். //
    பெங்காலியில் சொஜொன் என்பதே சஜன் என்ற வார்த்தையின் உச்சரிப்புதான். [சஜன் என்றால் காதலன் என்று பொருள் - பாக்ய்ராஜ்(!!!)]

    மற்றபடி இதன் பூவையும் (பெங்காலிகளும் பிகாரிகளும்) சமைக்கிறார்கள்.

    சில மரத்து இலைகள்/காய்கள் கசக்கவும் செய்யும்.

    பார்த்துதான் செய்ய வேண்டும்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்