Tuesday, October 4, 2011

பூக்களைப் பறியுங்கள்

இயற்கையின் படைப்பில் பூக்கள் மிகவும் அற்புதமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அழகைத் தருகின்றன.

பூ என்றாலே அழகு, மென்மை, நறுமணம், கவர்ச்சி என்பன அடங்கியனவாக இருக்கின்றன.


பூக்கள் அழகுடன் மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கின்றன.

மலர்களில் சிலவற்றை உணவுகளாகவும் நீண்ட காலங்களாக உட்கொண்டு வருகின்றார்கள்.

எல்லோரும் முகம் சுழிக்கும் வேப்பம்பூ, வாழைப்பூவுடன், இனிய பூசினிப் பூ, சிவப்பு செவ்வரத்தம் பூ, கற்றாழைப்பூ, வெங்காயப்பூ, குங்குமப்பூ, அகத்திப்பூ, முருங்கைப்பூ, ஆவாரம்பூ எனப் பலபல தொடரும்.

'ரோஜா.. ரோஜா.. ரோஜா... ரோஜா......' மயக்கும் ரோஜாவும் சமையலில் இடம் பிடிக்கும் கேக், புடிங், பானங்கள், ரோஸ் வோட்டர், எசேன்ஸ், எனக் கலக்கும்.


காலிப்ளவர் ,கோவா போன்றவற்றையும் பூ இனம் எனக் கொள்ளலாம்.

ஆங்கிலேய மரக்கறிகளில் புறக்கோலி, கோவா, கூனைப்பூக்கள் (artichokes)> , காளன், Broccoli rabe இலையும் பூக்களும் சாப்பிடக் கூடியன. இன்னும் பலவும் அடங்குகின்றன.

புறக்கோலி

இவ் இனம் ஏறத்தாள 2000 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டிருந்தது.


இதில் பல உப இனங்கள் உள்ளன.


நூறு கிறாமில் புறக்கோலியில் காபோகைதரேட் - 6.64 கிராம், நார்பொருள் - 2.6 கி, கொழுப்பு – 0.37 கி, புறோட்டீன் - 2.82 கி, கல்சியம் - 47 மி.கிராம், மக்னீசியம் - 21 மி.கிராம், விற்றமின் சி – 89.2 மி.கிராம், அடங்கியுள்ளன.


சலட், சூப், ஸ்டிம் என பல வகை தயாரிப்புகளாக உணவில் சுவைக்கும்.

காலி ப்ளவர்


  • இதில்உள்ள வேதிப்பொருள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகம் கொண்டுள்ளன.
  • நிறமி புற்று நோயைத் தடுக்கும் என்கிறார்கள். 

சூப், மஞ்சூரியன், கூட்டு.... பஜ்ஜி, சப்பாத்தி, பகோடா என...சகலவிதமாகவும் மட்டன், சிக்கன், இறால், முட்டை... எனக் கூட்டுச்சேர்ந்தும் சுவைக்கும்.

கோவா

வளமுள்ள எல்லாவகை மண்ணிலும் வளர்ந்து பயன் தரக் கூடியது.


நீர்தேங்கி நிற்காதிருக்க வடிகால் வசதியிருக்க வேண்டும்.


மலைப் பகுதிகளில் 150 நாட்களில் 1 ஏக்கருக்கு 70 – 80 டன்களும் சமவெளிப் பகுதியில் 120 நாட்களில் 1 ஏக்கருக்கு 25 – 35 டன்களும் பயனாகக் கிடைக்கும்.


மாடியில் வீட்டுத் தோட்டமாகவும் பயிரிட்டுக் கொள்ளலாம்.


  • விற்றமின் சி,டீ (Vit C,D) அடங்கியுள்ளது. 
  • ஒரு கப் Cabbage ல், கொழுப்பு 0.5 கிராம், காபோஹைாதரேட் 5 கிராம், நார்ப்பொருள் 1.8 கிராம், கல்சியம் 41.1 மிகி, பொட்டாசியம் 218.9 மிகி, சோடியம் 16 மிகி,
இதிலும் பல இனங்கள் உள்ளன. 

பிரட்டல், ஸ்டீம் சலட், பால்க்கறி, பொரியல், சம்பல், தொக்கு எனப பலவகையாய் செய்து கொள்ளலாம். புட்டு, நூடில்ஸ், ரைஸ் இவற்றுடன் கலந்தும் தயாரிக்க சுவை சேர்க்கும்.

குங்குமப்பூ Saffron

செம்மஞ்சள் நிறத்தை உடையது. இந்தியாவில் கஸ்மீரில் பயிராகிறது.


வாசனையோடு இருக்கும். மருத்துவ குணமுடையது.


இதை உலர வைத்து, உணவுகளில்
  • வாசனை ஊட்டியாகவும், 
  • நிறத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது.
இன்னமும் பூக்களைப் பறியுங்கள்.

சின்னுவின் சமையலறையில் பூக்கள் மீண்டும் சுவைக்கும்

:- மாதேவி -:

0.0.0.0.0.0.0.0.0

27 comments:

  1. தலைப்பும் படங்களுடனான விவரங்களும் அருமை.

    //சின்னுவின் சமையலறையில் பூக்கள் மீண்டும் சுவைக்கும்//

    சந்தோஷம்:)!

    ReplyDelete
  2. பூக்களைப் பற்றிய பயனுள்ள பதிவு.

    பாராட்டுக்கள். தொடருங்கள்.

    ReplyDelete
  3. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. படங்களும் நல்லா வந்திருக்கு.

    ReplyDelete
  4. அரிய தகவல்கள் மாதேவி.அத்தி பூத்தாற்போல் பதிவிட்டாலும் பிரயோஜனமான பகிர்வு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அற்புதப் பூவாய் மலர்ந்த பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. இனிய பகிர்வு...

    குங்குமப்பூ - இப்போது தான் இதன் படத்தினைப் பார்க்கிறேன்...

    ReplyDelete
  7. சின்னுவின்,

    சமையலறையில் பூக்கள் சுவைக்கட்டும். நாங்கள் பறிக்க வருகிறோம்.

    ReplyDelete
  8. முதல் பூக்கள் உங்களுக்கு.

    மிக்க மகிழ்ச்சி.

    நன்றி.

    ReplyDelete
  9. வாருங்கள் கோவை2தில்லி .

    பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி லஷ்மி.

    ReplyDelete
  11. மிக்க நன்றி ஸாதிகா.

    ReplyDelete
  12. மிக்க மகிழ்ச்சி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  13. கருத்துக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete
  14. வாருங்கள் சத்ரியன்.

    பறிப்பதுடன் சமைத்தும் உண்ணுங்கள்.:))

    ReplyDelete
  15. படங்களும்,பதிவும் அருமை.

    ReplyDelete
  16. அழகான பூக்கள்.
    சிறப்பான தகவல்கள்
    பயனுள்ள பதிவு்
    ஆனால் நாவல் நிறப் பூவான Saffron
    காய்ந்ததும் சிவப்பு நிற குங்குமப்பூவாவது எவ்வாறு?
    புரியவில்லை.

    ReplyDelete
  17. ரொம்ப நல்லாருக்கு. பூத்திருக்கிற பூக்களை வெச்சு சமையலும் செஞ்சு வையுங்க.. சாப்பிட வரோம் :-)

    ReplyDelete
  18. முட்டைகோஸ்ல இத்தனை வகையா.... ஆச்சர்யமா இருந்துச்சு

    நல்லதொரு பகிர்வுங்க

    ReplyDelete
  19. ரொம்ப அருமை மாதேவி..படம் கண்லயே நிக்குதே!

    ReplyDelete
  20. படங்களுடன் பூக்களின் பயன்கள் மிக அருமை மாதேவி.

    ReplyDelete
  21. வித்தியாசமாய் சிந்தித்து பயன்படும் விதமாய் பதிவிடுவது உங்கள் சிறப்பு.நல்ல பகிர்வு.

    ReplyDelete
  22. நாங்கள் முக்திநாத் போகும் போது மலை பாதைகளில் குங்குமபூவை பயிர் செய்து இருந்தார்கள். காரில் போகும் போது பார்த்தோம்.

    ReplyDelete
  23. குங்குமப் பூவை இப்போதான் பார்க்கிறேன்.நன்றி மாதேவி !

    ReplyDelete
  24. அடேங்கப்பா!!!!!!!!!! எத்தனை பூக்கள்!!!!

    டைட்டிலே நெகடிவ்னு பார்த்தேன், பதிவு பாசிடிவ்!!ஓக்கே ஓக்கே

    ReplyDelete
  25. மேலே இருந்து 4 வது ஃபோட்டோ டாப் ரகம்

    ReplyDelete
  26. யப்பா எத்தனை விதமான படங்கள்.. எத்தனை விதமான தகவல்கள்.. அருமை அருமை.. உண்மையிலேயே இத்தனை நாள் உங்கள் தளம் என் பார்வையில் படாமல் இருந்ததற்காக வருத்தப்படுகிறேன். இனி தொடர்ந்து வருவேன். பகிர்ந்தமைக்கு நன்றி பாராட்டுதல்கள்.. !!

    ReplyDelete
  27. நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.

    எனது வலையில் இன்று:

    மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்

    தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்