Wednesday, October 26, 2011

தீபாவளி விசிட் வாங்களேன்.

தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும்


பாடலுடன் சுவைத்திடுங்கள் திருநாளை.....


பாட்டுக் கேட்ட அனைவருக்கும் 
இப்பொழுது தீபாவளி சுவீட்ஸ் தயாராக இருக்கு 
சாப்பிட வாங்க.


எள்ளுப்பாகு எடுத்துக் கொள்ளுங்கள். 
தித்தித்து மகிழுங்கள். 
எள்ளு கொள்ளு எல்லாம் 
ஆரோக்கியத்திற்கு நல்லதாமே !!



பயித்தம் பணியாரம் சுவைத்திடுங்கள்.


பனங்காய்ப் பணியாரம். 
எங்க யாழ்ப்பாணத்து பனம் பழத்தில் செய்ததில் 
அதன் சுவையே தனிதான்.



இனிப்புகள் சாப்பிட்ட வாயிற்கு 
சற்று சுவை மாற 
கார சிப்ஸ் தருகின்றேன்.



நொறுக்கி உண்ண 
முறுக்கு இருக்கு 
மறுக்காது உண்ணத் 
தோன்றுகிறதோ?


மசால்வடை இல்லாமல் 
பண்டிகை இருக்குமா?



 எமது ஊர் தட்டைவடை செல்லாத உலகநாடுகள் இருக்கின்றனவா ? 
நீங்கள் சுவைக்க 
இதோ தருகின்றேன்.


தின் பண்டங்கள் வேண்டாம் என்பவர்களுக்கு 
பழச் சுவை விருந்து 
காத்திருக்கு. 

சுவைத்த அனைவருக்கும் மாதேவியின் நன்றிகள்.

15 comments:

  1. வந்தவருக்கு விதவிதமாய் பலகாரம் பழவகைகள் தந்து மகிழ்வித்து விட்டீர்கள் மாதேவி. பனங்காய் பணியாரம் சாப்பிட்டதில்லை. பார்க்கவே அருமை:)!உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!!!!

    ReplyDelete
  2. நல்ல விருந்து....


    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. தீபாவளி விசிட் வந்தாச்சு,உங்கள் கைவண்ணத்தில் பண்டங்கள் வெரி டேஸ்ட்.
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ரொம்ப அருமையான விருந்து மாதேவி.
    நான் வாரேன்

    ReplyDelete
  5. தட்டை வடை, மசால வடை, முறுக்கு இவை கிளப்பும் வாசனை பசியைக் கிளறுகிறது.

    ReplyDelete
  6. அருமையான தீபாவளி விருந்து..

    ReplyDelete
  7. மாதேவி,

    தீபாவளி பதார்த்தங்கள் எல்லாம் திருப்தியா சாப்பிட்டாச்சி.

    செரிமாணத்திற்கு வெற்றிலைத் தாம்பூலம் போட்டா சரியாப் போயிடும். கிடைக்குமா?

    உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மாதேவி....மனம் கனிந்த இனிய தீபத்திருநாள் வாழ்த்து.வடையும் பனங்காய்ப் பணியாரமும் சாப்பிட்டேன்.நன்றி மாதேவி !

    ReplyDelete
  9. நீங்கள் செய்ததில் என்னை அதிகம் கவர்ந்தவை பனங்காய்ப் பணியாரம், பயித்தம் பணியாரம்.
    தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. அட..வித விதமாக செய்து காட்டி இருக்கீங்க மாதேவி.

    பனங்காய்ப்பனியாரம்,உங்களூர் தட்டை ரெஸிப்பி போடுங்களேன்.

    ReplyDelete
  11. புதிய பலகார வகைகள் உண்டு,வயிறும் நெஞ்சமும் நிறைந்து விட்டது!

    ReplyDelete
  12. மாதேவி, தீபாவளிக்கு ஊருக்கு போய்விட்ட்தால் உங்கள் வாழ்த்து, பலகாரம் எல்லாம் பெற்றுக் கொள்ள வில்லை.

    இப்போது பெற்றுக் கொண்டேன்.

    பனங்காய் பணியாரம் புதுமையாய் இருந்ததால் முதலில் அதை சுவைத்தேன். சுவை அருமை.

    நன்றி மாதேவி.

    ReplyDelete
  13. சின்னு ரேஸ்ரியின் தீபாவளி விருந்தில் கலந்து கொண்டு சுவைத்த

    ராமலஷ்மி
    வெங்கட் நாகராஜ்
    ஆசியா
    ஜலீலா
    Dr.எம்.கே.முருகானந்தன்
    அமைதிச்சாரல்
    சத்ரியன்
    ஹேமா
    baleno
    ஸாதிகா
    சென்னைப்பித்தன்
    கோமதி அரசு.
    உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  14. விதவிதமாய் இத்தனை பணியாரங்களா பார்க்கும்போதே நாக்குல நீர் ஊறுதே. சாப்பிட வரவா?

    ReplyDelete
  15. அன்பு மாதேவி இவ்வளவு பலகாரங்களைப் பார்த்ததே மனம் நிறைந்து விட்டதே.
    அந்தப் பனம்பழப் பணியாரம் ரெசிபி போடுங்கப்பா. தீபத்திருநாள் இன்னோன்று டிசம்பர் 11 ஆம் வருகிறது. அதற்கான வாழ்த்துகளை இப்போதே சொல்லிக் கொள்ளுகிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்