Tuesday, November 27, 2012

கறியாகவும் சுவையூட்டியாகவும் லீக்ஸ்


இலங்கையின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது. குறிப்பாக மலைநாட்டில் செழிப்பாக வளரும்.
நுவரெலியாவில் லீக்ஸ் தோட்டம்
 இச் செடி புல்லினத்தைச் சேர்ந்த செடி எனச் சொல்லலாம். வெங்காய மணத்தைத் தரும் செடி.

விதைகளாக இட்டு வளர்த்து நாற்றை பயிரிட்டு வளர்ப்பார்கள்.


2-3 அடி வரை வளரும். 120-150 நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும். இப்பொழுது சில இனம் 90 நாட்களில் பயன்தரும் பயிராகவும் இருக்கிறது.


Allium ampeloprasum var. porrum (L.) என்பது இதன் விஞ்ஞானப் பெயர். அலங்காரச் செடியாகவும் திகழ்கிறது.Amaryllidaceae குடும்பத்தைச் சார்ந்தது. பழைய எகிப்திய சமையலில் இடம் பிடித்தது. மொஸப்பத்தேமியாவிலும் வளர்க்கத் தொடங்கினார்கள்.


Emeror Nero இன் விருப்பமான காய்கறி உணவாக இருந்தது எனச் சொல்கிறார்கள்.


Wales  நாட்டின் தேசியச் சின்னமாகும். சேக்ஷ்பியரின் நாடகம் ஒன்றில் இதை வீரர்கள் அணிவது பற்றிச் சொல்கிறார்.

Thanks:- nikalvu.com

ஐக்கிய அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய லீக்ஸ் விளைந்துள்ளது. ஜான்பியர்சன் என்பவருடைய தோட்டத்தில் விளைந்ததாகச் சொல்கிறார்கள்.
இவ்வளவு சிறப்புவாய்ந்த 

லீக்ஸ் 100 கிராமில்.


Energy 255 KJ
நீர் 83 கிராம்
காபோஹாரேட் 14.2
நார் 1.8கி
சீனி 3.9 கிராம்
புரொட்டின் 1.5 கிராம்
கொழுப்பு 0.3 கிராம்
மக்னீசியம் 28 மைக்ரோ கிராம்
கல்சியம் 5.9 மைக்ரோ கிராம்
இரும்பு 2.1 மைக்ரோ கிராம்
பொட்டாசியம் 180 மைக்ரோ கிராம்
விற்றமின் A 83 UG
விற்றமின் C 12 mcg • லீக்சில் போதியளவு பிளேவனொயிட் flavonoid kaempferol இருக்கிறது. இது இரத்தக் குழாய்களின் உட்புறம் சேதமடைவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது எனச் சொல்கிறார்கள். 
 • அத்துடன் நைட்ரிக் ஒட்சைட் (NO) வாய்வானது இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. எனவே இருதய நோய்கள், பக்கவாதம் போன்றவை வராமல் தடுப்பதில் இது பங்களிக்கும். 
 • அத்துடன் இதில் நிறைந்திருக்கும் போலேட் என்ற பீ வகை விற்றமினும் இருதயப் பாதுகாப்பிற்கு நல்லது. போலிக் அமிலத்தை பெண்கள் கர்ப்பமுறும் காலத்தில் மருத்துவர்கள் கொடுப்பார்கள். இது கருவில் உள்ள குழந்தையில் சில நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் என்பதால் கொடுக்கப்படுகிறது.

சூப், ஸ்டு வகைகளுக்கு வாசனை தருவதற்கு லீக்ஸ் இலைகள் சிறந்தவை.
கசரோல், பை டிஸ்களிலும் கலந்து கொள்ள சுவை தரும்.

தனி இலைகளாகவும், தண்டுகளாகவும், இரண்டையும் சேர்த்தும் பலவிதமாக செய்யலாம். புரியாணி, ப்ரைட் ரைஸ், நூடில்ஸ், சொப்சி, சோட்னிங் சுவை தரும்.

நாம்தான் நமது நாட்டு சமையலுக்கு மாற்றுவதில் கைதேர்ந்தவர்களே விடுவோமா லீக்ஸ் தேங்காய்ப்பால்கறி, லீக்ஸ் பொரியல், இறைச்சிவறுவல், உப்புமா என வெளுத்து வாங்கிடுவோம்.

லீக்ஸ் காரப் பிரட்டல்தேவையானவை

லீக்ஸ் - ¼ கிலோ
பச்சை மிளகாய் - 1
கிழங்கு - 1
பூண்டு – 2 - 4 பல்
இறைச்சிச் சரக்கு - ½ ரீ ஸ்பூன்
சோம்பு - ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1 ரீ ஸ்பூன்
மல்லிப் பொடி - ½ ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்பூன்
தேங்காய்ப் பால் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் சாறு - ¼ ரீ ஸ்பூன்
ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய் முறை

லீக்ஸ் தண்டையும் இலைகளையும் தனித்தனியே வெட்டி எடுங்கள். நன்கு கழுவி விடுங்கள்.

தண்டை மெல்லிய வட்டங்களாக வெட்டிக் கொள்ளுங்கள்.

இலைகளை ½ அங்குல சிறுதுண்டுகளாக வெட்டுங்கள்.

கிழங்கையும் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

பச்சை மிளகாய் நீள் துண்டுகளாக வெட்டுங்கள்.

பூண்டை நன்கு நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஓயிலில் சோம்பு வதக்கி, பூண்டு, பச்சை மிளகாய், வதக்கிய பின் கிழங்கைப் போட்டு சிறிது உப்பிட்டு மூடி விடுங்கள்.

ஒரு நிமிடத்தின் பின் திறந்து பிரட்டி விடுங்கள்.

மேலும் கிழங்கு பொரிந்த பின் லீக்சைக் கொட்டி உப்பிட்டுக் கிளறுங்கள்.
ஓரிரு நிமிடத்தில் வதங்கிவிடும்.

பொடி வகைகளைப் போட்டுக் கிளறி பால்விட்டு பிரட்டி இறக்கி வையுங்கள்.

எலுமிச்சம் சாறு கலந்து நன்கு பிரட்டிவிடுங்கள்.


சாதம், சப்பாத்தி, பரோட்டா வகைகளுக்கு உகந்தது.

கொத்து ரொட்டியிலும் கலந்து பிரட்டலாம்.

பண்ஸ், ரோல்ஸ், கறிரொட்டி வகைகளுக்கும் ஸ்டவ் செய்யப் பயன்படும்.

- மாதேவி -


33 comments:

 1. லீக்ஸ்... வித்தியாசமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி மாதேவி.

  ReplyDelete
 2. நம்ம பக்கம் வெங்காயத்தாள்னு சொல்லுவோமே அது தானே இது?அது போலத்தன் பாக்க தோனுது.

  ReplyDelete
 3. வியப்பான படம்... வித்தியாசமான சமையல் செய்முறைக்கு நன்றி...

  ReplyDelete
 4. நல்ல குறிப்பு.. இதுவரை சாப்பிட்டதில்லை.வீட்டில் சமைத்ததும் இல்லை..முயற்சிக்க சொல்லலாம்..

  ReplyDelete
 5. மிக அருமையான பதிவு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 6. நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 7. அழகான தகவல்களுடன் கூடிய...
  சுவை மிகு உணவை பகிர்ந்தமைக்கு நன்றி...
  நுவரெலியா பக்கம் சென்றால் அங்கே மரக்கறி இனங்கள் பயிரப்பட்டிருக்கும் அழகை பார்த்து இரசிப்பதும் புகைப்படம் எடுப்பதுமே என் பொழுது போக்கு ....

  ReplyDelete
 8. தகவல்களுக்கும் குறிப்புக்கும் நன்றி மாதேவி.

  ReplyDelete
 9. இது கேள்விப்படாத ஒன்றாக உள்ளது.
  படங்களும் தகவல்களும் நல்ல அழகு.

  ReplyDelete
 10. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்.

  ReplyDelete
 11. வாருங்கள் லக்ஷ்மி.
  ஆமாம் வெங்காயத்தாள்தான். நம்நாட்டில் லீக்ஸ் என்போம்.

  வருகைக்கு மிக்கநன்றி.

  ReplyDelete
 12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.

  ReplyDelete
 13. வாருங்கள் மதுமதி.

  வீட்டில் செய்யச் சொல்லி சாப்பிட்டுப் பாருங்கள்.

  மிக்கநன்றி.

  ReplyDelete
 14. நன்றி Easy (EZ) Editorial Calendar.

  ReplyDelete
 15. மிக்க மகிழ்ச்சி கோவை2தில்லி.

  ReplyDelete
 16. வாருங்கள் சிட்டுக்குருவியின் ஆத்மா.

  புகைப்படம் எடுப்பது உங்கள் பொழுதுபோக்கு என்பதில் மகிழ்கின்றேன்.

  நுவரெலியாவில் அழகுக்கு பஞ்சமா கொட்டிக்கிடக்குமே பசுமை.

  வருகைக்கு மிக்கநன்றி.

  ReplyDelete
 17. வருகைக்கு மகிழ்கின்றேன்.
  மிக்கநன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 18. வாருங்கள் வை.கோபாலகிருஷ்ணன்.

  உங்கள் வருகைக்கு மகிழ்கின்றேன். கருத்துக்கு மிக்கநன்றி.

  ReplyDelete
 19. சின்னு ரேஸ்ரி என்றால் என்ன? பதிவின் பெயர் கவர்கிறது. பெயர்க்காரணம் சொல்வீர்களா?

  ReplyDelete
 20. வாருங்கள் அப்பாதுரை.
  உங்கள் வருகைக்கு மிகவும் மகிழ்கின்றேன்.

  "சின்னு ரேஸ்ரி" பெயர் காரணம் கேட்டிருந்தீர்கள்
  எனது மகள் சிறுவயதாக இருக்கும்போது விரும்பி படித்த பாலர் கதைகளில் சின்னுக் குருவியின் கதையும் ஒன்று.

  அம்மா அப்பா இரு குருவிக் குஞ்சுகள் ஒரு கூட்டில் வசிக்கின்றன.இரை கொண்டுவந்து ஊட்டுகின்றன. சிறுகுருவிகளுக்கும் செட்டைகள் முளைக்கின்றன. வெளிஉலகை காண ஆசைப்படுகின்றன. அம்மாவின் சொல்கேட்காமல் சின்னுக்குருவி கூட்டைவிட்டு எட்டிப்பார்த்து கீழே விழ பூனை பிடிக்கவருகின்றது. அம்மாகுருவி பூனையுடன் சண்டைபோட்டு சின்னுக் குருவியை காப்பாற்றுகிறது. ஆனால் அம்மாவுக்கு சிறகு உடைகின்றது அதனால் அம்மா சொல்கேட்க வேண்டும் :))) என்று கதையை கூறுவோம்.

  அந்தக் கதையில் வரும் குருவியை மிகவும் விரும்பி மீண்டும் மீண்டும் கதையை சொல்லச் சொல்லி எங்களைக் கேட்டுக்கொண்டே இருப்பாள். அதனால் சிறு வயதில் அவளை செல்லமாக வீட்டில் "சின்னு" எனக் கூப்பிட்டோம்.அவளும் அதை விரும்பினாள்.

  வளர்ந்தபின் கூப்பிடுவதில்லை. அதன் நினைவாக வைத்த பெயர்தான்.

  உங்கள் வருகைக்கு மிக்கநன்றி.

  ReplyDelete


 21. சின்னு ரோஸ்ரி பெயர் வர காரணம் அருமை,
  இந்த குறிப்பை என் ஈவண்டுக்கு இனைக்கலாமே?

  http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html

  ReplyDelete
 22. மிகவும் அருமையான பதிவு தொடருங்கள் நன்றி சகோ!

  ReplyDelete
 23. பகிர்வுக்கு நன்றி.அருமை.

  ReplyDelete
 24. லீக்ஸ்ன் திறமை என்னவெண்டால் எநதக் கறிக்குள்ள போட்டாலும் சுவையை அதிகரிக்கச்செய்துவிடும்....அருமை மாதேவி !

  ReplyDelete
 25. வருகைக்கு நன்றி ஜலீலா.

  குறிப்பை இணைத்துவிட்டேன்.

  ReplyDelete
 26. நன்றி திவ்யா மோகன்.

  ReplyDelete
 27. நல்ல கருது்தைச் சொன்னீர்கள் ஹேமா.

  மிக்கநன்றி.

  ReplyDelete
 28. சின்னுவின் பெயர்க் காரணக்கதை மிக நன்றாக இருக்கிறது அப்பாதுரை அவர்களுக்கு நன்றி.
  சுவையான சமையல் குறிப்பு சமைத்துப்பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 29. சின்னு ரோஸ்ரி பெயர்க்காரணம் ரசிக்கவைக்க்கிறது ..

  லீக்ஸ் சமையல் குறிப்பு சுவைக்க வைக்கிறது ..

  வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்...

  ReplyDelete
 30. வணக்கம் தோழி.

  சமையல் குறிப்பும் அதன் விளக்கங்கலும் அருமையாக இருக்கிறது.
  இங்கே இதை “பொவ்ரோ“ என்பார்கள்.
  நான் அதை அதிகமாக பருப்பு போட்டு கடைவேன்.
  அல்லது இரால் போட்டு பொறியல் செய்வேன்.
  சூப்பும் செய்வேன்.
  ஆனால் எது செய்தாலும் சுவை அருமையாக இருக்கும்.
  நீங்கள் சொல்லிக் கொடுத்ததையும் முயற்சி செய்து பார்க்கிறேன்.
  நன்றி தோழி.

  ReplyDelete

 31. http://samaiyalattakaasam.blogspot.com/2012/12/blog-post_25.html
  http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/blog-post_3.html


  ReplyDelete
 32. இதில் கூட்டுதான் செய்திருக்கேன்,பிரட்டல் போல செய்ததில்லை..பிரட்டல் நன்றாக இருக்கு...

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்