மாம்பழமும் பனம்பழமும் யாழின் தனித்துவத்திற்கு அடையாளமான பழங்களாகும்.
தின்னத் தின்ன ஆசை.. |
பனம்பழம் நன்கு கனிய முன்னர் நுங்கு என அழைக்கப்படும். நுங்கை வெட்டி நுங்கை அதன் மூளில் வைத்துச் சுவைத்ததை என்றும் மறக்க முடியாது.
முற்றிய சீக்காயை ஆசையால் நிறையச் சாப்பிட்டு வயிற்றுக் குத்து வந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.
![]() |
சூப்பப் போறார் பனம் பழத்தை.. |
ஏழைகளின் உணவாகவும் பனம்பழப் பொருட்கள் இடம் வகித்திருக்கின்றன என்பதையும் மறக்க முடியாது. பனம்பழம் துவர்ப்பும் இனிப்பும் கலந்த அலாதியான சுவையைக் கொடுக்கும்.
பனம்பழத்தை பழமாகவும் அவித்தும் சுட்டும் உண்பார்கள். சுவைக்குப் பனங்களியுடன் புளியும் கலந்து சாப்பிடுவார்கள். சண்டைக் காலத்தில் சவர்க்காரம் ஆனை விலை விற்ற போது பனம்பழத்தை தோய்த்து உடைகளைக் கழுவிய காலம் நினைவுக்கு வருகிறது.
கழுவிய உடைகளை உலரவிட்ட நேரம் மாடுகளும் அவற்றைச் சுவைத்துப் பார்த்தது பொய்க் கதையல்ல.
பனம்பழக் காலத்தில் வீடுகளில் செய்யும் பனங்காய்ப் பணியாரம். ஓலைப் பெட்டியில் அமர்ந்து தென் இலங்கையில் உள்ளோர் சுவைக்கப் பயணமாகும். ரெயில் ஏறி பயணித்த காலமும் ஒன்று இருந்தது.
இப்பொழுது இரயிலும் ஓலைப் பெட்டிகளும் யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போய்விட்டன.
கொழும்பில் பம்பலப்பிட்டி கற்பகம் பனம்பொருள் கடையில் பனம்பொருட்கள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இது பனை அபிவிருத்தி சபையினால் நடாத்தப்படுகிறது.
பனம் களியும் போத்தல்களில் கிடைக்கிறது.
பனம்பழக் காலத்தில் புத்தளம், சிலாபத்திலிருந்து வரும் பனம் பழங்கள் ரூபா 100- 150 என கொழும்பில் விற்பனையாகும்.
'....பச்சோலை சல சலத்து,
நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே!..'
![]() |
நம் ஊர் பனங்காணி |
என ஒளவையார் பனம்பழத்தின் அழகை அருமையாகப் பாடியுள்ளார்.
'..சேரனும், சோழனும்,
பாண்டியனும் ஒளவை சொற்படியே
மங்கலமாயுண்ட தெய்வப் பனம்பழம்..'
எனச் சோமசுந்தரப் புலவர் என எமது பனம்பழத்தை விதந்து பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது..
இன்று நாம் செய்யப்போகும் பனங்காய்ப் பணியாரத்துக்கான களி யாழ்ப்பாணத்திலிருந்து எனது நண்பியின் அக்கா அனுப்பியது. பனங்காயைப் பிழிந்து களி எடுத்து காச்சி போத்தலில் நண்பிக்கு அனுப்பியிருந்தார்.
நண்பியின் தயவால் கிடைத்த களியில் நான் செய்தது. பயணப்பட்டு வந்த களியில் செய்த பணியாரத்தின் சுவைக்கு ஈடு ஏதும் உண்டா.
சென்ற வருடம் யாழ் சென்ற போது எமது தோட்டத்து பனம் பழத்தை கொழும்பு கொண்டுவந்து பணியாரம் செய்தேன்.
செய்வோமா பணியாரம்.
நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு பனம் பழத்தை நன்கு கழுவி எடுங்கள். மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள்.
![]() |
துணியும் துவைக்கலாம், மாடும் நாமும் சாப்பிடுவோம். |
பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கள்.
நார் வெட்டும் கைகள் பத்திரம்.
வெட்டி அகற்றிய பின்மீண்டும் பழத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள்.
பழத்தைப் பிரித்து இரண்டு மூன்றாக விதையுடன் பிரியும்.
அவற்றைப் பிழிந்து அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள்.
களி தும்புகளுடன் கூடி இருக்கும். மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைத்து களியை வடித்தெடுங்கள்.
வடித்தெடுத்த களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து பச்சை வாடை போக காச்சி எடுங்கள். ஆறவையுங்கள்.
இப்பொழுது காச்சிய பனம்களி தயாராகிவிட்டது.
பணியாரத்துக்கு தேவையான பொருட்கள்
பனங்களி - 1 கப்
சீனி- ¼ கப்
பொரிக்க எண்ணெய் - அரை லீட்டர்.
அவித்த மைதாமா அல்லது வறுத்த உழுந்துமா அல்லது அரிசிமா - ¼ கப்
உப்பு சிறிதளவு.
பனங்களியும் நான் சுட்ட பலகாரமும் |
செய்முறை
காச்சிய பனங்களியுடன் மைதாமா உப்பு சேர்த்து கிளறி எடுங்கள்.
தாச்சியில் எண்ணையை விட்டு நன்கு கொதிக்க மாவைக் கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கள். மீதிக் களியையும் அவ்வாறே செய்து கொள்ளுங்கள்.
ரிசூ பேப்பரில் போட்டு ஓயில் வடியவிட்டு ஆற வைத்த பின் இரண்டு மூன்று நாட்கள் வைத்துச் சாப்பிடுங்கள்.
மீண்டும் மீண்டும் சாப்பிட்டு உடனேயே தட்டுக் காலியாகிவிடும்.
சற்று நேரத்தில் காலியாகப் போகும் .. |
குறிப்பு -
- (மைதாமா கலந்தால் மெதுமையான பணியாரம் கிடைக்கும்.
- அரிசிமா, உழுந்துமா சற்று உரமாக இருக்கும்.
- மா கலக்காமல் தனியே களியிலும் செய்வார்கள் இது கடித்துச் சாப்பிடும் போது களிப் பிடியாக இருக்கும்.
0.0.0.0.0.0
ஆஹா.........ஆஹா..........
ReplyDeleteஇனிக்குதே!!!!!!!
rompa arumai
ReplyDeleteபனம் பழத்தில் பணியாரம்... பார்க்கவே நன்றாக இருக்கிறது... சுவைத்தால் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும்.....
ReplyDeleteசாப்பிட்டுப் பலகாலம் ஆகிறது.
ReplyDeleteஆனால் உங்கள் பதிவில் படித்ததும் அதன் சுவை வாயெல்லாம் எச்சில் ஊற வைக்கிறது.
பனம் பழத்தில் பதமான பணியாரம்"
ReplyDeleteஅருமையான சுவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
பனம் பழத்தில் பதமான பணியாரம்"
ReplyDeleteஅருமையான சுவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
பனம் பழத்தில் பதமான பணியாரம் சுவை அருமை மாதேவி.
ReplyDeleteபனம் பழம் சிறுவயதில் சாப்பிட்டு இருக்கிறேன்.
பணியாரம் சாப்பிட்டது இல்லை.
பார்த்தாலே சாப்பிட தூண்டுகிறது. நல்ல பகிர்வு.
ReplyDeleteபார்க்க நல்லா இருக்கு. பனம்பழம் கிடைக்காத பகுதிகள்ல இருக்கறவங்க உங்க இடுகையைப் பார்த்து திருப்திப் பட்டுக்க வேண்டியதுதான்..
ReplyDeleteஒரு ப்ளேட் பனம்பழம் பணியாரம் பார்சேல்ல்ல்ல்ல்ல் :-))
சங்கப் பாடல்களில் பனை பற்றிய குறிப்புகளைக் கையாண்டிருப்பது சுவை கூட்டுகிறது.
ReplyDeleteபனம்பழப் பணியாரம் சூப்பர்.கிடைத்தால் செய்து பார்க்கலாம்.அருமை.
ReplyDeleteவாருங்கள் துளசி கோபால்.
ReplyDeleteஅன்றே சொல்லிவிட்டேன் முதல் பணியாரம் உங்களுக்கே என்று.
இன்றும் முதலாவதாக வந்து தட்டிச் சென்றுவிட்டீர்கள் .:)) மகிழ்ச்சி.
மிக்க நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா.
ReplyDeleteநன்றி வெங்கட் நாகராஜ்.
ReplyDeleteவாருங்கள் Muruganandan M.K.
ReplyDeleteபனம் பழப் பணியாரம் சாப்பிட்டு பல காலமா ?
ஒருதடவை யாழ் சென்றால் வயிறு நிறையச் சாப்பிடலாம் தானே :))
வருகைக்கு நன்றி.
நன்றி இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteவாருங்கள் கோமதி அரசு.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
பணியாரம் பழத்தைவிட மிகவும் சுவையாக இருக்கும்.
சாப்பிடுங்கள் :))
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி கோவை2தில்லி.
பணியாரம் 4-5 நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். அதற்குள் உங்களுக்குப் பாசல் வந்துசேர்ந்துவிடும்தானே :)))
ReplyDeleteமிக்க நன்றி அமைதிச் சாரல்.
கருத்துக்கு மிக்க நன்றி சத்ரியன்.
ReplyDeleteவாருங்கள் ஆசியா.
ReplyDeleteபழம் கிடைக்கும்போது செய்து சாப்பிட்டுவிட்டு அதன் சுவை எப்படி எனக் கூறுங்கள்.
புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...
ReplyDeleteமங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..
http://ithu-mangayarulagam.blogspot.com
ஆஹா.........ஆஹா..........
ReplyDeleteஇனிக்குதே!!!!!!
பனம் பழம் சிறுவயதில் சாப்பிட்டு இருக்கிறேன்.
பணியாரம் சாப்பிட்டது இல்லை.!
mee too
ஒரு ப்ளேட் பனம்பழம் பணியாரம் பார்சேல்ல்ல்ல்ல்ல் :-))
enakkum anupi vaiyunga maathevi..
அச்சோ...வாயூறுது.மாதவி ஏன் உங்களுக்கு இப்பிடி ஒரு கொலைவெறி !
ReplyDeleteபனம் பழத்தில் பணியாரமா
ReplyDeleteதலைப்பு ஆச்சரியமாக இருந்தது
ஆனால் படங்களையும் சொல்லிச் சென்ற விதத்தையும்
படிக்கையில் பார்க்கையில் நாவில் எச்சில் ஊறுவதை
தவிர்க்க இயலவில்லை
படங்க்களுடன் பதிவு மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
வித்தியாசமான பலகாரம். பனம்பழம் கிடைக்கும்போது செய்து கொடுத்து பசங்களை அசத்திட வேண்டியதுதான்.
ReplyDeleteநன்றி சகோதரி
மங்கையர்உலகம்
ReplyDeleteபித்தனின் வாக்கு
ஹேமா
ரமணி
ராஜி
உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி.
பனம்பழத்துல பணியாரமா? நான் கேள்விப்பட்டதில்லையே
ReplyDelete... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...
பனம் பழத்தில் பணியாரம்...பாராட்டுக்கள்..
ReplyDeleteஅட இந்த இடுகையை இப்பொழுதுதான் பார்க்கிறேன் மாதேவி.பனம்பழத்தில் இருந்து களி எடுப்பதற்குள் போதும்போதும் என்றாகி விடுமே?பனம்பழத்தில் செய்யப்படும் பினாட்டு கொழும்பில் பிரசித்தமாயிற்றே..அதனைப்பற்ரி தெரிந்தால் எழுதுங்களேன்.பகிர்வுக்கு நன்றி மாதேவி.
ReplyDelete