Saturday, December 31, 2011

சமையலறையில் விடுகதைப் போட்டி

பரம்பரையாக நீண்டகாலமாக வாய் மொழியாக சொல்லப்பட்டு வந்தவைதான் விடுகதைகள். பாட்டிமார்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க, சிந்திக்க வைக்க விடுகதை கூறுவார்கள்.

ஓய்ந்திருக்கும் வேளைகளில் விடுகதைகளைச் சொல்லி  அவிழ்க்க முடியுமா என கேட்பதுண்டு. கணவன் மனைவி, காதலன் காதலியும் விடுகதைகளை ஒருவருக்கு ஒருவர் வீசி திக்குமுக்காட வைப்பதுண்டு.

  • நாட்டுப்புறப் பாடல்கள், இலக்கியங்கள் இவற்றுள் விடுகதையும் ஒன்று எனச் சொல்லலாம். 
  • விடுகதைகள் ஓரிரு வரிகளில் மறைமுகமாக விபரித்து எடுத்துச் சொல்லப்படுபவை. 
  • சிந்தனையைத் தூண்டி வைப்பது இதன் நோக்கம்.
விடுகதையை புதிர், வெடி, நொடி என்றும் சொல்லுவார்கள்.

சில விடுகதைகள் சொல்கிறேன். உங்களால் விடுவிக்க முடிகின்றதா?

  1. குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல, அது என்ன?
  2. சடசட மாங்காய் சங்கிலி ரோடு விழுந்தா கறுப்பு, தின்னால் தித்திப்பு. அது என்ன?
  3. குண்டப்பன் குழியில் வீழ்ந்தான். எழுந்தான், எல்லார் வாயிலும் விழுந்தான் அவன் யார்?
  4. ஊளை மூக்கன் சந்தைக்குப் போறான். அவன் யார்?
  5. வெள்ளைக்காரனுக்கு கறுப்புத் தொப்பி அது என்ன?
  6. மரத்து மேலே பழம் பழத்து மேலை மரம் அது என்ன?
  7. காற்றுப் புகாத வெள்ளைக் கூண்டில் மஞ்சள் புறா மயங்கிக் கிடக்கு அது என்ன?
  8. உச்சிக் குடும்பியன் சந்தைக்கு வந்தான். அவன் யார்?
  9. அம்மா போடும் வட்டம் பளபளக்கும் வட்டம், சுவையைக் கூட்டும் வட்டம், சுட்டுத் தின்ன இஸ்டம் அது என்ன?
  10. நாலு மூலைச் சதுரப் பெட்டி, அதன் மேல் ஓடுமாம் குதிரைக் குட்டி அவர்கள் யார்?
  11. பச்சைக் கதவு. வெள்ளை யன்னல் திறந்தால் கறுப்பு ராஜா அது யார்?
  12. சொறி பிடிச்சவனை கறி சமைத்து சோறெல்லாம் கசப்பு அவன் யார்?
விடைகள் சொல்லிவிட்டீர்களா?

விடைகளைச் சரிபார்க்க  கீழே வாருங்கள்.

 .................................
 ..................................................................
...................................................................................................

உங்களுக்கு எத்தனை விடைகள் சரி்யாக வந்தன?

3 மார்க்குக்கு கீழே விடை தெரிந்தவர்களுக்கு ஹோம்வேக் நிறையவே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சமையலும் தமிழும் கற்றுக் கொண்டு அடுத்த பரீட்சைக்கு வாங்க.

6 விடுகதைகளுக்கு மேலே கண்டு பிடித்தவர்களுக்கு பாஸ் சேர்டிபிக்கற் கிடைக்கிறது.

எல்லா விடைகளையும் சரியாகச் சொன்னவர்களுக்கு  ஒரு பரிசு தரலாமா.....

12 விடுகதைகளுக்கும் சரியான விடைகளை கண்டு பிடித்தவர்களுக்கு சின்னுரேஸ்டி விடுகதை  வெற்றிக் கேடயம் வழங்கப்படுகிறது. எடுத்துக்கொண்டு சென்று உங்கள் வீட்டில் சேமியுங்கள்.

10 எடுத்தவர்களின் அழும் ஓசை காதில் விழுகிறது சரி நீங்களும் கேடயத்தை பிடித்துக் கொள்ளுங்கோ....

பிறக்கும் 2012 அனைவருக்கும்  சகல சிறப்புகளும் அள்ளித் தரும் ஆண்டாக அமைய  வாழ்த்துகிறேன்.

- மாதேவி -

22 comments:

  1. நல்ல விடுகதைகள்....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  2. புது விதமான பதிவு., ஹா
    ஹ விடை எல்லம் சொல்லிட்டீங்களே

    ReplyDelete
  3. மாதேவி...என்னமோ சிரிச்சிட்டேன் கடைசியில.உண்மையா நான் 2-3 மட்டும்தான் சரியா சொன்னேன்.எனக்கு பரிசு இல்லைத்தானே !

    அன்பு வாழ்த்துகள்.2012 இனிதே இனிக்க இனிக்க வரட்டும் !

    ReplyDelete
  4. நாலு மூலைச் சதுரப் பெட்டி, அதன் மேல் ஓடுமாம் குதிரைக் குட்டி அவர்கள் யார்?//

    இதற்கு மட்டும் தான் எனக்கு தெரியவில்லை.

    மற்றைவைகளுக்கு சரியாக சொல்லி விட்டேன்.
    விடுகதை போட்டி அருமை மாதேவி.

    உங்களுக்கும், உங்கள் குடும்த்தார்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பிறக்கும் 2012 அனைவருக்கும் சகல சிறப்புகளும் அள்ளித் தரும் ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.//

    நிச்சியம் சகல சிறப்புகளும் அள்ளித் தரும் மாதேவி.

    இறைவன் அருளால் உங்களுக்கும் அப்படியே அமைய வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  6. விடுகதை எல்லாமே நல்லா இருக்கு. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.விடை நீங்கள் சொல்லாமல் இருந்தால் என் விழி பிதுங்கியிருக்கும் .அருமை மாதேவி.

    ReplyDelete
  8. ஆத்தாடி... உங்க ப்ளாக்குக்கு வந்தா நிறைய யோசிக்க வெச்சுடுவீங்க போலருக்கே... விடுகதைக்கு விடை சொல்ற திறமை நமக்கில்லம்மா.. அம்பேல்! அடுத்த மேட்டர்ல கலந்துக்கறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நான் 4 விடை சரியா சொல்லிக்கிட்டேன். எனக்கு என்ன பரிசு?

    ReplyDelete
  10. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. விடுகதைகள் எல்லாமே நல்லாருக்கு..

    ReplyDelete
  12. வருகைக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete
  13. உங்கள் நேர்மைக்கு பரிசுதரலாமே ஹேமா.

    உங்களுக்கும் புத்தாண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வாருங்கள் கோமதி அரசு. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    சின்னுரேஸ்ரி மிக்க மகிழ்ச்சியுடன் விருதை அளிக்கின்றது பெற்றுக்கொள்ளுங்கள்.

    உங்கள் திறமைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி லஷ்மி.

    ReplyDelete
  16. நன்றி ஆசியா.

    மீண்டும் வருமே விடுகதைகள் :))))

    ReplyDelete
  17. வாருங்கள் கணேஷ்.

    திறமைகள் எல்லாவற்றையும் ஒழித்து வைத்து விட்டு ஒன்றும் தெரியாது என்பீர்கள் போலும் 'அடக்கம்அமரருள் உய்க்கும்..........'

    மிக்க நன்றி.

    ReplyDelete
  18. வாருங்கள் ராஜி.

    4 விடைகள் சரியாகச் சொன்னால் பரிசு முயற்சியுண்டு மீண்டும் வருக :))))

    மிக்க நன்றி.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கு மிக்கநன்றி அமைதிச் சாரல்.

    ReplyDelete
  20. விடுகதைகளை மிகவும் ரசித்தேன். கோமதிம்மாவுக்கு கண்டிப்பாகக் கேடயம் கொடுக்க வேண்டும்:)!

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மாதேவி!!

    ReplyDelete
  21. அருமையான விடுகதைகள். கேள்விப்பட்டதே இல்லை. நான் அன்னாசி,குழிப்பணியாரம்,பாகற்காய் மட்டும் தான் கண்டு பிடிச்சேன்;)

    ReplyDelete
  22. கேள்விப் படாத விடுகதைகள்! ரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்தன.
    வேர்ட்ப்ரஸ் - இல் எழுதுவதும் நீங்கள் தானா?

    வாழ்த்துகள்!

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்