Sunday, September 22, 2013

தொட்டால் சிவக்கும் வடிவழகி தரும் சுவை என்ன?

கரட்,முள்ளங்கியைப் போன்றதே பீற்ரூட் இனமும். வேர்க்கிழங்கு தாவரம். ஆங்கில மரக்கறி, வெள்ளைக்காரன் மரக்கறி, வெளிநாட்டு மரக்கறி என முன்னர் அழைத்தார்கள்.சிகப்புக் கிழங்கு என பாட்டிமார் சொல்வார்கள். பலருக்கும் பிடிக்காத மரக்கறிகளில் இதுவும் ஒன்று எனச் சொல்லலாம்.

நிறத்தில் மயக்கும் இது சுவையில் சுமார்தான்.

'பீற்ரூட் நிற அழகி' என கானா பாடல்களில் பெண்ணை வர்ணித்து இருக்கிறார்கள்.

பொதுவாக வருடம் பூராவும் விளையும் பயிராகும். வீட்டுத்தோடங்களிலும் பயிரிடப்படுகிறது. சாடிகளுக்கும் உகந்த பயிர்தான். வெளிநாடுகளில் கிடைக்கும் காலங்களில் புரோசன் செய்யப்பட்டு பாதுகாத்தும் வைக்கிறார்கள். நம் நாடுகளில் எல்லாக் காலங்களிலும் தாராளமாகக் கிடைக்கும்.


தோட்டங்கள் சிகப்பு முளைத்ததுபோல பார்க்க அழகாக இருக்கும். பச்சை இலையும் சிகப்பு கலந்த வர்ணம் கவர்ந்திழுக்கும்.

வட அமெரிக்காவில் டேபிள் பீற், கார்டன் பீற், ரெட் பீற் எனப் பலவாறு அறியப்பட்டது.


போசாக்கு

100 கிராமில்

கலோரிச் சத்து 180 KJ
காபோஹைரேட் 9.96 கிராம்
நார்ப்பொருள் 2.0 கிராம்
இனிப்பு 7.96 கிராம்
புரதம் 1.68 கிராம்
கொழுப்பு 0.18 கிராம்
பொட்டாசியம் 305 மை.கி
சோடியம் 77 மை. கி
பொஸ்பரஸ் 38 மை .கி
இரும்பு 0.79 மை.கி
கல்சியம் 16 மை. கி
விற்றமின ஊ 3.6 மை.கி
நியாசின் 0.331 மை. கி


ஹெல்தியாக இருக்க விரும்புவோர்கள், முகம் பொலிவுடனும் முகப் பருக்கள் தோன்றாமல் இருக்கவும் பீற்ரூட் சாறு அருந்துவது நல்லது. குழந்தைகளுக்கானது கீழே

இனிப்பு இருப்பதால் நீரிழிவாளர்கள் அளவோடு சாப்பிட வேண்டும்.

உடல் எடைக் குறைப்பிற்கும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பீற்ரூட் உதவுகின்றது.

இரத்தக் குழாய்களை விரியச் செய்யும் நைட்ரேட் பீற்ரூட்டில் அதிகம் இருப்பதால் உயர் அழுத்தத்தைக் குறைக்கும் என ஒரு ஆய்வு சொல்கிறது.
70 ml of beetroot juice இல் சுமார் 5 mmol of nitrate இருக்கிறதாம்

ஆயினும் இது சிறு ஆய்வு எனவும், இதனால் குறையும் இரத்த அழுத்தமானது 24 மணிநேரத்;திற்கு பிறகும் தொடர்ந்து இருக்குமா? என்பது பற்றியும் சர்ச்சைகள் உள்ளன. மேலும் படிக்க

Beetroot's effect on blood pressure is uncertain


 • கிழக்கு ஐரோப்பாவில் பீற்ரூட் சூப் பிரபலமான உணவாகும்.
 • பென்சில்வேனியாவில் டச் டிஸ் பாரம்பரியமான ஒன்று அவித்த முட்டைகளை பீற் சாறில் இட்டு ஊற வைத்து ரோஸ் கலராகச் செய்வது.  
 • வடஅமெரிக்காவில் பீற் ஊறுகாய் பாரம்பரிய உணவாக இருக்கின்றது. 
 • அவுஸ்திரேலியா, நியூசிலந்து, அரபிய நாடுகளில் ஹம்பேஹர் உடன் பீற் பிக்கிள் பரிமாறப்படுகிறது.

பீற்றின் பச்சை இலைகள் அவித்து எடுக்கப்பட்டு அல்லது ஸ்டீம் பண்ணப்பட்டு பரிமாறப்படுகிறது. இவை பசளைக் கீரையை ஒத்த சுவையைத் தருகின்றன.

க்றில் செய்து அவித்தும் ரோஸ்ட் செய்தும் உண்கிறார்கள்

வைன், பீற்ரூட் யூஸ், சூப், கேக், அல்வா, கட்லட், சான்விச், பிரியாணி, கலர்சாதங்கள், சலட், பொரியல், கறிவகைகள் என பலவாக சமைக்கப்படுகின்றன.

பீற்றூட்டில் இனிப்பு இருப்பதால் கறி இனிக்கும் அதனால் காரத்தை கூட்டி போட்டு சமைப்பது சாப்பிடக் கூடியதாக இருக்கும்.

பீற்றூட் பிரட்டல்

தேவையானவை

பீற் -1
வெங்காயம் - ½
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
விரும்பினால் மசாலா தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
தேசிச் சாறு - ½ ரீ ஸ்பூன்
கட்டிதேங்காய்ப் பால் -1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - அவியவிடுவதற்கு

தாளிக்க தேவையானவை

ஓயில் - 1 டே ஸ்பூன்
வெங்காயம் -சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
கடுகு - ¼ ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை - சிறிதளவு

செய்முறை

பீற்ரூட்டை தோலுடன் நன்கு கழுவி எடுங்கள். பீல் செய்துவிட்டு மெல்லிய சிறு நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.


வெங்காயம் சொப்ஸ் செய்து வையுங்கள்.

பச்சை மிளகாயை கீறி எடுங்கள்.

பாத்திரத்தில் போட்டு தண்ணீர் உப்பு கலந்து மூடி போட்டு அவித்து எடுங்கள்.
அவிந்த பின் மிளகாய் தூள் போட்டு கிளறுங்கள்.

தேங்காய்ப் பால் ஊற்றி கலந்து சுரூண்டு வர மசாலாத் தூள் சேர்த்து எடுத்து வையுங்கள்.

ஓயிலில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து

பீற்ரூட் கறியை தாளிதத்தில் கொட்டி ஒரு நிமிடம் கிளறுங்கள்.

தாளித்த வாசத்துடன் பீற்ரூட் மணக்கும்.

அடுப்பை அணைத்து தேசிசாறை விட்டு பிரட்டி கோப்பையில் எடுத்து வையுங்கள். பீற்ரூட் பற்றிய மற்றொரு (முன்னைய) பதிவு 

பீற்ரூட் சாதம்

-மாதேவி-

43 comments:

 1. பயனுள்ள குறிப்புகள்... செய்முறைக்கும் நன்றி...

  ReplyDelete
 2. பீட்ரூட் பற்றிய அருமையான தகவல். பொரியல் சோம்பு சேர்த்து செய்ததில்லை, கண்டிப்பாக அடுத்த முறை செய்கிறேன். மிக்க நன்றி மாதேவி.சிகப்பும் பச்சையும் கலந்து எப்பொழுதும் என்னைக் கவரத் தவறியதில்லை பீட்ரூட்.

  ReplyDelete
  Replies
  1. செய்துபாருங்கள் பிடித்ததா என சொல்லுங்கள்.

   Delete
 3. கண்களைக்கவ்ரும் வண்ணம் கொண்ட பீட்ரூட் பற்றிய சிறப்பான் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 4. எனக்கு மிகவும் பிடிக்கும்..

  ReplyDelete
  Replies
  1. செய்து சாப்பிடுங்கள்.

   Delete
 5. ஆரோக்கிய காய்கறியின் தன்மைகளையும் அதனை பயன்களையும் சத்துக்களின் விபரங்களையும் படங்களுடன் விளக்கிய விதம் சிறப்புங்க.

  ReplyDelete
 6. இன்னிக்கு உங்க பீற்ரூட் பதிவிலே மயங்கிப்போய்
  உடனே எதித்த கடைக்குப் போய்

  நறுக்குன்னு நாலு பீட்ரூட் வாங்கி வந்து
  பீட்ரூட் பொரியல் முதல்லே செஞ்சு,

  {பிரற்றல் என்று சொல்வத்தில்லை . சொன்னால் வயிற்ரை பிரற்றுமோ என்ற பயம் வர சான்ஸ் இருக்கிறது)

  பின்னே,
  பீட்ரூட் இலையிலே லேசா வாட்டி, , கொஞ்சம் இதயம் நல்ல எண்ண்ணைலே பெருங்காயம், கடுகு, இஞ்சி, பச்ச மிளகாய், போட்டு,,
  பின்னே பீட்ரூட் வாட்டின இலையை போட்டு ஒரு கலவை பண்ணி,
  நல்ல தயிர் லே நெஸ்லே தயிர் லே மூணு கப் பிலே போட்டு கலந்து , கொஞ்சமா வறுத்த மிந்திரி அங்கங்க லேசா தூவி,
  பிரிட்ஜ் லே வச்சு ஒரு மணி நேரம் கழிச்சு

  பீட்ரூட் பொரியல்லே கொஞ்சம் எடுத்து, நெய் லே வறுத்த ப்ரெட் போட்டு, முறுவலா பக்கத்திலே, வச்சுக்கிட்டு,

  எலுமிச்சை சாதம், புளியோதரை, பின்னே சேனை வறுவல், தயிர் வடை , மாங்காய் தொக்கோட

  போரியல், பச்சடி, ப்ரெட் பீட்ரூட் சேர்த்து சாப்பிட இருக்கிறோம்.
  இன்னும் இருபது நிமிசத்திலே.
  அமக்களமான லஞ்ச்.;
  வேனும்னா உடனே வாங்க.

  சுப்பு தாத்தா.
  மீனாச்சி பாட்டி.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. உடனேயே விருந்தும் படைத்துவிட்டீர்கள். நன்றி.

   Delete
 7. அழகான படங்களுடன் கூடிய அற்புதமான பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி.

   Delete
 8. பீட்ரூட் படங்களும், தகவல்களும் கண்களைக் கவர்கின்றன.
  சிறுவயதில் பீட்ரூட் கறியுடன் சாதம் கலந்து பிங்க்காக சாப்பிட மிகவும் பிடிக்கும்...:)
  தேங்காய் துருவிப் போட்டு கறி செய்வேன். பீட்ரூட் ஜாம் கூட செய்ததுண்டு. தயிர் பச்சடியும்...

  மிளகாய்த்தூள் போட்டு பிரட்டியதில்லை. செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சேம் ப்ளட்:) பிங்சாதம் சிறுவயது விளையாட்டு.

   Delete
 9. பீட்ரூட்பிரட்டல் நன்றாக இருக்கிறது மாதேவி.
  உங்கள் செய்முறையில் செய்து பார்க்க வேண்டும்.
  பீட்ரூட் படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. எங்கள் செய்முறையில் செய்து பார்க்க நினைத்தது சந்தோசம்.

   Delete
 10. அருமையான தகவல்.பீட்ரூட்டை நறுக்குவதற்குள் கண் பிதுங்கிப்போகிறது.சுவையும் குறைச்சல் ..ஆதலால் பீட் சமைப்பது ரொம்பவுமே குரைவு..

  ReplyDelete
  Replies
  1. சமையல் போட்டில் வைத்து வெட்டிக்கொண்டால் இலகுவாக இருக்கும். .

   Delete
 11. பதிவுக்கு நன்றி. செய்முறயில் குரிப்பிட்டுள்ள ” தேசிசாறு ”என்றால் என்னது ?
  எங்கு கிடைக்கும்?

  கே.எம். அபுபக்கர்

  ReplyDelete
  Replies
  1. எலுமிச்சம் பழசாறைதான் எமது வழக்கில் தேசிச்சாறு என்போம்.

   Delete
 12. ஆவ்வ்வ் சூப்பர். எனக்கு மிகவும் பிடிக்கும் பீற்றூட்ட்.. ஆனா எங்கட வீட்டில் ஆருக்கும் பிடிக்காது :(. நான் பிரியாணி செய்வதுண்டு இதில் அடிக்கடி...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு பிடித்தமானது என அறிந்து மகிழ்ச்சி.

   Delete
  2. பீட்ரூட் பிரியாணியா..அவ்வ்வ்...இப்படி எல்லாம் சொல்லி பயம் கட்டக்கூடாது பூஸ்.

   Delete
  3. எப்படியோ உங்களை பயமுறுத்திவிட்டோமே. :)

   நன்றி.

   Delete
 13. ” தேசிச்சாறு ” விளக்கத்திற்கு மிக்க நன்றி , சகோதரி.
  <><> கே.எம்.அபுபக்கர்

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் வந்து நன்றி கூறியதற்கு மகிழ்ச்சி.

   Delete
 14. உங்கள் பதிவிலுள்ள படங்களைப் பார்த்ததும் பீட்ரூட்டின் வித்தியாசமான அந்த இனிப்பு ஞாபகம் வந்தது.

  ReplyDelete
 15. அருமை, அருமை.... எனது மனைவியிடம் இந்த பதிவை காண்பித்து இருக்கிறேன்...... இந்த வாரம் இதுதான் உணவு !

  ReplyDelete
 16. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 17. மிக அருமையான ருசியான பகிர்வு. சூப்பர் மாதேவி.

  ReplyDelete
 18. நல்ல மெனு/வாழ்த்துக்கள்/

  ReplyDelete
 19. தகவலுக்கு நன்றி

  தமிழ்மொழி.வலை

  http://www.thamizhmozhi.net

  ReplyDelete
 20. எனக்கும் பிடித்தமான காய்கறி

  ReplyDelete
 21. பீட்ரூட் பொரியல் பிடித்தமான ஒன்று....அதனை பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி!!

  ReplyDelete
 22. எனக்கும் மிக மிக பிடித்தது பீட்ரூட் தான்.,
  மிக அருமையான தகவலுடன் பீட்ரூட் வறையும் சூப்பர்

  ReplyDelete
 23. பீட்ரூட்டைப்பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை!

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்