Saturday, August 31, 2013

உணவுக் கண்காட்சி - பண்ணையிலிருந்து சமையலறைக்கு

பண்டாரநாயக சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் (BMICH)  கடந்த 23,24, 25ம் திகதிகளில் Profood propack  'பண்ணையிலிருந்து சமையலறைக்கு' என்ற தொனியில் அங்காடிகளின் கண்காட்சி நடைபெற்றது.


 இக்கண்காட்சி 12 வருடங்களாக நடை பெற்று வருகிறது.  விவசாயம் சம்பந்தமான Agbiz கண்காட்சி 8 வது வருடமாக நடாத்தப்பட்டது.20 கம்பனிகள் 4 பல்கலைக் கழகங்கள், 252 கடைகள் அடங்கியதாக இக் கண்காட்சி இடம் பெற்றது.

ஏறத்தாள 22,500 பார்வையாளர்கள் கண்டு களித்ததாக சொல்கிறார்கள். கண்காட்சியின் விசேட அம்சமாக புதிய விவசாய கண்டுபிடிப்புகளும், உணவு பதனிடுதல், நவீன பொதியிடல் தொழில் நுட்பங்கள், நகர்ப்புற விவசாய செயல்முறைகள், விவசாயம் வியாபாரம் சார்ந்து உள்ளடங்கியதாக இக் கண்காட்சி அமைந்தது.


பார்வையாளர்களுக்கு உணவுப் பொருட்களில் விலை தள்ளுபடிகள், மணித்தியாலயத்திற்கு ஒருமுறை அதிஷ்ட சீட்டிழுப்புகள் எனப் பலவும் நடாத்தப்பட்டிருந்தன.


நானும் கண்காட்சியை சென்று பார்க்க விரும்பியிருந்தேன். விருந்தினர் வருகையால் செல்ல முடியவில்லை. மகள் நண்பிகளுடன் சென்று எனக்கான தகவல்களையும், புகைப்படங்களையும் கிளிக்கி வந்திருந்தாள்.அவற்றை இங்கு தருகின்றேன்.

இக்காட்சி வருடாவருடம் நடாத்தப்படும்போது பலரும் ஆவல் எதிர்பார்ப்புடன் சென்று வருகிறார்கள். விதை பொருட்கள் பெறப்படுவது தொடங்கி உற்பத்தி செய்யப்பட்டு பொதியாக்கப்பட்டு விற்பனைக்கு எடுத்து வருவது வரை நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தையும் இங்கு எடுத்துக் காட்டினார்கள்.


விவசாயத்திற்கு பயன்படுத்தும் தொழில் நுட்ப மிஷின்கள் பலவும் காட்சி படுத்தப் பட்டிருந்தன.

 இத்துறைகளில் ஈடுபட்டுள்ளோர்கள்.அனைவரும் ஓரிடத்தில் சந்தித்து தமது அனுபவங்களையும்  தகவல்களையும் பரிமாறிக் கொள்ள முடிந்ததால் பல நன்மைகளை பெற்றதாக இலங்கை உணவு பதனிடுவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

கலந்து கொண்ட மக்களும் பலஅனுபவங்களையும் பெற்று மகிழ்வுடன் வீடு திரும்பினர்.


கண்காட்சியில் பங்கு பற்றியோருக்கு விசேட கழிவு விலைகளில் பானங்கள் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. சுவைத்துப் பார்த்து பொருட்கள் வாங்கக் கூடியதான முறையிலும் அமைந்திருந்தது இதன் சிறப்பம்சம் என்றாள் மகள்.


கண்காட்சியுடன் இணைந்ததாக குக்கிங் ஸ்டுடியோ சமையல் கூடம் பிரபல 'சினமன் கிறான்ட் ஹோட்டல் " சமையல் கலைஞர்களால் செய்து காட்டப்பட்டனவாம். இதில் கீழைத் தேய மேலைத் தேச உணவு வகைகள் இடம் பெற்றன என்று சொல்கிறார்கள்.

நெல்லி யூஸ், கரும்புச் சாறு, புளுபெரி பாதாம் ஐஸ்கிறீம் வகைகள்,   மலிவு விலைகளில் வாங்கிச் சாப்பிடதாக மகள் சொன்னாள். எனக்கு ஒலிவ் ஒயில், சூரியகாந்தி ஒயில் போத்தல்கள் வாங்கிவந்து தந்தாள்.

முந்திரிகை கண்ணாடி குவளை தூண்களுள் காட்சிக்கு

கண்காட்சியில் இடம்பெற்ற  கடைகள், உணவுகள், பானங்கள், பொதியிடல், இயந்திர வகைகள், என அவற்றில் சிறப்பானவைக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நாடுகள் பலவற்றின் உற்பத்திப் பொருட்கள் அடங்கியிருந்தன. இந்திய உற்பத்திப்பொருட்கள் பலவும்  இருந்தனவாம்.


மஜிக் ரைஸ்,சுவீட்ஸ்,சினக்ஸ்,அணில்சேமியா எனப் பலதும் என்றாள்.


சீன பியஸ், அப்பிள் பழவகைகள் இருந்தன.

கனேடியன் தூதுவராலயம், பருப்புகளின் முக்கியத்துவம் பற்றியும் அதன் சமையல் முறைகள் பற்றியும் விளக்கினார்கள்.


பழங்களை நீரகற்றி (Dehydrate)  பக்கற்றுகளில் பொதியிட்டு விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.


 கஜீ ஸ்டோல்  அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது.உடன் வறுத்து சுடச்சுடக் கொடுத்தார்கள்.

கடை மேல் கூரையில் முழு முந்திரிகை.


பிளாஸ்டிக் அல்லாத சுற்றாடல் பாதுகாப்பிற்கு உகந்த  மீள உபயோகிக்கக் கூடிய பனை ஓலையால் செய்யப்பட்ட பைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது மிகவும் வரவேற்பிற்குரியது..


வாசனைச் சரக்குகள் சிறிய மண் பானைகளி்ல் இடப்பட்டு அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


பழங்கள்,  டிரகன் பழம் மரத்துடன்.


 பலவிதகாய்கறிகள்,


தாவரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.


நிச்சயம் இவ்வகையான கண்காட்சிகள் பலருக்கும் பயன்தரும் என்பதில் சந்தேகமில்லை. காட்சியை  சிறப்பாக நடாத்தியவர்களை பாராட்டுவோம்.

-: மாதேவி :-

39 comments:

 1. நிச்சயம் இவ்வகையான கண்காட்சிகள் பலருக்கும் பயன்தரும் என்பதில் சந்தேகமில்லை. காட்சியை சிறப்பாக நடாத்தியவர்களை பாராட்டுவோம்.

  வியக்கவைக்கும் இனிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 2. படங்களையும் தகவல்களையும் இரசித்தேன் மாதேவி. பகிர்வுக்கு நன்றி:)! ஒளிப்படங்களை கவனத்துடன் எடுத்தளித்த தங்கள் மகளுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டை மகளிடம் தெரிவித்தேன். நன்றி கூறச்சொன்னாள்.
   வருகைக்கு மகிழ்ச்சி.

   Delete
 3. அனைத்து புகைப்படங்களும் கண்ணுக்கும் அறிவுக்கும் விருந்து! இங்கு வருடா வருடம் உலகமுழுதும் உள்ள‌ நாடுகளின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் இலங்கை ஸ்டாலைப் பார்க்கத் தவறுவதில்லை!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 4. படங்கள் அனைத்தும் அற்புதம் .அறிந்துகொள்ள வேண்டியத் தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 5. கண் காட்சி படங்கள் கண்ணை கவர்ந்தது.

  ReplyDelete
 6. படங்கள் ஒவ்வொன்றும் நேரில் சென்று பார்ப்பது போல ஆர்வத்தை உண்டாக்கின... படம் எடுத்த சகோவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி.

   Delete
 7. intha warusam powa mudiya endu feel paninan, powatha kuraya neekkitinga :D

  ReplyDelete
  Replies
  1. பார்த்து மகிழ்ந்ததற்கு நன்றி.

   Delete
 8. அருமையான பசுமையான அழகான படங்களுடன் பதிவு சும்மா ஜொலிக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்.


  [தொடரின் ப்குதி-41 முதல் 44 வரை வருகை தந்து தங்கள் மேலான கருத்துக்களைக் கூற வேண்டியுள்ளது. இது JUSTஒரு. நினைவூட்டலுக்கு மட்டுமே - அன்புடன் VGK]

  ReplyDelete
 9. அருமையான படங்களுங்கள் மகள் அழகாய் தேவையான படங்களை உங்களுக்கு எடுத்து கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளை மகளிடம் தெரிவிக்கின்றேன். நன்றி.

   Delete
 10. எதிலும் தமிழைக் காணவேயில்லை. இலங்கையில் தமிழும் உத்தியோக பூர்வ மொழி (Official Language)அதனால் இப்படியான நிகழ்வுகளில் தமிழிலும் பெயர் இடப்பட வேண்டுமென்பது சட்டம். ஆனால் கொழும்பிலுள்ள தமிழர்கள் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை. யாராவது ஒருவர் கண்காட்சி நிர்வாகிகளிடம் முறைப்பாடு செய்திருந்தாலே அவர்கள் அந்த தவறை திருத்தியிருப்பார்கள். உத்தியோக மொழி திட்டத்தை அதாவது மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென ஒரு அமைச்சர் இருந்தும் கூட இந்த நிலை. தமிழை அரச மொழியாக்க, தமிழுக்கு இலங்கையில் சமவுரிமை கிடைக்க ஈழத்தமிழர்கள் இரத்தம் சிந்தினர், தமது பிள்ளைகலின் உயிரைப் பலி கொடுத்தனர் என்பதை நாம் ஒருநாளும் மறந்து விடக் கூடாது.

  ReplyDelete
  Replies
  1. இது சமையல்தளம். அரசியலுக்கு ஏற்ற இடம்அல்ல.

   உங்கள் வருகைக்கு நன்றி.

   Delete
 11. அருமையா படங்கள் வாழ்த்துக்கள் தங்கள் வருகைக்கு நன்றியுடன் சகோதரன்

  ReplyDelete
 12. நாவுக்கு விருந்தானவற்றை இங்கே கண்ணுக்கு விருந்தாய்க் காட்டி ரசிக்கச் செய்தமைக்கு நன்றி மாதேவி.

  ReplyDelete
  Replies
  1. கண்ணுக்கு விருந்தாக கண்டுகளித்தீர்களா நன்றி.

   Delete
 13. மிகவும் அழகிய கண்காட்சி, பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு. அந்த கஜூ ஸ்டோல்ல்.. சொல்லி வேலையில்லை... மிக அழகாக அலங்கரித்திருக்கினம்... நீங்கள் கூட கொடுத்துவைக்கவில்லைப் போலும் நேரிலே பார்க்க.

  ReplyDelete
  Replies
  1. நேரில் பார்கவில்லை என்ற கவலை இருந்தது. காட்சி வர்ணனை மகள் தந்தாள். வருகைக்கு நன்றி.

   Delete
 14. வெகு அருமையான அழகான பதிவு பகிர்வு. இவ்வளவு விசயங்களை நேர்த்தியாகப்
  படம் பிடித்துக் கொடுத்து இருக்கிறார். அனைத்துமேநன்றாக இருக்கின்றன.இவ்வளவு அழகான் உணவுக் கண்காட்சியை நான் பார்த்ததில்லை. நன்றி மா.

  ReplyDelete
  Replies
  1. மகளிடம் கூறிவிட்டேன். நன்றி கூறச்சொன்னாள்.

   வருகைக்கு மகிழ்ச்சி.

   Delete
 15. படங்கள் சுவையோ சுவை! மூன்றாவது படம் ( மிளகாய்த்தூள் உப்பு தூவிய மாங்காய்த் துண்டுகள் என்று நினைக்கிறேன்) பார்க்கும் போதே நாவில் சுவை ஊறுகிறது. நீங்கள் எந்த கேமராவினால் படம் எடுத்தீர்கள்? அந்த கேமராவிற்கு நன்றி!


  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி.
   சோனி டியிற்றல் கமராவில் எடுத்த படங்கள். சிறிய கமராதான் வெளிநாட்டில் சில வருடங்களுக்கு முன்பு வாங்கியது.
   இப்பொழுது கனொன் வாங்கியுள்ளோம் எடுத்துப் பழகவேண்டும். :)

   Delete
 16. கண்காட்சி படங்கள் பகிர்வுகளை மிகவும் ரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 17. உணவுக் கண்காட்சியைப் பற்றி முழுவதுமாக அறிந்துகொண்டேன்..

  இடம்பெற்ற படங்கள் அனைத்தும் உணவுக் கண்காட்சியை அப்படியே கண்முன் நிறுத்தின...

  பகிர்வினிற்கு மிக்க நன்றி...

  எனது வலைத்தளத்தில்: குறைந்த விலை பிராண்டட் செல்போன்களின் பட்டியல்

  வாசித்துப் பயன்பெறுங்கள்..

  ReplyDelete
 18. உங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.

  ReplyDelete
 19. மிக அருமையான படங்கள் அனைத்தும் அருமை,

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்