Saturday, August 10, 2013

பிஞ்சு மென் விரலாளில் குழம்பு


வெண்டை, வெண்டி, வெண்டிக்காய், Ladies finger என அழைக்கப்படுகிறது. சிறிய 2 மீற்றர் உயரம் வரை வளரக் கூடிய தாவரம். சொரசொரப்பான தண்டுகளையும் இலைகளையும் கொண்டிருக்கும். மல்லோ என அழைக்கப்படும். Malvacea  குடும்பத்தைச் சார்ந்தது. அறிவியல் பெயர் Abeimoschus esculentus ஆகும். எதியோப்பிய உயர்நிலப் பகுதியே இதன் தாயகமாகக் கொள்ளப்படுகிறது.

அமெரிக்காவில் ஓக்ரா என்று அழைக்கின்றார்கள். வேறும் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. Bhindiஅல்லது  gumbo எனவும் அழைப்பார்கள்.

வெள்ளை மஞ்சள் நிறங்களுக்கு இடைப்பட்ட சாயல்களில் இதன் பூக்கள் காணப்படுகின்றன.


இதழ்களில் செந்நிற அல்லது ஊதா நிறத்தில் புள்ளிகள் இருக்கும். வெண்டியில் பால் வெண்டை எனவும் வெளிறிய மென் பச்சைநிறத்தில் ஓர் இனம் இருக்கின்றது.

சிகப்புக் கலரிலும் வெண்டைக் காய்கள் இருக்கின்றன. 


சாடிகளில் வைத்தும் வளர்க்கும் செடி வகை இனம் இது என்பதால் பல்கணி வீட்டுத் தோட்டங்களுக்கு வளர்க்க உகந்த காய்கறிச் செடியாகும்.


மிகப் பெரிய 0.5 மீற்றர் நீளமுள்ள வெண்டைக் காய் கேரள மாநிலத்தில் பாஸ்கரன் உன்னி என்பவரது தோட்டத்தில் விளைந்து சாதனை படைத்துள்ளது. இது 'சத்கீர்த்தி' எனற இன வகையைச் சார்ந்தது.

வேளாந்துறை அதிகாரிகள் 'லிம்கா புக் ஒவ் ரெகோட்ஸ் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்கள்.

வெண்டை ஹெல்தியான உணவாகக் கொள்ளப்படுகின்றது.

அன்ரிஒக்சிடன்ட், கல்சியம், பொட்டாசியம், விட்டமின் சீ பெருமளவு அடங்கியது. நாரப்பொருள் அதிகம் இருப்பதால் நீரிழிவு, கொல்ஸ்டரோல், மூலவியாதி  நோயாளிகளுக்கு நல்லது.

உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைக்கும் தன்மை இக்காயில் உள்ள பெக்டினில் இருக்கின்றது. கொழுப்பு இல்லாததால் உடல் எடையைக் குறைப்பதற்கும் உகந்த உணவாகக் கொள்ளப்படுகின்றது. நோயாளர்கள் ஸ்டீம் செய்து உண்பது சிறந்தது.


Okra, raw
Nutritional value per 100 g (3.5 oz)
33 kcal (140 kJ)
7.45 g
1.48 g
3.2 g
0.19 g
2.00 g
90.17 g
Vitamin A equiv.
36 μg (5%)
0.2 mg (17%)
0.06 mg (5%)
1 mg (7%)
23 mg (28%)
0.27 mg (2%)
31.3 μg (30%)
82 mg (8%)
0.62 mg (5%)
57 mg (16%)
299 mg (6%)
0.58 mg (6%)
Percentages are roughly approximated
from US recommendations for adults.
Source: USDA Nutrient Databaseஇலங்கை இந்திய பாகிஸ்தானிய சமையல்களில் பிரபலமானது.

பால்கறி, மோர்க் குழம்பு, தோசை, பச்சடி, பொரியல், வறுவல், மண்டி, ஸ்டப், எனப் பலவாறு இடம்பிடிக்கின்றது.

வெண்டைக் காய்சாம்பார் என்ற பெயரைக் கேட்டாலே ஓட்டம் பிடிப்பார் பலர் உண்டு. அவர்களையும் சாப்பிட வைக்க இந்த பொரித்த குழம்பு கை கொடுக்கும்.

சாதம் பிட்டு, இடியாப்பம், பாண், ரொட்டி, நாண் உணவுகளுக்கு சாப்பிட சுவையானது.

காய்கள் வாங்கும்போது பிஞ்சுக் காய்களாக தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். காய்களின் நுனிப் பகுதியை உடைத்தால் முறிந்தவிடும் காய்கள் பிஞ்சாக இருக்கும்.

வெண்டைக்காய் பொரித்த குழம்பு தேவையானவை
 • வெண்டைக்காய்  - 15-20
 • பம்பாய் வெங்காயம் - 1
 • பச்சை மிளகாய் - 2
 • கட்டித் தேங்காய்ப் பால் - ¼ கப்
 • மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
 • மல்லித்தூள் - ½ ரீஸ்பூன்
 • சீரகத்தூள் -  ¼ ரீ ஸ்பூன்
 • மஞ்சள் தூள் - சிறிதளவு
 • புளிக்கரைசல் உப்பு தேவையான அளவு
 • பூண்டு - 5 பல்லு
 • வெந்தயம் - ½ ரீ ஸ்பூன்
 • சோம்பு - ¼ ரீ ஸ்பூன்
 • கடுகு  - ¼ ரீ ஸ்பூன்
 • கறிவேற்பிலை - 2 இலைகள்
 • ரம்பை இலை  - 2 துண்டு
 • ஓயில் - ¼ லீட்டர்


செய்முறை

வெண்டைக் காயைக் கழுவி துடைத்து உலர வையுங்கள் வெங்காயம் பச்சை மிளகாய் வெட்டி வையுங்கள். பூண்டைத் தட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.


காய்களை  2 அங்குல நீள் துண்டுகளாக வெட்டுங்கள்.

எண்ணெயைக் காய விட்டு கொதித்ததும் காய்களைப் போட்டு நன்கு பிறவுன் கலர் வரும் வரை இடையிடையே கிளறிக்கொண்டு பொரித்து எடுங்கள்.

சிறிதளவு ஓயிலில் கடுகு, பூடு, சோம்பு, வெந்தயம், தாளித்து வெங்காயம,; பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள்.

சிவந்ததும் கருவேற்பிலை, ரம்பை போட்டு இறக்குங்கள். காய்களைக் கொட்டி தூள் வகைகள் உப்பு புளிகரைசல் விட்டு கொதிக்க வையுங்கள். கொதித்ததும் தேங்காய்ப் பால் ஊற்றி ஒருகொதி வர இறக்குங்கள்.

பொரித்த வாசத்துடன் குழம்பு சாப்பிட தயாராகிவிடும்.

மாதேவி

23 comments:

 1. Bindi..... :)

  மிகவும் பிடித்த காய்கறி..... வெண்டைக்காய் பொரித்த கூட்டு - பார்க்கவே அருமையாக இருக்கிறது. செய்து பார்த்துடுவோம்!

  ReplyDelete
  Replies
  1. பீன்ஸ், வெண்டை, பாகல், வாழைமொத்தி பெரும்பாலும் பலருக்கும் பிடிக்காத காய்கறிகளுள் அடக்கம்..

   எங்கள் வீட்டில் பொரித்த குளம்பு நன்கு பிடிக்கும்.

   வருகைக்கு மிக்க நன்றி.

   Delete
 2. வெண்டைக்காயை அலசி ஆராய்ந்திவிட்டீர்கள்....

  ReplyDelete
 3. அருமையான படங்கள் + அழகான விளக்கங்கள் + சூப்பரான செய்முறை.

  பசுமையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்கின்றேன்.

   மிக்க நன்றி.

   Delete
 4. வெண்டைக்காயைச் சாப்பிடத்தான் தெரியும்’இப்போது தெரிந்தது மற்ற செய்திகள்.வெண்டைக்காயை சிறுதுண்டுகளாக்கி வறுத்து மோர்க்குழும்பில் போட்டிருப்பார்கள் விவேகானந்தா கல்லூரி விடுதியில் முன்பு: மிகப் பிரசித்தம்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

   வருகைக்கு நன்றி.

   Delete
 5. வெண்டைக்காய் படங்கள், காணொளி, வெண்டைவிரல்கள், மருதாணி இட்ட கை, எல்லாம் அழகு.
  வெண்டைக்காய் பொரித்த குழம்பு செய்முறை அருமை செய்து பார்த்து விடுகிறேன்.
  நன்றி மாதேவி.

  ReplyDelete
  Replies
  1. ரசித்தீர்களா :)
   நீங்கள் செய்துபார்க்க விரும்பியதில் மகிழ்ச்சி. செய்துபார்த்து உங்களுக்கு பிடித்ததா எனச்சொல்லுங்கள்.

   வருகைக்கு நன்றி.

   Delete
 6. படங்களுடன் பதிவு அருமை, அந்த வெண்டைக்காய் மோர் குழம்பு செய்யும்போது எனக்கு வயிறு இரண்டு மடங்காகிவிடும் என்பது எனது அம்மாவின் கருத்து !

  ReplyDelete
  Replies
  1. வெண்டைக்காய் மோர்குழம்பு பிடிக்கும் என்று அறிந்து மகிழ்ச்சி.

   வருகைக்கு நன்றி.

   Delete
 7. வெண்டைக்காய் பற்றி சிறப்பான தகவல்களும் ,
  குழம்பும் அருமை.. பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 8. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துரைத்து
  சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த
  இனிய அன்பு நன்றிகள்..!

  ReplyDelete
 9. படங்களுடன் வெண்டைக்காய் சமையலும் அருமை... பொதுவாக எனக்கு வெண்டைக்காய் பச்சையாக உண்ணவே விருப்பம். குழம்பில் வரும் அந்த பிசுபிசுப்பு பிடிக்காது... நான் சின்ன வயதில் மாமா தோட்டத்தில் விளைந்த வெண்டைக்காயை அப்படியே உண்பேன்... அவ்வளவு ருசி... ஆனால் உலகிலேயே கொடுமையான சுனை (அரிப்பு)வெண்டைச் சுனை தான்... மூன்று நாள் வெளக்கெண்ணை தடவிக்கொண்டு இருப்போம்... அனைத்தும் நினைவில் ஊஞ்சலாடுகிறது...

  அழகான பதிவு... பாராட்டுகள்...

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கூறியதுபோல பிஞ்சுவெண்டைக்காயை பறித்தவுடன் பச்சையாக சாப்பிடுவது நன்றாக இருக்கும்.
   நாங்களும் சிறுவயதில் சாப்பிடுவோம். :)

   நன்றி.

   Delete
 10. ஹெல்தியான் வெண்டைக்காய் குறிப்பு அருமை.

  ReplyDelete
 11. வெண்டைக்காய் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி,குழம்பு எனக்கு மிகவும் பிடித்தமானது!!

  ReplyDelete
 12. எனக்கும் பிடித்தமானது :)

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்