Wednesday, April 8, 2009

மொறு மொறுவென உழுந்து முறுக்கு

வழமையாக கடலை, உழுந்து, பொட்டுக்கடலை, அரிசி போன்றவற்றை மாவாக பொடித்து எடுத்து முறுக்கு செய்வது வழக்கம்.

இது தோசை, வடை, இட்டலிக்கு அரைப்பது போன்று அரைத்த உழுந்திலிருந்து தயாரிக்கப்பட்டது.

உழுந்தை நேரடியாகச் சேர்ப்பதால் உழுந்தின் வாசம் கூடுதலாக இருக்கும். அத்துடன் இலகுவாகச் செய்யக் கூடியது.

வழமையாக உழுந்து அரைக்கும்போதே சற்றுக் கூடுதலாக உழுந்தைப் போட்டு அரைத்து எடுத்துக் கொண்டால் தின்பண்டத்திற்கு சுட்டுக் கொள்ளலாம். தனியே முறுக்கு செய்வதற்கான ஆயத்தங்கள் செய்ய வேண்டியதில்லை, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிடலாம் என்பது போலத்தான்.

முறுமுறுத்துக் கொண்டு செல்லும் வீட்டுக்காரரையும் பிள்ளைகளையும் கட்டிப்போட்டு உங்களேயே சுற்றிச் சுற்றி வர வைக்க இலகுவான வழி இதுதான்.

செய்துகொள்வோம்

உழுந்து – 1கப்
அவித்த மைதா – 3 கப்
வறுத்த அரிசிமா ¼ கப்

அரைத்து எடுக்க

சீரகம் - 1 ரீ ஸ்பூன்
மிளகு – ½ ரீ ஸ்பூன்
பூண்டு - 5-6 பல்லு

பொடிவகைகள்

மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ ரீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி சிறிதளவு
உப்பு தேவையான அளவு

பொரிப்பதற்கு

எண்ணெய் ½ லீட்டர்

செய்முறை

உழுந்தை தோசைக்கு செய்வதுபோல ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் மைதா, அரிசிமா, அரைத்த கூட்டு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயம், உப்பு கலந்து குழைத்து முறுக்குமா பதத்தில் சிறிது நீர் விட்டு குழைத்து எடுத்துக் கொள்ளவும்.

எண்ணெயைக் கொதிக்க வையுங்கள். மாவை உரலில் இட்டு எண்ணெய் தடவின 5-6 சிறிய தட்டுக்களில் சிறிய ஓரிரு சுற்று முறுக்குகளாகப் பிழிந்து வையுங்கள்.

எண்ணெய் நன்கு கொதிக்க முறுக்குக்களைப் போட்டு பொரிய விடுங்கள்.

ஒருபுறம் பொரிவதை இடையிடையே பிரட்டிக் கொண்டே, அடுத்த தடவை போடுவதற்கான முறுக்குக்களை தட்டுகளில் பிழிந்து வையுங்கள்.

பொன்னிறத்தில் பொரித்து எடுத்த முறுக்குகளை எண்ணெய் வடிய போட்டுவிடுங்கள். மற்றைய முறுக்குகளை எண்ணெயில் போட்டு பொரியவிடுங்கள். அவ்வாறு ஏனைய மாவையும் முறுக்குகளாக்கிக் கொள்ளுங்கள்.

நல்ல முறுமுறுப்பாகவும் ஒரு மாதமளவில் வைத்து எடுக்கக் கூடியதாகவும் இவை இருக்கும்.

உப்பு உறைப்பு சுவையுடன் நொறுக் நொறுக்கென கொறித்துக் கொண்டு அனைவரும் வளைய வருவார்கள்.

மாதேவி

12 comments:

  1. மொறு மொறுவெனக் கடித்துச் சுவைக்கத் தூண்டுகிறதே முறுக்குப் படம்

    ReplyDelete
  2. வரும் விடுமுறை காலத்தில் செய்து பார்க்க இருக்கிறேன்.

    ReplyDelete
  3. மாதேவி முறுக்கு கூட நீங்கள் செய்விங்களா அருமை. நான் செய்தது இல்லை. கொஞ்சமாக செய்துப் பார்க்கிறேன். உங்கள் குறிப்புக்கு நன்றி

    ReplyDelete
  4. நன்றி ரூபினி. செய்து பார்த்துக் கருத்துக் கூறுங்கள்.

    ReplyDelete
  5. நன்றி Mrs.Faizakader.சுலபமாக செய்யலாம். முயற்சியுங்கள்.

    ReplyDelete
  6. முருக்கு செய்து இருக்கேன் ஆனால் இது போல் மைதா மா சேர்த்து செய்ததில்லை, எதற்கு மைதா மா சேர்க்கிறீகள் அது இழுபடுமே?
    உங்கள் இலங்கை தமிழ் ரொம்ப நல்ல இருக்கு

    ReplyDelete
  7. நன்றி ஜலீலா. அரைத்த உழுந்து சேர்ப்பதால் மைதா சேர்க்கும்போது Soft ஆக வரும். வித்தியாச சுவையையும் கொடுக்கும்.

    ReplyDelete
  8. உங்கள் பாராட்டிற்கு நன்றி முரளி.

    ReplyDelete
  9. எச்சில் ஊறுதுங்கோ!

    ReplyDelete
  10. நன்றி. ஐந்தினை. எல்லோருக்கும் பிடித்ததுதானே முறுக்கு.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்