Thursday, November 19, 2009

சமையலறையில் சுவை சேர்க்கும் கீதங்கள்


ஆதிமனிதன் காட்டில் கிடைத்த காய் கனிகள், கிழங்குவகைகளை ஆரம்பத்தில் உண்டான்.
இவை பச்சையாக உண்ணத்தக்கன.

பின் மிருகவேட்டை இறைச்சி, மீன் பிடி என விரிந்தபோது அவற்றை நெருப்பில் வாட்டியும், வேகவைத்தும் உண்ணும் பழக்கம் ஏற்பட்டது.
அதில் புதிய சுவை தென்பட்டது.
நாவு சுவையுணர்ந்தது.

இவற்றிலும் திருப்தியடையாத போது
மனிதன் அவற்றிற்கு மேலும்
சுவையூட்டி உண்ணும் பழக்கத்தைத் தொடங்கினான்.

நானிலங்களும் அவற்றின் உணவுகளும்


சங்க காலத்தில் உணவுச் சுவையைப் பற்றிய பாடல்கள் வெளிப்பட்டிருக்கின்றன. அறுசுவைக்கு அடிமை ஆகாதோர் முற்றும் துறந்த துறவிகள் மட்டும்தான்.

நானிலங்களும் உணவுகளும் அவ்வவ் நிலங்களில் கிடைக்கும் உணவுகளும் வருமாறு.

  1. குறிஞ்சி, தேன், தினைமா, கிழங்கு, பறவைகள் ஊன்வேட்டை உணவுகள்.
  2. முல்லைக்கு சோளம், கேள்வரகு, நேய், தயிர், வெண்ணேய், மோர், அவரை, துவரை
  3. மருத நிலத்திற்கு பல் வகைச் சோறு, காய்கறிகள்,
  4. நெய்தல் நிலத்திற்கு மீன், நண்டு, இறால், கணவாய், கருவாடு

சங்க இலக்கியத்தில் உணவு

பழம் தமிழ் பாடல்களில் உணவு பற்றி நிறையவே கூறப்பட்டுள்ளது. புறநானூறு பாடல் ஒன்றில்

நீர் இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

என வருகிறது.

நல்வழிப் பாடல் இவ்வாறு சொல்கிறது.

ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இரு நாள் உணவை ஏலென்றால் ஏலாய்

இடும்மை கூர் வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது


புரட்சிக் கவி பாரதி

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்.

என வீர முழக்கம் இட்டான் பாரதி.

தாலாட்டுப் பாடல்கள்

குழந்தைத் தாலாட்டுப் பாடல்கள் பல இருந்தன.

காக்கா காக்கா மைகொண்டா ..............................
பசுவே பசுவே பால்கொண்டா

பச்சைக் கிளியே பழம் கொண்டா


பாலர் பாடலில் விநாயகரைத் துதித்து படைத்து வணங்கி,
வினைகள் தீர்ப்பதாக

அப்பம் முப்பழம்
அமுது செய்தருளிய

தொப்பை அப்பனைத்

தொழ வினை அறுமே.


என வருகிறது.

குழந்தைப் பாடல்
ஒன்றில்

ஈ ஒன்று பாயாசம் சாப்பிட ஆசைப்பட்டது
பானையில் அரிசி இருக்கிறதா என்று சென்று பார்த்தது.. இல்லாத போது நெற்கதிரிடம் சென்று கேட்டதாக தொடங்கும் பாடல் இது.
முன்பு இலங்கை வானொலியில் 'வானொலி மாமா' சிறுவர் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக இடம் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

பாயாசம் வைக்க வேண்டும்
பானையிலோ அரிசி இல்லை

முற்றிய நெற்கதிரே

கொஞ்சம் அரிசி தருவீரோ

...............
இறுதியில் உழவனிடம் கேட்பதாக வருகிறது.
உழவன் சரி என்பதும்
நீர் வரப்பிடமும்,
வரப்பு வயலிடமும்,
வயல் கதிரிடமும், சொல்ல
கதிர் ஈக்கு நெல்லைக் கொடுக்கும்.

ஈ அதைக் குத்தி எடுத்து பாயாசம் சமைத்துச் சாப்பிட்டது. என ஈயுடன் நாமும் மிகவும் சிரித்து, ருசித்து, சுவைத்து சாப்பிட்டு மகிழ்ந்த நாட்கள் உங்கள் அனைவருக்கும் ஞாபகத்தில் வருகிறது அல்லவா?

நாட்டார் பாடல்களில்

நாட்டுப்புறங்களில் பாடல்கள் தொன்றுதொட்டு தலைமுறை தலைமுறையாக வாய் மொழிப் பாடல்களாக இருந்து வந்திருக்கின்றன. அவர்கள் வயல்களில் வேலைசெய்யும் போது களைப்புத் தெரியாமல் இருப்பதற்காக பாடல்களைப் பாடியபடியே வேலையில் ஈடுபடுவார்கள்.
இதில் நடனத்துடன் கூடிய கும்மிப்பாடல்களும் வழக்கில் இருந்தன.

உணவால் பிரசித்த ஊர்கள்

சுவையான உணவுக்கு திருநெல்வேலி அல்வாவும், மல்லிப்பூ மதுரை இட்லியும், கேரள மீன் குழம்பும், பண்டுறுட்டிப் பலாப்பழமும் பிரசித்தம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கோழிப்பிரியாணி என்றால் கோழிக் காலை எடுத்து கடித்துக் கடித்துத் தின்று, எலும்பைத் துப்பித் சுவைத்து ரசித்துத் தின்றால்தான் அதன் ருசி நாக்கில் தெரியும். பல்லுக்கும் பலம் ஊட்டும்.

சினிமாவில்


மீன் கறியாக இருந்தால், முதல் மரியாதையில் சிவாஜி சாப்பிடும் அழகே தனிதான். ருசித்து சுவையில் கண்ணும் நாக்கும் பிரண்டு எழ மீன் முள்ளு தனியாகக் கழன்று வர பார்த்தாலே எமக்கும் சாப்பிடத் தோன்றும் அன்றோ?

மலைபோலே காப்பித் டம்ளர்களை அடுக்கியபடி, நளினமாக நெளிந்து ஆடி சர்வர் சுந்தரத்தில் நாகேஸ் எடுத்து வரும் அழகே தனிதான்.



அப்பளத்தை நொறுக்கிப் போட்டு உண்ணும் தேங்காய் பருப்பு சாதமும், பால் பாயாசமும் சுவையில் சொல்லி மாளாது. இலையை வழித்து நக்கி நக்கி வாய் சப்புக்கொட்ட உண்டால் அதன் சுவையே தனிதான்.

இவற்றையெல்லாம் சினிமாப் பாடல்களிலும் கேட்கும் போது சுவைதான்.
சமையல் அறையிலும் காதிற்கு இனிய உணவுப் பாடல்களைக் கேட்டபடியே சமைப்பதுவும் உணவுக்கு சுவை ஊட்டுமன்றோ.

பழைய பாடலான

'கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்.

அந்த கௌரவப்பிரசாதம்

அதுவே எனக்குப் போதும்

ஹ....ஹஹ்க...ஹஹ்க..ஹஹ்கா...'


ஒரு காலத்தில் இந்தப் பாடல் ஹோட்டல்களில் பாடிக் காதைக் கிளித்தது என்று கூறலாம். திருமண வீடுகளிலும் லவுட்ஸ் ஸ்பீக்கர்களில் அசத்திய பாடலில் இதுவும் ஒன்று.

'புளியோதரையில் சோறு
பொருத்தமாய் சாம்பாரு
பூரிக்கிழங்கு பாரு..
'

என உணவுகள் ஜோடிசேர்ந்து வரும் அழகேதனிதான்.


செம்மீன் மலையாளப்படம் வெளி வந்தபோது இப்பாடல் மைனர்களின் வாய்களில் புகுந்து வந்த பாடல்

'பெண்ணாலே பெண்ணாலே
கறி மீன் கண்ணாளே கண்ணாளே'


தமிழ் பாடலில்

'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நெய் மணக்கும் கத்திக்காய்

நேற்று வைத்த மீன் குழம்பு

என்னை இழுக்குதையா.'

முள்ளும் மலரும் படத்தில் வெளி வந்தது பாடலைக் கேட்கும்போதே பசியும்எடுத்துவிடும்.

மண்வாசனையில்

'அரிசி குத்தும் அக்கா மகளே'

அதைத் தொடர்ந்து


ஆப்பிள் பெண்ணே நீ யாரோ.

ஐஸ்கிறீம் சிலையே நீ யாரோ....';


இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்ட பாடல்.

இதே போன்று

'வெள்ளரிக்கா
பிஞ்சு வெள்ளரிக்கா'


சக்கை போடு போட்ட பாடல்களில் இளவட்டங்களுக்குப் பிடித்தமான பாடலாக இருந்தது.

லேட்டஸ் பாடல்களில் சிறு குழந்தைகளின் வாயிலும் ஒலித்த படியே டான்ஸ் ஆட்டத்துடன் கலக்குவது
'எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
காப்பி குடிப்போம் கம் வித் மீ'...


உங்கள் சமையல் அறைப் பாடல் அனுபவங்கள் எப்படி?

மாதேவி

25 comments:

  1. நான் சமைக்கும் போது கேட்க விருப்பபடும் பாடல் "உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா "

    ReplyDelete
  2. //
    உங்கள் சமையல் அறைப் பாடல் அனுபவங்கள் எப்படி?//

    பாட்டு சத்தம் மட்டும் தான் கேட்குது

    ReplyDelete
  3. சமையல் பற்றிய அத்தனை பாடல்களும் அருமையாக தொகுத்துள்ளது அழகு... நல்ல கலக்கல்

    ReplyDelete
  4. அகில் பூங்குன்றன் said...

    நான் சமைக்கும் போது கேட்க விருப்பபடும் பாடல் "உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா"

    நன்றி.சமையலுக்கு உப்பும், சர்க்கரையும் அவசியமானதுதான். பாடலும்தேவையானதே.

    ReplyDelete
  5. வாருங்கள் நசரேயன்.பாட்டுச் சத்தத்தின் பின் சமையல் சத்தமும் கேட்கும் பொறுத்திருப்போம்.

    ReplyDelete
  6. வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஆ.ஞானசேகரன்.

    ReplyDelete
  7. நல்ல தொகுப்பு பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  8. வாருங்கள் சந்ரு. நல்ல தொகுப்பு எனக் கூறியுள்ளீர்கள் நன்றி.

    ReplyDelete
  9. சமையலறையில் சங்கீதம் அருமை...

    ReplyDelete
  10. நன்றி அன்புடன் மலிக்கா.

    ReplyDelete
  11. ஆகா, என்னமாய் ரசித்துப் பதிந்திருக்கிறீர்கள்! அருமை மாதேவி!

    ReplyDelete
  12. வாழ்த்துகள்

    ReplyDelete
  13. ரொம்ப நல்லா இருக்கு உங்கள் வலைப்பூ.

    ReplyDelete
  14. //உங்கள் சமையல் அறைப் பாடல் அனுபவங்கள் எப்படி?//

    கேட்டு சொல்றேன் :-)

    ReplyDelete
  15. வாருங்கள் கவிநயா. உங்கள் ரசனைக்கும் நன்றி.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கு நன்றி தியாவின் பேனா.

    ReplyDelete
  17. Several tips said...

    "ரொம்ப நல்லா இருக்கு உங்கள் வலைப்பூ." மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  18. வருகைக்கு நன்றி உழவன்.

    கேட்டு சொல்லுங்க.

    ReplyDelete
  19. // இலையை வழித்து நக்கி நக்கி வாய் சப்புக்கொட்ட உண்டால் அதன் சுவையே தனிதான். //
    உண்மை. நான் இரசம் மற்றும் ஊறுகாய் கலர்ந்த மோர் சாதத்தை வழித்து உண்பது பிடிக்கும்.

    ReplyDelete
  20. பெரிய கச்சேரியே செய்திருக்கீங்க சமையலறையில் :))

    ReplyDelete
  21. நன்றி பித்தனின் வாக்கு.

    "ஊறுகாய் கலர்ந்த மோர் சாதத்தை வழித்து உண்பது பிடிக்கும்." ஆமாம் இதன் சுவையே தனிதான்.

    ReplyDelete
  22. கச்சேரியுடன் சமையல் இருந்தால்த்தான் சாப்பாடும் சுவைக்கும்.நன்றி முத்துலெட்சுமி.

    ReplyDelete
  23. சமையல் சம்பந்தமான அனைத்து பாடல்களும் அருமை மாதேவி,

    கலக்கல் மாதேவி. நீங்கள் படைத்திருக்கும் விருந்தும் சூப்பர்

    ReplyDelete
  24. நித்தம் நித்தம் நெல்லிச்சோறு நெய் மணக்கும் கத்திரிகாய், நேற்று வச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதையா//

    ReplyDelete
  25. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஜலீலா.

    ஆமாம். இது அனைவரையும் இழுத்துக் கொள்ளும்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்