Saturday, June 1, 2013

இனிக்கவும் காரமாகவும் உழுந்து மா ஆலங்காய் பிட்டு

இது சிறிய வகைத் தாவரம். இதிலிருந்து கிடைக்கும் பருப்பை உழுத்தம் பருப்பு என அழைக்கின்றோம்.

Thanks :- www.indiamart.com
Fabaceae குடும்பத்தைச் சார்ந்த uradbean,bignanungo.  black gram எனவும் அழைக்கப்படுகின்றது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட தாவர இனம். தெற்காசிய மக்கள் விரும்பி உண்ணும் உணவாகவும் இருக்கிறது. இப்பொழுதும் இங்குதான் பெரும்பான்மையாக பயிரிடப்படுகிறது. பயிர் விளைந்து 80 - 90 நாட்களில் அறுவடைக்கு வரும். மழை வெள்ளம் கூடினால் பயிர் செய்கை அழிந்துவிடும்.

இலங்கையில் பரவலாக வரண்ட பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. அனுராதபுரம், பொலனறுவ, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி, புத்தளம் போன்ற பல மாவட்டங்களிலும் உழுந்து பயிரிடப்படுகிறது.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டது.

சிங்களத்தில் முங் அற்ர, மலையாளத்தில் Uzhuna  தெலுங்கில் minumulu கன்னடம் uddinabele நேபாளி uridemass. என்று அழைக்கிறார்கள்.


சங்ககாலத்தில் உழுத்தம் பருப்பு, உழுத்தம் சோறு, பொங்கல் என்பன திருமண விருந்து, மங்கள நிகழ்ச்சிகளில் பரிமாறப்பட்டன என்று அகநானூறு (86-1-2) பாடலில் சொல்லப்பட்டிருக்கின்றது. இலக்கியங்களில் உழுந்து புகழப்பட்டிருக்கின்றது.

தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப் பட்டதை சங்க இலக்கிய சான்றுகள் கூறுகின்றன 'உழுந்தின் அகல இலை வீசி' என நற்றிணைப் பாடலில் வருகின்றது.


தென்னிந்திய, இலங்கை உணவுகளில் பெரும் பங்கு எடுத்துக் கொள்கிறது.

இட்லி, தோசை, வடை, ஊத்தப்பம்,குழிப்பணியாரம், உழுந்துக் கறி, உழுத்தஞ் சோறு, களி, ஆடிக்கூழ், உழுத்தம் பச்சடி, பப்படம், முறுக்கு, தட்டை, என முக்கிய பங்கு வகிக்கிறது.


பஞ்சாப் சமையலில் மிகவும் பிரசித்தமானது.

ஓரிசாவில் சக்குலிப் பித்தா எனப்படும் அரிசிமா, உழுந்து, நெய், வெல்லம், தேங்காய் கலந்து தயாரிக்கப்படும் பாரம்பரியமான உணவு பிரசித்தமானது.

உழுத்தம் பருப்பின் சக்கை ஆடு, மாடு, குதிரைகளுக்கு நல்ல தீவினமாகவும் இருந்து வருகிறது.

உழுந்துடன் நல்லெண்ணெய் சேர்த்து செய்த களி உணவு பூப்படைந்த பெண்களுக்கும் , கர்ப்பிணிப் பெண்களுக்கும் சிறந்த உணவாகக் கொள்ளப்படுகிறது. இது கர்ப்பப்பை இடுப்பு எலும்புகள் பலமடைய உதவும்.

சத்து மா உருண்டைகளில் உழுந்து மாவும் கலக்கப்படுகிறது. மனித உடலுக்கு சத்துக்கள் தரக் கூடிய புரதம், மினரல்ஸ், விற்றமின்கள் அதிகம் அடங்கியுள்ளது.

இன்று அரிசிமாவும் உழுந்துமாவும் கலந்து செய்யப்படும் மாலைஉணவு ஆலங்காய் பிட்டு. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு.

ஏன் பெரியவர்களுக்கும் கூடத்தான்.        
         

அரிசியில் 

கலோரி 365 புரொட்டின் 8.6, நார்ப்பொருள் 3.5, விற்மின் B1, B2, B6 மற்றும் மினரல்ஸ் அடங்கி இருக்கின்றது.

100 கிறாம் உழுந்தில்......


நீரிழிவு நோயாளர்கள் வெல்லம் தவிர்த்து செய்து எடுத்துக்கொள்ளுங்கள். காரத்தாளிப்பு செய்து அதற்குள் போட்டு மெதுவாக ஒரு பிரட்டுப் பிரட்டி எடுத்துக்கொண்டு சுவைத்திடுங்கள்.

தேவையானவை


 • வறுத்த அரிசிமா – 1 கப்
 • வறுத்த உழுந்துமா- ½ கப்
 • வெல்லம் அல்லது சீனி – ¼ கப்
 • தேங்காய் பால் - ½ கப்
 • உப்பு தேவையான அளவு
விரும்பினால்  
 • தேங்காய் துருவல் - 4 டேபல் ஸ்பூன்
 • வெட்டிய முந்திரி, பிளம்ஸ் - 10 -15
 • ஏலப்பொடி சிறிதளவு.


செய்முறை

தேங்காய் பால் உப்பு கலந்து கொதிக்கவிடுங்கள்.

ஏனைய பொருட்களை கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பால் கொதித்துவர மாவில் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறுங்கள்  மா உறுண்டு வர வேண்டும்.

பால் போதாமல் இருந்தால் தண்ணீர் தெளித்து உருட்டிப் பிடியுங்கள்.சிறு சிறு உருண்டைகளாக விரல்களால் உருட்டி வையுங்கள்.

ஸ் ரீமர் பாத்திரத்தில் நீரை கொதிக்க வையுங்கள் நன்கு கொதித்து ஆவி வந்த பின் உருண்டைகளை மெதுவாக பரவலாக கொட்டி 10 -15 நிமிடங்கள் அவியவைத்து எடுங்கள்.

அவியும் பொழுதே வாசம் மூக்கை துளைத்து பசிக்க வைக்கும்.அவிந்ததும் இறக்கி சிறுகோப்பைகளில் போட்டு சற்று ஆற வைத்து சுவைத்திடுங்கள்.

படிக்க கையில் ஒரு புத்தகமும் இருந்தால் எத்தனை கோப்பையும் உள்ளே போகும்.

0.0.0.0.0
.

40 comments:

 1. அழகான படங்கள். அற்புதமான தகவல்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  மிகவும் ருசியான பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. ஏனுங்க எனக்கு ஒரு சந்தேகம். உழுந்தா இல்ல உளுந்தா?

  ReplyDelete
 3. அருமையான சுவையான சத்தான உருண்டை ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. மலையாளம் தெழுங்கு கன்னடம் என எல்லாப் பாஷையும்...
  சூப்பர்
  எனக்குக் கூட உழுந்து வடை பிடிக்கும்

  ReplyDelete
 5. ஆலங்காய் பிட்டு மிகவும் நன்றாக இருக்கே!
  செய்து பார்த்து விடுகிறேன் மாதேவி.
  உளுந்தம் களி, உளுந்தம் சாதம் எல்லாம் செய்வோம் இது செய்தது இல்லை.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. சிறப்பானதோர் உணவு போலத் தான் இருக்கிறது மாதேவி.

  செய்து பார்த்துவிட வேண்டியது தான்!

  நல்ல தகவல்கள்.

  ReplyDelete
 7. சிறப்பான தகவல்கள் மற்றும் படங்கள்.

  படிக்கும்போதே சுவை இருக்கிறது. செய்து பார்த்து விட வேண்டியது தான்.

  ReplyDelete

 8. பூவையின் எண்ணங்கள் பதிவுக்கு வந்து கருத்திட்டதற்கு நன்றி. அவ்வப்போது எழுதுகிறேன். வருகை புரிந்து ஆதரவு வேண்டுகிறேன். சமையல் பதிவுகளில் நான் ஒரு கற்றுக்குட்டி.

  ReplyDelete
 9. நல்ல தொரு பலகாரம் செய்ய கற்று குடுத்ஹ்டு இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 10. ருசியான சத்தான உருண்டை... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. வாருங்கள் வை.கோபாலகிருஷ்ணன்.
  உடன் வந்து ரசித்து சுவைத்ததற்கு மிக்கநன்றி.

  ReplyDelete
 12. முதல் வருகைக்கு மகிழ்ச்சி monica.

  உளுந்து அல்லது உழுந்து என்றும் அழைக்கலாம் என்கின்றது விக்கிப்பீடியா.
  நான் உழுந்து என எழுதியுள்ளேன் :)

  வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 13. நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 14. மகிழ்கிறேன் கவிதைவீதி செளந்தர்.

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 15. வாருங்கள் ஆத்மா. மகிழ்கின்றேன்.

  ReplyDelete
 16. செய்து சுவைத்துப் பாருங்கள் கோமதி அரசு.

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 17. வாருங்கள் வெங்கட்.

  உங்கள் வீட்டிலேயே சமையல் ராணி இருக்க பயம்ஏன்? சுவைத்திடுங்கள் இனிதாக.

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 18. மிக்க நன்றி பாலசுப்ரமணியம் அவர்கட்கு.

  ReplyDelete
 19. ரசித்து ருசித்ததற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

  ReplyDelete
 20. ஆலங்காய் பிட்டு பெயரே இப்பதான் கேள்விபடுகிறேன்,படங்களை பார்க்கும்போது சுவைக்கும் ஆவல் ஏற்படுகிறது..விளக்கங்களுக்கு மிக்க நன்றி மாதேவி!!

  ReplyDelete
 21. அருமையான தகவல்களுடன் சுவையான செய்முறை..ஆகா!! நன்றி மாதேவி!

  ReplyDelete
 22. அருஞ்சுவையோடு தமிழ் சுவையும் நன்று!!

  ReplyDelete
 23. அருமையான குறிப்புடன் விளக்கம் மிக அருமை..வித்தியாசமான குறிப்பு மாதேவி..

  ReplyDelete
 24. ஆலங்காய் பிட்டு - இதுவரை கேள்விப்படாத பலகாரம். உளுந்து களிதான் இதுவரை செய்திருக்கிறேன். உளுந்து குறித்த அனைத்துத் தகவல்களையும் பதிவிட்டு அசத்துகிறீர்கள். நன்றி மாதேவி.

  ReplyDelete
 25. வருகைக்கு நன்றி மேனகா.
  செய்து சுவைத்துப் பாருங்கள்.

  ReplyDelete
 26. ரசித்து ஊட்டம் இட்ட உங்களுக்கு மிக்கநன்றி கலாகுமரன்.

  ReplyDelete
 27. கருத்துக்கு மிக்க நன்றி ஆசியா.

  ReplyDelete
 28. மிகவும் மகிழ்கின்றேன் கீதமஞ்சரி.

  நன்றி.

  ReplyDelete

 29. வணக்கம்!

  மாதேவி பக்கங்கள் மணக்கும் வண்ண
  மல்கோவா என்றுரைப்பேன்! மேலும் மேலும்
  தாதேவி என்னுன்னை உள்ளம் கெஞ்சும்!
  தருகின்ற அத்தனையும் அமுதை விஞ்சம்!
  வாதேவி வலையுலகப் பசியைப் போக்க!
  வரலுாற்று மேகலையாய்ப் புகழைச் சோ்க்க!
  பா..தேவி தாசன்நான் உன்னை வாழ்த்திப்
  பாடுகிறேன் பல்லாண்டு! வளா்க நன்றே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 30. வாருங்கள் கவிஞர் கி. பாரதிதாசன்.
  கவிஞர் அல்லவா அழகிய கவி படைத்து விட்டீர்கள். எனது அளவுக்கு மீறிய புகழ்தான் ஏற்றுக்கொள்கிறேன்.

  வாழ்த்துக்கு மிக்கநன்றி.

  ReplyDelete
 31. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_20.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 32. அறியத்தந்ததற்கு மிக்கநன்றி தனபாலன்.
  சென்றுபார்கிறேன்.

  ReplyDelete
 33. ஐயோ கடவுளே இது எப்ப போட்ட பதிவு... எனக்கு ஏன் டாஷ்போட்டில் காட்டவில்லை...:(
  தற்சமயம் இங்கு பார்க்கவந்து கண்டேன். வரவில்லை என நினைத்தீர்களோ.. வருந்துகிறேன்...

  ஆலங்காய் பிட்டு பெயர்தான் அறிந்திருக்கிறேன். பார்த்ததுமில்லை செய்ததுமில்லை.
  என் அம்மம்மா பருத்தித்துறையில்தான் இருந்தவ. இப்ப மேலே போய் இருக்கிறா...:(
  அவகூட ஒருக்காலும் செய்துதரவில்லை.
  இப்ப இங்கை பார்த்திட்டன். செய்து பார்க்கிறேன். படம் பார்க்கவே ஆசையைத் தூண்டுகிறதே...
  நல்ல குறிப்பு தோழி! வாழ்த்துக்கள்!ஐயோ கடவுளே இது எப்ப போட்ட பதிவு... எனக்கு ஏன் டாஷ்போட்டில் காட்டவில்லை...:(
  தற்சமயம் இங்கு பார்க்கவந்து கண்டேன். வரவில்லை என நினைத்தீர்களோ.. வருந்துகிறேன்...

  ஆலங்காய் பிட்டு பெயர்தான் அறிந்திருக்கிறேன். பார்த்ததுமில்லை செய்ததுமில்லை.
  என் அம்மம்மா பருத்தித்துறையில்தான் இருந்தவ. இப்ப மேலே போய் இருக்கிறா...:(
  அவகூட ஒருக்காலும் செய்துதரவில்லை.
  இப்ப இங்கை பார்த்திட்டன். செய்து பார்க்கிறேன். படம் பார்க்கவே ஆசையைத் தூண்டுகிறதே...
  நல்ல குறிப்பு தோழி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 34. ஆஹா.. அறியாத தகவல்கள்...

  ReplyDelete
 35. ஆஹா எல்லாமே சிறப்பாய் உள்ளது.

  ReplyDelete
 36. உழுந்து மா பற்றி விளக்கமான பதிவு மிக அருமை
  முன்று சமையலும் அபாரமாக இருக்கு.

  ReplyDelete
 37. வெற்றிலை நாளைத் திருவிழாவுக்காக வாங்கி வரப் போய்ய்வந்து உங்கள் பதிவைப் படிக்கிறேன் மாதேவி.
  உளுந்து பற்றிய குறிப்புகள் அருமை. படங்கள் பசியைத் தூண்டுகின்றன.

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்