Sunday, October 5, 2008

ரம்பை, சேர



சேர, ரம்பை இவை என்ன?

பெயரைப் போலவே கவர்ச்சியாக இருக்கும் தமிழ் நடிகைகளா?

இல்லை! வாசனை ஊட்டிகள்.

பிரியாணி, இறைச்சி, மீன், பருப்பு, கிழங்கு கறிவகைகள், சொதி, ஆகியவற்றிற்கு வாசனை ஊட்டுவதற்காகப் போடும் இலைவகைகள்.

கறிவேற்பிலை போன்றது. ஆனால் இவற்றைச் சாப்பிட முடியாது. எடுத்து ஓரமாக வைத்துவிட்டு வாசனையூட்டப்பட்ட உணவைத்தான்; சாப்பிட வேண்டும்.

சிங்களச் சமையலில் நிச்சயம் இவை இரண்டும் முக்கிய இடம் பெறும். 4-5 அங்குலத் துண்டுகளாக வெட்டிப் போடுவார்கள்.

இங்கு கறிவேற்பிலையுடன் இவை இரண்டையும் சேர்த்துக் கட்டி விற்பார்கள்.

தனியாக வெட்டப்பட்ட இலையாக இருப்பது ரம்பை. இதனை டவுன் பான்டா இலை, வாச இலை, சோற்று இலை எனவும் சிலர் கூறுவர்.

நுனி வெட்டிய செடிபோல இருப்பது சேர. சேரவின் தமிழ்ப் பெயர் தெரியவில்லை. படத்தைப் பார்த்து நீங்கள் யாராவது தெரிந்தால் கூறுங்கள்.

ரம்பை இலை பற்றி இணையத்தில் வந்த பதிவு இது.

Ramba Illai, is knwon as Rhempey in Singhala and in North India but more commonly known as Daun Pandan or Pandan Leaf in Malaysia,Philipines,Singapore and Indonesia, in Tamil it is known as Thaazhai or Kehtaki, in Hindi and sanskrit also it is known as Ketaki..commercially available throughout india as Ketaki Water, botanical name is Pandanus... its rarely bloomed flower used in Serpent Worhip buy Tamilians known as Thaalampoo.

http://www.spiceindiaonline.com/glossary

-: மாதேவி :-

4 comments:

  1. இங்கு ஒரு முறை யாழ் மிளகாய் பொடி ஒரு டப்பா வாங்கி வந்தபோது நானும் பார்த்தேன் இந்த வாசனை பொருள் மிளகாய் பொடியுடன் மிக்ஸாக இருந்ததை நண்பரிடம் கேட்டப்போது வாசனைக்காக வேண்டி அப்படி கலந்திருப்பார்கள் என்று கூறியிருந்தார்! மிளகாய் பொடி காலியாகும் வரை அந்த பொருளினை வெளியே எடுக்கவே இல்லை :))

    ஆனாலும் அதன் பெயர் இன்றுவரைக்கும் தெரியாது :(

    ReplyDelete
  2. ரம்பை= பாண்டன் இலை

    சேர = லெமன் கிராஸ்

    சரியா? இப்படித்தான் புரிஞ்சுக்கிட்டேன்.

    ReplyDelete
  3. நன்றி துளசி கோபால் லெமன் கிராஸ் பற்றி சொல்லியதற்கு. சரி தமிழ்ப் பெயர் என்ன?

    ReplyDelete
  4. நன்றி ஆயில்யன்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்