Wednesday, December 24, 2008

மாங்கோ மில்க் புடிங் வித் கிறீம்


முதல் கொண்டாட்டம் அணிலுக்கு, பின் கிளிக்கு, அதற்கு பின்னர்தான் மனிதர்களுக்கு.

ஆம் மாமரம் காய்த்து பழுக்கத் தொடங்கும் போதுதான்.

வீட்டில் மரம் இல்லாதவர்கள் இப் பழத்தின் சுவையில் மயங்கி, சந்தையில் கொள்ளை விலை கொடுத்தேனும் வாங்கி பையை நிறைத்து பர்சைக் காலியாக்குவர்.

வயிறு அரை குறைதான் நிரம்பும். வாய் மட்டும் சப்புக் கொட்டும்.

மாம்பழம் சேர்ந்த டெசேட் ஒன்று.

பால், இனிப்புடன் பழமும் சேர்வதால் சுவையுடன் பழச் சத்தும் கிடைக்கும். செய்து உண்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்

1. மாம்பழத் துண்டுகள் - 1 கப்

2. பால் - ¼ கப்

3. சீனி – 4 டேபிள் ஸ்பூன்

4. சவ்வரிசி – 50கிறாம்

5. பிரஸ் கிறீம் - 2 டேபிள் ஸ்பூன்

6. ஜெலி சிறிதளவு (விரும்பிய பிளேவர்)

7. செரி -1

8. வனிலா சிறிதளவு

செய்முறை

இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து சவ்வரிசை போட்டு அவிய விடுங்கள்.

அவிந்ததும் சவ்வரிசி வெள்ளை நிறம் மாறி பளபளப்பாக வரும்.

அப்பொழுது சீனி சேர்த்து கிளறுங்கள். சீனி கரைய பால் விடுங்கள்.

கொதித்து வரக் கிளறி மாம்பழத் துண்டுகள் சேர்த்து இறக்கி சற்று ஆற வனிலா சேர்த்து கப்களில் ஊற்றி பிரிஜ்ஜில் வையுங்கள்.

பரிமாறு முன் மேலே பிரஸ் கிறீம், நீளமாக வெட்டிய மாம்பழத் துண்டுகள், ஜெலி போட்டு நடுவில் செரி வைத்து பரிமாறுங்கள்


***** மாதேவி *****

2 comments:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    இதைப் பாருங்கள் :)
    http://blogintamil.blogspot.com/2009/01/2009.html

    தொடருங்கள் !

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரிஷான் ஷெரீப். தொடுப்புகள் பற்றிய தகவல்கள் கொடுத்ததற்கு நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்