Thursday, March 12, 2009

பயன் தரும் பழங்கள் 2


நாங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவு எமது உடலில் போஷாக்கு சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உடல் நலத்திற்கு அவசியமான சத்துள்ள உணவுகளை, அதுவும் அளவோடு உண்டு வருவது நோய்கள் ஏற்படாதவாறு தடுக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சமைத்த உணவை விட வேக வைக்காத பச்சைக் காய்கறிகள், பழவகைகள், கீரைவகைகள் உண்பதால் விற்றமின்கள், கனியங்கள், சேதமுறாது முழுமையாகக் கிடைக்கும். பலவித நோய் தாக்கத்திலிருந்து எமது உடலைப் பேண இது உதவும். ஆனால் பலவகை புரதங்களையும், மாப்பொருட்களையும் சமைப்பதால் மட்டுமே முழுமையாக சீரணமடையச் செய்யலாம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

எமது உடலாரோக்கியத்திற்கு அன்றாடம் மூன்று சர்விங் பழவகைகள் எடுத்துக் கொள்ளல் நன்று என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பழங்கள் கெடாமல் நீண்டகாலம் இருக்கவும், பளபளப்பான கவர்ச்சித் தோற்றத்திற்குமாக வக்ஸ் மற்றும் இராசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள். இவை உடலுக்கு கெடுதியாகும். எனவே நீண்ட காலம் பாதுகாக்கப்பட்ட பழங்களைத் தவிர்த்து, அந்தந்த சீசனில் இலகுவாக கிடைக்கும் பழங்களை உண்டு எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போம்.

திராட்சை

100 கிராம் பழத்தில் கலோரி 32, புரதம் 0.7, விற்றமின் சீ 31 மிகி கிடைக்கும். ஒரு கப் திராட்சை உட்கொண்டால் 1 கிராம் நார்ப்பொருள் கிடைக்கும்.

பதப்படுத்தப்பட்டு வைனாகவும், வற்றலாகவும் கிடைக்கிறது. இதை அலங்காரப் பொருளாகவும், சூப், ரசம், சாதம், உப்புமா, புரியாணி, தயிரச்சாதம், சலட், அவல் என்பவற்றில் கலந்து கொள்ளலாம்.

அப்பிள்

நாளொன்றுக்கு ஒரு அப்பிள் உண்டால் வைத்தியரிடம் போக வேண்டாம் என்பது யாவரும் அறிந்ததே. இருந்தும் இதைவிட பேரீச்சை, விளாம்பழத்தில் கலோரி அதிகம் உண்டு.

பச்சை அப்பிள் சமையலில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

100 கிராம் பழத்தில் கலோரி 58, புரதம் 0.3, விற்றமின் சீ 5மிகி உண்டு. ஒரு நடுத்தர அப்பிளில் 4 கிராம் நாரப்பொருள் உண்டு. விட்டமின் நு 66 ஐரு உண்டு
குருமா, சாதம், சலட், கேக், புடிங், செய்து கொள்ளலாம். கோடியல் பழக்கலவையாகவும் கிடைக்கும்.

பேரீச்சம் பழம்

100 கிராம் பழத்தில் கலோர் 317, புரதம் 2.5, விட்டமின் சீ 3மிகி, உடையது.
இனிப்பு கூடியதாகையால் நீரழிவு நோயாளர்கள் அதிகம் உண்பது தவிர்த்துக் கொள்வது நல்லது. மிகுந்த சத்துக் கூடியது என்பதால் நோன்பு, விரத காலங்களில் விசேடமாக உண்பர்.

கேக், புடிங், லட்டு, சுவீட், கீர், சட்னி, எனப் பலவாறாக மாற்றமடையும்.

கொய்யாப்பழம்

சாதம், குருமா, சலட், செய்து கொள்ளலாம்.
100 கிராம் பழத்தில் கலோரி 51, புரதம் 0.9, விட்டமின் சீ 212 மிகி உண்டு

பஸன் பழம்

100 கிராம் பழத்தில் கலோரி 37, புரதம் 1.2, விட்டமின் சீ 13 மிகி கிடைக்கும்.

கோடியல், ரின்பூட் ஆகவும் கிடைக்கிறது. குழம்பு, ரசம், சலட், குருமா, எனப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாதுளை

100 கிராம் பழத்தில் கலோரி 66, புரதம் 0.6, விட்டமின் சீ 8 மிகி உள்ளது.

மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. இரத்த ஓட்டத்தை விருத்தி செய்யும் எனக் கூறுவர். மாதுளை 'சிரப்' பிரசித்தி பெற்றது.

அவல், தயிர், தயிர்ச்சாதம், ரசம், சலட், டெசேர்ட், சாதம், என்பவற்றில் கலந்து கொள்ளலாம்.

நெல்லி

100 கிராம் பழத்தில் கலோரி 58, புரதம் 0.5, விட்டமின் சீ 600 மிகி கிடைக்கும்.

பனம்பழம்

கிடைக்கும் காலத்தில் நேரடியாக உண்பர்.

பதப்படுத்தப்பட்டு ஜாம், களி, கோடியல், தயாரிக்கப்படுகிறது. வெய்யிலில் உலர்த்தி பனாட்டாக செய்து கொள்ளலாம்.

பனங்காய்ப் பணியாரம் பிரசித்து பெற்றது

100 கிராம் பழத்தில் கலோரி 87, புரதம் 0.7, விட்டமின் சீ 4 மிகி,

விளாம்பழம்

100 கிராம் பழத்தில் கலோரி 134, புரதம் 7.9, விட்டமின் சீ 3 மிகி உள்ளது

சமையலில் சட்னி, பச்சடி, சலட், குருமா, செய்து கொள்ளலாம். ஜாம், கோடியல், ரின்பூட் ஆகவும் கிடைக்கிறது.

தக்காளி

ஒரு நடுத்தர அளவு தக்காளியில் 1.05 புரதம், விட்டமின் சீ 25, மற்றும் 1.35 நார்ப்பொருள் உண்டு. விட்டமின் A 2364 IU, போலேட் 46 mcg உள்ளது.

கரும் சிவப்பு தக்காளியில் புற்றுநோய், இதய நோய்களை தடுக்கும் ஆற்றல் உண்டு என எலியை வைத்து செய்த ஆய்வில் கண்டுபிடித்துளார்கள்.

இது இல்லாத இலங்கை இந்திய சமையலே பெரும்பாலும் இருக்காது. சகல சமையல்களிலும் பெரும் பங்கு வகிக்கும்.

வோட்டர் மெலன் (தர்ப்பூசனி, வத்தகப் பழம்)
நீர்த்தன்மை அதிகம் உள்ளதால் வெப்பத்தைத் தணிக்கும்.

நடுத்தர அளவுத் துண்டில் 1கிராம் புரதம், 1 கிராம் நார்ப்பொருள் உண்டு. விட்டமின் A 1050 IU, போலேட(Folate) 6.6 மைக்கிரோ கிராம் (mcg) உள்ளது.

போலேட் உள்ள பழங்கள் கர்ப்பிணிகளுக்கும், கர்ப்பம் தங்கும் காலத்தில் உள்ள பெண்களுக்கும் மிகவும் நல்லது.

அவகாடோ

ஒரு நடுத்தர அளவுப் பழத்தில்; 4கிராம் புரதம், 10 கிராம் நாரப்பொருள் உண்டு. 124 மைக்கிரோ கிராம் போலேட் உள்ளது.

இவற்றைவிட கிராமங்களில் நாவல்பழம், இலந்தைப்பழம், சீத்தாப் பழம், ஈச்சம் பழம், சீமை மகிளம் பழம், வில்வம் பழம், காடுகளில் இருந்து காரை, சூரை, பாலை ஆகியனவும் கிடைக்கும்.

ஜம்பு, வெரளு, ரம்புட்டான், மங்குஸ்தான், உக்கிரஸ, பெலிங், பியர்ஸ் போன்ற பல வகைப் பழங்கள் தென்னிலங்கையில் கிடைக்கும்.

மேலைத்தேச பழவகைகள் ஸ்டோபெரி, ரோஸ்பெரி, பிளம்ஸ், ஜெயன்ட் புருட், அப்பரிகொட் போன்ற பலவும் கிடைக்கும்.

---------மாதேவி

8 comments:

 1. மிகவும் பயனுள்ள பதிவு சிஸ்டர்..நன்றி

  ReplyDelete
 2. நல்ல பதிவு தலைவி ஆப்பிள் என்ன விலை என்று தெரியுமா? ஏழை குடும்பம் என்ன செய்யும்

  ReplyDelete
 3. "நாளொன்றுக்கு ஒரு அப்பிள் உண்டால் வைத்தியரிடம் போக வேண்டாம்" என்பது ஆங்கிலேயர் சொன்னது.
  நாம் எமது நாட்டில் கிடைக்கும் பழங்களை அதுவும் சீஸனில் மலிவாகக் கிடைக்கும்போது உண்டு போதிய பலன் பெறலாமே.

  ReplyDelete
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தூயா.

  ReplyDelete
 5. நல்ல தகவல் சுரங்கம்!

  ReplyDelete
 6. நன்றி சந்தனமுல்லை.

  ReplyDelete
 7. ஆப்பிள் அப்பிளானதேன்?
  விழாம்பழம் சிறுவயதில் உண்டு களித்த ஞாபகம்...
  நல்லதொரு பதிவு நன்றி.

  ReplyDelete
 8. நன்றி நிலாரசிகன். ஆப்பிள் இலங்கையில் அப்பிள் என்றுதான் பேசுவோம்.
  முள்ளுக் குத்துவதையும் பொருட்படு்த்தாமல் விளாமரத்தின் கீழ் தேடுவதெல்லாம் ஞாபகம் வருகிறது

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்