Wednesday, April 14, 2010

பழச்சாறுப் பொங்கல்


அனைவருக்கும் சித்திரைப் புது வருட வாழ்த்துக்கள்.

தை முதல் நாள், சித்திரை முதல் நாளில் சூரிய பகவானை நினைத்து பொங்கல் செய்து படைத்து வணங்குவது எமது பாரம்பரிய வழக்கமாகும்.

ஒளியைத் தந்து பயிரை வளர வைத்து உணவை அளிக்கும் சூரியனை முன்னோர் கடவுளாகக் கண்டே வழிபட்டனர்.

இம் முறையில் வயலில் விளைந்த அரிசி எடுத்து சுவைக்கு பால், வெல்லம், பருப்பு இட்டு சமைத்துப் படைத்து வருடம் பூராவும் இனிதே இருக்க வேண்டி உண்பர்.

அரிசி

ஆசிய நாட்டவரது பிரதான உணவு அரிசியே. வெப்ப வலய நாடுகளிலே பெரும்பாலும் நெல் விளைவிக்கப்படுகிறது.

ஆசியாவுக்கு அப்பால் மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, வெஸ்ட் இன்டீஸ் ஆகிய பகுதிகளிலும் பிரதான உணவாக இருக்கிறது.

உலகிலேயே சோளத்திற்கு அடுத்ததாக அதிகம் பயிரிடப்படும் உணவுப் பயிர் இதுவாகும்.

ஆரம்பத்தில் உணவுக்காக தினை, சாமை, குரக்கன், வரகு, சோளம், பயிரப்பட்டு வந்தது. பின் நெல் கூடுதலாகப் பயிரப்பட்டது.

நாகரீகங்கள் வளர்ச்சியடைய காலத்திற்குக் காலம் உண்ணும் உணவுகளில் புதிய புதிய மாற்றங்கள் உரு மாறுகின்றன.

இப்பொழுது இளைய தலைமுறையினர் அரிசி உணவுப் பண்டங்களை பெரும்பாலும் விரும்பி உண்பதில்லை. நாவுக்குச் சுவையாக பட்டர் சீஸ், சோஸ் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட பிட்ஸா, பர்ஹர், பேஸ்டா, நூடில்ஸ் உணவை விரும்பி உண்கின்றார்கள்.

அரிசியில் 100 கிறாம் சிவப்பு பச்சையரிசியில்
காபோஹைரேட் 78.2
புரோட்டின் 6.8.
நார்ப்பொருள் 1.3
கொழுப்பு 0.5,
விட்டமின் பீ 1– 0.07,
பீ 6- 1.64,
இருக்கிறது.

இதைத் தவிர பயறில் நிறைந்தளவு புரதம் 24, கொழுப்பு 1.5, காபோஹைரேட் 56.7, விற்றடமின் ஏ, கல்சியம், போலிக்அசிட் போன்றவையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலில் நாகதம்பிரானுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் பொங்கல் வைத்து படைத்து வணங்குவது ஆதி தொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.

ஒரு முறை பொங்கலிடும் போது எங்கள் அப்பா இருவகையான பொங்கல் செய்து படைப்போம் எனக் கூறினார்.

வெல்லப் பொங்கல் ஒன்றும்,
பழச்சாறுகள்,கற்கண்டு,வெல்லம் சேர்த்த பொங்கல்
என மற்றொன்றும் செய்திருந்தோம்.

வெல்லப் பொங்கலைவிட பழச்சாறுப் பொங்கல் மிகுந்த சுவையுடன் இருந்தது. அந்த முறையில் தயாரித்த பொங்கலை இங்கு தருகிறேன்.

தேவையான பொருட்கள்


தீட்டிய சிவப்புப் பச்சை அரிசி – 1 கப்
வறுத்து உடைத்த பாசிப் பயறு – ¼ கப்
கற்கண்டு – ¼ கப்
தூள் வெல்லம் - ¼ கப்
கரும்புச் சாறு - ½ கப்
முந்திரிப் பழச்சாறு – ¼ கப்
தோடம்பழச் சாறு – ¼ கப்
மாதுளம் பழச் சாறு – ¼ கப்
தேன் - 4 டேபிள் ஸ்பூன்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
கஜீ – 50 கிறாம்
பிளம்ஸ் 50 கிறாம்.
ஏலப் பவுடர் - ¼ ரீ ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 கப்
தலைவாழையிலை – 1
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
மாம்பழம் - 1
வாழைப்பழம் - 1

செய்முறை

மூன்று கப் தண்ணீரைக் கொதிக்க விடுங்கள்.

அரிசி பருப்பைக் கழுவி நீரில் இட்டு அவியவிடுங்கள்.

தேங்காய்ப் பாலில் வெல்லத்தைக் கரைத்து வடித்து வையுங்கள்.

அரிசி பருப்பு நன்றாய் வெந்த பின் கஜீ, பிளம்ஸ், கற்கண்டு, ஏலப் பவுடர் சேர்த்துக் கிளறுங்கள்.

வெல்லம் கரைத்த தேங்காய்ப் பாலை விட்டு அடுப்பைக் குறைத்து வைத்து இடையிடையே கிளறுங்கள். பழச் சாறுகள் சேருங்கள்.

பொங்கல் இறுகிவர தேன், நெய் விட்டு கிளறி இறக்குங்கள்.

சுவையான பழச்சாறுப் பொங்கல் நெய் மணத்துடன் மூக்கினுள் நுளையும்.

தலைவாழை இலை கிழியாமல் இருப்பதற்கு சுடுநீரில் கழுவி எடுங்கள்.


இலையை எடுத்து ஒரு பிளேட்டில் வையுங்கள். பொங்கலைக் கரண்டியால் எடுத்து இலையில் வட்டமாகப் பரவி விடுங்கள்.

நடுவே தயிர் வைத்து வாழைப்பழம் மாம்பழத் துண்டுகளுடன் பரிமாறுங்கள்.

மாதேவி.

31 comments:

 1. இனிய புத்தாண்டுக்கு ஏற்ற ஒரு இனிப்பு. நன்றி. உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மதேவி,


  பழச்சாறு பொங்கல் வித்தியாசமாக இருக்கு.

  இதில் வாழை ஆப்பிலும் அரைத்து ஊற்றி இருக்கீங்கலா?

  ReplyDelete
 3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். super.

  ReplyDelete
 5. மிக அருமை மாதேவி. முதல் முறை இது போல பொங்கலைக் கேள்விப் படுகின்றேன். நல்ல சுவையாக இருக்கும் போல் உள்ளது.
  உங்களக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

  ReplyDelete
 6. சூப்பர்..படிக்க தித்திப்பாய் இருந்தது!!

  ReplyDelete
 7. சூப்பர்.:))

  --

  //ஆசிய நாட்டவரது பிரதான உணவு அரிசியே//

  இதத் தின்னா டயபெடிக் வரும்னு ஊர பயமுறுத்திக்கிட்டு இருக்காங்க..:( என்னத்தச்சொல்ல..??

  ReplyDelete
 8. அருமையாக இருக்கு...

  ReplyDelete
 9. சக வலைபதிவர்களுக்கும் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் எமது இணையதளம் சார்பாக இனிய புது வருட வாழ்த்துக்கள் MULLAIMUKAAM.BLOGSPOT.COM

  ReplyDelete
 10. சக வலைபதிவர்களுக்கும் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் எமது இணையதளம் சார்பாக இனிய புது வருட வாழ்த்துக்கள் MULLAIMUKAAM.BLOGSPOT.COM

  ReplyDelete
 11. ஆஹா.. "பழச்சாறுப் பொங்கல்" பேரே பிரமாதம்.

  தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. வெண் பொங்கல் சர்க்கரைப்பொங்கல் தெரியும். பழச்சாறுப்பொங்கல் இதுவரை சாப்பிட்டதில்லை.இனிமேல் செய்து பார்ப்போம். நன்றி ..

  ReplyDelete
 13. வாருங்கள்அண்ணாமலையான்.
  வருகைக்கும் தொடர்ந்து அளிக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 14. நன்றி சித்ரா.
  உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியதற்கு மிக்க நன்றி ஜலீலா.

  வாழை ஆப்பிலும் அரைத்து ஊற்றவில்லை.
  விரும்பினால் பொங்கலுடன் சேர்த்துச் சாப்பிட வைத்திருந்தேன்.

  ReplyDelete
 16. வாழ்த்துக்கு நன்றி ஜெய்லானி. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. மிக்க நன்றி prabhadamu.

  ReplyDelete
 18. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பித்தனின் வாக்கு.

  ReplyDelete
 19. ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

  சூப்பர்..படிக்க தித்திப்பாய் இருந்தது!!

  சுவைத்ததற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 20. வித்த்யாசமான பொங்கல்.பறிமாறியவிதமும் அழகு!

  ReplyDelete
 21. I am new to your site. Very nice your blog & recipes too.

  I will be back soon.

  www.vijisvegkitchen.blogspot.com

  ReplyDelete
 22. அருமையான குறிப்பு.

  தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி.

  ReplyDelete
 23. very interesting.. romba suvai.. unka postleye!

  ReplyDelete
 24. பழச்சாற்றில் கேசரி செஞ்சிருக்கேன். பொங்கல், வித்தியாசமா இருக்கு மாதேவி.செஞ்சு பாக்கணும்.

  ReplyDelete
 25. சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் மாதேவி!
  பழச்சாறுப்​பொங்கல் பார்க்கவே வாயில் சாறு ஊறுகிறது எனக்கு :)))

  அரிசியின் ஸ்தலபுராணத்திற்கு நன்றி!!

  ReplyDelete
 26. ஷங்கர்..
  மேனகா சத்யா
  jkR
  துபாய் ராஜா
  ஜெயா.
  உங்கள் அனைவரின் வருகைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 27. ஸாதிகா
  Vijis Kitchen
  அக்பர்
  Matangi Mawley
  அமைதிச்சாரல்
  ஜெகநாதன்

  உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 28. புத்தாண்டு வாழ்த்துக்கள் மாதேவி.

  சித்திரை கனி காண பழங்கள் படம்,பொங்கல் படம் எல்லாம் அருமை.

  புத்தாண்டில் இனிப்பு உண்டு ,இனிமையாக வாழ்த்தினோம்.

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 29. பொங்கல் பார்க்கவே அருமையா இருக்கு. சுவைக்கத் தூண்டுகிறது.

  ReplyDelete
 30. புதுமை. செய்து பார்க்க வேண்டும். வலைச்சரத்தில் பார்த்து இங்கு வந்தேன். நன்றி

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்