Thursday, June 10, 2010
பைவ் ஸ்டார் சலட்
ஒரு முறை பைவ் ஸ்டார் ஹோட்டலில் உணவருந்தும்போது சலட் ஒன்று பரிமாறினார்கள். பிரியாணியுடன் சாப்பிடும்போது மிகுந்த சுவையைத் தந்தது. என்ன முறையில் தயாரித்து இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது.
அதே போன்று தயாரித்துப் பார்த்தால் என்ன எனத் தோன்றியதில் நான் தயாரித்த இலகுவான சலட் முறை இது. ஆனால் சுவையில் பைப் ஸ்டார் தயாரிப்புக்கு குறைந்ததல்ல.
கத்தரிக்காய், அன்னாசி, பச்சைமிளகாய், வெங்காயம், கலந்து செய்து கொண்டேன். கத்தரிக்காய், அன்னாசி அலர்ஜி உள்ளவர்களுக்கு இது ஏற்றதாக இருக்காது.
கத்தரிக்காயை பல வழிகளில் சமைக்கலாம். சட்னி, குழம்பு, பால்கறி, பொரியல், கூட்டு, அச்சாறு, தொக்கு, எண்ணெய்க் கத்தரிக்கறி, கத்தரிக்காய் சாதம் எனத் தொடரும்.
கத்தரி
பிரிஞ்சால் எக் பிளான்ட் (Brinjal, Eggplant) என அழைக்கப்படும். நிறைந்த பொட்டாசியத்தையும் நார்ச் சத்தையும், நிறைந்த நீரையும் கொண்டது. கலோரி குறைந்த உணவாகும்.
100 கிராமில்
காபோஹைட்ரேட் 17.8கி, நார்ப்பொருள் 4.9 கி, கலோரி 24, புரதம் 1.2கி, பொட்டாசியம் 618 மிகி, கல்சியம் 15மி.கி, கொழுப்பு 0.2 மி;கி, விட்டமின் சீ 5 மி.கி, இரும்பு 0.4 மிகி,
Solnaceae குடும்பத்தைச் சேர்ந்தது. தாவரவியல் பெயர் Solanun melangena ஆகும். கத்தரியில் பல இனங்கள் உண்டு.
இதன் பூர்வீகம் எமது பிரதேசங்கள் எனப் பெருமை கொள்ளலாம். இந்தியா, நேபாளம், பங்காள தேசம், பாகிஸ்தான், இலங்கை என்கிறார்கள்.
அன்னாசி
அன்னாசி பழவகைகளில் வாழைப் பழத்திற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது. அனானஸ், பினா எனவும் அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Ananus Comosus.
பூர்வீகம் பிரேஸில் ஆகும். 1943 ல் கொலம்பஸ் Guadaloupe தீவிலிருந்து ஸ்பெயின் தேசத்திற்கு எடுத்துச் சென்றார். அதன் சுவை பிடிபட்டதும் அது உலகெங்கும் பரவிவிட்டது.
100கிராமில்
கலோரி 46, கல்சியம் 18மி.கி, கரோட்டின் 54 மைக்கிறோ கிராம்,
விற்றமின் சீ 40மி.கி, இரும்பு 0.5மி.கி, கொழுப்பு 0.2 கிராம், புரதம் 0.5 கிராம்,
தேவையானவை
கத்தரிக்காய் - 2
அன்னாசித் துண்டுகள் - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தேசிச்சாறு - 1 ரீ ஸ்பூன்
சீனி - ½ ரீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மிளகாய்ப் பொடி - ¼ ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி -¼ ரீ ஸ்பூன்
தனியாப் பொடி - ¼ ரீ ஸ்பூன்
ஓயில் - 2-4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
கத்தரியை 2 அங்குல நீளம், ½ அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.
உப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி கலந்து ஓயிலில் பிறவுன் நிறம் வரும்வரை பொரித்து எடுங்கள்.
ரிசூ பேப்பரில் போட்டு ஓயிலை வடிய விடுங்கள்.
வெங்காயத்தை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.
மிளகாயை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.
தேசிச்சாறில், உப்பு, சீனி கலந்து கரைத்து வையுங்கள். சலட் போலில் பொரித்த கத்தரிக்காய், அன்னாசித் துண்டுகள், வெங்காயம், மிளகாய், கலந்துவிடுங்கள்.
எலுமிச்சம் சாறை ஊற்றி முள்ளுக் கரண்டியால் கலந்து பரிமாறுங்கள்.
அன்னாசி, கத்தரிக்காய் பொரித்த வாசத்துடன் சலட் சுவை கொடுக்கும்.
(பிரியாணி, சாதம், புட்டு, தோசைக்கும் சுவை தரும்.)
மாதேவி
Subscribe to:
Post Comments (Atom)
மாதேவி,
ReplyDeleteசமையல் குறிப்புடன், காய்கறிகளின் தாயகம், தாவரவியல் பெயர், அதன் கலோரி அளவுகள் என அனைத்தையும் கொடுத்து
அருமையான சுவையுடன் சமைக்கும் விதத்தையும் பகிந்திருப்பது சுவையோ சுவை!
புதிசா இருக்கு..கத்திரிகாய் சேர்த்த சலாட்.. ஃபிரை பன்னினால் எனக்கும் பிடிக்கும்
ReplyDeleteஅருமையான சாலட்.
ReplyDeleteகத்தரிக்காய், அன்னாசி, பச்சைமிளகாய், வெங்காயம், கலந்து செய்து கொண்டேன்.
ReplyDelete....... special combination. Interesting!
Thank you for the recipe.
இதன் பூர்வீகம் எமது பிரதேசங்கள் எனப் பெருமை கொள்ளலாம். இந்தியா, நேபாளம், பங்காள தேசம், பாகிஸ்தான், இலங்கை என்கிறார்கள்.
ReplyDeleteஒரு விஷயம் நாம் சிந்தித்து பார்க்க கடமை பட்டுள்ளோம் .நாம் உண்ணும் உணவுகள் எல்லாம் இயற்கை மட்டும் பத படுத்தாத உணவு. நீங்கள் கூறிய ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவுகள். காண்பதற்கு அழகாகவும் ,எல்லோரையும் சுண்டி இழுக்கும் தன்மை உடையது. நம் இயற்கை உணவை பதபடுத்தி நமக்கே திரும்ப கிடைக்கின்றது. செய்முறை விளக்க படங்கள் நன்றாக உள்ளது.
நல்ல தகவல்களுடன்,சாலட்டும் அருமை.புதுசாவும் இருக்கு...
ReplyDeleteமாதேவி,
ReplyDeleteபுதுமையான கத்திரிக்காய் சாலட்.
செய்து விடுகிறேன்.
சலட் நல்லாருக்கு.
ReplyDeleteசமையலுக்கு தேவையான பொருட்கள் என்று மட்டும் குறிப்பிடாமல் அதன் பயன்களையும் தெரிவித்திருப்பது கூடுதல் சுவை...
ReplyDeleteஅருமையான குறிப்ப்புகளுடன் ஒரு அருமையான சாலட்.
ReplyDeleteவாருங்கள் சத்ரியன். சுவைத்ததற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteநன்றி asiya omar.
ReplyDeleteஇளம் தூயவன் வருகைக்கும் உங்கள் சிந்தனைக் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாருங்கள் கோமதிஅரசு.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு மகிழ்ச்சிகொள்கிறேன்.
செய்துபாருங்கள்.மிக்க நன்றி.
அமைதிச்சாரல் said...
ReplyDelete"சலட் நல்லாருக்கு".
மிகவும் மகிழ்கிறேன். நன்றி.
ப்ரியமுடன்...வசந்த் said...
ReplyDelete"...பயன்களையும் தெரிவித்திருப்பது கூடுதல் சுவை.."
நன்றாய் சுவைத்ததற்கு மிக்க நன்றி வசந்த்.
வாருங்கள் ஸாதிகா. அருமை எனக்கூறிவிட்டீர்கள் ரொம்ப மகிழ்ச்சி.
ReplyDeleteஉணவுகளோடு அதன் குறிப்புக்களும் அருமை மாதேவி.
ReplyDeleteநான் சாப்பிட்டிருக்கிறேன்.
என்ன...கத்தரிக்காய் பிடிக்காதே எனக்கு !
காய்கறிகளைப் பற்றி சொல்லிய பின் ரெசிபி. ம், ரொம்பப் பயனுள்ளது. முயற்சிக்கிறேன்.
ReplyDeletecolourful salad...5 staraaa? கலக்குங்க கலக்குங்க...
ReplyDeleteமாதேவி,
ReplyDeleteபைவ் ஸ்டார் சாலாட் அருமை புதுமை!
புது காம்பினேஷன். நல்ல விதையில்லா வெள்ளை பிஞ்சு கத்தரிக்கா இதுக்கு சூப்பராயிருக்கும்.
செய்து விடுகிறேன்.
கத்திரிகாய் ரெம்பப் பிடிக்கும். கத்திரிகாய் சேர்த்த சலாட் படத்தைப் பார்க்கவே வாய் ஊறுகிறது.
ReplyDeleteசலட் புதுமையாக இருக்கிறது....
ReplyDeleteபுதுமையான குறிப்பு. நானும் செய்து பார்க்கிறேன் மாதேவி. நன்றி.
ReplyDeleteசத்ரியன் சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன் ...
ReplyDeleteஹேமா
ReplyDeleteவிக்னேஸ்வரி
அப்பாவிதங்கமணி
நானானி
உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Dr.எம்.கே.முருகானந்தன்
ReplyDeleteஜெயா
ராமலக்ஷ்மி
நட்புடன் ஜமால்
நீங்கள் அனைவரும் எனக்குத் தரும் ஊக்கம் மகிழ்ச்சியைத் தருகிறது.
மிக்க நன்றி.
அட வித்தியாசமாக இருக்கே மாதேவி.
ReplyDeleteவித்தியாசமான சாலட் மாதேவி நல்ல இருக்கு.
ReplyDelete