இதில் பல வகைகள் உள்ளன. கிழங்குகள் மங்கலான பழுப்பு நிறத்தில் இருக்கும். உள்ளேயுள்ள சதைப்பகுதி ஊதா, மஞ்சள், வெள்ளை, சிவப்பு என வெவ்வேறு நிறங்களில் இருக்கும்.
இலங்கையில் ஊதா நிற இராசவள்ளிக் கிழங்கு கிடைக்கிறது.
முளையை நட்ட ஒரு மாதத்தில் முளைத்து வளர ஆரம்பிக்கும். இலைகள் வெற்றிலைபோல இருக்கும் தண்டு அழகிய ஊதா நிறத்தில் இருப்பதால் கொடி அனைவரையும் கவரும்.
கொடிகள் வளர்ந்துவர பட்டமரக் கொப்புகள் அல்லது மூங்கில் தட்டிகள் வைத்துப் படர விடுவார்கள். இரண்டு மாதத்தில் களைகள் பிடுங்கி மண் அணைத்து விட வேண்டும்.
இலைகள் மஞ்சள் நிறம் கலந்து பழுப்பு நிறமாகி உதிரத் தொடங்கும்போது நிலத்தில் வெடிப்புகள் ஏற்படும் அப்போது அறுவடைசெய்து கொள்ளலாம். வீட்டுத்தோட்டங்களில் நாட்டிக் கொள்வார்கள். நவீனத்தில் பூச்சாடிகளில் வளர்த்து பல்கனிகளில் அழகுக்குப் படரவிடுவதுடன் கிழங்கும் பெறலாம்.
விநாயக ஷஷ்டி இருபது நாட்களும் கோவில்களில் விநாயகருக்கு நாள்தோறும் ஒரு நிவேதனம் படைக்கப்படும். அதில் இக்கிழங்கும் ஒருநாள் படைக்கப்படும் அளவு முக்கியத்துவம் பெற்றது. சர்க்கரை வள்ளிக் கிழங்கைப்போல இதில் இனிப்பு அதிகம் கிடையாது.
தாவரவியில் பெயர்
பிலிப்பைன்ஸ் இல்
வியட்னாமில்
ஹவாயில்
இலங்கையில் இராச வள்ளிக் கிழங்கு என்ற பதமே பயன்படுத்தப்படுகிறது.
போசனை
100 கிராமில் 20.6 கலோரி, புரதம் 1.4 கி, கொழுப்பு மிகக் குறைவு 0.2 கி, நார்ப்பொருள் 8.8 கி, நீர்ப்பிடிப்பு 72.4 மி.லி, பொட்டாசியம் 256 மி.கி, மக்னீசியம் 15 மிகி, கல்சியம் 15 மிகி, சோடியம் 9 மிகி, இரும்புச் சத்து 0.8மிகி. Zinc 0.3 மிகி. B3 0.2மிகி, விட்டமின C 15மிகி வரையே இருக்கிறது.
கொலஸ்டரோலைக் குறைக்கும் தன்மையும், Antioxidant அதிகம் இருப்பதும் இதன் நன்மைகளாகும். ஓஸ்டியோபொரோசிஸ் சைத் தடுக்கும் தன்மையும் இருப்பதாக நம்பப்படுகிறது.
எங்கள் பாட்டி இக்கிழங்கை சீவி எடுத்து பொரித்து ஒருவகை சிப்ஸ் செய்து தருவார்.
கிழங்கை அவித்து மசித்து சர்க்கரை தேங்காய்ப் பால் விட்டு கட்டியாக வருவதற்காக உழுந்துமா கலந்து கிளறி ஆறவைத்து துண்டுகளாக வெட்டிப் பரிமாறுவார்கள்.
டெசேர்ட்
தேவையான பொருட்கள்.
கிழங்கு – ½ கிலோ
சீனி – 4 - 5 டேபல் ஸ்பூன்
கட்டித் தேங்காய்ப்பால் - 4 டேபல் ஸ்பூன்
முந்திரி பிளம்ஸ் சிறிதளவு.
உப்பு - சிறிதளவு.
ஆமன்ட் அல்லது வனிலா எசென்ஸ் சில துளிகள்.
செய்முறை –
சொறியும் தன்மையுள்ளது இக்கிழங்கு கைக்கு கிளவுஸ் உபயோகியுங்கள். கிழங்கை தோல் சீவி நன்கு கழுவி எடுங்கள். சிறு சிறு மெல்லிய துண்டுகளாகச் சீவுங்கள்.
பாத்திரத்தில் போட்டு கிழங்கின் ¾ பாகம் தண்ணீர்விட்டு அவித்தெடுங்கள்.
நன்கு அவிந்ததும் மசித்து விடுங்கள். சீனி , உப்பு, முந்திரி, பிளம்ஸ் சேருங்கள்.
தேங்காய்ப் பால் ஊற்றிக் கலக்கி இறக்கிவையுங்கள்.
சற்று ஆறியபின் எசன்ஸ் கலந்து டெசேட் கப்களில் ஊற்றுங்கள். மேலே வறுத்த முந்திரி தூவி நன்கு ஆறவையுங்கள்.
ப்றிச்சில் குளிரவைத்துப் பரிமாறுங்கள். கலர்புல் டெசேட் காணாமல் போய்விடும். மியா மியாப் பூனைகளும் வந்துவிடும்.
மாதேவி
Looks great!!!! Colorful!
ReplyDeleteஎனக்கு மிகவும் விருப்பமானது .........இங்கும் ( கனடாவில்) எடுக்கலாம். நிறம் மிகவும் விருப்பமானது. பதிவுக்கு நன்றி .
ReplyDeleteமாதேவி,
ReplyDeleteபடிக்க சுவையா இருக்கு. இதெல்லாம் யார் சமைச்சு குடுக்கறது?
எங்க ஊர் வட்டாரத்தில் “வெத்தல வள்ளி கிழங்கு” என்போம். கிழங்கின் உள்பகுதி வெண்மையாய் இருக்கும். அறவே இனிப்பிருக்காது.
இது வரை சாப்பிட்டதில்லை அதாவது செய்து தந்ததில்லை ... !! ஹோட்டல்களில் இது கிடைக்குதா..?
ReplyDeleteஊதா நிறத்தில் பார்த்ததில்லை. விவரங்களுக்கும் குறிப்புக்கும் நன்றி மாதேவி. முதல் படத்தை பார்த்தால் நாங்களே மியாவ் மியாவ்தான்:)!
ReplyDeleteவாருங்கள் சித்ரா.
ReplyDeleteஆமாம் நிறம் மட்டுமல்ல சுவையும் மிகவும் நன்றாகவே இருக்கும்.
பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் உணவு.
ReplyDeleteநன்றி நிலாமதி.
வாருங்கள் சத்ரியன்.
ReplyDelete“வெத்தல வள்ளி கிழங்கு” பொருத்தமாய்த்தான் பெயர் வைத்துள்ளார்கள்.
தகவல்களுக்கு நன்றி.
வாருங்கள் ஜெய்லானி.
ReplyDeleteஹோட்டலில் இதெல்லாம் கிடைக்குமா தெரியலை.
வாருங்கள் ராமலக்ஷ்மி.
ReplyDeleteஎங்கள் வீட்டு மியாவ்களுடன் போட்டிபோட வந்துவிட்டீர்களா :)
அருமை.புதுசாக இருக்கு மாதேவி,வயலட் கலர் கிழங்கு பார்த்ததில்லை.
ReplyDeleteகிழங்கின் விபரம் இப்போது தான் முதன் முதலா கேள்வி படுகிறேன்.
ReplyDeleteசுவை நன்றாக இருக்கும் என தெரிகிறது! நன்றி மாதேவி.
நல்ல இருக்கு புதுமையாக இருக்க்கு
ReplyDeleteஅருமையாக இருக்கு..இதுவரை இந்த கிழங்கை பார்த்ததுமில்லை,சமைத்ததும் இல்லை..தகவல்களுக்கு மிக்க நன்றி மாதேவி!!
ReplyDeleteஉங்கள் கை வண்ணம் வாவா என்கிறது :) இந்த வண்ணத்தில் கிழங்கு பார்த்ததில்லை.
ReplyDeleteநன்றி ஆசியா.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதி அரசு.
ReplyDeleteநன்றி ஜலீலா.
ReplyDeleteகிடைத்தால் வாங்கி சமைத்துப் பாருங்க மேனகா.
ReplyDeleteஅப்புறம் சொல்லுங்க அதன் சுவையை.
நீங்களும் மியாவ்வா :)
ReplyDeleteசுவைத்ததற்கு மிக்க நன்றி கவிநயா.
தேடிப்பார்த்து சமைக்கத் தூண்டுகிறது.
ReplyDeleteவெள்ளையாக இருக்கும் இருக்கும் கிழங்கு சமைத்ததும் ஊதா நிறத்தில் மாறுமா ???
வித்தியாசமாக இருக்கு மாதேவி.
ReplyDeleteமாதேவி.......எனக்கு மிகவும் பிடித்த டெசேர்ட்.அதுவும் வெயில் காலத்தில் குளிர்பெட்டிக்குள் வச்சுச் சாப்பிட்டா.....சொல்லவே வேணாம்.இண்டைக்கு ஞாயித்துக்கிழமை.கடையெல்லாம் பூட்டு.நாளைக்கு ராசவள்ளிக்கிழங்கு கஞ்சிதான் !
ReplyDeletenice and good maadevi
ReplyDeleteவாருங்கள் இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteவெள்ளையாக இருப்பது ஊதாநிறத்தில் மாறாது. இக்கிழங்கின் உட்புறம் ஊதாநிறத்திலேயே இருக்கும்.
நெட்லைன் பிரச்சனையால் உடன் பதில் தரமுடியவில்லை.
வருகைக்கு நன்றி.
நன்றி ஸாதிகா.
ReplyDeleteஇராசவள்ளிக் கஞ்சி ஆகா...இதுவும் பிடித்தமானதே.
ReplyDeleteநன்றி ஹேமா.
இதுவரை இதைப்பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை.
ReplyDeleteவாருங்கள் லஷ்மி.
ReplyDeleteஎங்கள் ஊரில் சேனைக்கிழங்குபோல சீசனில் பயிரிடுவார்கள்.