Saturday, September 27, 2008
உருளைக்கிழங்கு வெங்காய வறுவல்
முதல்முதல் சமையல் செய்யப் பழகுவோருக்கும், Bachelors க்கும் உகந்தது.
ருசியாகவும் இலகுவாகவும் தயாரிக்கக் கூடியது என்பதால் அவர்கள் விரும்புவார்கள்.
அவசர யுகத்தில் அனைவருக்கும் ஏற்றது.
செத்தல் மிளகாய் வெட்டுத்தூள் சேர்ப்பதால் அழகையும் கொடுக்கும்.
சாதம், பிரியாணி, புட்டு, சப்பாத்தி, அப்பம், தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்.
1. உருளைக்கிழங்கு – 4
2. வெங்காயம் - 2 (நீளவாட்டில் வெட்டியது)
3. செத்தல் வெட்டுத்தூள் - 2 ரீ ஸ்பூன் (செத்தல் 4-5 யை இடித்தும் எடுக்கலாம்)
4. இஞ்சி பேஸ்ட் - 1 ரீ ஸ்பூன்
5. கடுகு – ¼ ரீ ஸ்பூன்
6. பட்டை(கறுவா) – 1 துண்டு
7. கறிவேற்பிலை சிறிதளவு
8. உப்பு தேவையான அளவு
9. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
விரும்பினால்
1. ரம்பை – 2 துண்டு
2. சேர – 2 துண்டு
3. மல்லித்தழை சிறிதளவு
4. எலும்மிச்சைச் சாறு – 1 ரீ ஸ்பூன்
5. பெருங்காயப் பொடி சிறிதளவு
செய்முறை
1. கிழங்கை அவித்து எடுத்து பெரிய துண்டங்களாக வெட்டி வைக்கவும்.
2. எண்ணெயில் கடுகு பட்டை தாளித்து இஞ்சி பேஸ்ட் வதங்க (விரும்பினால் பெருங்காயப் பொடி சேர்க்கவும்) வெங்காயம் சேர்த்து மெல்லிய பிரவும் நிறம் வரும்வரை வதக்கவும்.
3. வதங்க வெட்டுத்தூள் சேர்த்து பச்சை வாசம்போக கிளறி கறிவேற்பிலை போட்டு வதக்கவும். (விரும்பினால் ரம்பை, சேர, சேர்க்கவும்)
4. கிழங்கைக் கொட்டி உப்புப் போட்டு 2 நிமிடம் கிளறி எடுக்கவும்.
5. விரும்பினால் எலும்மிச்சைச் சாறு விட்டு மல்லித்தழை தூவவும்.
-: மாதேவி :-
Labels:
சமையல்,
சிங்களப் பக்குவம்,
வெஜி கறிவகை
Subscribe to:
Post Comments (Atom)
//முதல்முதல் சமையல் செய்யப் பழகுவோருக்கும், Bachelors க்கும் உகந்தது.//
ReplyDeleteஅப்ப நான் டிறை பண்ண போறன். செய்திட்டு கருத்து சொல்லுறன். ;)
நல்வாழ்த்துக்கள். சுவைத்துவிட்டுக் கூறுங்கள்.
ReplyDeleteஏங்க..... இந்த ரம்ப, சேர இதெல்லாம் என்ன?
ReplyDeleteஒன்னும்புரியலை(-:
//ஏங்க..... இந்த ரம்ப, சேர இதெல்லாம் என்ன?
ReplyDeleteஒன்னும்புரியலை(-:
//
repeat
நன்றி. துளசி கோபால், தெய்வசுகந்தி. ரம்பை, சேர பற்றி இன்று பதிவு செய்துள்ளேன்.
ReplyDeleteரம்பை, சேர என்றால் என்ன ???
ReplyDeleteநன்றி தங்கவேல் மாணிக்கம். ரம்பை, சேர பற்றி வாசனையூட்டிகள் லேபலி்ல் விரிவாகப் பதிவிட்டிருக்கிறேன். பாருங்கள்
ReplyDelete