Thursday, December 24, 2009
உழுந்துமா பிடிக்கொழுக்கட்டை
கொழுக்கட்டைகள் பலவிதம். இது சிறுவர்கள் தாங்களும் கூடவே வந்து பிடித்துத் தயாரிப்பதில் பங்களித்து மகிழக் கூடியது.
இடியப்ப மற்றும் புட்டு மா மிஞ்சினால் அவற்றை வீணாக்காது கொழுக்கட்டையாகப் பிடிப்பதுண்டு.
பலரும் அரிசி மாவில் செய்வர். உள்ளே பருப்பு வைத்துச் செய்வது மற்றொரு வகை.
இது அரிசி மாவுடன் உழுந்து மா கலந்து செய்தது.
போசணையுடையது
சிவப்பு அரிசியில் மிகுந்த (365) கலோரி, மினரல்ஸ், விற்றமின்கள், அடங்கியுள்ளன. புரோட்டின் 8.6 சதவிகிதம், நார்ப்பொருள் 3.5 சதவிகிதம், விற்ற மின் B1, B2, B6, அடங்கியுள்ளன.
சத்துச் செறிவான உழுந்துமாவுடன், பாசிப்பயறும் சேர்த்து செய்து கொண்டால் புரொட்டின் அளவு மேலும் அதிகரிக்கும். ஏனெனில் பாசிப்பயறு, உழுந்து ஆகியவற்றில் 24 சதவிகிதம் புரதம் இருக்கிறது.
உழுந்தில் Vitamin A, B1 and B3, ஆகிய விற்றமின்களும், Potassium, Phosphorus and Calcium ஆகிய மினரல்ஸ் உண்டு. ஓரளவு Sodium இருக்கிறது. இரும்புச் சத்து சிறிதளவு மட்டுமே உண்டு. 100 gm உழுந்திலிருந்து 347 கலோரி கிடைக்கும்.
பாசிப் பயறில் அதே அளவு கலோரி (347) கிடைக்கும். கல்சியம், மக்னீசியம், பொட்டசியம், பொஸ்பரஸ் ஆகிய மினரல்ஜ் உண்டு. நார்ப் பொருள் 16.3 சதவிகிதம் கிடைக்கிறது.
சிற்றுண்டியாக
சினக்சுக்குப் பதில் ஈவினிங் உணவாக இவற்றைத் தயாரித்து குழந்தைகளும் பெரியவர்களும் உண்ணலாம்.
சுவைக்கு தேங்காய்த் துருவல், வெல்லம், வெண்ணெய் கலந்தால் தித்திக்கும்.
நீரிழிவு நோயாளர் வெல்லம் தவிர்த்து உப்பு சேர்த்து செய்தால் இரத்த குளுக்கோஸ் கூடாது இருக்கும்.
தேவையான பொருட்கள்
வறுத்த அரிசிமா – 1 கப்
வறுத்த உழுந்துமா – ½ கப்
வறுத்த பாசிப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - ¼ கப்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - ¼ கப்
உப்பு சிறிதளவு
செய்முறை
பாசிப் பருப்பை 20 நிமிடங்கள் நீரில் ஊறவிடுங்கள்.
மா வகைகளுடன், வெல்லம், தேங்காய்த் துருவல், ஊறிய பருப்பு, வெண்ணெய் கலந்து கிளறுங்கள்.
சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, கையால் கிளறி, சேர்த்து பிடிக்கும் பதத்தில் மாவைத் தயார்படுத்துங்கள்.
மாவைக் கையால் அமத்தி நீள்வடிவத்தில் பிடித்து ஓரத்தில் சங்கு போல விரல்களால் அமத்தி விடுங்கள். இவ்வாறே எல்லாவற்றையும் பிடித்து வைத்துக் கௌ்ளுங்கள்.
ஸ்டீமர் அல்லது இட்லிப் பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி வந்ததும் கொழுக்கட்டைகளை வைத்து 15-20 நிமிடங்கள் அவித்து எடுங்கள்.
வறுத்த உழுந்து மா வாசத்துடன் பருப்பு, தேங்காய்த் துருவல் வெல்லமும் சேர்ந்து மணங் கமழும்.
சத்துச் செறிவான உழுந்துமா பிடிக் கொழுக்கட்டை வயிற்றைக் கிளறும்.
கையும் நகர்ந்து எடுத்து வாயில் தள்ளும். இனிப்பில் சொக்கி அடுக்கடுக்காக வயிற்றுக்குள் தள்ளுவீர்கள்.
மாதேவி
Labels:
இனிப்பு,
சமையல்,
சிற்றுண்டி,
பாரம்பரியம்
Subscribe to:
Post Comments (Atom)
யே ... எப்பா எம்புட்டு நாளாச்சு..? நல்லாருக்கு..
ReplyDeleteஅடுக்கடுக்காக வயிற்றுக்குள் தள்ளுவீர்கள். "
ReplyDeleteமிச்சம் வைக்காம சாப்டா சரி.....
வாருங்கள்.அண்ணாமலையான் said...
ReplyDeleteயே ... எப்பா எம்புட்டு நாளாச்சு..? நல்லாருக்கு...
மாவுகள் தயாரிக்க ரொம்ப நாளாயிற்று.
இனிப்பு என்றால் மிச்சம் இருக்குமா தட்டேகாலிதான். நன்றி.
கொழுக்கட்டை சூப்பர் :-)
ReplyDeleteகொளுக்கட்டை ஏலக்காய் வாசனையோடு.பிள்ளையார் கதை வருதா வந்தாச்சா.அதுதான் கொளுக்கட்டை ஞாபகமா மாதேவி.
ReplyDeleteஉளுந்து மா சேர்ப்பது வித்தியாசமா இருக்கு, பொடித்த மாவா? அரைத்த மாவா? எது சேர்க்கனும்.
ReplyDeleteநாங்களும் அடிக்கடி செய்யும் கொழுக்கட்டை, இது இஸ்லாமிய வருடபிறப்புக்கு கண்டிப்பா செய்வோம். உளுந்து மா சேர்த்ததில்லை
நன்றி சிங்கக்குட்டி.
ReplyDeleteவாருங்கள் ஹேமா. "பிள்ளையார் கதை" நீங்கள் கேட்டுத்தான் ஞாபகமே வருகிறது.முடிந்துவிட்டதாம்.
ReplyDeleteஇது பிள்ளைகளுக்காகச் செய்தது.
மாதேவி நம் இருவருக்கும் மற்றும் பிடி கொழுக்கட்டையில் ஒற்றுமை இல்லை , நம் மூவர். அதான் பா இன்னும் ஒரு சமையல் ராணி மேனகா அவர்களும் அதே சமயத்தில் தான் செய்து இருக்கிறார்கள்.
ReplyDeleteஇது இஸ்லாமிய வருஷப்பருப்பு மாதம், முஹர்ரம் மாதம். இந்த மாதத்தில், பாதம் கீர், வெல்லம் பிடிகொழுக்கட்டை, ஸ்பேர் பாட்ஸ் ரைஸ் பிரியாணி எல்லாம் செய்வோம்.
இந்த கொழு கட்டை ரெசிபி கிழே நேற்று நான் பதிவி போட்டு இருந்தேன், காணேமே மாதேவி.
ReplyDeleteகொழுக்கட்டை மாவில் போட்டுள்ள உளுந்து ஊறவைத்து அரைத்ததா? இல்லை திரித்து சேர்த்ததா? வருத்து திரித்து சேர்க்கனுமா?
நன்றி ஜலீலா. மேனகாவின் சமையல் சென்று பார்க்கிறேன்.
ReplyDeleteவறுத்து நன்றாய் பொடித்த உழுந்துமா சேர்க்க வேண்டும் ஜலீலா.
ReplyDeleteஒன்னு செய்யுங்க, அந்தத் தட்டேட எனக்கு பார்சல் அனுப்பி விடுங்கள். நல்லாயிருகின்றது. நன்றி.
ReplyDeleteஇனிப்பு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவல்லவா. நன்றி பித்தனின் வாக்கு.
ReplyDelete