Saturday, April 24, 2010

கோடை காலத்துக்கு மணத்தக்காளி சட்னி


“பச்சை நிறமே…பச்சை நிறமே.. இச்சை கொடுக்கும் பச்சை நிறமே” மனக்கண்ணில் மாதவனும் ஷாலினியும் பறப்பது… தெரிகிறதே.

இலைகள்

நாளாந்தம் உண்ணும் அரிசி, கோதுமை மாப்பொருள் உணவுடன் எமது உடலுக்குத் தேவையான விட்டமின்களையும், கனிப்பொருள்களையும் பெறுவதற்கு இலை வகைகள், காய்கறிகள், பழவகைகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்து உண்ண வேணடும்.

இரும்பு கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம், அயடின் போன்ற கனியங்கள் முக்கியமானவை. இலைவகைகளில் உடல் வளர்ச்சிக்கும் தேவையான விற்றமின் ஏ, பீ சுண்ணாம்பு இரும்புச் சத்துக்கள் இருக்கின்றன என்பது அறிந்ததுதான்.

அரிசி உணவோடு கீரை

அரிசி உணவில் விற்றமின் ஏ குறைவாக இருப்பதால் நாங்கள் நாளாந்தம் உண்ணும் உணவில் 50கிராம் ஆவது கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இலகுவாக மலிவாகக் கிடைக்கும் கீரைகளை வாங்கிச் சமைத்துக் கொள்ளலாம்.

மணத்தக்காளி கீரை


கீரை வகையில் மணத்தக்காளி கீரையும் சிறந்தது. இதன் பொட்டானிக்கல் பெயர் Solnum nigrum ஆகும்.

மணத்தக்காளி என்பது இங்கு மருவி மணித்தக்காளி ஆயிற்று.
மணிமணி போல் பழங்கள் இருப்பதால் அவ்வாறு வந்ததோ?

இதன் இலை, காய், பழம் என மூன்றையுமே சமையலில் பயன்படுத்தலாம்.
சிறிய வெள்ளைப் பூக்களுடன் மலரும்.
இதன் காய் மிகவும் சிறிதாக கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கும். காய் முற்றிவர கத்தரிப்பூ நிறமாக மாற்றமடையும்.


இன்னொரு இன வகையின் பழம் இளம் சிகப்பு நிறமாக இருக்கும். இப் பழங்கள் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். நேரடியாகவே உண்ணலாம்.

சிறிய வயதில் விரும்பி உண்டதில்லையா?
சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான பழம் இது.



மணத்தக்காளி இலையில் சட்னி, பச்சடி, கூட்டு, பொரியல், ரசம், சொதி செய்யலாம். காய், பழத்தில் புளிக் குழம்பு செய்து கொள்ளலாம்.

வெப்ப காலத்தில் உடல் வெப்பத்தைத் தணிக்க பெரும்பாலும் சமையல் செய்து உண்பார்கள்.

கோடைச் சூட்டிற்கு நாவில் தோன்றும் கொப்பளங்களைப் போக்க இதன் இலையை சிறிது தண்ணீர் விட்டு அவித்துக் குடிப்பது மிகுந்த பலனைத் தரும். சம்பல் செய்து சாப்பிடுவதும் சிறந்தது.

வீட்டு வைத்தியத்தில்

கிராமங்களில் இதன் நன்மையை அறிந்து அதிகம் பயன்படுத்துவர்.

குடல் புண்ணுக்கும் சுகம் தரும். மூல நோய்க்கும் சிறந்தது என்பர்.

கண் பார்வைக்கும் பல் உறுதிக்கும் வேண்டிய விற்றமின் ஏ, பீ, இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

மணத்தக்காளி சட்னி

இன்று சட்னி செய்து கொள்வோமா?
இரண்டு முறையில் செய்யலாம்.

தேவையான பொருட்கள்-
முறை - 1



மணத்தக்காளிக் கீரை – 1 பிடி
செத்தல் மிளகாய் - 1
பூண்டு – 2-4
சின்ன வெங்காயம் - 6
தேங்காய்த் துருவல் - 1 கப்
பழப்புளி – தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ½ ரீ ஸ்பூன்

தேவையான பொருட்கள்-
முறை - 2


மணத்தக்காளிக் கீரை – 1 பிடி
மிளகு - ¼ ரீ ஸ்பூன்
சின்னச் சீரகம் - ¼ ரீ ஸ்பூன்
பச்சை மிளகாய் -1(விரும்பினால்)
சின்ன வெங்காயம் - 6
தேங்காய்த் துருவல் - 1 கப்
உப்பு - தேவையான அளவு.
தேசிச் சாறு - 1 ரீ ஸ்ப+ன்

செய்முறை - 1

கீரையை துப்பரவு செய்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து எடுங்கள்.

சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம்மாறாது அவித்து எடுங்கள்.

ஓயிலில் செத்தல் மிளகாய், பூண்டு வதக்கி எடுத்து வையுங்கள்.

மீதி எல்லாப் பொருட்களையும் மிக்சி ஜாரில் கொட்டி, கிர்…கிர் எனத் தட்டி எடுத்திட வேண்டியதுதான்.

செய்முறை – 2

கீரையை துப்பரவு செய்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து எடுங்கள்.

சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம்மாறாது அவித்து எடுங்கள்.

தேசிச்சாறு தவிர்த்து மீதி எல்லாப் பொருட்களையும் மிக்சி ஜாரில் கொட்டி,அரைத்து எடுங்கள்.

பரிமாறும் கோப்பையில் எடுத்து வைத்து விடுங்கள்.

தேசிச்சாறு விட்டுக் கலந்துவிடுங்கள்.

குறிப்பு

(தேங்காய்த் துருவலை லேசாக வறுத்து அரைத்துக்கொண்டால் சட்னி கெடாமல் இருக்கும். சுவையிலும் வித்தியாசத்தைத் தரும்.)

மாதேவி.

32 comments:

  1. எங்க வீட்டில் இப்போ தான் சின்ன செடியா இருக்கு..வளர்ந்ததும் உங்கள் செய்முறையை பரிசோதிக்கின்றேன்.. ;)

    நன்றி

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவன்(தமிழ் அமுதன்).

    ReplyDelete
  3. செடி நன்றாய் வளர வாழ்த்துக்கள்.

    வளர்ந்ததும் செய்து சாப்பிட்டுப்பார்த்துச் சொல்லுங்கள்.நன்றி தூயா.

    ReplyDelete
  4. சிலருக்கு பேசும் போது ஒரு வித மணம் வரும் அது போக்க இந்த மணத்தக்காளியை சாப்பிட்டால் சரி ஆகும். டாக்டருக்கு நூறோ இருநூறோ தர வேனாம்.

    ReplyDelete
  5. எங்க வீட்ல வாய் அவியலுக்கு நல்லதுன்னு அடிக்கடி அம்மா மணத்தக்காளி இலை வதக்கி சம்பல் செய்வாங்க.எனக்குப் பிடிக்கும்.அது அந்தக் காலம் என்கிறதுபோல் எப்பவோ சாப்பிட்டது மாதவி !

    ReplyDelete
  6. மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு ரெசிபி பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. உங்க ரெசிபி எல்லாம் சூபருங்க. அதைவிட உங்கள் தமிழ் எனக்கு கன விருப்பம். தமிழ் பண்பாடு அதில் நன்கு பாவிக்கப்படுகிறது.

    ReplyDelete
  8. மணத்தக்காளி சட்னி புதிதாய் இருக்கு!
    எங்கள் வீட்டிலும் சின்ன செடியாய்த் தான் இருக்கிறது!!

    ReplyDelete
  9. //
    சிறிய வயதில் விரும்பி உண்டதில்லையா?
    சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான பழம் இது.//

    ஆமாங்க என் ஃபேவரைட் அப்போது. வீட்டுத் தோட்டத்திலேயே இருந்தது.

    இப்போது சிட்டியில் கிடைக்கிறமாதிரி தெரியவில்லையே:(! நினைவு படுத்தி விட்டீர்கள். விசாரித்து வாங்கி விடுகிறேன்.

    வழக்கம் போல அருமையான விவரங்களுடனான குறிப்பு. நன்றி மாதேவி.

    ReplyDelete
  10. மாதேவி,

    என் ஆத்துக்காரியிடம் சொல்லி செய்யச்சொல்றேன்.

    (செஞ்சி முடிச்சதும், அவ என்னை சாப்பிடச் சொல்லி சோதிச்சு பார்ப்பாள்.அத நெனைச்சாதான் கொஞ்சம் பயமா இருக்கு.)

    பல நல்ல தகவல்களுடன் சமையல் குறிப்பை எப்போதும் தருகின்றீர்கள்.

    நன்றி.

    ReplyDelete
  11. ஒரு சில வார்த்தைகள் புரியவில்லை . நாளாந்தம் ?? அப்படின என்ன

    ReplyDelete
  12. வித்தியாசமான சட்னி.நன்றி...

    ReplyDelete
  13. இரண்டு வகையும் அருமை, நீங்கள் சொல்வது சரியே குடல் புண்
    ஆற்றும். ரொமப் வருடம் முன் டெலிவரிக்கு பிறட்கு எனக்கு 3 வருடமாக, வாய் , புண் வயிறும் வெந்து விடும் காலையில் கப கபன்னு எரியும்,

    நிறைய கை வைத்தியங்கள் முயற்சி செய்ததில் இதுவும் ஒன்றும்.

    நல்ல பலன்.

    நானும் இதை பற்றி பிளாக்கில் சொல்லனும். அதுக்கு நீஙக்ள் போட்டுள்ல இந்த பட்த்தை எடுத்துக்கொள்ளலாமா?

    இங்கு துபாயில் சில கீரைகளே கிடைக்கும் மனத்தக்காளி கீரை ஊருக்கு போனால் தான் கிடைக்கும்.

    ReplyDelete
  14. அட்டகாடமாக உள்ளது மாதேவி. இது உடல் சூட்டிற்கும்,வாய்புண்ணிக்கும் ரொம்ப நல்லது. நான் இந்த பழங்களை அப்படியே பறித்து துடைத்து சாப்பிடுவேன். இந்த கீரையை வாய்புண் இருக்கும் போது வெறும் வாயில் போட்டு மெல்லுவேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  15. உங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி ஜெய்லானி.

    ReplyDelete
  16. ஆமாம் ஹேமா.

    உங்கள் அம்மா செய்வது போல வதக்கிச் செய்யும் சுவையே தனிதான்.

    அம்மாவின் கைமணத்திற்கு ஈடேது.

    ReplyDelete
  17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா.

    ReplyDelete
  18. Dr.P.Kandaswamy said...

    "....... அதைவிட உங்கள் தமிழ் எனக்கு கன விருப்பம்......."

    மகிழ்ச்சி.
    கருத்துக்களுக்கு மிக்கநன்றி.

    ReplyDelete
  19. ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    "மணத்தக்காளி சட்னி புதிதாய் இருக்கு"!

    செடிவளர வீட்டில் சட்னி செய்யச் சொல்லுங்க.

    ReplyDelete
  20. வாருங்கள் ராமலஷ்மி.
    "ஆமாங்க என் ஃபேவரைட் அப்போது. வீட்டுத் தோட்டத்திலேயே இருந்தது."

    எனக்கும்தான்.ஈவினிங்கானா ஒரு ரவுண்ட் சுத்தி பறிச்சு உண்டிடுவோம்.

    ReplyDelete
  21. வாருங்கள் சத்ரியன்.

    மனவிழி’சத்ரியன் said.. "

    .....(செஞ்சி முடிச்சதும், அவ என்னை சாப்பிடச் சொல்லி சோதிச்சு பார்ப்பாள்.அத நெனைச்சாதான் கொஞ்சம் பயமா இருக்கு.)"

    ஆண்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் முதலில் சாப்பாடு கிடைக்கிறதே.:)))

    ReplyDelete
  22. வருகைக்கு நன்றி LK.

    நாளாந்தம் - தினமும்.
    இது இலங்கைச் சொல்.

    உங்கள் ஆர்வம் மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

    ReplyDelete
  23. வருகைக்கு நன்றி ஜெயா.

    ReplyDelete
  24. வாருங்கள் ஜலீலா.

    படம் எடுத்துக் கொள்ளுங்கள்.

    ஆமாம்.வெளிநாடுகளில் எல்லாவகைக் கீரையும் கிடைப்பதில்லையே. இவ்வகையில் நாங்கள் கொடுத்துவைத்தவர்கள் என்று சொல்லலாம். :)))

    ReplyDelete
  25. வாருங்கள் பித்தனின் வாக்கு. கருத்துக்களுக்கு நன்றி.

    நீங்கள் கூறியதுபோல வாய்புண்ணுக்கு மிகவும் சிறந்ததுதான்.

    ReplyDelete
  26. இந்த தக்காளியை விரும்பி சாப்பிட்ட காலமொன்றுண்டு, இப்ப எங்க கண்ணுலையே காண முடியலை ...

    ReplyDelete
  27. ட்ரை பண்ணிடலாம்..! ரெசிபி பகிர்வுக்கு நன்றி!

    -
    DREAMER

    ReplyDelete
  28. மாதேவி,எனக்கும்சிறு வயதில் பிடித்த பழம்,சிவப்பு,கறுப்பு இரண்டையும் பறித்து தின்று இருக்கிறேன்.

    சட்னி அரைத்தது இல்லை அரைத்துப் பார்த்து விடுகிறேன்.

    பதிவில் மணத்தக்காளி பற்றி அருமையான விவரங்கள் அளித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  29. செடி வரைக்கும் போய் கவர் பண்ணி போட்டோ போட்ட ஒரே பதிவர் நீங்கதான்பா!!....:) அருமை

    ReplyDelete
  30. நட்புடன் ஜமால்
    DREAMER
    கோமதி அரசு
    தக்குடுபாண்டி.

    உங்கள் அனைவரின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்