Sunday, September 19, 2010

மைதா கீரைப்பிட்டு


மகளுடன் நீண்ட இனிய விடுமுறையைப் பகிர்ந்து கொண்ட நான் மீண்டும் ஒரு கிராமத்து விருந்துடன் உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

கீரை என்ற பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடும் சிறுவர்களும், பிட்டு என்பதால் விருப்பத்துடன் உண்பார்கள். எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பிடித்தமான உணவு இது. மைதாவில் தயாரிக்கப்படும் பிட்டின் சுவை முதற் தரமானதன்றோ?

தவிடு நீக்கிச் சுத்திகரிக்கப்பட்ட மா இது என்பதால் சத்துச் செறிவற்ற உணவு என்பதே பொதுவான கருத்தாகும். இதில் காபோஹைரேட் மிகுதியாக இருக்கிறது, பைபர் எனப்படும் நார்ப்பொருள் மிகவும் குறைவாக இருக்கும்.


அதனால் நோயாளர்களுக்கு ஏற்ற உணவல்ல என்று சொல்வார்கள். அதையும் சத்துச்செறிவுள்ளதாக மாற்றிக் கொண்டால் தரம் உயர்ந்ததாகிவிடும்.

மைதாவுடன் கீரை கலந்து கொள்வதால் நீரிழிவு, கொலஸ்டரோல், இருதய நோயாளர்களும் உண்ணலாம்.

இவர்கள் பிட்டில் கலக்கும் தேங்காய்த் துருவலைத் தவிர்த்துக் கொள்ளலாம். அல்லது நன்கு குறைத்துக் கொள்ளலாம்.


இதில் முளைக் கீரை கலந்துள்ளேன்.


முருங்கைக் கீரை கலந்தும் செய்து கொள்வார்கள். அது சற்றுத் துவர்ப்பாக இருக்கும்.

கீரை வகைகள் பற்றியும் அவற்றின் போசாக்கு பற்றியும் மேலும் வாசிக்க எனது முன்னைய பதிவான
கீரை சாப்பிட வாங்க லிங்கை கிளிக் பண்ணுங்க.

அமெரிக்கன் மா(All Purpose Wheat Flour) என அழைக்கப்படும் இது பாண் தயாரிப்பில் முதல் இடம் வகிக்கிறது. ஐரோப்பியரின் முக்கிய உணவாக இருந்த இது இப்பொழுது எல்லா இடங்களில் உள்ளவர்களையும் பற்றிக் கொண்டுவிட்டது. கேக், பேஸ்டி வகைகள், பிஸ்கற், பான்கேக், எனத் தொடர்ந்து பரோட்டா, நான், ரொட்டி,பூரி,இடியப்பம் என எமக்கும் இசைவாகிவிட்டது.

மைதா மாவில் உள்ளவை

  • ஒரு கப் ( 125கிராம்) மாவில் 95.4 கிராம் காபோஹைரேட் இருக்கிறது. இதன் கலோரி பெறுமானம் 455 ஆகும்.
  • கொழுப்பு 1.2 கிராம். இதிலிருந்து 11 கலோரிகள் கிடைக்கிறது.
  • நார்ப்பொருள் 3.4 கிராம்,
  • சோடியம் 2 மில்லிகிராம்,
  • பொட்டாசியம் 133 மில்லிகிராம்,
  • இவற்றிற்கு மேலாக புரதம் 12.9 கிராம் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவையானவை

அவித்த மைதாமா - 2 கப்
உப்பு சிறிதளவு
கீரை சிறிய கட்டு - 1
சின்ன வெங்காயம் - 10-15
பச்சை மிளகாய் - 2-4 (காரத்திற்கு ஏற்ப)
தேங்காய்த் துருவல் - ¼ கப்


செய்முறை

மைதா மாவில் உப்புக் கலந்து வையுங்கள்.

நீரை நன்கு கொதிக்க வைத்து எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறி பிட்டு மா தயாரியுங்கள்.

கீரை, வெங்காயம், மிளகாய், கழுவி சிறிதாய் வெட்டி எடுங்கள். பச்சை மிளகாய்க்கு பதிலாக செந்நிறமாகப் பழுத்த மிளகாயை உபயொகித்தால் காரத்தை தள்ளி வைப்போருக்கு எடுத்து வீச இலகுவாக இருக்கும்.

சிறிது உப்புப் பிரட்டிக் கலந்துவிடுங்கள்.

இட்லிப் பாத்திரத்தில் அல்லது ரைஸ் குக்கரில் நீர் விட்டு ஸ்ரீம் தட்டுப் போட்டு பிட்டு மாவை ஒரு பக்கமும், கீரை கலவையை ஓர் பக்கமும் வைத்து, மூடி போட்டு 15-20 நிமிடங்கள் அவித்து எடுங்கள்.

பிட்டு அவியத் தொடங்கும்போதே கீரை, வெங்காய மிளகாய் வாசத்துடன் மூக்கைக் கிளறும்.

அவிந்ததும் பெரிய பாத்திரத்தில் போட்டு தேங்காய்த் துருவலையும் சேர்த்து கரண்டிக் காம்பால் கிளறிவிடுங்கள். உடனேயே சாப்பிடும் ஆசையும் கிளம்பிவிடும்.

தக்காளிக் குழம்பு அல்லது பொரித்த குழம்பு ஜோடி சேர்ந்தால் சூப்பர் சுவைதான். காரச் சட்னியுடனும் சாப்பிடலாம்.

சுடச் சுடச் சாப்பிட மிகுந்த சுவை தரும்.

சிவப்பு அரிசி மா குழல் பிட்டு பற்றிய எனது முன்னைய பதிவில் ரிச் நட்ஸ் குழல் பிட்டு பார்க்க மண் சுமக்க வைத்தது லிங்கை கிளிக் பண்ணுங்கள்

மாதேவி

28 comments:

  1. புதுசா இருக்கே

    ReplyDelete
  2. அருமையான கிராமத்து மணத்துடன் ஒரு சத்தான கிரை புட்டை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க ந்னறீ மாதேவி

    ReplyDelete
  3. - கூட + போட்டால் - தான் வரும்

    ஆனால் நீங்கள் + வர வைத்து விட்டீர்கள் :)

    ReplyDelete
  4. பாக்கவே நல்லா இருக்கு மாதேவி

    ReplyDelete
  5. ம்ம்ம் சுவையோடு சொல்லிய விதம் அருமை

    ReplyDelete
  6. சூப்பர்ர்,நல்ல சத்தான புட்டு..

    ReplyDelete
  7. நன்றாக விரிவாகவும் விளக்கங்களுடனும் எழுதியுள்ளீர்கள். பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

    மைதாவில் நார்சத்து இல்லாவிட்டாலும் கீரை அதை ஈடுகட்டுகிறது. தவிர வயதானவர்களுக்கு மைதா உணவு சீக்கிரம் ஜீரணமாவதால் அவர்களுக்கு ஏற்றது.

    ReplyDelete
  8. வாருங்கள் LK. கருத்துக்கு மிக்க நன்றி.

    இது பாரம்பரிய உணவுவகையில் ஒன்றுதான்.

    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா.

    இப்பொழுதெல்லாம் மிகவும் இலகுவாகத் தயாரிக்கும் உணவுகளைத்தான் செய்து கொள்கிறார்கள்.

    ReplyDelete
  10. நட்புடன் ஜமால்.அறிவுபூர்வமான உங்கள் பதிலுக்கு சல்யூட்.

    ReplyDelete
  11. நன்றி சின்ன அம்மிணி .

    ReplyDelete
  12. சுவைத்ததற்கு நன்றி வல்லிசிம்ஹன்.

    ReplyDelete
  13. மிக்க நன்றி ஆ.ஞானசேகரன்.

    ReplyDelete
  14. ஆமாம் மேனகா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  15. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி DrPKandaswamyPhD.

    ReplyDelete
  16. படிக்கும்போதே ருசியாக இருக்கிறது...

    -
    DREAMER

    ReplyDelete
  17. அருமையான கிராமத்து மணம்

    ReplyDelete
  18. மாதேவி...இது கீரைப்புட்டு மாதிரி இருக்கே.இது வேற அது வேறயா ?

    ReplyDelete
  19. மைதா கீரைப்பிட்டு: மிகவும் அருமையான விளக்கத்துடன்.

    நன்றி மாதேவி.

    ReplyDelete
  20. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாவி தங்கமணி.

    ReplyDelete
  21. படித்து ருசித்ததற்கு நன்றி DREAMER.

    ReplyDelete
  22. வாருங்கள் தியாவின் பேனா.

    கிராமத்து மணமும் சுவையும் சொல்லும்போதே தித்திக்குமே.
    நன்றி தியா.

    ReplyDelete
  23. வாருங்கள் ஹேமா.

    இது அரிசிமாவில் செய்யும் சிற்றுண்டி போல மைதாவில் கீரைப்பிட்டு. புட்டு எனப்பேச்சு வழக்கில் சொல்வார்கள். இரண்டுமே ஒன்றுதான்.

    நன்றிஹேமா.

    ReplyDelete
  24. வாருங்கள் கோமதி அரசு.மிக்க மகிழ்ச்சி.
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  25. http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_22.html

    ReplyDelete
  26. மிக்க நன்றி ஜெய்லானி.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்