Sunday, October 3, 2010

தேங்காய்ப் பால் கஞ்சி - மூதாதையரின் மாரிகால இலகு சமையல்

எனது பாட்டி சொல்லக் கேட்டது இது.


“பழைய காலத்தில் வாழ்ந்த எமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் சிரமமானது.” என்பதாகும்.

நவீன விஞ்ஞான யுகத்தில் எமக்கு வீட்டிற்குள்ளேயே சமையல் அறை குளியல் அறை, குளிருக்கு குளிக்க ஹொட் வாட்டர், வெப்பத்திற்கு ஏசி என வாழ்க்கை சகல வசதிகளுடன் கூடி சுகபோகமானது.

பழைய காலத்தில் வீடுகள் ஓலைகளால் வேயப்பட்டு சிறியனவாக இருந்தன.

சமையல் அறையோ வீட்டின் கூரையிலிருந்து இறக்கப்பட்ட பதிவான பத்தியாலான சிறிய ஒரு இடமாகவே இருந்து வந்தது.

நமது குடிசைகள் அல்ல, பிலிப்பைன்ஸ்
அவர்களுக்கான தண்ணீர் பெறும் இடங்கள் தெருவுக்கு ஒன்றாக ஆழக் கிணறுகளாக இருந்திருக்கின்றன. ஆவற்றில் இருந்தே அவர்கள் தங்கள் அன்றாட சமையல், குடிநீருக்கான தண்ணீரை பெற்று வந்தனர்.

குளிப்பதற்காகவும், உடைகள் அலசுவதற்காகவும், அவற்றை நாடியே செல்ல வேண்டியிருந்தது. மழைகாலத்தில் சொல்லவே வேண்டியதில்லை. மிகவும் சிரமங்கள் இருந்தன. வீடுகள் மண் குடிசைகளாக இருந்ததால் நிலம் களி மண்ணால் ஆனது. அதனால் சாணத்தால் மெழுகியிருப்பர்.

மழைகாலத்தில் நிலங்களில் கசிவு இருப்பதால் தாழ் நிலமாக இருப்பின் நிலம் இளகி சொதசொதப்பாகி, கால் வைக்கும்போது கால் புதையத் தொடங்கிவிடும். மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். நிலத்தின் குளிர் உடலில் ஏறி காச்சல், குளிர் நடுக்கம் ஏற்படுவதுண்டு. கை மருந்துகள்தான் பலன் கொடுக்கும்.

குளிரிலிருந்து விடுபட வீட்டின் ஒரு மூலையில் நான்கு மூலைகளிலும் கற்களை அடுக்கி அதன்மேல் பனங் குற்றிகளைப் பரப்பி பரண் அமைத்து அதன் மேல் சாக்குகள், பாய்கள் போட்டு வைத்திருப்பர். அதன் மேல் படுப்பார்கள்.

பகலில் தொடர்ந்து அடை மழை பெய்யும்போது குளிருக்கு ஏறியும் இருப்பார்கள். முக்கிய பொருட்களை வைத்து எடுப்பதற்கும் கயிற்றினால் கட்டி பலகை வைத்த சிறிய பரண்களைத் தொங்க வைத்திருப்பார்கள்.

நவீன பரண்?

 அடுக்களையிலும் சமையல் பொருட்கள் வைக்க சிறிய பரண் இருக்கும்.

உறியில் சமைத்த உணவை வைப்பர். விறகு அடுப்பு மட்டுமே பாவனையில் இருந்ததால் மழை காலத்திற்கு வேணடிய விறகுகளை குடிசைக்கு வெளியே பின்புறத் தாழ்வாரங்களில் கயிற்றுப் பரண்களில் சேகரித்து வைத்திருப்பர்.

மழைக்காலத்தில் கூரையியிலிருந்து வடியும் மழை நீரை எடுத்து பாத்திரங்கள் கழுவதற்கும் குளிப்பதற்கும் உடைகள் அலசுவதற்கும் உபயோகித்து வந்திருக்கிறார்கள்.

பச்சை அரிசியும் பாசிப்பயறும்
மாரி காலத்தில் அவர்களின் உணவு மிக இலகுவாகச் சமைக்கக் கூடியதாகவும், சத்து மிக்கதாகவும் இருந்ததுடன் குளிருக்கு இதமூட்ட சுடசுடச் சாப்பிடும் உணவுகளாகவும் இருந்தன.

இவ்வகையில் தேங்காய்ப் பால் கஞ்சி, ரொட்டி, பிட்டு வகைகள் இருந்தன.

இடை உணவுகளாகச் சாப்பிடுவதற்கு கோடையில் செய்து சேர்த்து வைத்திருந்த பினாட்டு, புழுக்கொடியல், பனங்கட்டி உதவின. இம் முறையில் ஊறுகாய், வற்றல் மிளகாய், வடகம், கருவாடு என்பனவும் கை கொடுத்தன.

சாதத்துடன் சம்பல் செய்தும் உண்டனர். கஞ்சியுடன் கடிப்பதற்கு பச்சை மிளகாய், வெண்காயம், சுட்ட கருவாடு என்பன துணை போயின. இல்லாதபோது பினாட்டை தொட்டுக் கொண்டே குடித்தனர்.

இவ்வாறு தொடங்கிய எமது பாரம்பரிய உணவுகளை எங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதோடு சமைப்பதற்கும் பழகிக் கொள்ளுவோம்.

சிவப்பு பச்சை அரிசியுடன் பாசிப் பருப்பும் சேர்வதால் சத்தும் மிக்கது.

தேவையான பொருட்கள். 


 • தீட்டல் சிவப்பு பச்சை அரிசி – 1 கப்
 • வறுத்து உடைத்த பாசிப் பருப்பு – ¼ கப்
 • தேங்காய்ப் பால் - 1 கப்
 • பச்சை மிளகாய் - 2
 • சின்ன வெங்காயம் - 10
 • தேசிப் புளி – ¼ பழம்
 • உப்பு தேவையான அளவு.
காரச் சட்னி
காரச் சட்னி ஒன்றும் தயாரித்து வையுங்கள்.

செய்முறை

அரிசி பருப்பைக் கழுவி 4 கப் நீர் விட்டு அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரில் 5-6 விசில் வைத்து எடுக்கலாம்.

தேங்காயப் பால் கஞ்சி

பின் உப்பு தேங்காப் பால் விட்டு ஒரு கொதி விட்டு இறக்குங்கள்.

கஞ்சியை இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்தில் சிறிதாக வெட்டிய  மிளகாய், வெங்காயம், தேசிப்புளி கலந்து விடுங்கள்.

மற்றைய பகுதியை காரச் சட்னியுடன் பரிமாறுங்கள்.

இரு வேறு சுவைகளில் சுடச் சுட பால் கஞ்சி அசத்தும்.

சிறுவர்களுக்கு இனிப்பு விரும்பினால் சரக்கரை சேர்த்து இனிப்புக் கஞ்சி தயாரிக்கலாம்.

மாதேவி
 :-:-:-:-:-:-:-:-:-

32 comments:

 1. அது என்னப்பா பினாட்டு?

  கொஞ்சம் விவரமாச் சொல்லுங்கோ

  ReplyDelete
 2. ஆஹா..அருமையான கஞ்சி மாதேவி.நீங்கள் ஒவ்வொரு சமையல் குறிப்புகளையும் பகிரும் வித்தியாசமே அலாதிதான்.

  ReplyDelete
 3. எங்கூட்டு அம்மாவும் முந்தி வைக்கும். ருசி சூப்பராயிருக்கும். சீக்கிரம் ஜீரணமும் ஆகும். உடம்புக்கு நல்லதும் கூட.

  ReplyDelete
 4. மிக அருமையான பதிவு

  http://denimmohan.blogspot.com/

  ReplyDelete
 5. மூதாதையர்கள் பட்ட கஷ்டம் இப்போது நமக்கு இல்லை மாதேவி.

  நாம் எப்படிப்பட்ட சொகுசு வாழ்க்கை வாழ்கிறோம், அப்படியும் அது இல்லை,இது இல்லை என்ற குறை வேறு.

  தேங்காய்ப் பால் கஞ்சி படிக்கும் போதே சுவையாக இருக்கு,இந்த மழைக் காலத்தில் செய்து சாப்பிடுகிறோம்.

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 6. நாங்களும் இந்த தேங்காய் பால் கஞ்சி அடிக்கடி செய்வோம்.
  சிவப்பு அரிசியில் செய்ததில்லை
  படங்கள் ரொம்ப அருமை. விளக்கங்களும் கருப்பு வெள்ளை படங்களும் சூப்பர்

  ReplyDelete
 7. நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

  ReplyDelete
 8. புகைப்படங்களுடன்... அருமையான விளக்கம்..... ருசியோ ருசி


  அன்புடன்
  ஆ.ஞானசேகரன்

  ReplyDelete
 9. வாருங்கள் துளசி கோபால்.

  பினாட்டு என்பது

  பனையின் பழத்திலிருந்து (பனம் பழம்) பிழிந்தெடுத்த களியை ஓலைத் தடுக்கின் மேல் ஊற்றுவார்கள்.
  பல நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்தபின் துண்டுகளாக வெட்டி மண்சட்டிகளில் சேமித்து வைத்து இடைநேர உணவுக்கு சாப்பிட்டார்கள். இனிப்பாக இருக்கும்.(மாம்பழ சுவீட் போல என நினைக்கிறேன்)

  பனம்பாணி போட்ட பனாட்டும் உண்டு. சட்டிகளில் வைத்த பனாட்டின்மேல் பாணியுடன் மிளகு,காய்ந்த மிளகாய் பொடி, எள்ளு,அரிசிப்பொரி கலந்து ஊற்றி வாயை வெள்ளைத்துணியால் முடிவைத்திருப்பர்.இதுநல்ல காரத்துடன் கூடிய இனிப்பாக இருக்கும்.

  பனம்பாணி என்பது கருப்பநீரை வடித்தெடுத்து அடுப்பில் காச்சி எடுப்பது.

  இந்தப்பாணியை பானையில் இட்டு வாயை மூடிக்கட்டி அடுப்புப் பிட்டியில் சூடுபட நீண்டநாட்கள் வைத்திருந்தால் அடியில் படிந்து 'கல்லக்காரம்'(பனம் கற்கண்டு) உருவாகி இருக்கும். இவைஎல்லாம் அன்றைய பெண்களின் வீட்டுவேலைகளாக இருந்தன. இப்பொழுது சில இடங்களில் பாட்டில்களில் கிடைக்கும்.

  ReplyDelete
 10. மிக்க நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 11. நன்றி புதுவை சிவா.

  ReplyDelete
 12. கருத்துக்கு நன்றி asiya omar.

  ReplyDelete
 13. DrPKandaswamyPhD said...

  எங்கூட்டு அம்மாவும் முந்தி வைக்கும். ருசி சூப்பராயிருக்கும். சீக்கிரம் ஜீரணமும் ஆகும். உடம்புக்கு நல்லதும் கூட.

  "சீக்கிரம் ஜீரணமும் ஆகும். உடம்புக்கு நல்லதும் கூட". மிக்க நல்ல கருத்து. மிக்க நன்றி.

  ReplyDelete
 14. சரியாகச் சொன்னீர்கள்.

  மிக்க மகிழ்ச்சி கோமதி அரசு.
  நன்றியும் சொல்லிக்கிறேன்.

  ReplyDelete
 15. அப்படியா. நன்றி ஜமால்.

  ReplyDelete
 16. சிவப்பரிசியில் செய்துபாருங்கள் ஜலீலா. நல்ல மணத்துடன் சத்தும்கூடியதாக கிடைக்கும்.

  ReplyDelete
 17. நன்றி ஈரோடு தங்கதுரை.

  பார்க்கிறேன்.

  ReplyDelete
 18. "ருசியோ ருசி" மிக்க நன்றி ஆ.ஞானசேகரன் .

  ReplyDelete
 19. சத்து நிரம்பிய கஞ்சி பார்க்கவே அவ்வளவு நல்லாருக்கு.

  ReplyDelete
 20. ம்!!!அருமை மாதேவி. எங்கள் ஊரில் பால் கஞ்சி என்று சொல்லுவோம். மழைக்காலங்களில் சுடச் சுடச் சாப்பிட அருமையோ அருமை. பதிவும் படமும் அழகு. நேரம் கிடைத்தால் புளிக்கஞ்சி செய்முறையை தயவு செய்து தரமுடியுமா?
  அன்புடன் மங்கை

  ReplyDelete
 21. பால்க்கஞ்சி நான் அடிக்கடி செய்துகொள்வேன்.சீக்கிரமாவும் ருசியாவும் செய்யச் சுலபம்.அதைவிட எம் முன்னோர்களின் வாழ்க்கையே மிகவும் ருசி.நன்றி மாதேவி !

  ReplyDelete
 22. வாருங்கள் துளசி கோபால்.

  பினாட்டு என்பது

  பனையின் பழத்திலிருந்து (பனம் பழம்) பிழிந்தெடுத்த களியை ஓலைத் தடுக்கின் மேல் ஊற்றுவார்கள்.
  பல நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்தபின் துண்டுகளாக வெட்டி மண்சட்டிகளில் சேமித்து வைத்து இடைநேர உணவுக்கு சாப்பிட்டார்கள். இனிப்பாக இருக்கும்.(மாம்பழ சுவீட் போல என நினைக்கிறேன்)

  பனம்பாணி போட்ட பனாட்டும் உண்டு. சட்டிகளில் வைத்த பனாட்டின்மேல் பாணியுடன் மிளகு,காய்ந்த மிளகாய் பொடி, எள்ளு,அரிசிப்பொரி கலந்து ஊற்றி வாயை வெள்ளைத்துணியால் முடிவைத்திருப்பர்.இதுநல்ல காரத்துடன் கூடிய இனிப்பாக இருக்கும்.

  பனம்பாணி என்பது கருப்பநீரை வடித்தெடுத்து அடுப்பில் காச்சி எடுப்பது.

  இந்தப்பாணியை பானையில் இட்டு வாயை மூடிக்கட்டி அடுப்புப் பிட்டியில் சூடுபட நீண்டநாட்கள் வைத்திருந்தால் அடியில் படிந்து 'கல்லக்காரம்'(பனம் கற்கண்டு) உருவாகி இருக்கும். இவைஎல்லாம் அன்றைய பெண்களின் வீட்டுவேலைகளாக இருந்தன. இப்பொழுது சில இடங்களில் பாட்டில்களில் கிடைக்கும்.
  ///  எனது ஊரின் நினைவு வருகிறது
  அருமையான கிராமத்து மண் மணம் கமழும் பதிவு

  ReplyDelete
 23. ஸாதிகா சொன்னது போல் நீங்கள் பகிரும் விதமே அலாதி. கஞ்சி, வாசிக்கவே ருசி. செய்தும் பார்த்து விடுகிறேன் :) நன்றி மாதேவி.

  ReplyDelete
 24. நன்றி அமைதிச்சாரல்.

  ReplyDelete
 25. வாருங்கள் yarl. கருத்துக்கு நன்றி.

  புளிக்கஞ்சி முடிந்தபோது தருகிறேன்.

  ReplyDelete
 26. வருகைக்கு நன்றி ஹேமா.

  ReplyDelete
 27. வாருங்கள் தியாவின் பேனா.

  ஊரை நினைத்தாலே என்றும் தித்திக்கும். நன்றி தியா.

  ReplyDelete
 28. மிகவும் அருமையான செய்முறை மாதேவி. இந்தக் கஞ்சியை எங்கள் வீட்டில் நீங்கள் சொன்ன பொருட்களுடன் வெந்தயம், பூண்டு
  சேர்த்து செய்வோம். இந்தக் கஞ்சி வெய்யில் காலத்திற்கும் ஏற்ற உணவாகும். வெந்தயம் சேர்ப்பதால் வயிற்றுப் புண் ஆறும். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மாதேவி.

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்