பினோலிக் அமிலத்தின் கூட்டுப் பொருட்களான குளொரோஜெனிக் மற்றும் நியோ குளேராஜெனிக் அமிலம் போன்ற இராசாயனங்கள்தான் புற்றுநோய் அணுக்களை அழிக்கிறது. இந்த இராசாயனங்கள் பழவகைகள் யாவற்றிலும் காணப்படுகின்றன. இருந்தாலும் பிளம்பழத்தில் கூடுதலாக இருக்கிறது என்கிறார்கள்.
எமது நாட்டில் பயிரிடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. கொம்பிலக்ஸ்களில் விற்பனையாகின்றன.
மென்மையான வட்டமான வழவழப்பான தோலையுடைய சதைப்பிடிப்பான இனிய பழம் இது.
மஞ்சள், வெள்ளை பச்சை, சிகப்பு,ஊதா கலர்களில் இருக்கும்.
பச்சை நிறத்தை அண்டிய வெள்ளைப் பூக்கள் மலர்ந்திருக்கும்.
தேனீக்கள் தேன் உண்ண முயலுகையில் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது.
Autum காலத்தில் இலைகளை உதிர்த்து Early Spring ல் பூக்களைக் கொடுக்கும்.
பெரிய பழம் 3-6 செ.மீ அளவிருக்கும்.
முற்றிய பழத்தின் மேலே வெள்ளை படர்ந்தது போல இருக்கும்.
மரம் 5-7 மீற்றர் உயரம் வரை வளரக் கூடியது. ரோசேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. அறிவியல்பெயர் பிருனஸ்சலிசினா.
உலரவைத்த பிளம்ஸ் ப்ருனே Prunes என அழைக்கப்படும்.
வடஅமெரிக்க, ஐரோப்பா, சீனா ஆகிய இடங்களில் இயற்கையில் காணப்பட்டது. ரோமானியர்கள் வடக்கு ஐரொப்பாவில் அறிமுகப்படுத்தினர்.
இதில் பெரும்பாலும் நான்கு வகை இருக்கிறது.
- யூரோப்பியன் பிளம்,
- ஜப்பானிய பிளம்,
-
-
ஐரோப்பிய இனத்தை விட ஜப்பானிய இனப் பிளம் பெரியதாக இருக்கும்.
"பழம் வாங்கலையோ பழம்.." என இடுப்பில் கடகம் ஏந்தி,
கூவியழைத்து பழ விற்பனைக்கு வந்தாள் சின்னு.
சின்னப் பெண்ணாக இருக்கையில் ....
போட்டியில் பரிசுபெற்ற சின்னுவை, அவளின் வெற்றியின் ரகசியம் என்ன என வினவுகின்றனர்.
பழக்காரியாக சின்னு |
ஜப்பானிய பிளம், சைனீஸ் பிளம் என்றே அழைக்கப்பட வேண்டும். ஏனெனில் ஜப்பான் 200-300 வருடங்களுக்கு முன்பிருந்தே சைனாவில் இருந்து இறக்குமதி செய்தது. சைனா 1000 வருடங்களாகவே பயிரிட்டு வந்திருக்கிறது. ஜப்பான் உலக நாடுகளுக்குப் பரப்பியதால் ஜப்பானிய பிளம் எனப் பெயர் வந்தது. ஜப்பானிய பிளம் ஏற்றுமதியில் கலிபோனியா பிரபல்யமான இடத்தை வகிக்கிறது.
நேரடியாக பழத்தை உண்பதுடன் கான்களில் கிடைக்கும். யூஸ், ஜாம், சிரப் தயாரித்துக் கொள்வார்கள்.
பிளம் யூசிலிருந்து பிளம் வைன், பிரண்டி தயாராகும்.
ஆசியாவில் ‘பிக்கிள்ட் பிளம்’ ஒரு வகையாகத் தயாரிக்கப்படுகிறது.
சலட்டாக தயாரித்தும் உண்ணலாம்.
காபோஹைதிரேட் கூடுதலாக உள்ளது. குறைந்தளவு கொழுப்பு உள்ளது.
எடை குறைப்பிற்கு ஏற்ற உணவு.
விற்றமின் சீ அதிகஅளவில் இருப்பதால் தடிமன் சளியை அண்டவிடாமல் தடுக்கும் என்கிறார்கள்.
நார்சத்தும் அதிக அளவில் இருக்கிறது.
100 கிராமில் உள்ள போசனை
காபோஹைதிரேட் 13.1 கிராம்,
கொழுப்பு 0.62 கிராம்,
Fiber 2.2 கிராம்.
நீர்ப்பிடிப்பு 84 சதவிகிதம்,
Energy 55 kcal,
புரொட்டின் 0.8 கிராம்.
விற்றமின் சீ 5 மிகி
B1 0.02 மிகி.
B2 0.3 மிகி.
B6 0.10 மிகி.
Vitamin E 0.7>
Vitamin A 18 ug ,
Potassium- K 172mg,
Calcium-ca 4 mg.
பிளம் சலட் செய்துகொள்வோமா.
பிளம் சலட் செய்துகொள்வோமா.
தேவையான பொருட்கள்
- பிளம் பழம் - 2
- பச்சை ஆப்பிள் - ½
- கிறேப்ஸ் விதையில்லாதது - 5-6
- துளசி இலை – 6-7
- தேன் - 2 டேபிள் ஸ்பூன்
- லெமன் ஜீஸ் - 1 டேபிள் ஸ்பூன்
- சோல்ட், பெப்பர்பவுடர் - சிறிதளவு
செய்முறை
பழங்கள், துளசி இலைகளைக் கழுவி எடுங்கள.;
பிளம்,ஆப்பிளை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.கிரேப்ஸ் முழுதாகப் போட்டுக்கோள்ளலாம்.
துளசி இலைகளை மிகவும் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
லெமென் சாற்றுடன், உப்பு. பெப்பர் பவுடர், தேன் கலந்து கலக்கிக் கொள்ளுங்கள்.
ஒரு போலில் பழங்களைப் போடுங்கள். கலந்து எடுத்த சாற்றை மேலே ஊற்றி பிரட்டிவிடுங்கள்.
வெட்டி எடுத்த துளசி இலையை தூவி விடுங்கள்.
புதிய சுவையில் சலட் தயாராகிவிட்டது. ஹெல்த்துக்கும் உகந்ததாகும்.
பழங்கள் பற்றிய எனது ஏனைய பதிவுகளுக்கு
பயன் தரும் பழங்கள் 2
மாதேவி
ஹாய் சின்னு :)
ReplyDeleteபிளம் பழம் விரும்பி சாப்பிடவதுண்டு
இதன் வகைகள் பற்றி அறிந்ததில்லை
நன்றி.
அருமை... அட்டகாசம்...
ReplyDeleteநல்ல தகவல்கள்.நன்றி.அதாரு?பொண்ணா?பழக்கூடையுடன் பிளம்ச் பழம் போல் அழகாக இருக்கின்றாள்
ReplyDeleteநன்று.
ReplyDeleteசின்னு அசத்தி இருக்கிறாள்:)!
ReplyDeleteப்ளம் எனக்கு மிகப் பிடிக்கும். ஆனால் சில சமயத்தில் ரொம்பப் புளித்ததாய் கிடைக்கும். அப்போது பிடிக்காது:)! ப்ரூன்ஸ் ரெகுலராக சாப்பிடுகிறேன்.
சாலட் குறிப்புக்கு நன்றி.
பிளம் பற்றிய செய்திகள் நன்று
ReplyDeleteபழம் விற்க்கும் சின்னுவின் சிரிப்பும் கொள்ளையழகு!
பழங்களை பற்றிய நல்லதொரு பதிவு. சின்னுவின் படம் அசத்தல். சின்னுவின் குட்டிக் கடகத்தில என்ன பழம் இருக்கு:)))))
ReplyDeleteஅன்புடன் மங்கை
பழம் வாங்கலையோ பழம் என்று கேட்கும் சின்னு வின் சிரித்தமுகம் மனதை அள்ளுகிறது.
ReplyDeleteசின்ன வயதிலேயே பழங்களின் நன்மைகளை சொல்லி எல்லோர் மனதிலும் இடம் பிடித்தமாதிரி
இப்போதும்.
பிளம் பழ விளக்கம் அருமை.
ReplyDeleteபழங்களை விட உங்களின் இலங்கை தமிழ் இனிக்கிறது. அருமையான பதிவு, அழகான மொழி நடை :)
ReplyDeleteஓ.. இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா? சூப்பர்
ReplyDeleteப்ளம்ஸ் எனக்கும் பிடித்த ஒன்று. சின்னுவின் கையிலுள்ள கடகத்தில் ப்ளம்ஸ் இருக்கா என்ன :-))
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
ReplyDeleteஹாய் சின்னு :)
ஹாய் அங்கிள் :)))
நட்புக்கும் வருகைக்கும் நன்றி ஜமால்.
வாருங்கள் சோளப் பேரரசரே ! :) வணக்கம்.
ReplyDeleteநன்றி ராஜ ராஜ ராஜன் .
சின்னு சிறுவயதில்.நன்றி ஸாதிகா.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.
ReplyDeleteமிக்க நன்றி ராமலக்ஷ்மி.
ReplyDeleteப்ரியமுடன் வசந்த் said.
ReplyDeleteபழம் விற்க்கும் சின்னுவின் சிரிப்பும் கொள்ளையழகு!
உங்கள் சிரிப்புப் பதிவுகளை விடவா :))
சின்னுவின் குட்டிக் கடகத்தில எல்லாப் பழங்களும் இருக்கு:))
ReplyDeleteநன்றி மங்கை.
வாருங்கள் கோமதி அரசு.
ReplyDelete"சின்ன வயதிலேயே பழங்களின் நன்மைகளை சொல்லி எல்லோர் மனதிலும் இடம் பிடித்தமாதிரி
இப்போதும்."
உங்கள் இனிய வாழ்த்துக்கள் என்றும் அவளை உயர்வடையச் செய்யும்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
வருகைக்கு நன்றி அன்னு.
ReplyDeleteஇலங்கைத் தமிழ் இனிமையானது என்று பலரும் சொல்கிறார்கள்.
நன்றி அனு.
உங்கள் வருகைக்கு நன்றி அப்பாவி தங்கமணி.
ReplyDeleteவாருங்கள் அமைதிச்சாரல்.
ReplyDelete"சின்னுவின் கையிலுள்ள கடகத்தில் ப்ளம்ஸ் இருக்கா என்ன :-))"
ப்ளம்ஸ் பழம் இல்லாமலா வெற்றி கிடைத்தது :))
தகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteபழங்களின் நன்மைகளை விளக்கிய விதம் நன்றாக இருந்தது. தகவலுக்கு நன்றி!
ReplyDeleteப்ளம் பலம் பற்றி பல புதிய தகவல்கள் நன்றி
ReplyDeletePlum!!! good post. :-)
ReplyDeleteசின்ன சின்னு நல்ல வடிவா இருக்கிறா !
ReplyDeleteநன்றி மாதேவி.பழங்கள் எதையுமே விரும்பிச் சாப்பிடுவேன்.அவ்வளவு பிடிக்கும்.
ப்ளம் பழத்துக்கு பின்னாடி இவ்ளோ செய்திகளா???? சூப்பர்
ReplyDeleteமகிழ்ச்சி சைவகொத்துப்பரோட்டா.
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு நன்றி பிரியா.
ReplyDeleteமிக்க நன்றி LK.
ReplyDeleteநன்றி :) சித்ரா.
ReplyDeleteஹேமா said...
ReplyDelete"பழங்கள் எதையுமே விரும்பிச் சாப்பிடுவேன் அவ்வளவு பிடிக்கும்."
எனக்கும்தான் ஹேமா.
வாருங்கள் கவிதை காதலன்.
ReplyDelete"சூப்பர்" என்று கூறியதற்கு
நன்றி
நன்றி.
பிளம்ஸ் பழங்கள் பற்றிய பதிவு அருமை.பிளாக்கின் லே அவுட்டும்,டிசைனும் சூப்பர்
ReplyDeletevaaram வாரம் ஒரு பதிவாவது போடுங்கள்
ReplyDeleteஅதென்ன சின்னி ரேஸ்ரி?
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .
ReplyDelete