Sunday, January 8, 2012

புதுவருட கரட், வெங்காய பிரியாணி

ஆங்கிலப் புத்தாண்டும் தமிழ்ப் புத்தாண்டு போன்றே பலராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. காலையில் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். சிலர் புத்தாடைகளும் அணிவார்கள்.

வருடம் பிறந்ததும் முதலில் இனிப்பான உணவை உண்பார்கள். வருடம் முழுவதும் அதிர்ஸ்டத்துடன் இனித்திடும் என்ற நம்பிக்கைதான்.

அன்று பெரும் பாலும் இந்துக்களின் வீடுகளில் சைவஉணவுகள்தான் சமைப்பார்கள். காலை உணவு, மதிய உணவு, மாலை உணவு, இரவு உணவு எல்லாம் தடபுடலாக நடக்கும்.


அதற்கு நாங்களும் விதிவிலக்கு அல்ல. புதுவருட பிரியாணி செய்துவிட்டோம்.

என்ன ஸ்பெசல் என்கிறீர்களா?
  • புது வருட பிரியாணி என்பதால்தான் ஸ்பெசல். 
  • அத்துடன் கடையில் வாங்கும் பிரியாணி மசாலாக்கள் ஒன்றும் சேர்க்கப்படவில்லை. 
  • எல்லாமே எங்கள் வீட்டுத் தயாரிப்பு. கலப்படம் அற்றது என்பதால் சிறந்ததுதானே!

பிரியாணி சாப்பிடும்போது வீட்டில் கேட்டார்கள் ......

"முதல் நாளே பிரியாணி என்றால் ஒவ்வொரு நாளும் பிரியாணிதானே?"

நாள்தோறும் சாப்பிட்டால் என்ன ஆகும்? என்று கேட்டு அவர்கள் வாயை மூடவைத்தேன்.... ஆகா தப்பித்தேன்.

சங்க காலத்திலும் பிரியாணி  

பிரியாணி பற்றிச் சற்றுப் பார்ப்போம். சங்க காலத்தில் பிரியாணி சோற்றின் ஆரம்பம் தொடங்கப்பட்டுவிட்டது எனலாம். சங்க இலக்கியத்தில்'ஊன் சோறு' பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. 'ஊன்றுவையடிசில்' என்கிறார்கள்.


படைவீரரும் அரிசியுடன் மாமிசத்தைக் கலந்து சமைத்து உண்டிருக்கிறார்கள்.

பெரும்தேவனார் பாடலில் 'மைஊன் புழுங்கலும் எலிவறுவலும் உனக்குத் தருவேன்' என தலைவி கூகையோடு பேசுவதாக நற்றிணை 83ல் வருகிறது.

அகநானூற்றில் இறைச்சியோடு சேர்ந்த நெய்ச் சோறு ஆக்கிப் படைத்தலும் மணவிழா நாளில் நிகழ்ந்திருக்கின்றன.

Briyani என்பது Persian மொழிவழிச் சொல்லாகும்.Persia என்பது இன்றைய ஈரான் ஆகும். சமைக்கு முன் அரிசி, மரக்கறிகள், மீன், இறைச்சி ஆகியவற்றை நெய்யில் வதக்கி வாசனைகள் சேர்த்து சமைப்பதாகும்.

இம் தயாரிக்கும் சமையல் முறை பல்வேறு நாடுகளிலும் அவர்களது பாரம்பரிய சமையல் முறைகளில் இருந்திருக்கின்றன.

பிரியாணி பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது.  'தம்' வைத்து சமைக்கும் பிரியாணிகள் சுவையில் கூடியவை.
  • ஒவ்வொரு ஊர்களின் பெயரைக் கொண்டும் வெவ்வேறு வகைப் பிரியாணிகள் இருக்கின்றன. 
  • இந்தியன் பிரியாணி, சிறிலங்கள் இடியப்பப் பிரியாணி, ஈரானியன், இந்தோனீசியன், மலேசியன், காஸ்மீர், ஹைதரபாத், தாய், பிலிப்பினொ என அடுக்கிக் கொண்டே போகலாம்.
  • இந்தியாவில் மட்டும் 26 வகைகளுக்கு மேற்பட்ட பிரியாணிகள் தயாரிக்கிறார்களாம்.

பிரியாணி பிரியர்களே ஓடத் தயாராகுங்கள் ஹோட்டல்களை நோக்கி......

இடியப்பப் பிரியாணி பற்றிய எனது முன்னைய பதிவு 

எந்த அரிசி

எந்த வகையான அரிசியில் தயாரிக்கலாம். ஆரம்ப காலத்தில் நீண்ட ப்ரவுண் அரிசியில் தாயாரித்தார்கள். அதன் பின்னர் சிறிய வெள்ளை அரிசி வகைகளைப் பயன்படுத்தினார்கள். இப்பொழுது பெரும்பாலும் பசுமதி அரிசியைத்தான் பயன்படுத்துகிறோம்.

புதுவருட கரட் வெங்காய பிரியாணி


பசுமதி ரைஸ் - 1 கப்
பெரிய கரட் - 2
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 2 கப்
உப்பு - சுவைக்கு
நெய் - 2 ரீ ஸ்பூன்
ஓயில் - 2 ரீ ஸ்பூன்


வீட்டுத் தயாரிப்புத் தூள்கள்


மிளகாய்த் தூள் - ½ ரீ ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ரீ ஸ்பூன்
சீரகத் தூள் - ½ ரீ ஸ்பூன்
சோம்புத் தூள் - ¼ ரீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ரீ ஸ்பூன்

வாசனைக்கு

பட்டை - 2
ஏலம் - 4
பிரிஞ்சி இலை - 1
ரம்பை இலை - 4 துண்டு
பூண்டு இஞ்சி பேஸ்ட் - 2 ரீ ஸ்பூன்


தயாரிப்பு

பசுமதி அரிசியை 15 நிமிடங்கள் தண்ணிரில் ஊற வையுங்கள்.

கரட்டை மெல்லிய சிறிய 1 ½ அங்குல நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

வெங்காயம் நீளப் பக்கமாக மெல்லியதாக நறுக்குங்கள்.

மிளகாய் 4 நீள் பகுதிகளாக வெட்டி விடுங்கள்.

ஒரு ரீ ஸ்பூன் நெய்;யை சோஸ்பானில் விட்டு மெல்லிய தீயில் வடித்து எடுத்த அரிசியை 2 நிமிடம் வறுத்து விடுங்கள்.

இரண்டு கப் தண்ணீரை ஊற்றி அவித்து சாதத்தை எடுத்து ஆறவிடுங்கள்.

ஒரு ரீ ஸ்பூன் நெய் ஒரு ரீ ஸ்பூன் ஓயில் தாச்சியில் விட்டு பட்டை, ஏலம், பிறிஞ்சி சேர்த்து பூண்டு இஞ்சி பேஸ்ட் கலந்து வதக்குங்கள்.

பச்சை மிளகாயைப் போட்டு பொரிய விடுங்கள்.

வெங்காயம் கலந்து உப்புப் போட்டு கிளறி, சற்று வதக்குங்கள் கரட் துண்டுகளைச் சேருங்கள்.

வதங்கிய பின் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து கிளறுங்கள். பின் ஆறிய சாதத்தைக் கலந்து நன்கு சேருங்கள்.

பரிமாறும் பாத்திரத்தில் போட்டு வறுத்த கஜீவைத் தூவி விடுங்கள்.
புதுவருடப் பிரியாணி மூக்கைத்துளைத்திடும் உண்பதற்கு தயாராக.


ஏற்கனவே சமைத்து வைத்த பருப்பு, பிரட்டல் கறிகள், சிப்ஸ், சலட், துணையிருக்க சுவைத்திடுங்கள்.

இனிய வருடத்தின் ஆரம்பமாக!!!

பிரைட் ரைஸ்   இதுவும் ஒரு வகை பிரியாணிதான்.

:- மாதேவி -:

0.0.0.0

44 comments:

  1. ஆஹா கேரட், வெங்காய் சேர்த்து பிரியாணி.... வீட்டுல சொல்லிட வேண்டியது தான் - செய்யச் சொல்லி....

    ReplyDelete
  2. சங்ககாலப்புரியாணி கூடுதல் புதுமையான தகவல் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. "புதுவருட கரட், வெங்காய பிரியாணி"

    சரித்திரத்துடன் சுவையாய் பரிமாறிய பிரியாணிக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. மணக்கும் பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. சமையலில் அசாத்துவதுடன், சரித்திரம், பாரம்பரியம் பற்றிய குறிப்புகளும் நன்றாக இருக்கின்றன. வேடுவர் உணவு சமைக்கும் படமும் அபாரம்.

    ReplyDelete
  6. படங்களை பார்த்ததும் நாவில் எச்சில் ஊறுது. நாளைக்கு செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்

    ReplyDelete
  7. பார்க்கும் பொழுதே சாப்பிடனும் போல் இருக்கே.. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ருசியான கலர்ஃபுல்லான பதிவு

    ReplyDelete
  9. வாருங்கள் வெங்கட் நாகராஜ்.

    நீங்க கொடுத்து வைத்தவர்.உங்கள் மனைவி சமையலில் அசத்துபவர்தானே அசத்திடுவார். சுவைத்திடுங்க.

    ReplyDelete
  10. மிக்க நன்றி ஜலீலா.

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜனா.

    ReplyDelete
  12. சுவைத்ததற்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  13. வாருங்கள் Rathnavel.

    மகிழ்கின்றேன்.

    நன்றி.

    ReplyDelete
  14. ஓ...சங்ககாலப் புரியாணியா.அப்பவே இருந்ததைத்தான் இப்ப புது நாகரீகத்தோட செய்கிறோமா.கரட் இருக்கிறபடியா இனிப்புச் சுவையா இருக்குமோ மாதேவி !

    ReplyDelete
  15. கருத்துக்கு நன்றி Muruganandan M.K.

    ReplyDelete
  16. வாருங்கள் சிநேகிதி.

    நன்றி :)

    உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. மிக்க நன்றி லக்ஷ்மி.

    ReplyDelete
  18. வாருங்கள் ஹேமா.

    ஆரம்பம் அங்கேதான்.

    கரட் சேர்ப்பதுடன் காரத்திற்கு பச்சைமிளகாய், மிளகாய் தூள் சேர்ப்பதால் இனிக்காது ஹேமா.

    நன்றி.

    ReplyDelete
  19. சரித்திர பின்னனியுடன் பிரியாணி சுவை கூட்டுகிறது.

    செய்து பார்த்து விடுகிறேன்.
    நன்றி மாதேவி.

    ReplyDelete
  20. சமையலுடன் சரித்திரக் குறிப்பும்
    படங்களும் அருமை
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. டேஸ்ட்டியா இருக்குதே பிரியாணி.

    ReplyDelete
  22. So much information about biriyani. Good !!!

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. படத்தைப் பார்த்தாலே சாப்பிட ஆசை வருதே!

    ReplyDelete
  24. கலர்ஃபுல்லா இருக்குது..

    ரம்பை இலை போட்டதுக்கே ஒரு தனி மணம் வந்துருக்கணுமே :-)

    ReplyDelete
  25. புத்தாண்டு கொண்டாட்டம் பிரியாணியுடனா....

    நல்ல பகிர்வு. செய்து பார்த்திட்டா போச்சு.

    ReplyDelete
  26. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதி அரசு.

    ReplyDelete
  27. வாருங்கள் ரமணி உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  28. சுவைத்ததற்கு நன்றி அமைதிச்சாரல்.

    ReplyDelete
  29. சித்ரா! மகிழ்கின்றேன்.
    வருகைக்கும் பொங்கல் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  30. மிக்க நன்றி சென்னைப் பித்தன்.

    ReplyDelete
  31. நமக்கு சைவ பிரியாணிதானே :)

    வருகைக்கு மிக்க நன்றி கோவை2தில்லி.

    ReplyDelete
  32. பிரியாணி தயாரிப்பும் அருமை.பிரஷண் பண்னிய விதமும் அருமை.

    ReplyDelete
  33. ம்ம்
    அன்றே சரியா கமெண்ட் ப்போட முடியல

    கேரட் அப்படியே ஃப்ரெஷா இருக்கு
    அதுவும் இல்லாம சிப்ஸுடன் சூப்பரான மனமான பிரியாணி அருமை மாதேவி

    ReplyDelete
  34. விஷயங்களை பகிரும் விதமே தனி அழகு.பிரியாணி அருமை.

    ReplyDelete
  35. மாதேவி, உங்களுக்கு என் வலைத்தளத்தில் விருது.
    அன்புடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  36. ஜலீலா உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  37. மிக்க நன்றி
    பித்தனின் வாக்கு
    ஸாதிகா
    ஆசியா.

    ReplyDelete
  38. வாருங்கள் கோமதி அரசு.

    உங்கள் அன்பான விருது மகிழ்சியைத் தருகின்றது.

    மிக்க நன்றியுடன் பெற்றுக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  39. அருமையான குறிப்பு. அவசியம் செய்து பார்க்கிறேன்.

    தோட்டத்துக் கேரட் எவ்வளவு ஃப்ரெஷ்:)!

    சங்க காலத் தகவல்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  40. சங்ககால தகவல்கள் சுவரஸ்யம்...கேரட் வெங்காய பிரியாணி கலர்புல்லா சூப்பராக இருக்கு!!

    ReplyDelete
  41. வலைச்சரம் மூலமா வந்தேங்க. பிரியாணியுடன் சேர்ந்து சங்க கால செய்திகளும் கொடுத்து இருப்பது இரட்டிப்பு சந்தோசம். பிரியாணி யை பார்க்கும் போதே சாப்பிட தூண்டுது.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்