Sunday, March 18, 2012

நல்ல உணவும் குப்பை உணவும்


உயிரினம்  வாழ்வதற்கு உணவும் நீரும் அத்தியாவசியமானவை. காற்றைப் பற்றிச் சொல்லவில்லை என நிகைக்காதீர்கள். அதையும் சேர்த்துக் கொள்வோம். ஆனால் அது சமையலில் சேராதே!

இவை யாவும் அவசியமாக இருந்தபோதும் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் என்ற கேள்வி பலர் மனங்களிலும் எழுகின்றது.

நாவுக்கு சுவை தரக் கூடிய உணவுகளையே மனம் நாடி நிற்கும். இனிப்பு,காரம் உப்புக் கலந்த,  எண்ணெயில் பொரித்த சுவையான உணவுவகைகளை விரும்பி உள்ளே தள்ளிக் கொண்டிருக்க யாருக்குத்தான் ஆசையில்லை.

கொழுப்பு நிறைந்த பிட்ஷா, பர்ஹர், சிப்ஸ், பேஸ்டி, கேக், டோனட் உணவுக் கூடங்களை மக்கள் அலையாக மோதுவதைக் காண்கின்றோம்.

குப்பை உணவு junk food என்ற சொல்லை இப்பொழுது ஆங்கிலத்தில் உபயோகிக்கிறார்கள். ஆனால் குப்பையை அள்ளி வாயில் போடுவதில்தான் பலருக்கு நாட்டம்.

குப்பை உணவு

குப்பை உணவு என்றால் என்ன?

போஷாக்கு மிகவும் குறைவான உணவுகள் அவை.
  • அதே நேரம் அவற்றில் மிக அதிகமாக எண்ணெய், கொழுப்பு, இனிப்பு கலந்திருக்கும் 
  • அவற்றின் கலோரிப் பெறுமானம் மிக அதிகமாக இருக்கும். 
  • உப்பும் பொதுவாக அவற்றில் மிக அதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கும். 
  • ஆனால் போஷாக்குக் கூறுகளான புரதம், விற்றமின்கள், தாதுப் பொருட்கள் மிகக் குறைவாகவே இருக்கும்.

இவ்வகையான கொழுப்பு உணவுகளை அதிகம் உண்பதால் ஏற்படும் விளைவுகளையும் அறிந்துதான் இருக்கின்றோம்.

இருந்தும் இந்த நாக்கு எம்மை விட்டபாடில்லை. கணக்கு வழக்கின்றி இவற்றை விழுங்கிக் கொண்டே இருக்கிறது.

ஏன் எமது நாக்குகள் இவற்றை விட்டுவிடாது துரத்திப் பிடிக்கின்றன என்பதை பின்னர் பார்ப்போம்.


நாம் தினசரி உணவுகளை எந்த விகிதத்தில் உண்ண வேண்டும் என்பதை உணவு பிரமிட் சுட்டிக் காட்டுகிறது.

தானியங்களினால் உணவு அதுவும் முக்கியமாக தீட்டி தவிடு நீக்கப்படாத தானியங்களினாலான உணவு அதிகம் சாப்பிட வேண்டியதாகிறது. தினசரி 6 சேர்விங் என்கிறார்கள். இவை முக்கியமாக மாச்சத்தைத் தருகின்றன.

அடுத்து காய்கறிகளும் பழங்களும் கிட்டத்தற்ற அதற்கு இணையாண அளவு உட்கொள்ளப்பட வேண்டியவையாகும். அதாவது காய்கறிகள் 3 சேர்விங் மற்றும் பழ வகைகள் 2 சேர்விங் என மொத்தம் 5 ஆகிறது. இவற்றில் இருந்து பெருமளவு நார்ப்பொருளும், விற்றமின் கனியங்கள் கிடைக்கின்றன.

புரதங்களைப் பொறுத்த வரையில் பால், தயிர், யோர்கட். சீஸ் போன்றவை 3 சேர்விங், மீன், இறைச்சி, கோழியிறைச்சி, பருப்பு பயறு கடலை போன்றவையும், விதைகளுமாக 2 சேர்விங்  உட்கொள்ள வேண்டும்.



ஆனால் மிகக் குறைந்த அளவு எடுக்க வேண்டியவை கொழுப்பு, எண்ணெய், இனிப்புகளாகும். இந்த குறைந்தளவு எடுக்க வேண்டிய உணவின் கூறுகளே குப்பை உணவுகளில் அதிகம் கலந்துள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் அதிகமாக எடுக்க வேண்டியது நீர். அதாவது சாதாரண நீர் மட்டுமே.

மென்பானம், குளிர்பானம், மதுபானங்கள் போன்றவை இதில் அடங்கவில்லை என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்.

அடிமையாகும் நாக்கு

ஏன் எமது மனமும் நாக்கும் வேண்டாத உணவு வகைகளுக்கு அடிமையாகின்றன?

இது பற்றி 2008 ல்  Paul Johnson and Paul Kenny ஆகியோர் ஒரு ஆய்வு செய்தார்கள். அதன்படி குப்பை உணவுகள் எனப்படுபவை எமது மூளையின் கலங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி அதை நாடச் செய்கிறது என்கிறார்கள். இது கொகேயின், ஹெரோயின் போன்ற போதைப் பொருட்கள் தமக்கு எம்மை அடிமையாக்குவதற்கு ஒத்ததாகும்.

பல வாரங்களுக்கு அத்தகைய குப்பை உணவுகளை அளவுகணக்கின்றி உண்பதால் மூளையில் உள்ள இன்ப மையங்கள் (pleasure centers) அவற்றிற்கு இசைவாகி மேலும்மேலும் மகிழ்ச்சிக்கான உணவையே நாடும்.

கருவிலும் பாதிக்க ஆரம்பிக்கிறது

இத்தகைய குணமானது வளர்ந்த மனிதர்களை மாத்திரம் பாதிக்கிறது என எண்ணிவிடாதீர்கள். கர்ப்பமாயிருக்கும் தாய் இவ்வாறான தவறான உணவுப் பழக்கத்தில் மூழ்கி இருந்தால் கருவில் வளரும் குழந்தைகள் பிறந்த பின்னர் இத்தகைய தவறான உணவுப் பழக்கத்தையே நாடும் என 2007ல் British Journal of Nutrition செய்த ஆய்வு கூறுகிறது.

அவசரத் தீனிகள்

இத்தகைய குப்பை உணவுகளின் தாயகம் கடை உணவுகள்தான். பெரும்பாலான உடனடியாக உண்ணும்படி வாங்கும் உணவுகள் இத்தகையவை. அவசர உணவுகள்,  திடீர் உணவுகள் (Fast foods) என்றெல்லாம் அழைக்கிறார்கள். வசதியான உணவுகள் convenience foods என்ற மற்றொரு பதமும் உண்டு.

அவசரத் தீனிகள் ஏன்? 


 இதற்குக் காரணம் இன்றைய வாழ்வானது அவசரமும் இயந்திர மயமும் ஆகிவிட்டது.

இத்தகைய உணவுகள்
  • உடனடியாகக் கிடைப்பது மாத்திரமின்றி, 
  • அதிக விலையுமற்றவை. 
  • இதனால் அனைத்துத் தரத்தினரையும் ஒருங்கு சேர அழைக்கிறது. 
  • இவற்றில் விலை குறைந்த கொழுப்பு இனிப்பு, உப்பு, தவிடு நீக்கபட்ட தானியங்கள் அல்லது அவற்றின் மா ஆகியவையே அடங்கும். 
  • ஆனால் சற்று விலை அதிகமான பொருட்களான போஷனைப் பொருட்களான பழ வகைகள், காய்கறிவகைகள், கொழுப்பற்ற இறைச்சி வகைகள் இருப்பது குறைவு.
இவற்றைத் தடுக்க இந்த நவீன உணவுப் பிரமிட் என்ன சொல்கிறது என்பதையும் பாருங்களேன். தெளிவாப் படிக்க மேலே கிளிக் பண்ணுங்கள்.


புதிய உணவுப் பிரமிட்டானது உணவு வகைகளைப் பற்றிக் குறிப்பிடுவதுடன் நின்று விடாது தினசரி உடற் பயிற்சி அல்லது உடல் உழைப்பு வேண்டும் என்கிறது.

வளர்ந்தவர்களுக்கு தினசரி 30 நிமிடங்களும், வளரும் குழந்தைகளுக்கு 60 நிமிடங்களும் என்பதை வலியுறுத்துகிறது.

எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கும் குறைந்த எடை மீண்டும் ஏறக் கூடாது எனத் தடுப்பதற்கும் இது 90 நிமிடங்களாகும்.

நோய்களை விதைக்கிறது

இத்தகைய உணவு முறைகளால் இன்று பலரும் அதீத எடை கொண்ட குண்டு மனிதர்களாக மாறி வருகின்றனர்.

ஒருவரது எடை எவ்வளவாக இருக்க வேண்டும். அவரது உயரத்திற்கு ஏற்பவே எடை இருக்க வேண்டும். இது ஆங்கிலத்தில் Body mass index எனப்படுகிறது. சுருக்கமாக BMI என்பார்கள் அதையே தமிழில் இப்பொழுது உடல் நிறை குறியீட்டெண் என அழைக்கிறார்கள். ஒருவருடைய உயரத்தின் அடிப்படையில் ஆரோக்கியமான உடல் எடையை மதிப்பிடுவதற்கு இக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

உங்களது  BMI எவ்வளவு?

உங்களது  BMI யை அறிவது எப்படி? உங்களது எடையை கிலோகிறாமில் அளந்து அதை மீற்றரிலான உங்கள் உயரத்தின் வர்க்கத்தால் பிரிப்பதாகும். இந்த இடியப்பச் சிக்கல் எனக்குப் புரியவில்லை என்பவர்களுக்கு வழி சொல்கிறேன்.

இந்த இணைப்பிற்குச் சென்று நீங்களே சுலபமாக அறிந்து கொள்ளலாம்


இது இலங்கை இந்தியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கானது. இலங்கை அரசின் சுகாதரத்துறை அமைச்சினால் வெளியிட்ப்பட்டுள்ளது.
உங்களது உயரத்திற்கு ஏற்றதா? அதிகமா? குறைவா என்பதைத் தருவதுடன் உங்களது உயரத்திற்கு எந்தளவு எடை இருப்பது நல்லது என்பதையும் அறிவுறுத்துகிறது.


நவீன உலகின் உயிர்கொல்லி நோய்களாக
  • நீரிழிவு, 
  • இருதய நோய்கள், 
  • உயர் இரத்த அழுத்தம், 
  • புற்று நோய்கள் 
ஆகியவை இனங்காணப்பட்டுள்ளன.

இவை தொற்று நோய்களை விட வேகமாகப் பரவி கணக்கிலடங்காத உயிர்களைக் காவு கொள்வதற்கு முக்கிய காரணம் இத்தகைய போஷாக்கற்ற உணவு முறைகளே. அவற்றுடன் உடலுழைப்பற்ற வாழ்க்கை முறையும், மாசடைந்த சூழலும் காரணங்களாகின்றன என்பதையும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

உடல் ஆரோக்கியமாக எவ்வளவு உண்ண வேண்டும்.


அதற்கு எவ்வளவு உண்ண வேண்டும்?


அதாவது எமது தினசரி கலோரித் தேவை எவ்வளவு என்பதைக் கண்டறிய இந்த இணைப்பைக் கிளிக் பண்ணுங்கள்

உங்கள் தினசரி கலோரித் தேவை எவ்வளவு

அதெல்லாம் சரி! ஆரோக்கியமான உணவுகள் எவை என்று சொல்லவில்லையே எனக் கேட்கிறீர்களா? whfoods.com இவற்றைப் பட்டியலிடுகிறது.



என்ன இவற்றில் சில எங்கள் நாட்டிற்குக் கிடைக்காதா என்கிறீர்களா? உண்மைதான். இருந்தாலும் இங்கு கிடைக்கும் பல வகை உணவுகளையும் சொல்கிறதே. அவற்றைப் பயன்படுத்திப் பலன் பெறலாமே.

மாதேவி

0.0.0.0.0.0

36 comments:

  1. அருமையான பதிவு மாதேவி. ஆரோக்கியத்துக்கு அவசியமான குறிப்புகளை விளக்கமாகத் தந்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  2. ஆஹா நல்ல உணவு, குப்பை உணவு பற்றிய தெளிவான பதிவு அனைவருமே படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நன்றி

    ReplyDelete
  3. விளக்கமான நல்ல பகிர்வு மாதேவி.நன்றி.

    ReplyDelete
  4. அனைவருக்கும் தேவையான ஒரு அத்தியாவசிய விடயத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  5. நாக்கின் ருசிக்கு அடிமையாகி ஜங்க் ஃபுட் சாப்பிடுவது எவ்வளவு கெடுதல் என்பதை அழகாக விளக்கியிருக்கீங்க. உயரத்துக்கேற்ற எடை இருக்க வேண்டும் என்கிற விஷயமும் கைதட்டி ரசிக்க வைத்தது. நான் வாரத்துல ஒரு நாள் காய்கறிகள் மட்டும் சாப்பிடறதுன்னு பழக்கம் வெச்சிருக்கேன். கலோரிகள் டேபிள் மிகப் பயனுள்ள விஷயம். ஆக மொத்தத்தில் மிகமிகப் பயனுள்ள பகிர்வு. அருமை!

    ReplyDelete
  6. மாதேவி, நல்ல உண்வும், குப்பை உண்வும் என்று நல்ல விரிவான , அருமையான பதிவை தந்து விட்டீர்கள்.
    உங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.

    ReplyDelete
  7. பயனுள்ள பகிர்வுங்க. நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  8. அருமையான & அவசியமான பதிவு.

    குப்பை உணவு என்ற சொல்:-)))))

    பாதி எழுதி வச்சுருக்கும் என் பதிவுக்கு இந்தத் 'தலைப்பு' கை கொடுக்கும். எடுத்துக்கவா மாதேவி?

    ReplyDelete
  9. உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  10. மிக்கநன்றி லஷ்மி.

    ReplyDelete
  11. அம்பலத்தார் உங்கள் கருத்துக்கு மகிழ்கின்றேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  12. உங்களுடைய ரம்யம் அண்ட் சின்னு ரேஸ்ரி இரண்டு பிளாக்களையும் பார்த்தேன். ரசித்தேன். மிகவும் அழகாகவும் கலைத்தன்மையோடவும் எழுதுகிரீர்கள். வாழ்த்துக்கள். லஷ்மி அம்மாவோட ஆஃப்ரிக்கா பயணத்தை பற்றி படித்துக்கொண்டிருந்தபொழுது உங்களிம் கமெண்ட்ஸ் தென்பட்டது, அப்படிபே வந்து பார்த்தபொழுது பிரமித்துவிட்டேன். தொடருங்கள் உங்கள் பணியை.

    ReplyDelete
  13. வாருங்கள் கணேஷ்.

    உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நீங்கள் கடைப்பிடிக்கும் உணவுப் பழக்கம் சிறந்த முறையாக இருக்கும்.

    வருகைக்கு மிக்கநன்றி.

    ReplyDelete
  14. வாழ்த்துக்களுடன் வருகை தந்திருக்கும் கோமதி அரசு. மகிழ்கின்றேன்.

    உங்கள் வாழ்த்துக்கள்தான் உயர்விக்கின்றன. மிக்க நன்றி.

    ReplyDelete
  15. மிக்க நன்றி கோவை2தில்லி.

    ReplyDelete
  16. வாருங்கள் துளசிகோபால்.

    தாராளமாக போடுங்கள். கேள்வியெல்லாம்கேட்க வேண்டுமா :))) கட்டுரைக்கு எந்த தலைப்பு சிறந்ததுவோ அதைப் போடுவதில் தவறில்லையே.

    உங்கள் சிறந்த நடையில் படிக்க மிக்க ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  17. அருமையான அவசியமான இடுகை மாதேவி.. நன்றி.

    குப்பை உணவின் கெடுதல்களை இளைய தலைமுறை கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டாத் தேவலை.

    ReplyDelete
  18. மாதேவி....குப்பை உணவென்று சொல்லி அப்படியான உண்வைக் காணும் நேரங்களில் "குப்பை உணவு" என்ற சொல் வந்து அருவருக்க வைத்துவிடும்.பிரயோசனமான பதிவு.சில நேரங்களில் ஆசைக்கு அடிமைப்பட்டுப்போகிறது நாக்கு !

    ReplyDelete
  19. எவ்வளவுதான் எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் பார்க்கிறீர்கள்.ஆனாலும் கேக்க மாட்டேன் எட்ன்கிரார்களே? அருமையான விளக்கமான பதிவு

    ReplyDelete
  20. ''அதிகமாக எடுக்க வேண்டியது நீர். அதாவது சாதாரண நீர் மட்டுமே''. இந்த ஒரு தகவலையாவது படித்து கடைப்பிடித்தால் நல்ல்து.
    எல்லா முக்கிய தகவல்களையும் ஒரே பதிவில் தந்து அசத்தி விட்டீர்கள்

    ReplyDelete
  21. தேர்ந்தெடுத்த உணவுகளை உண்ண ஆசைதான். ‘மெஸ்’ நடத்துறவங்களுக்கு தெரியனுமே!

    ReplyDelete
  22. அதிகளவான தரவுகளுடன் தகவல்களைத் தருவது உங்களின் தனிச்சிறப்பு. பலரும் பயன்பெற ஊக்கமளிக்கட்டும் உங்கள் பதிவுகள்.தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  23. நல்ல விவரங்கள் அடங்கிய பதிவாகக் கொடுத்திருக்கிறீர்கள் மாதேவி.
    பீட்சா போன்ற ஃபாஸ்ட் ஃபூஉகளை அம்மாக்கள் வழியாகக் குழந்தைகளுக்கும் பிடித்துவிடுகிறது என்பது அதிர்ச்சியான செய்தி.
    முடிந்தவரை உங்கள் அறிவுரைகளைப் பின்பற்ற முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  24. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான உணவு பழக்கம், உயரத்திற்கேற்ற சரியான எடையை அறிவது எப்படி? தவிக்க வேண்டிய உணவுகள் எவை? என்பது பற்றி மிக தெளிவாக புரியும்படி பதிவிட்டிருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி தோழி

    ReplyDelete
  25. இனிய நந்தன வருட வாழ்த்துக்கள் மாதேவி.சுகமா இருக்கிறீங்களோ !

    ReplyDelete
  26. அருமையான இடுகைக்கு மிக்க நன்றி மாதேவி!!

    ReplyDelete
  27. அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய விஷயங்களை
    மிக நேர்த்தியாக விவரமாக பதிவு செய்து கொடுத்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. அருமையான பதிவு ...

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
    இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
    தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    http://tamil.dailylib.com

    To get vote button
    http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/

    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

    நன்றி
    தமிழ் போஸ்ட்

    ReplyDelete
  29. வருகைதந்து கருத்துக்கள் கூறிய

    அமைதிச்சாரல்
    ஹேமா
    முரளீதரன்
    வியபதி
    சத்ரியன்
    வல்லிசிம்ஹன்
    ராஜி
    அனைவருக்கும் மிக்கநன்றி.

    ReplyDelete
  30. மேனகா
    ரமணி
    krishy
    பித்தனின் வாக்கு உங்கள் வருகைக்கு மகிழ்கின்றேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  31. எப்படி ஒரு அருமையான பதிவு.நன்றி

    ReplyDelete
  32. இலங்கை தமிழ் சமயல் பேராசியையே!,
    எங்களுக்குள் ஒரு பிரச்சனை. கத்தரிக்காய் தோலுடன் சமைப்பது தான் சரி என்று ஒரு பிரிவும்(55%) தோலில்லாமல் சமைப்பதுவே சிறந்தது என்று ஒரு பிரிவும்(45%)நிற்கிறார்கள். எது சரியானது ?தெளிவுபடுத்தினால் நாங்கள் பயன் அடைவோம். நன்றி.

    ReplyDelete
  33. http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_20.html
    இன்று வலைச்சரத்தில் இந்த இடுகையை பகிர்ந்துள்ளேன்.அருமை.நன்றி.

    ReplyDelete
  34. மிக்க நன்றி ஆசியா.
    வருகிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்