Friday, May 18, 2012

சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை

குளர்மையுடையது எனப் போற்றப்படும் இது இடைவெப்ப வலயத்திற்குரிய மரம். Lythraceae குடும்பத்தைச் சார்ந்தது.
 • ஈரான் ஆப்கனிஸ்தான் நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. 
 • எகிப்து இஸ்ரேலில் காட்டுச் செடியாக வளர்ந்தது. 
 • பின் மத்தியதரைக் கடல் நாடுகளுக்கு பரவியது என்கிறார்கள். 
 • இமாலயா பகுதியில் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

எங்கள் தோட்டத்தில் பூவாக காயாக பழமுமாக
மாதுளை, மாதுளங்கம், என்ற பெயர்களில் அழைப்பார்கள். தாவரவியல் பெயர் Punica Granatum. இதில் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு என மூன்று வகைகள் உள்ளன. இதை "சூப்பர் புருட் " (Super fruit ) என்றும் அழைக்கின்றார்கள்.

வீட்டுத் தோட்டங்களிலும் சிறிய இனங்களை பெரிய சாடிகளிலும் பயிரிட்டுக்கொள்ளலாம். இம் மரத்தின் பூ, பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவ குணமுடையது என்கிறார்கள்.

சிறிய மரம் 8 மீற்றர் உயரம் வரை வளரும். 100- 150 பழங்கள் வரை கொடுக்கும். நல்ல வடிகால் கொண்ட வண்டல் மண் மாதுளம் செடி வளர்வதற்கு ஏற்றது.

பொதுவாக மழைக்கால டிசம்பரில் வெட்டிவிட்டால் பெப்ரவரி மார்ச்சில் பூத்து யூன் ஆகஸ்டில் பழம் கிடைக்கும் என்கிறார்கள்.

வரிசைக்கு வரிசை நாலு மீற்றரும் செடிக்கு செடி 2 மீற்றரும் இருக்குமாறு மாதுளை நடவு செய்வது சிறந்தது என்கிறார்கள்.


மாதுளம் பயிர்ச் செய்கை
கறுத்தத் தோலுடைய மாதுளம் பழம் பார்த்திருக்கிறீர்களா, Saveth இனம். கறுத்த இனத்திற்குள் இருப்பதும் சிவத்த முத்துக்கள்தான்.
சித்த ஆயுள்வேத மருத்துவங்களில்

சித்த ஆயுள் வேத மருத்துவ முறைகளில் இதற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

 • இரத்த விருத்திக்கு நல்லது 
 • இதயத்திற்கும் மூளைக்கும் சக்தியைத் தரவல்லது. 
 • குடற்புண்களைக் குணப்படுத்துகிறது. 
 • நோயினால் பாதிப்படைந்தவர்கள் உடல் தேறவும் பலம் பெறவும் இப்பழம் பெரிதும் உதவும்.
மேலும்.....
 • பித்தத்தைத் தவிர்க்கும். 
 • மலட்டுத்தன்மையை நீக்கும். 
 • உடற்சூட்டைத் தணிக்கும். 
 • மாதுளம் சாற்றுடன் தேன் கலந்து பருக வாந்தி நிற்கும் 
 • மாதுளம் பழம் விதையுடன் இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும். 
என ஆயுள்வேத சித்த வைத்தியங்களில் சொல்லப்படுகிறது.
முத்தனைய மாதுள முத்துக்கள்
உணவுவகைகள்

தாகத்தைத் தணிக்கும். என்பதால் கோடையில் சாப்பிடச் சிறந்தது. ஜீசாகவும் மில்க் ஜேக், சர்பத், மாதுளை லசி, மாதுளம் சாதம், மாதுளம் சலட், புருட் சலட், பஞ்சாமிர்தம், எனத் தயாரித்து உட்கொள்ளலாம்.

புடிங் வகைகளில் கலக்கலாம்.

வாட்டிய இறைச்சி வகைகளிலும் சலட்இலைகளுடன் கலக்கின்றார்கள்.

பேசியன் சூப்பில் போடுகின்றார்கள்.

மாதுளம் பானமாகவும் விற்கப்படுகிறது.

ஆர்மேனியாவில் வைன் தயாரிக்கிறார்கள்.

கலிபோர்ணியா, அரிசோனாவிலும்  ஜீஸ் தயாரிக்கப் பயிரிடுகின்றார்கள்.

இந்தியாவில் மஹாராஸ்ரா குஷராத் மாநிலங்களில் அதிகளவில் பயிராகிறது.

விஞ்ஞான ஆய்வுகளில்

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் தன்மை இப் பழத்திற்கு உண்டு என்கிறார்கள் ஆராச்சியாளர்கள். இப்பழத்தில் Phytochemical உள்ளது. எலஜிக் அமிலம் என அழைக்கபடும் இது புற்றுநோய் கலங்களைக் கட்டுப்படுத்த உதவும் என்கிறார்கள். இது ஆய்வக முடிவுதான். இன்னமும் மனிதர்களில் பரீட்சித்துப் பாரக்கவில்லை.

மாதுளம் பிஞ்சு என் அக்கா கையில்

மேலும் சுவாசப்பை புற்று நோய், புரஸ்ரேட் புற்று நோய், ஆகியவை தோன்றுவதற்கான சாத்தித்தைக் குறைக்கும் என எலிகளில் செய்யபட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Pomegranate Health Benefits வீடியோவில் பார்க்க

அல்சிமர் நோய் தீவிரமடைவதைத் தாமதமாக்கும் என எலிகளில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வு தெரிவித்தது.


 எலும்புத் தேய்வு நோயான ஒஸ்டியோ ஆரத்திரைடிஸ் நோயில் குருத்தெலும்பு தேய்வதைக் குறைக்கக் கூடும் என மற்றொரு ஆய்வு தெரிவித்தது.


தினமும் 1.7 அவுன்ஸ் மாதுளம் சாறு குடித்தால் உயர் இரத்த அழுத்தமானது 5 சதவிகிதத்தால் குறையும் என ஒரு ஆய்வு கூறியது.

அதேபோல பற்களுக்கும் முரசுகளுக்கும் இடையே காரை படிவது dental plaque குறையலாம் எனவும் வேறொரு ஆய்வு கூறியது.

இத்தகைய ஆய்வுகளும் பெரும்பாலும் மாதுளை உற்பத்தியாளர்களின் அனுசரணையுடன் செய்யப்பட்டதால் நம்பகத்தன்மை குறைவு என்கிறார்கள்.

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை இவற்றின் நன்மையை உறுதிப்படுத்தவில்லை. மேலும் ஆண்மைக் குறைப்பாடு பற்றி செய்திகளுக்கு உதவுவது பற்றி ஆதாரம் இல்லை என்கிறது.

படிக்க  Evidence from pomegranate study not firm
 
இதில் உள்ள போஷணைப் பொருட்கள் என்ன? எவ்வளவு இருக்கின்றன? அமெரிக்காவின் USDA தரும் தகவல்கள் கீழே உள்ளன

 
Pomegranate, arils only
Nutritional value per 100 g (3.5 oz)
Energy 346 kJ (83 kcal)
Carbohydrates 18.7 g
- Sugars 13.7 g
- Dietary fiber 4.0 g
Fat 1.2 g
Protein 1.7 g
Thiamine (vit. B1) 0.07 mg (6%)
Riboflavin (vit. B2) 0.05 mg (4%)
Niacin (vit. B3) 0.29 mg (2%)
Pantothenic acid (B5) 0.38 mg (8%)
Vitamin B6 0.08 mg (6%)
Folate (vit. B9) 38 μg (10%)
Vitamin C 10 mg (12%)
Calcium 10 mg (1%)
Iron 0.30 mg (2%)
Magnesium 12 mg (3%)
Phosphorus 36 mg (5%)
Potassium 236 mg (5%)
Zinc 0.35 mg (4%)
Percentages are relative to
US recommendations for adults.
Source: USDA Nutrient Database

குறைந்தளவு கலோரிச் சத்தும் கொழுப்பும்  இருப்பதால் உடலுக்கு தீமையளிக்காது.  சிறிதளவாவது நன்மையளிக்கும் என நம்பலாம். அழகிய பழமாகவும் கவர்வதால் விரும்பி  உண்ணப் படுகின்றது. சுவையாகவும் இருக்கின்றதல்லவா அதனால் உண்பது நல்லதே.

சலட் செய்ய

தேவையானவை 

மாதுளம் பழம் - 1
தயிர் - 1 கப்
கப்பல் வாழைப்பழம் -  2
சீனி -  1 ரீ ஸ்பூன்
உப்பு சிறிதளவு

தயாரிக்க

 • தயிரை நன்கு அடித்து சீனி, உப்பு கலந்துவிடுங்கள். 
 • பழங்களைக் கழுவி தோல் நீ்க்கி எடுங்கள்.
 • வாழைப்பழத்தை 1/2 அங்குல வட்டமாக வெட்டி அடித்து வைத்த தயிரில் கலவுங்கள்.
 • மாதுளை முத்துக்களை உடைத்து எடுத்து கலந்துவிடுங்கள்.
 • குளிரூட்டியில் வையுங்கள்.
 • கண்ணுக்கு கலர்புல்லாக இருக்கும். நாவுக்கு குளிர்ச்சியான சலட்.
தனியாகவும் சாப்பிடலாம்.

சாதத்துடன் கலந்து சாப்பிட கோடை வெப்பத்திற்கு குளிர்ச்சி தரும்.

கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியான சலட் பற்றிய முன்னைய பதிவுகள்

 1. ஜில்லென்று ஒரு சலட்
 2. வெஜிட்டபிள் அன்ட் புருட் சலட்


-: மாதேவி :-

22 comments:

 1. தெரியாத பல தகவல்களுடன் மாதுளையின் பயன்களையும் அறிந்து கொண்டோம். அருமையான சாலட் குறிப்புக்கும் நன்றி மாதேவி.

  ReplyDelete
 2. மாதுளம் பழம்பற்றிய அருமையான தகவல்கள். நன்றி

  ReplyDelete
 3. மாதுளையைப் பற்றிய அரிய தகவல்கள் பகிர்விற்கு நன்றி.படங்களோடு குறிப்புகள் சூப்பர். சாலட் மிக அருமை.

  ReplyDelete
 4. கோடைக்கேற்ற உணவுன்னு சொல்லி ஒரு அருமையான சலட் செய்முறை கொடுத்திருக்கீங்க. ட்ரை பண்றோம். அதைவிட அருமையா இருந்தது மாதுளையப் பத்தி நீங்க கொடுத்திருக்கற அரிய தகவல்கள். சூப்பர்ப்! எக்ஸலண்ட்மா!

  ReplyDelete
 5. மிக அருமை மாதுளைய பற்றி நல்ல தகவல் கொடுத்து இருக்கீங்க

  இது மெயினாக ஒருமாதம் சாப்பிட்டு வந்தால் ரத்ததின் அளவும் அதிகரிக்கும்.

  ReplyDelete
 6. அடேயப்பா மாதுளை குறித்து அனைத்து தகவல்களையும்
  மிக அழகாக நேர்த்தியாக அழகிய படங்களுடன்
  ஒரு பதிவில் அடக்கிவிட்டீர்களே
  மனம் கவர்ந்த அருமையான பயனுள்ள பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அருமையான பதிவு .. நிறைய புது செய்திகள் நன்றி

  ReplyDelete
 8. உங்கள் உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 9. வாருங்கள் லஷ்மி. உங்கள் கருத்துக்கு மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 10. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் கணேஷ்.

  ReplyDelete
 11. கருத்துக்கு நன்றி ஜலீலா.

  ReplyDelete
 12. வாருங்கள் ரமணி.

  உங்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சியைத் தருகின்றது.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 13. "என் ராஜபாட்டை" உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.

  கருத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 14. அருமையான தகவல்கள்

  ReplyDelete
 15. மாதுளை ஆரோக்கியத்துக்கு நல்லதாச்சே பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 16. மாதுளை சலட் முதன் முதல் நான் இங்கு வந்துதான் கண்டு அதிசயப்பட்டேன்.கருப்பு மாதுளை நான் கண்டதில்லை மாதேவி.நம்மூரில் இருக்கிறதா?நிறைவான மாதுளம் பதிவு.நன்றி !

  ReplyDelete
 17. வலைச்சரம் வாங்க
  http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_26.html

  ReplyDelete
 18. மாதுளையின் சிறப்பு அறிந்ததேன் மிகவும் பயனுள்ள செய்தி .....நன்றி

  ReplyDelete
 19. நிறைய செய்திகளுடன் பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 20. பல நல்ல செய்திகளுடனும், நிறைய படங்களுடன் கூடிய மிகவும் பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 21. மாதுளையின் படங்கள் எல்லாம் கொள்ளை அழகு.
  பயனுள்ள நல்ல பகிர்வு.

  சாலட் அருமை.

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்