Tuesday, July 17, 2012

வயல் நெல் சோறு சாப்பிட வாங்க


வேட்டைக் காலம் முடிய மனித நாகரீகத்தின் ஆரம்பமாக விவசாயம் செய்ய நதிக்கரை ஓரங்களில் குடியேறினர்.

சோறும் தானியங்களும் பழைய கால பிரதான உணவாக இருந்திருக்கின்றன. தினைப்புலம் காத்த வள்ளியும் எங்கள் புராணக்கதையில் இருக்கின்றார்.


ஆரியர்கள் தானியங்ளைப் பயிரிட்டு இருந்தார்கள் என்பதை பாரம்பரிய கதைகளிலிருந்து அறிகின்றோம். பாளி நூலில் 307 வகையான நெல்லினங்கள் காணப்படடன என்கிறார்கள்.

நன்றி commons.wikimedia.org
பழம் தமிழர் உணவுகள் தினைச்சோறு, சாமைச்சோறு, வரகரிசிச் சோறு,உழுத்தம் சோறு, வெண்சோறு, கம்பஞ் சோறு, மூங்கில் அரிசிச் சோறு,  நீர்ச் சோறு, குறுணி அரிசிச் சோறு, கூட்டாஞ் சோறு, என பல்சுவைப் பட்டதாக இருந்திருக்கின்றன.

ஆசிய நாட்டவர்களின் பிரதான உணவு நெல் அரிசிச் சோறு. இலங்கையும் அரிசி உணவை உண்ணும் முதன்மை நாடாக விளங்குகிறது.

நன்றி eelamlife.blogspot.com

இலங்கையில் வடக்குக் கிழக்கு உள்ளிட்ட பல பாகங்களிலும் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.

உலகில் அதிகம் உண்ணப்படும் தானியம் அரிசியே ஆகும். 40க்கு மேற்பட்ட நாடுகளில் அரிசியே பிரதான உணவாக இருக்கிறது.

Thanks:- perfecthealthdiet.com
அரிசியுணவுண்ணும் நாடுகளில் (China, India, Japan, Indonesia, and southeast Asia; and in sub-Saharan Africa) உடல் அதீத பருமனடைவோர் (Obese) குறைவு என்கிறார்கள். படம் மேலே.

உலகளாவிய ரீதியில் உணவிலிருந்து கிடைக்கும் சக்திப் பெறுமானத்தில் 20 சதவிகிதத்தை அரிசியே வழங்குகிறது. அதே வேளை கோதுமை 19 சதவிகிதத்தையும், சோளம் 5 சதவிகிதத்தையும் வழங்குகிறது.

கலர் கலராகவும் அரிசிகள் கிடைக்கின்றன. நாம் காணும் வெள்ளை அரிசி, தவிட்டு நிற அரிசி என்பவற்றிக்கு அப்பால் சிவப்பு, கத்திரிப்பூ கலரிலும் கிடைக்கின்றன.

கீழே Korean Purple Rice and Beans
Thanks:-  mightysweet.com
இலங்கையைப் பொறுத்தவரையில் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடையவில்லை. இந்தியா சீனா போன்ற வெளி நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது.

மாறி வரும் கால நிலை மாற்றங்களும், நீர் பற்றாக் குறையும் மழையின்மை, வரட்சி, வரட்சிக்குப் பின்னான பெருவெள்ளப் பெருக்குகளாலும் பயிரிடுவதில் பிரச்சனைகளும் சவால்களும் எழுகின்றன. நிலத்தடி நீர் வரட்சியடையும்போது உவர்ப்புத் தன்மை உண்டாகும். கடல் நீர் உயர்வதாலும், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர்உப்பு நீராக மாறுவதாலும் உணவு உற்பத்தியும் பாதிப்படைகிறது.

சீனாவில் வரட்சியடைந்த ஒரு நீர்த் தேக்கத்தில் மிருகங்களும் மனிதர்களும்....
உலகில் அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் வியட்நாம் மக்கான் டெல்டா பகுதியில் புவி வெட்பத்தால் கடல் நீர் உட்புகுந்து நெல்வயல்கள் அழுகிப் போய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. தொடர்ச்சியான அதீத உரவகைளின் இரசாயனப் பாவனை நிலத்தின் உற்பத்தித் தன்மையைக் குறைக்கின்றது என்கிறார்கள்.

நெல்லைத் தாக்கும் நோயில் பக்டீரியாவின் தாக்கமே அதிக பாதிப்பைத் தருகின்றது. இதைத் தடுக்க இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில்; புதியரக நெல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'சம்பா மசூ10ரி' என்ற பெயரிடப்பட்டுள்ள இவ்வினம் பக்றீரியா நோயினால் ஏற்படும் தாக்கத்தை தாங்கக் கூடிய இனம் என்கிறார்கள். இவ்வினத்தை நெல் ஆராச்சி நிலையமும் உயிரியல் மையமும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்க சிறப்பம்சமாகும். உயரி தொழில் நுட்ப கருவி ஒன்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட சோதனைகள் மேற்கொள்ளபட்டு இதன் தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

நன்றி:- sreechandrab.sulekha.com பாரம்பரிய முறையில் அறுவடை
ஆரம்பத்தில் தனிமனித உழைப்பால் உருவாக்கபட்ட நெல் விளைச்சல் நாளடைவில் யந்திரங்களின் உதவியுடன் நெல் வெட்டுதல் பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.

இயந்திரங்களின் உதவியால் நெல் அறுவடை

நெல் புல் வகையைச் சேர்ந்த தாவரம். தென்கிழக்காசியாவில் தோன்றியது என்கிறார்கள். நாற்று நடுவதற்கு நாற்றுக்கள் முப்பது நாள் பயிராக இருக்க வேண்டும்.

நன்றி blog.balabharathi.net
நெல் 5 மாதங்கள் வரை வளரக் கூடிய ஒருவருடத் தாவரமாகும். உலகில் முதல் முதலாக ஆசிய நெல் ஆபிரிக்க நெல் என இரு இன நெற் பயிர்கள் பயிரடப்பட்டன என்கிறார்கள். ஆசியாவில் நெற் சாகுபடி கி.மு 4500 முன்பாகவே பல நாடுகளில் ஒரே நேரத்தில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாக அறியப்படுகிறது.

உலகில் சோளத்திற்கும் கோதுமைக்கும் அடுத்ததாகப் பயிரப்படுவது நெல்தான்.

நாட்டரிசி, மொட்டைக கறுப்பன் அரிசி, வவுனியா அரிசி, வரணி அரிசி, தம்பலகாமம் வயல் நெல் அரிசி, இறத்தோட்டை வயல் நெல், என்றெல்லாம் வண்டில், லொறிகளில் மூட்டை மூட்டையாக பயணித்து வந்தன. பத்தாயங்களில் சேகரித்து வைக்கப்பட்டு கொத்துக்களால் அழந்து எடுக்கப்பட்ட காலங்கள் எல்லாம் மறைந்துவிட்டன. நெல் அவித்து நிழலில் உலர்திக் காயவைத்து உரலில் இட்டு உமி தீட்டி புடைத்து மண்பானையில் இட்டு சோறு ஆக்குவது பாட்டிகாலம் அதன் சுவை இப்போது உண்ணக் கிடைப்பதில்லை.

முற்றத்தில் உலர்திய நெல்லை அணில், குருவிகள், காகம், கோழி கூட்டாக உணவு உண்ணும். உமிக்குருவிஎன்றே ஒரு குருவியினம் இருக்கின்றது. இரவில் எலிகளும் வெட்டிக் கொள்ளும். எறும்பும், அந்துப் பூச்சிகளும் உணவாக்கிக் கொள்ளும்.

போஷாக்கைப் பொறுத்த வரையில் அரிசியில் அதிகமிருப்பது மாப்பொருள்தான். ஆயினும் ஓரளவு புரதமும் இருக்கிறது . இவற்றைத் தவிர நார்ப்பொருளும் அதிகம் உண்டு. தயமின், நியாசின், ரைபோபிளேவின் போன்ற விற்றமின்களும் அதிகமுண்டு. ஆயினும் தீட்டாத அரிசியிலே இவற்றின் செறிவு அதிகமாக இருக்கும். நன்கு தீட்டும்போது தவிட்டுடன் இவை நீங்கிவிடுகின்றன. தவிடு உண்ணும் மாடுகளுக்கு நல்ல போஷாக்குக் கிடைக்க சக்கையை நாம் உண்கின்றோம்.


Rice Nutrition Chart

Rice Type   
Protein (g/100g)   
Iron (mg/100g)   
Zinc (mg/100g)   
Fiber (g/100g)
White Rice (polished)   
6.8   
1.2   
0.5   
0.6
Brown Rice   
7.9   
2.2  
0.5   
2.8
Red Rice   
7.0   
5.5   
3.3   
2.0
Purple Rice   
8.3   
3.9   
2.2   
1.4
Black Rice   
8.5   
3.5   
-   
4.9


கால மாற்றத்தில் வெள்ளை அரிசிகள் முதலிடம் வகிக்கின்றன. சம்பா, பொன்னி, பாஸ்மதி, பாட்னா, சூரியச்சம்பா, எனப் பல்வேறு பெயர்களில் வலம் வருகின்றன. மக்களும் சுவை அதிகம். சமைக்கும் நேரம் குறைவு எனக் காரணம் கூறி இவற்றையே நாடுகிறார்கள்.

தற்கால உணவுப் பழக்கங்களில் உடல் நலம் பற்றிய அக்கறை குறைந்து நாவின் சுவை குறித்த பார்வையே மேலோங்கி நிற்கிறது. இதனால் நாட்டரிசிச் சோற்றை மக்கள் பெரிதும் விரும்புவதில்லை. மெதுவான வெள்ளை அரிசிச் சோற்றையே விரும்புகிறார்கள். அதனால் உண்ணும் அளவும் அதிகரிக்கிறது. எடுக்கும் அளவு கூடுவதால் நீரிழிவு,கொலஸ்டரோல் வருவதற்கு ஏதுவாகின்றன.

அரிசியை வடித்து கஞ்சியைக் கொட்டி சத்துக்களை வீணாக்காமல் சமையுங்கள். கஞ்சியை வடித்தால் வீட்டில் உள்ளோர் பகிர்ந்து குடித்துவிடுங்கள்.


நாட்டரிசிச் சோறு

தேவையானவை
நாட்டரிசி - 1 கப்
தண்ணீர்  - 2 1/4 -  2 1/2 கப் 

செய்முறை

அரிசியைக் கழுவி, கல்லிருந்தால் அரித்து விடுங்கள்.
பிரஷர் குக்கரில் இட்டு தண்ணீரை விட்டு 5 விசில் வைத்து எடுங்கள்.
ரைஸ் குக்கரில் சமைத்தும் எடுக்கலாம்.

-: மாதேவி :-

0.0.0.0.0.0.0

20 comments:

  1. நாட்டரிசிச் சோறுக்கு செய்முறை கொடுத்தீர்கள் என்பதை விட அரிசியைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதிட்டீங்கன்றதுதான் உண்மை மாதேவி. படித்தேன். பிரமித்தேன். தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  2. இவ்வளவு அழகாப் பரிமாறி வெச்சுருக்கறதைப் பார்த்ததும் பசிக்குது :-)))

    அரிசியின் அருமை பெருமைகளை அறியத்தந்த சுவையரசிக்கு நன்றி :-)

    ReplyDelete
  3. நாங்க இருக்கும் இடத்தில் இந்த அரிசில்லாம் கிடைக்காதே?

    ReplyDelete
  4. எம்மாடி எவ்வளவு தகவல்கள்.!

    அருமை அருமை...தொடரட்டும்!

    ReplyDelete
  5. ஆஹா பாக்கவும் படிக்கவும் நல்லா இருக்கு சகோ....

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. தற்கால உணவுப் பழக்கங்களில் உடல் நலம் பற்றிய அக்கறை குறைந்து நாவின் சுவை குறித்த பார்வையே மேலோங்கி நிற்கிறது.//

    நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் , மக்கள் இப்போது விழிப்புணர்வு பெற்று விட்டார்கள் பழைய வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆசை பட்டு இயற்கை விவசாயம், கை குத்தல் அரிசி என்று பழமைக்கு திரும்பிக் கொண்டுஇருக்கிறார்கள்.

    உங்கள் வயல் நெல் சோறு சாப்பிட்டேன் அருமை மாதேவி.

    ReplyDelete
  7. arisi-yil ithanai rahangala endru viyaka thonuthu.pathivu mikavum payan ullathu. nandri.

    k m abubakkar
    dt. 17 07 2012

    ReplyDelete
  8. வாருங்கள் பால கணேஷ்.

    நீங்கள் கூறியவை மகிழ்ச்சியைத் தருகின்றது.

    நன்றி.

    ReplyDelete
  9. அமைதிச்சாரல் சாப்பிடத்தானே சமைத்து வைத்திருக்கின்றேன். எடுத்துச் சாப்பிடுங்கள் :))

    முதல்படம் எங்கவீட்டு விரதச்சாப்பாடு.

    நன்றி சாரல்.

    ReplyDelete
  10. வாங்க லக்ஷ்மி. வருகைக்கு நன்றி.

    எல்லா இடமும் கிடைப்பதில்லைத்தான் கிடைப்பதே தெய்வம் என நினைக்க வேண்டியதுதான்.

    சிறுவயதில் எங்கள்வீடுகளில் வெள்ளை அரிசிச்சோறு எப்போதாவதுதான் சமைப்பார்கள்.

    இப்பொழுதும் எங்களுக்கு இடையிடையே சிவப்பரிசிச்சோறு இல்லாவிட்டால் நாக்குச் செத்துவிடும்.:)

    ReplyDelete
  11. வரலாற்றுச் சுவடுகள்.
    நன்றி...நன்றி. :)

    ReplyDelete
  12. மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete
  13. வாருங்கள் கோமதி அரசு.

    நீங்கள் கூறியது மிகவும் சரி விழிப்புணர்வும் உண்டு. வரவேற்க வேண்டிய விடயம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  14. உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி ABUBAKKAR.

    ReplyDelete
  15. அருமையான பதிவு... படங்கள் பிரமாதம்...
    Rice Nutrition Chart - பயனுள்ள தகவல்...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete
  16. அரிசியின் வரலாற்றை
    ஆச்சரியமாய் பகிர்ந்த
    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  17. அழகான படங்களோடு அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. ஆஹா..பதிவு பழைய நிகழ்வுகளை கிளறி விட்டு விட்டது

    ReplyDelete
  19. நல்ல தகவல்


    நன்றி,
    http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  20. வெள்ளையரிசி சமைக்கும்போது சிவப்பரிசியை நான் பாதிக்குப் பாதி கலந்தே இப்போதும் சமைப்பேன்.நிறைந்த அரிசித் தகவல்கள் மாதேவி.சோறே பிரதானமாகச் சாப்பிடும் எங்களுக்கு இத்வும் தெரியாமப் போனால் எப்பிடி !

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்