வேட்டைக் காலம் முடிய மனித நாகரீகத்தின் ஆரம்பமாக விவசாயம் செய்ய நதிக்கரை ஓரங்களில் குடியேறினர்.
சோறும் தானியங்களும் பழைய கால பிரதான உணவாக இருந்திருக்கின்றன. தினைப்புலம் காத்த வள்ளியும் எங்கள் புராணக்கதையில் இருக்கின்றார்.
ஆரியர்கள் தானியங்ளைப் பயிரிட்டு இருந்தார்கள் என்பதை பாரம்பரிய கதைகளிலிருந்து அறிகின்றோம். பாளி நூலில் 307 வகையான நெல்லினங்கள் காணப்படடன என்கிறார்கள்.
நன்றி commons.wikimedia.org |
ஆசிய நாட்டவர்களின் பிரதான உணவு நெல் அரிசிச் சோறு. இலங்கையும் அரிசி உணவை உண்ணும் முதன்மை நாடாக விளங்குகிறது.
நன்றி eelamlife.blogspot.com |
இலங்கையில் வடக்குக் கிழக்கு உள்ளிட்ட பல பாகங்களிலும் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.
உலகில் அதிகம் உண்ணப்படும் தானியம் அரிசியே ஆகும். 40க்கு மேற்பட்ட நாடுகளில் அரிசியே பிரதான உணவாக இருக்கிறது.
Thanks:- perfecthealthdiet.com |
உலகளாவிய ரீதியில் உணவிலிருந்து கிடைக்கும் சக்திப் பெறுமானத்தில் 20 சதவிகிதத்தை அரிசியே வழங்குகிறது. அதே வேளை கோதுமை 19 சதவிகிதத்தையும், சோளம் 5 சதவிகிதத்தையும் வழங்குகிறது.
கலர் கலராகவும் அரிசிகள் கிடைக்கின்றன. நாம் காணும் வெள்ளை அரிசி, தவிட்டு நிற அரிசி என்பவற்றிக்கு அப்பால் சிவப்பு, கத்திரிப்பூ கலரிலும் கிடைக்கின்றன.
கீழே Korean Purple Rice and Beans
Thanks:- mightysweet.com |
மாறி வரும் கால நிலை மாற்றங்களும், நீர் பற்றாக் குறையும் மழையின்மை, வரட்சி, வரட்சிக்குப் பின்னான பெருவெள்ளப் பெருக்குகளாலும் பயிரிடுவதில் பிரச்சனைகளும் சவால்களும் எழுகின்றன. நிலத்தடி நீர் வரட்சியடையும்போது உவர்ப்புத் தன்மை உண்டாகும். கடல் நீர் உயர்வதாலும், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர்உப்பு நீராக மாறுவதாலும் உணவு உற்பத்தியும் பாதிப்படைகிறது.
சீனாவில் வரட்சியடைந்த ஒரு நீர்த் தேக்கத்தில் மிருகங்களும் மனிதர்களும்.... |
நன்றி:- sreechandrab.sulekha.com பாரம்பரிய முறையில் அறுவடை |
இயந்திரங்களின் உதவியால் நெல் அறுவடை |
நெல் புல் வகையைச் சேர்ந்த தாவரம். தென்கிழக்காசியாவில் தோன்றியது என்கிறார்கள். நாற்று நடுவதற்கு நாற்றுக்கள் முப்பது நாள் பயிராக இருக்க வேண்டும்.
நன்றி blog.balabharathi.net |
உலகில் சோளத்திற்கும் கோதுமைக்கும் அடுத்ததாகப் பயிரப்படுவது நெல்தான்.
நாட்டரிசி, மொட்டைக கறுப்பன் அரிசி, வவுனியா அரிசி, வரணி அரிசி, தம்பலகாமம் வயல் நெல் அரிசி, இறத்தோட்டை வயல் நெல், என்றெல்லாம் வண்டில், லொறிகளில் மூட்டை மூட்டையாக பயணித்து வந்தன. பத்தாயங்களில் சேகரித்து வைக்கப்பட்டு கொத்துக்களால் அழந்து எடுக்கப்பட்ட காலங்கள் எல்லாம் மறைந்துவிட்டன. நெல் அவித்து நிழலில் உலர்திக் காயவைத்து உரலில் இட்டு உமி தீட்டி புடைத்து மண்பானையில் இட்டு சோறு ஆக்குவது பாட்டிகாலம் அதன் சுவை இப்போது உண்ணக் கிடைப்பதில்லை.
முற்றத்தில் உலர்திய நெல்லை அணில், குருவிகள், காகம், கோழி கூட்டாக உணவு உண்ணும். உமிக்குருவிஎன்றே ஒரு குருவியினம் இருக்கின்றது. இரவில் எலிகளும் வெட்டிக் கொள்ளும். எறும்பும், அந்துப் பூச்சிகளும் உணவாக்கிக் கொள்ளும்.
போஷாக்கைப் பொறுத்த வரையில் அரிசியில் அதிகமிருப்பது மாப்பொருள்தான். ஆயினும் ஓரளவு புரதமும் இருக்கிறது . இவற்றைத் தவிர நார்ப்பொருளும் அதிகம் உண்டு. தயமின், நியாசின், ரைபோபிளேவின் போன்ற விற்றமின்களும் அதிகமுண்டு. ஆயினும் தீட்டாத அரிசியிலே இவற்றின் செறிவு அதிகமாக இருக்கும். நன்கு தீட்டும்போது தவிட்டுடன் இவை நீங்கிவிடுகின்றன. தவிடு உண்ணும் மாடுகளுக்கு நல்ல போஷாக்குக் கிடைக்க சக்கையை நாம் உண்கின்றோம்.
Rice
Nutrition Chart
Rice
Type
|
Protein
(g/100g)
|
Iron
(mg/100g)
|
Zinc
(mg/100g)
|
Fiber
(g/100g)
|
White
Rice (polished)
|
6.8
|
1.2
|
0.5
|
0.6
|
Brown
Rice
|
7.9
|
2.2
|
0.5
|
2.8
|
Red
Rice
|
7.0
|
5.5
|
3.3
|
2.0
|
Purple
Rice
|
8.3
|
3.9
|
2.2
|
1.4
|
Black
Rice
|
8.5
|
3.5
|
-
|
4.9
|
கால மாற்றத்தில் வெள்ளை அரிசிகள் முதலிடம் வகிக்கின்றன. சம்பா, பொன்னி, பாஸ்மதி, பாட்னா, சூரியச்சம்பா, எனப் பல்வேறு பெயர்களில் வலம் வருகின்றன. மக்களும் சுவை அதிகம். சமைக்கும் நேரம் குறைவு எனக் காரணம் கூறி இவற்றையே நாடுகிறார்கள்.
தற்கால உணவுப் பழக்கங்களில் உடல் நலம் பற்றிய அக்கறை குறைந்து நாவின் சுவை குறித்த பார்வையே மேலோங்கி நிற்கிறது. இதனால் நாட்டரிசிச் சோற்றை மக்கள் பெரிதும் விரும்புவதில்லை. மெதுவான வெள்ளை அரிசிச் சோற்றையே விரும்புகிறார்கள். அதனால் உண்ணும் அளவும் அதிகரிக்கிறது. எடுக்கும் அளவு கூடுவதால் நீரிழிவு,கொலஸ்டரோல் வருவதற்கு ஏதுவாகின்றன.
அரிசியை வடித்து கஞ்சியைக் கொட்டி சத்துக்களை வீணாக்காமல் சமையுங்கள். கஞ்சியை வடித்தால் வீட்டில் உள்ளோர் பகிர்ந்து குடித்துவிடுங்கள்.
நாட்டரிசிச் சோறு
தேவையானவை
நாட்டரிசி - 1 கப்
தண்ணீர் - 2 1/4 - 2 1/2 கப்
செய்முறை
அரிசியைக் கழுவி, கல்லிருந்தால் அரித்து விடுங்கள்.
பிரஷர் குக்கரில் இட்டு தண்ணீரை விட்டு 5 விசில் வைத்து எடுங்கள்.
ரைஸ் குக்கரில் சமைத்தும் எடுக்கலாம்.
-: மாதேவி :-
0.0.0.0.0.0.0
நாட்டரிசிச் சோறுக்கு செய்முறை கொடுத்தீர்கள் என்பதை விட அரிசியைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதிட்டீங்கன்றதுதான் உண்மை மாதேவி. படித்தேன். பிரமித்தேன். தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteஇவ்வளவு அழகாப் பரிமாறி வெச்சுருக்கறதைப் பார்த்ததும் பசிக்குது :-)))
ReplyDeleteஅரிசியின் அருமை பெருமைகளை அறியத்தந்த சுவையரசிக்கு நன்றி :-)
நாங்க இருக்கும் இடத்தில் இந்த அரிசில்லாம் கிடைக்காதே?
ReplyDeleteஎம்மாடி எவ்வளவு தகவல்கள்.!
ReplyDeleteஅருமை அருமை...தொடரட்டும்!
ஆஹா பாக்கவும் படிக்கவும் நல்லா இருக்கு சகோ....
ReplyDeleteவாழ்த்துகள்.
தற்கால உணவுப் பழக்கங்களில் உடல் நலம் பற்றிய அக்கறை குறைந்து நாவின் சுவை குறித்த பார்வையே மேலோங்கி நிற்கிறது.//
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் , மக்கள் இப்போது விழிப்புணர்வு பெற்று விட்டார்கள் பழைய வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆசை பட்டு இயற்கை விவசாயம், கை குத்தல் அரிசி என்று பழமைக்கு திரும்பிக் கொண்டுஇருக்கிறார்கள்.
உங்கள் வயல் நெல் சோறு சாப்பிட்டேன் அருமை மாதேவி.
arisi-yil ithanai rahangala endru viyaka thonuthu.pathivu mikavum payan ullathu. nandri.
ReplyDeletek m abubakkar
dt. 17 07 2012
வாருங்கள் பால கணேஷ்.
ReplyDeleteநீங்கள் கூறியவை மகிழ்ச்சியைத் தருகின்றது.
நன்றி.
அமைதிச்சாரல் சாப்பிடத்தானே சமைத்து வைத்திருக்கின்றேன். எடுத்துச் சாப்பிடுங்கள் :))
ReplyDeleteமுதல்படம் எங்கவீட்டு விரதச்சாப்பாடு.
நன்றி சாரல்.
வாங்க லக்ஷ்மி. வருகைக்கு நன்றி.
ReplyDeleteஎல்லா இடமும் கிடைப்பதில்லைத்தான் கிடைப்பதே தெய்வம் என நினைக்க வேண்டியதுதான்.
சிறுவயதில் எங்கள்வீடுகளில் வெள்ளை அரிசிச்சோறு எப்போதாவதுதான் சமைப்பார்கள்.
இப்பொழுதும் எங்களுக்கு இடையிடையே சிவப்பரிசிச்சோறு இல்லாவிட்டால் நாக்குச் செத்துவிடும்.:)
வரலாற்றுச் சுவடுகள்.
ReplyDeleteநன்றி...நன்றி. :)
மிக்க நன்றி வெங்கட்.
ReplyDeleteவாருங்கள் கோமதி அரசு.
ReplyDeleteநீங்கள் கூறியது மிகவும் சரி விழிப்புணர்வும் உண்டு. வரவேற்க வேண்டிய விடயம்.
மிக்க நன்றி.
உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி ABUBAKKAR.
ReplyDeleteஅருமையான பதிவு... படங்கள் பிரமாதம்...
ReplyDeleteRice Nutrition Chart - பயனுள்ள தகவல்...
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”
அரிசியின் வரலாற்றை
ReplyDeleteஆச்சரியமாய் பகிர்ந்த
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
அழகான படங்களோடு அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா..பதிவு பழைய நிகழ்வுகளை கிளறி விட்டு விட்டது
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDeleteநன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வெள்ளையரிசி சமைக்கும்போது சிவப்பரிசியை நான் பாதிக்குப் பாதி கலந்தே இப்போதும் சமைப்பேன்.நிறைந்த அரிசித் தகவல்கள் மாதேவி.சோறே பிரதானமாகச் சாப்பிடும் எங்களுக்கு இத்வும் தெரியாமப் போனால் எப்பிடி !
ReplyDelete