அதேபோல கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்க உணவில் மிளகாய் இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளார்கள்.
ஈயூடோவரில் 6000 வருடங்களுக்கு முன்னரே தேர்ந்தெடுத்த இனமாகப் பயிரிடப்பட்டுள்ளதாம். மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் முதல் முதலாகப் பயிரப்பட்ட செடியாகவும் இதையே சொல்கிறார்கள்.
கிரிஸ்தோபர் கொலம்பஸ் அவர்கள் அமெரிக்காவிலிருந்து கண்டுபிடித்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார். அப்பொழுது Chille pepper என அழைத்தார்கள்.
ஐரோப்பியாவிலிருந்து போர்த்தீக்கேய வியாபாரிகளால் ஆசியாவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள்.
மிளகாய் இனங்களில் 400 வகைகள் இருக்கின்றன என்கிறார்கள். அசாம் மிளகாய் மிகவும் சிறிய வகையானது. காரத்தில் மிகவும் கூடியது.
இலங்கையில் கானல் கொச்சிக்காய் என ஒரு வகை இதுவும் சிறியது அதீத காரமானது. ஊசி மிளகாய் எனத் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது.
நன்றி - subaillam.blogspot.com |
பூட்டான் நாட்டில் மிளகாயை பழ வகைகளில் அடக்குகிறார்கள். பழத்தைப் பதனிட்டு போத்தலில் அடைத்துப் பயன்படுத்துகிறார்கள்.
கார வேறுபாடுகள்
காரம் என்பது ஒரு சுவை என்ற போதும், காரத்தை விஞ்ஞான ரீதியாகவும் அளக்கலாம்.
மிளகாய்களை காரத்தன்மை கொண்டு வகைப்படுத்த சுகோவில் அளவு (scoville units ) பயன்படுத்தப்படுகிறது
இனிப்பு மிளகாய் - காரத்தன்மை 0 -1000 சுகோவில் அளவுவரை இருக்கும். குடமிளகாய், இனிப்பு பனானா, செர்ரிமிளகாய், பிமென்டோ இவ்வகையைச் சார்ந்தன என்கிறார்கள்.
மிதமான கார மிளகாய் - இதன் காரத் தன்மை 1000 - 3000 சுகோவில்வரை ஆன்ரோ, பசில்லா,கஸ்காபெல், சண்டியா இந்தவகையைச் சேர்ந்தவை.
இடைப்பட்ட கார மிளகாய் - 3000 - 6000 சுகோவில்வரை அலபினோ,மியாசாய் இந்த வகைகள்.
காரமிளகாய் - 5000 – 100,000 சுகோவில் வரை. டபாஸ்கோ, செர்ரானோ,கயேன், பிக்வின், தாய்லாந்து மிளகாய் இவ்வகையின.
அதீதகார மிளகாய் - 80,000 – 300,000 சுகோவில்வரை ஆபெர்னரோ, ஸ்காட்ச்பானெட்டு அதீத வகையைச்சேர்ந்தனவாக இருக்கின்றன என்கிறார்கள்.
வடிவ வேறுபாடுகள்
மிளகாய்களில் நீளமானவை, வட்டவடிவமானவை, குறுகியவை, அகன்ற வகை, ஒடுங்கிய வகை என பலவகைகள் இருக்கின்றன.
பச்சை கலர் மிளகாய்கள்தான் பெரும்பாலும் இருக்கின்றன.
கறுப்பு, வெள்ளை, கத்தரிப்பூ,மஞ்சள்,சிவப்பு வர்ணங்களிலும் மிளகாய்கள் இருக்கின்றன.
கத்தரிப்பூ
மிளகாய் வத்தல்கள்
பச்சை மிளகாயை நாங்கள் மோரில் இட்டு வத்தலாக்கிப் பயன்படுத்துகிறோம்;.
மார்ச் ஏப்ரல் கோடை ஆரம்பத்தில் வத்தல் மிளகாய் இடும் காலம் தொடங்கிவிடும்.
முன்னோர்கள் நாலு ஐந்து கிலோ மிளகாயை வாங்கி அவித்து உலர வைத்து பெரிய டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொள்வார்கள். குடும்பமும் பெரிதல்லவா மழைக் காலத்திற்கும் கைகொடுக்கும்.
இப்பொழுது குடும்பங்கள் சிறியதாக இருப்பதால் கால்கிலோ அரைக்கிலோ மிளகாயே தாராளமாகப் போதும்.
கத்தரிக்காய், வெண்டைக்காய் பொரித்த குழம்பு, தக்காளி குழம்பு, மோர்குழம்பு, வெங்காயக் குழம்புகளிலும் பப்படக் குழம்பு, மோர்களிகளிலும் வத்தல் மிளகாயைப் பொரித்துக் கலந்து கொள்ள சுவை கூட்டும்.
வத்தல் மிளகாய்ச் சட்னி, வத்தல் மிளகாய் காரக் குழம்பும் செய்து கொள்ளலாம்.
வத்தல் மிளகாயை சாதம், புட்டுக்குப் பொரித்து உண்பார்கள் யாழ் மக்கள். வத்தல் மிளகாயும் தயிர்ச் சோறும் நல்ல கொம்பினேஸன்.
விரத காலத்தில் அப்பளம், மோர் மிளகாய், வடகம் இல்லாத சமையல் இருக்காது.
சுவையும் அதுவே தண்டனையாகவும் அதுவே
காரத்திற்காகப் பயன்படுத்தும் மிளகாய் தண்டனைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. உண்மையை வரவழைக்க மிளகாய் சாக்கினுள் ஆளைக் கட்டி வைப்பார்கள் எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பழைய காலத்தில் சிறுவர்களுக்கு மிளகாயை கண்ணில் பூசுவேன் என வெருட்டுவார்கள்.
கள்ளனை விரட்டவும் மிளகாய்பொடி பயன்படுகிறது. துணிவுள்ளவர்கள் உங்கள் கண்களைக் காப்பாற்றி கள்ளனை விரட்டுங்கள்.
இந்திய இராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆயுதமாக மிளகாயைப் பயன்படுத்துகிறார்களாம். கண்ணீர் புகைக் குண்டு போன்ற கிரனேட்டுகளைத் தயாரிக்க உலகின் மிகக் காரமான மிளகாயைப் பயன்படுத்துகிறார்களாம். 1,000,000 சுகோவில் (Scoville units) அளவிற்கு அதிகமான மிளகாய் இதுவாம்.
Indian military to weaponize world's hottest chili
சடங்கு சம்பிரதாயங்களில் மிளகாய்
இத்துடன் சிறு குழந்தைகளுக்கு கண்ணூறு கழிக்கவும் மிளகாயையும் உப்பையும் சுற்றி எடுத்து அடுப்பில் போட்டு வெடிக்க வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.
கடைகளின் வாயில்களில் மிளகாயையும் எலுமிச்சம் பழத்தையும் தொங்க விட்டிருப்பதையும் காணலாம்.
வத்தல் மிளகாய் செய்வோமா?
உப்பு மிளகாய், வத்தல்மிளகாய், மோர் மிளகாய், உப்பு புளி மிளகாய் என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
இவ் வத்தல் மிளகாயில் நலமுண்டா எனக்கேட்காதீர்கள். அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்துக்கு கெடுதியைத் தரும். நாக்கின் சுவைக்கு எப்போதாவது சாப்பிடலாம்.
அல்சர் நோயுள்ளவர்கள் இந்தப் பக்கம் போகவே வேண்டாம். உப்பு அதிகம் என்பதால் பிரசர் இருப்பவர்கள் நிட்சயமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். கொலஸ்ரோல் உள்ளவர்களுக்கும் எண்ணையில் பொரிப்பதால் ஏற்றதல்ல.
சில செய்முறைகள்
1. மோர்மிளகாய்.
உப்பு, மோருடன் காய்களைப்போட்டு ஊற வைத்து இரண்டு நாட்கள் வீட்டினுள்ளே மூடி வைத்து எடுத்து வெயிலில் காய வைத்து எடுப்பார்கள்.
2. உப்பு மிளகாய்.
நீரில் உப்பிட்டு மிளகாய் போட்டு ஒரு கொதி விட்டு எடுத்து வடித்து வெயிலில் காயவிடுதல்.
3. உப்பு புளி மிளகாய்.
புளி நீரில் உப்பிட்டு மிளகாயைப் போட்டு ஒரு கொதிவிட்டு எடுத்து வெயில் உலர வைத்து எடுத்தல்.
மூன்று முறைகளுமே வெவ்வேறு சுவைகளைத் தரும்.
தேவையான பொருட்கள்.
பச்சை மிளகாய் - ¼ கிலோ
உப்பு -1/2 ரீ ஸ்பூன்
- மிளகாய்களைக் கழுவி உலரவிடுங்கள்.
- மிளகாய்களின் காம்புகளை ஒடித்து விடுங்கள். ( சிலர் காம்புடனேயே செய்வார்கள் )
- நுனிப்புறம் சற்றே வெட்டி விடுங்கள்
- இரண்டு இடத்தில் முள்ளுக் கரண்டி அல்லது கத்தியால் குத்தி விடுங்கள்.
மேற் கூறிய மூன்று வகைளில் உங்களுக்குப் பிடித்த முறையில் செய்து ஒரு வாரம் காலையில் வெயிலில் வைத்து மாலையில் எடுத்து உள்ளே வைத்துவிடுங்;கள். மழை, பனி, நீர் படாது பார்த்துக்கொள்ளுங்கள்;.
வாயைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உப்பு மோர் மணத்தில் உடனேயே பொரித்துச் சாப்பிட்டு முடித்துவிடாதீர்கள்.
நன்கு காய்ந்த பின் டப்பாக்களில் அடைத்து வைத்து இடையிடையே பொரித்து சாப்பிடுங்கள்.
யாழ்ப்பாண மிளகாய்த் தூள்
குடமிளகாய் சலட்
மிளகாய் சமையல்கள் தொடரும்......
-: மாதேவி :-
அருமையான வண்ணவண்ண மிளகாய் பார்க்கவே அழகாக இருக்கிறது. நான் இன்னும் படிக்க வில்லை .பின்னர் வருகிறேன்...
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள் மாதேவி ... Happy Friendship Day...
ஒரு பதிவை முழுமையானதாக
ReplyDeleteதருவதற்கு தாங்கள் எடுத்துக் கொள்ளும்
முயற்சிகள் பிரமிக்க வைக்கிறது
வண்ண மிளகாய் இப்போதுதான் பார்க்கிறேன்
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக அருமையான விளக்க பதிவு
ReplyDeleteதயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ள சூப்பரா இருக்குமே
மிளகாயில் இத்தனை வகைகளா....
ReplyDeleteபடித்து... பார்த்து....
ஸ்.... நல்ல காரம்! :)
நல்ல பகிர்வுக்கு நன்றி.
நாங்க மோரில் ஊறவைத்து மோர்மிளகாயாதான் பண்ணுவோம். நல்லா இருக்கும்
ReplyDeleteநல்ல தொகுப்பு...
ReplyDeleteவிளக்கமான பதிவு...
மிகவும் பயன் படும்... நன்றி... பாராட்டுக்கள்...
அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
எனக்கு மோர் வத்தல் மிகவும் பிடிக்கும்! இங்கே (பஹ்ரைன்) கிடைப்பதில்லை! ஊரிலிந்து வரும் போது கொண்டு வந்தேன் அது ரெண்டே மாதத்தில் காலியாவிட்டது :(
ReplyDeleteஅருமையாத பதிவு!
காரமான மிளகாய் கொண்டு ஒரு சுவையான பதிவு. மிளகாயில் இத்தனை வகைகளை இப்போதுதான் பார்க்கிறேன். மோர் மிளகாயும் புளி மிளகாயும் மிகவும் பிடிக்கும். அருமையான பதிவுக்கு நன்றி மாதேவி.
ReplyDeleteமிளகாய் வத்தல் என்றாலே தனி சுவைதான்
ReplyDeleteமாதேவி, பதிவின் தலைப்பு, படங்கள் மோர் மிளகாய் செய்முறை, மிளகாய் வரலாறு என்று தூள் கிளப்பி விட்டீர்கள்.
ReplyDeleteநேற்று எம்.ஜி.ஆர் அவர்கள் ந்டித்த ’நேற்று இன்று நாளை ’ படம் வைத்தார்கள் அதில் பெண்கள் மிளகாய் பொடியை தூவி குண்டர்களை ஓடவைப்பார்கள்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
பதிவுலக நண்பர்கள் எல்லோருக்கும் உங்கள் பதிவில் வாழ்த்து சொல்லிக்கிறேன்.
உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள் விஜி.
ReplyDeleteவருகைக்கு நன்றி.
வாருங்கள் ரமணி.
ReplyDeleteதேடல்மூலம் தெரியாத பல விடயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி ஜலீலா.
ReplyDeleteவாங்க வெங்கட் நாகராஜ்.
ReplyDeleteகாரம்போக இனிப்பு சாப்பிடுங்க :))
எங்கள் நாட்டு மக்களுக்கு காரம் பிடிக்கும்.
மோரில் போட்டது நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும்.
ReplyDeleteமிக்க நன்றி லக்ஷ்மி.
வருகைக்கும், நண்பர்கள் தின வாழ்த்துக்கும் மிக்கநன்றி திண்டுக்கல் தனபாலன்.
ReplyDeleteமோர்மிளகாய் மிகவும் பிடிக்கும். அதுவும் தயிர்சாதத்தில் தாளிச்சு விட்டதுன்னா இன்னும் விருப்பம் :-)
ReplyDeleteஅருமையான பகிர்வுக்கு நன்றி
மிளகாயைப் பற்றி நல்ல ஒரு விளக்கம். அதன் வகைகளையும் , வண்ணங்களையும் பற்றி நன்கு விளக்கிய பதிவு... அருமையான பதிவு.
ReplyDeleteஸ்ஸப்பா...உறைக்குது.இந்த அழகு வடிவான மிளாய்ச்செடிகளை இங்கு அழகுபடுத்தப் பயன்படுத்துகிறார்கள்.எனக்குச் சிரிப்புத்தான்.மோர் மிளகாய்....ஊர் ஞாபகம்.இங்கு கடைகளில் கிடைக்கிறது தாராளமாகவே !
ReplyDeleteஐயோ........... என்னால் காரமே சாப்பிட முடியாதுப்பா:(
ReplyDeleteகோபாலுக்கு உங்க இடுகையைக் காட்டிட்டால் ஆச்சு:-) காரப்ரியர்:-)
அருமையான வண்ணங்களில் அழகான வகைகள். நல்ல அருமையான பதிவு. ம்ம்ம்ம் மோர் மிளகாய் சூப்பர்....
ReplyDeleteநன்றி அமைதிச்சாரல்.
ReplyDeleteஉங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விஜி.
ReplyDeleteஹா...ஹா உறைக்கிறதோ :))) நாங்கள் சாப்பிடாத உறைப்பா ஹேமா.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி.
வாருங்கள் துளசிகோபால்.
ReplyDeleteமென் உடம்புக்காரி என முன்பே ஒரு பதிவில் சொல்லி இருந்தீர்களே. விடைசரியா எனப் பார்த்துக் கொள்ளுங்கள் :)))
எங்கள் நாட்டினர் காரம் அதிகமாகச் சாப்பிடுபவர்கள். சிறுவயதிலிருந்தே பழகிவிட்டோம்.
வருகைக்கு மிக்க நன்றி.
இவ்வளவு தூரம் மிளகாய்கள் உங்களைக் கவர்ந்து வர வைத்திருக்கின்றதே.
ReplyDeleteமிளகாய்க்கு....சாறி சாறி:)))
உங்களுக்கு மிக்க நன்றி விஜி.
மகிழ்கின்றேன் மீண்டும் நன்றிகள்.
இலங்கை வந்த போது ஓட்டலில் மோர் மிளகாய் கொடுத்தார்கள் சின்ன சின்ன தாய் மிகவும் நன்றாக இருந்தது.
ReplyDeleteமிளகாயப் பற்றிய பகிர்வு சூப்பர்.நாஊற வைக்கிறதே!
ReplyDeleteவிவசாய பட்டதாரியான எனக்கேஏஏஏஏஏஏஏ தெரியாத எவ்வளவு விவரங்கள்?
ReplyDeleteவாருங்கள் கோமதி அரசு.
ReplyDeleteஎங்கள் நாட்டில் சைவஹோட்டல் சமையலில் தினந்தோறும் மோர்மிளகாய் தருவார்கள்.
மிக்க நன்றி.
நன்றி ஆசியா.
ReplyDeleteவாருங்கள் பழனி கந்தசாமி.
ReplyDeleteஉங்களுக்குத் தெரியாதது இருக்குமா?
நாங்கள் சாதாரணமானவர்கள்.
நான் அறிவதற்காக சில தகவல்களைத் தேடுவேன்.அவற்றை பகிர்கின்றேன்.
உங்கள் வரவுக்கு மகிழ்ச்சி.
மிக்கநன்றி.
மிளகாய் பற்றிய அருமையான தகவலுக்கு மிக்க நன்றி மாதேவி!! மோர் மிளகாய் தயிர் சாதத்துக்கு தேவாமிர்தமா இருக்குமே...
ReplyDeleteஎனக்கு காரம் மிகவும் பிடிக்கும். பழைய சாதத்தில் தயிர் போட்டு பிசைந்து மோர் மிளகாய் வற்றலை கடித்துக் கொண்டால் சுவையோ சுவை. மிளகாய் பற்றிய உங்கள் பதிவு நல்ல சுவை. நிறைய தகவல்கள், படங்களுடன். மற்றைய பதிவுகளை இனிமேல்தான் படிக்க வேண்டும். நன்றி!
ReplyDeleteமிளகாய் பற்றி காரமான சுவையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteமிக பயனுள்ள பதிவு
ReplyDeleteநன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)