Sunday, February 10, 2013

பருத்தித்துறை ஓடக்கரைத் தோசை சாப்பிட வாரீர்களா?

எங்கள் எள்ளுப் பாட்டன் காலத்திலிருந்தே பருத்தித்துறையூரில் ஓடக்கரை மிகவும் பிரசித்தம் பெற்றிருந்தது. மிக ஜனநெருக்கடியான இடமாக இருந்திருக்கிறது.


அந் நாட்களில் பருத்தித்துறை துறைமுகம் பிரசித்த துறைமுகமாக விளங்கியது. கப்பல் வாணிபம் நடைபெற்றது. அதனால் அக்காலத்தில் உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள் பலவும் இந்நகரில் இருந்தன.


நாங்களும்  சிறுவயதில் மாவுக் கப்பல்கள் இத் துறைமுகத்தில் வந்து இறக்குவதை  கண்டிருக்கின்றோம்.

முன்னர் பர்மா இந்தியாவிலிருந்து தேக்கு மரங்கள் கப்பல்களில் கொண்டு வரப்பட்டு கோயில் கட்டுமான வேலைகளுக்கு பயன்படுத்தியதாக எங்கள் பாட்டி கூறியிருக்கிறார்.

பருத்தித்துறை துறைமுகம் தற்போது அழிந்த நிலையில்.

வீட்டு ஓடுகளும் இந்தியாவிலிருந்து கப்பல்களில் வந்து இறங்கியதாகச் சொன்னார். இந்திய, சீனப் பட்டுகளும் கொண்டுவரப் பட்டு விற்கப்பட்டன.  இந்நகர் வியாபார நகராக இருந்ததால் இந் நகரை அண்டியுள்ள பிரதேசங்களிலிருந்து தொழிலுக்காக பல மக்களும் இங்கு வந்து குடியேறினார்கள்.

இந்நாட்களில் படித்த சிலர் சிங்கப்பூர், பர்மா நாடுகளில் தொழில் புரியவும் சென்றார்கள். அதனால் அந்நாட்டு உணவு முறைகளையும் நாளடைவில் இந்நகர மக்கள் அறிந்திருந்தனர்.

அம்முறையில் பலவகை உணவுகளும் அறிமுகமாயின.


நகரத்தில் கூலிக்காக வேலை செய்பவர்களுக்கு உணவுத் தேவை ஏற்பட்ட வேளைகளில் வீடுகள் தோறும் சிறிய தட்டிகள் வைத்து உணவு விற்பனை செய்யும் வழக்கம் இத்தெருக்களில் ஏற்படலாயிற்று.

இங்கு தயாரிக்கும் உணவுகள் மிகவும் ருசிமிக்கதாக இருந்தது. அவற்றின் சுவையோ ஆகா சொல்லி மாளாது. அதனால் சுற்று வட்டாரத்தில் ஏறத்தாள ஆறு மைலகள் தூர வரையுள்ள மக்கள் இங்கு வந்து உணவை வாங்கிச் செல்லும் வழக்கம் உருவாயிற்று.

விசேடமாக இவர்கள் தயாரிக்கும் முட்டை அப்பம், வெள்ளை அப்பம், தோசை, பொரிவிளாங்காய், வெள்ளை முறுக்கு, இனிப்பு சிப்ஸ், தட்டை வடை,சீடை, கச்சான் தட்டு  இன்னும் பலப்பல சொல்லலாம். சீனாவிலிருந்து வரும் புட்டரிசி என்ற ஒரு அரிசியை ஆவியில் வேக வைத்து தேங்காய் சர்க்கரை சேர்த்து உண்பார்கள். இது மிகவும் சுவையாக இருக்கும் என எனது அம்மா சொல்லுவார்.

நகரைச் சுற்றியுள்ள மக்கள் தமது வாழ்க்கையில் ஓரிரு தடவையேனும் இவ்வுணவை ருசிக்காமல் இருந்திருக்கமாட்டார்கள்.

மாலையானால் உணவு வாங்குவதற்காக சுற்று வட்டாரங்களிலிருந்து மக்கள் நடையாகவும், சைக்கிள்களிலும் ஓடக்கரையை நோக்கிச் செல்வதைக் காணலாம். சிறிய அகலம் குறைந்த அந்தப் பாதையால் செல்வோர் தொகை கணக்கில் அடங்காது. சைக்கிள்கள் அவசரமாக விரைந்தால் ஒன்றுடன் ஒன்று இடிபட்டுக் கிடக்கும். மிகவும் நிதானமாகவே இங்கு செல்லல் வேண்டும்.

அண்டிய ஊர்களில் காச்சல் வந்தவர்களுக்கு காச்சல் மாறியதும் பத்திய உணவாக முதல் முதல் கொடுப்பது இங்கு செய்யப்படும் வெள்ளை அப்பத்தையே. இது எங்கள் வீட்டிலும் நடக்கும். பலதடவைகள் நடந்திருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ளது இவ்விடம்.

விசேடமாக இவர்கள் தயாரிக்கும் தோசை அதற்கான மூன்று நான்கு வகை அம்மியில் அரைத்த சட்னி,சம்பல் ,கறிவகைகள், பொடி சம்பல், என அனைத்தும் சுவையானது.



மெத்தென்ற தோசை அதன்மேல் பச்சை மிளகாய் சட்னி, அதன்மேல்தோசை சிவப்புக் காரச் சட்னி,


அதன்மேல்தோசை காரக்கறி, பொடி சம்பல், என மாற்றி மாற்றிஅடுக்கிக் கொடுப்பார்கள். கால ஓட்டத்தில்  இப்பொழுது ஓரிரு வீடுகளில் மட்டும் தட்டி வைத்து விற்பதைக் காணலாம்.


சம்பல் ஊறி மெத்தென இருக்கும். தோசை சாப்பிட வீட்டில் போட்டி நடக்கும்.
விசேடமாக தோசைக்கு ஒரு காரக்கறி வைப்பார்கள்.



காரத்தில் கண்ணில் நீர்வடிய நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு சாப்பிடுவதிலும் சுவை இருக்கத்தான் செய்தது. நானும் சாப்பிட்டிருக்கின்றேன். இவ்வகைக் கறி வீட்டிலும் செய்திருக்கின்றேன். உடலுக்கு அதிக காரம் கூடாது என்பதால் இப்பொழுது காரத்தைக் குறைத்துச் செய்வேன்.


மெத்தென்ற தோசை
 
தேவையானவை

உழுந்து - 1 கப்
வெள்ளைப் பச்சை அரிசி - 2 கப்
புளுங்கல் அரிசி - ½ கப்
வெந்தயம் - 2 ரீ ஸ்பூன்

அரிசியை 4-5 மணிநேரம் ஊற வைத்து உரலில் இட்டு இடித்து அரித்து மாவாக எடுங்கள்.


அரிக்கும்போது வரும் குறுணியில் 2 பிடியை எடுத்துவையுங்கள். அடுப்பில் 2 ரம்ளர் நீரை வைத்து நீர் கொதிக்க குறுணியை போட்டு கஞ்சி காய்ச்சி ஆற வைத்துவிடுங்கள்.

ஆட்டுக் கல்லில் அரைத்து எடுத்த உழுந்து மாவுடன் இடித்த மா, கஞ்சி அனைத்தையும் கலந்து தோசை மா பதத்தில் கரைத்து வையுங்கள்.
சுடும்போது உப்புக் கலந்து சுடலாம்.


மிகவும் மெதுவான மெத்தென்ற தோசை கிடைக்கும்.
இதை நாங்கள் இக்காலத்திற்கு ஏற்ப கிரைண்டர் அல்லது மிக்ஸியில் செய்து கொள்ளலாம்.


பச்சை மிளகாய் காரக்கறி

தேவையானவை

பச்சை மிளகாய் - 15 - 20
சின்ன வெங்காயம் - 1 கப்
தேங்காய் நீர் - ½ கப் ( மிளகாய் காரத்தை குறைப்பதற்காக )
உப்பு புளி - தேவையான அளவு

தாளிக்க
கடுகு - ½ ரீ ஸ்பூன்
சோம்பு -¼ ரீ ஸ்பூன்
வெந்தயம் - ¼  ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை - சிறிதளவு
ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை 

மிளகாயை சிறியதாக வட்டமாக வெட்டுங்கள.;

வெங்காயத்தையும்  சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
தேங்காய் நீரில் புளியைக் கரைத்து வையுங்கள்.

ஓயிலில் பொருட்களை தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம் கொட்டி வதக்குங்கள்.

உப்புக் கலந்து வதக்குங்கள்.

நன்கு வதங்கிய பின் புளித் தண்ணியை ஊற்றி கிளறி நன்கு கொதிக்க விட்டு இறக்கிவிடுங்கள்.

கொதிக்கும்போதே காரம் மூக்கைப் பிடுங்கும்.



மிளகாய் காரத்துடன் பச்சை மிளகாய் காரக் கறி தயாராகிவிட்டது.



குறிப்பு - பச்சை மிளகாய்க்குப் பதில் குடமிளகாய் பயன்படுத்தினால்; காரம் இருக்காது.தேங்காய்   நீரைத் தவிர்த்து விடுங்கள்.

எனது தோசைப் பதிவுகள்

அம்மா சுட்ட தோசைகள்

அம்மா சுட்ட தோசை 2

-மாதேவி-

46 comments:

  1. ஆஹா படிக்கும்போதே ருசிக்கிறதே.. செய்து அனுப்பிவிடுங்களேன்...!

    ReplyDelete
  2. அருமையான ருசியான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. அருமையான ருசியான பதிவு. தோசையும் காரசாரச் சட்னி வகைகளும் நாக்கில் நீரை வரவழைத்தன.

    படங்களும், விளக்கங்களும் அழகோ அழகு.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. மெத்தென்ற தோசை பக்குவம் அருமை.
    பருத்தித்துறை செய்திகள் எல்லாம் அறிந்து கொண்டேன்.

    பச்சைமிளகாய் காரக்கறி பிரமாதம்.
    பதிவு அருமை.

    ReplyDelete
  5. Arumaiyana pathivu thozhare.....
    ARUN EXPORTS
    8220081531

    ReplyDelete
  6. ஆஹா அருமையான பகிர்வு.பருத்தித்துறையப்பற்றியும் சந்தடியில் அறிந்து கொண்டோம்.மாதேவி பொடி சம்பல் ரெஸிப்பி போடுங்களேன்.

    ReplyDelete
  7. படங்களைப் பார்க்கவே வாயினுள்
    நீர் ஊறுகிறது....
    செய்து தான் பார்க்க வேணடும்.....

    (அந்தப் பச்சைமிளகாய் காரக்கறியை மட்டும்
    செய்ய மாட்டேன்.
    அதைப் படிக்கும் பொழுதே நாக்கு எரிகிறது...)
    பகிர்விற்கு நன்றி தோழி.

    ReplyDelete
  8. வாருங்கள் உஷா அன்பரசு.
    ஒரு பார்சல் அனுப்பிவிடுகின்றேன் :))

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  10. வாருங்கள் கோமதி அரசு.
    உங்கள் வருகைக்கும் எங்கள் ஊரைப் பற்றி அறிந்து கொண்டதற்கும் மகிழ்கின்றேன்.

    மிக்கநன்றி.



    ReplyDelete
  11. வாருங்கள் வை. கோபாலகிருஷ்ணன்.
    உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மகிழ்ச்சி.

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  12. வருகைக்கு மிக்க நன்றி.அருண்.

    ReplyDelete
  13. எங்கள் ஊர்பற்றி அறிந்துகொண்டீர்கள்தானே.

    பொடிசம்பல் பற்றி ஒருதடவை தருகின்றேன் ஸாதிகா.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  14. வாருங்கள் அருணா செல்வம்.

    படிக்கும்போதே நாக்கு எரிகின்றதா :)) இவ்வளவு காரத்தைத்தான் அந்தக் காலம் சாப்பிட்டு இருக்கின்றார்கள். இதை மற்றவர்களும் அறிந்திருக்கட்டும் என்றுதான் இச் செய்முறையை எழுதினேன்.

    இக் காலம் நமக்கு இவ்வளவு காரம் சரிப்பட்டு வராது.

    பச்சை மிளகாயை தவிர்த்து குடமிளகாயில் இதே முறையில் செய்து கொண்டால் காரம் இருக்காது..

    நானும் பச்சை மிளகாய்சேர்ப்பது என்றால் எமது காரத்துக்கு ஏற்ப சேர்த்துக்கொள்வேன்.

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. சென்ரல் தியேட்டரில் இரவு படம் பாத்துவிட்டு, தோசை சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குச்சென்ற ஞாபகம் இன்னும் உள்ளது. வெள்ளையப்பம்,வடை என்பனவும் பிரமாதம் இன்றுதான் உங்கள் பதிவைப்பார்த்தேன்

    ReplyDelete
  16. தோசையும், சம்பலும், சட்னியும் படிக்கும் போதே நாவில் நீர் சுரக்கிறது.

    ReplyDelete
  17. வாருங்கள் வர்மா.

    நீங்கள் கூறியதுபோல அந்தநாட்கள் இனிக்கும் காலங்கள். இப்போது நினைத்துப் பார்த்து மகிழவேண்டியதுதான்.

    உங்கள் வருகைக்கு மகிழ்கின்றேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  18. உங்கள் நாட்டிலும் தோசை,இட்லி பிரசித்தமானதுதான். அருமையாக இருக்கும். எனது இந்திய சுற்றுலாக்களில் சாப்பிட்டிருக்கின்றேன்.

    எங்கள் ஊரின் பழைய நினைவுகளை இப் பகிர்வில் மீட்டுள்ளேன்.

    மிக்கநன்றி கோவை2தில்லி.

    ReplyDelete
  19. மிக அருமையான குறிப்பு மற்றும் தகவல்கள். நன்றி மாதேவி. தட்டி வீட்டு சமையலை ருசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்ததே அதன் சுவையை அறியத் தருகிறது.

    ReplyDelete
  20. வாருங்கள் ராமலஷ்மி.

    சரியாகச் சொன்னீர்கள். அது ஒரு காலம்.

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  21. இந்த தோசை, நண்பர்களுடன் சென்று சாப்பிட்டுள்ளேன். சம்பல், சட்னி, பொடி என அமர்களமாகத் தருவார்கள்.
    தட்டை வடையை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியதே! பருத்தித்துறை.
    படங்கள் , 35 வருடங்களுக்கு முதல் அனுபவித்த சுவையை நினைவுபடுத்தியது.
    ஆட்டுக்கல் படத்துக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  22. வாருங்கள் யோகன் பாரிஸ் உங்கள் வருகைக்கு மகிழ்கின்றேன்.

    பருத்தித்துறை தோசை, தட்டைவடை இரண்டின் ருசியல் மயங்காமல் இருக்க முடியாது.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  23. அடுக்குத்தோசையா!நாக்கில் நீர் ஊறுகிறதே!

    ReplyDelete
  24. பொடி சம்பல்,காரக் கறி, வெள்ளைத் தோசை, அம்மி,ஆட்டுரல் படங்கள் அத்தனையும் பழமைக்கு ஏங்க வைத்துவிட்டன
    மாதேவி. இபடியெல்லாம் சமைத்து அனைவருக்கும் கொடுத்த காலமும் இருந்தததா. இலங்கை
    வானொலியில்,பருத்தித் துறை என்ற சொல்லைக் கேட்ட நினைவு.
    அருமையான பதிவு மா.
    நாங்கள் புளிலிளகாய் செய்வோம் தோசைக்குத் தொட்டுக்கொள்ள.

    ReplyDelete
  25. வாருங்கள் குட்டன்.
    அடுக்குத்தோசை நீங்கள் சொன்னதுபோல் நினைத்தாலே இனிக்கும்.

    இப்பொழுது கடைகளில் ரிசு பைகளில் கட்டித் தரும் உணவுகள்தான் கிடைக்கும். :(

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  26. வாருங்கள் வல்லிசிம்ஹன்.

    பருத்தித்துறை பற்றி ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பதில் மகிழ்ச்சி.

    "அது ஒரு கனாக்காலம்..... "என பாடவேண்டியதுதான்.

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  27. ருசித்து ரசித்தேன்.

    ReplyDelete
  28. பார்த்த உடனே நாக்கு ஊருதே !!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  29. நன்றி தமிழ் இளங்கோ.

    ReplyDelete
  30. வாருங்கள் பழனி கந்தசாமி..
    ருசித்து ரசித்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  31. எடுத்து சாப்பிடுங்க :))
    மிக்க நன்றி ராஜபாட்டை ராஜா.

    ReplyDelete
  32. கண்டுகொள்கின்றேன். நன்றி.

    ReplyDelete
  33. பதிவும், படங்களும் பசியை கிளப்புகின்றன.

    ReplyDelete
  34. பருத்தித்துறையூர் துறைமுகம், அங்கே நடைபெற்ற கடல் வாணிபம், ஓடக்கரை தோசை, அந்த காலத்து அம்மி, குடகல் என்று அத்தனையும் மிகுந்த சுவாரஸ்யத்துடன் எழுதியிருக்கிறீர்கள் மாதேவி!

    ReplyDelete
  35. சகோதரிக்கு “ உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY ) – நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  36. பருத்தித்துறை பற்றிய தகவல்களுக்கு நன்றி. விரும்பிப் படித்தேன். கொஞ்சம் கனத்தது உண்மை.
    தோசையும் காரக்கறி வகைகளும் பார்ப்பதற்கே சுவையாக இருக்கின்றன. சாப்பிட்டால் இன்னும் கேட்கவே வேண்டாம். இருந்தாலும் தோசை மேல் வரிசையாக இத்தனை கார வகைகளா?

    உரல் அம்மி என்று உபயோகிக்கச் சொல்கிறீர்களே? இந்நாளில் யாராவது பயன்படுத்துகிறார்களா என்று அறிய ஆவலாக உள்ளது.

    ReplyDelete
  37. அருமையான பகிர்வு.தோசைப் பகிர்வும் பக்க உணவுகளும் அசத்தல்..

    ReplyDelete

  38. நீங்கள் குறிப்பிடும் பச்சை மிளகாய் காரக்கறி என் மனைவி “ மிளகு வறுத்த புளி “ என்ற பெயரில் செய்வாள். நாங்கள் அதை தமாஷாகக் குடும்பப் புளி என்போம். என் நண்பன் ஒருவன் அமெரிக்காவில் இருக்கிறான். அவனது தாயாரைக் கூட்டிக் கொண்டு போனபோது, இங்கிருந்து ஒரு அம்மிக்கல்லையும் எடுத்துக் கொண்டு போனான். சிலருக்கு சில வகையாக சமைத்தாலே திருப்தி இருக்கும். உதாரணமாக, கல்சட்டியில் குழம்பு வைப்பது, குக்கரில் வைக்காமல் சாதம் வடித்தெடுப்பது, மண்பாத்திரத்தில் கீரை மசிப்பது சொல்லிக் கொண்டே போகலாம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. வாருங்கள் அப்பாத்துரை. உடன் பதில் தரவில்லை மன்னியுங்கள்.

    இப்பொழுதெல்லாம் கிராமங்களிலேயே அம்மி ஆட்டுக்கல்லு பெரும்பாலும் இல்லாமலே போய்விட்டது. சண்டைக்காலம் மின்சாரம் இல்லாமல் பத்து வருடங்கள் அப்பொழுது மறுபடியும் அம்மி, ஆட்டுக்கல்லு, உரல், விறகு அடுப்பு, லாந்தர் விளக்கு, கிணத்தடிக்குளியல் என பழையன எல்லாம் புழக்கத்துக்கு வந்தது.
    இப்பொழுது பழையபடி காணாமல்போய்விட்டது. கிராமத்திலும் வோசிங்மிசின்தான் உடுப்புத் தோய்க்கிறது.

    ReplyDelete
  40. வாருங்கள் பாலசுப்ரமணியம்.
    உங்கள் மனைவியின் சமையலை பகிர்ந்ததற்கு நன்றி."மிளகுவறுத்தபுளி" பெயரும் நன்றாக இருக்கின்றது.

    வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும் நன்றி.

    ReplyDelete
  41. ஆஹா மாதேவி தோசையும்,பச்சைமிளகாய் கறியும் படிக்கும் போதே நாவூறுதே...சூப்பர்ர்!!

    ReplyDelete
  42. வணக்கம் தோழி! இன்று உங்களின் இந்த தோசைக் குறிப்பினை http://kaagidhapookal.blogspot.de/2013/04/blog-post_16.html அஞ்சு என்று எங்களால் அழைக்கப்படும் அஞ்சலின் வலைப்பூவில் பார்த்து இங்கு வந்தேன் உங்களைக்கண்டு வாழ்த்த... வாழ்த்துக்கள் தோழி!

    அருமை! எம் மண் மணக்கும் அசத்தலான குறிப்பு இது. என் அம்மம்மா அடிக்கடி நாங்கள் ஊரில் இருந்த சமயம் செய்து தந்து சாப்பிட்டிருக்கின்றேன். மலரும் நினைவுகளாக சக்கரம் சுழலத்தொடங்கிவிட்டது....

    இதைப் பகிர்ந்த உங்களுக்கும் தனது வலையில் உங்களை அறிமுகப்படுத்திய அஞ்சுவுக்கும் எனது நன்றிகள் பல.

    ReplyDelete
  43. பதிவை போட்டதும் முதலில் உங்களுக்குத்தான் நன்றி சொல்லியிருக்கணும் ..தோசை சூப்பராக மென்மையா வந்தது மாதேவி .
    மிக்க நன்றி ..இளமதி ..

    ReplyDelete
  44. வாருங்கள் இளமதி.
    எங்கள் ஊர்காரர் வந்து வாழ்த்தியதில் மகிழ்கின்றேன்.

    நீங்கள் கூறியதில் அஞ்சலின் பக்கம் சென்று பார்த்து வந்தேன்.நன்றி.

    ReplyDelete
  45. நீங்கள் செய்து பார்த்து உண்டு மகிழ்ந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி angelin.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்