Friday, January 1, 2010
புத்தாண்டிற்கு மெழுகுதிரி சலட்
அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
சலட் வகைகளின் போஷாக்கு முக்கியத்துவம் பற்றி தற்பொழுது அனைவரும் நன்கு அறிந்துள்ளார்கள். சலட் இல்லாத விருந்தும் இல்லை.
இது கிறிஸ்மஸ்ட் புதுவருட பண்டிகைக் காலமாகையால் இச் சலட்டைத் தயாரித்துள்ளேன்.
பிரிஜ்சில் இருந்த பொருட்களை வைத்து அவசரமாகத் தயாரித்ததில் பூரணமாகப் பூர்த்திசெய்ய முடியவில்லை.
நீங்கள் உங்களுடைய திறமைகளைப் பயன்படுத்தி இன்னும் அழகாக்கிக் கொள்ளுங்களேன்.
பச்சையாக உண்ணக்கூடிய மரக்கறிகள், அவித்தெடுத்த மரக்கறிகள், பழவகைகளில் செய்துகொள்ளலாம். சாப்பிடுவதற்கு சற்று முன்பாக செய்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு விரும்பிய மரக்கறி அல்லது மாமிச ஸ்ரப் (Stuff) இரண்டு தயாரித்து வையுங்கள்.
லெட்யூஸ் சலட் இலைகளை தயாரிக்கும் பிளேட்டில் அலங்காரமாக அடுக்கி வையுங்கள்.
வெள்ளரிக்காயின் தோலைச் சீவிவிட்டு விரும்பிய உயரத்தில் வெட்டி எடுங்கள்.
உள்ளிருக்கும் சதைப்பகுதியை கூரிய கத்தியால் வெளியே எடுத்து விட்டு தயாரித்த ஒரு ஸ்ரப்பை நிரப்பி வையுங்கள்.
மேலேஅவித்தெடுத்த கரட்டின் நுனிப்பகுதியை ருத் பிக்கில் குத்தி திரி போல் தோற்றமளிக்கும்படி வெள்ளரி மேல் குத்திவிடுங்கள்.
நன்கு நேராக நிமிர்த்தி வைக்கக் கூடிய கரட்டை அவித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
கரட்டின் பக்கப் பாட்டில் மெழுகு உருகி வழிந்திருப்பது போன்று மெல்லியதாக நீளமாக வெட்டிய கோவாவை தொங்க விட்டுக் கொள்ளுங்கள்.
இதற்கு நீங்கள் விரும்பினால் அவித்த நூடில்ஸ், முளைக்க வைத்த பாசிப்பயறு அல்லது சீஸ் துருவல் (கொழுப்பு) பயன் படுத்திக் கொள்ளலாம். அடித்தெடுத்த கிழங்குக் கிறீம், பிரெஸ்கிறீம், மயோனிஸ், யோக்கட், தயிர் என்பனவும் பயன்படுத்தலாம்.
தக்காளியைப் பாதியாக கிண்ணம் போல் வெட்டிவிட்டு, உள்ளிருக்கும் சதைப்பகுதியை கூரிய கத்தியால் வெளியே எடுத்து விடுங்கள். தயாரித்த இரண்டாவது ஸ்ரப்பை (Stuff) நிரப்பி வையுங்கள். மேலே பழுத்த சிவப்பு அல்லது பச்சை மிளகாய் குத்திவிடுங்கள். விரும்பினால் அடியில் மெழுகு வடிந்தது போல் வைக்கலாம்.
சலட்டின் சென்ரர் பகுதியில் வெங்காயத்தைப் பூ போன்று வெட்டி வைத்து மேலே செறி வைக்கலாம்.
உங்கள் கலை நயத்திற் கேற்ப அழகாகத் தயாரித்துக் கொள்ளுங்களேன்.
ஸ்ரிம் வெண்டக்காய், அவித்த சோளமொத்தி, அவித்த முட்டை, கப்சிகம் மூன்று வர்ணங்களில், கரும்பு, பேபிகோன், பேபிகரட், முள்ளங்கி, தேங்காயின் உள்ளிருக்கும் முளைத்த பூ என இன்னும்...... இன்னும் ..
பழங்களில் ஸ்ரோபெரி, பியஸ், அப்பிள், ஆரெஞ், தர்பூசனி, அன்னாசி, பப்பாளி, ஜம்பு, ஏன்.....
எங்கள் ஊர் வாழைப்பழம் கூட.... கறுக்குமா ?
தோலுடன் அடியையும் நுனியையும் வெட்டிவிட்டு தயிர் அல்லது எலுமிச்சம் சாறு தடவி விட்டால் சரி என்கிறீர்களா?
உங்கள் கைவண்ணங்களில் ரெடியாகிவிடும் மெழுகுதிரி சலட்டுக்களாக.
வாண்டுகளும் கூடி உதவிசெய்வார்கள். ஐடியாக்களும் கொடுப்பார்கள். விரும்பி எடுத்தும் உண்பார்கள்.
புத்தாண்டில் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்தும்
மாதேவி.
Subscribe to:
Post Comments (Atom)
புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்
ReplyDeleteபோட்டொஎல்லாம் பாத்ததும் சிரிச்சுட்டேன்ன்..!
:)
ஆரோக்கியமான ரெசிப்பிகளாக கொடுக்கிறீர்கள். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
நட்சத்திர பதிவரானதற்கும் வாழ்த்துக்கள்.
தொடருங்கள் பணியை.
அழகான பதிவு.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி !
எப்படிங்க? இப்படி? கலக்குறீங்க...
ReplyDeleteஹாய் kindly visit my blog
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மாதேவி.
ReplyDeleteஹை மாதேவி கலர் கலர் சாலட் வித வித டிசைனில் கலக்கி இருக்க்கீங்க.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅழகான கற்பனை..உடலுக்கும் சலாட் நல்லது
வருடம் முழுவதும் சிரியுங்கள்.
ReplyDeleteசிரிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருமென ஆராட்சிகள் கூறுவது வசந்துக்குத் தெரிந்ததுதானே. நன்றி.
நீங்கள்தான் ஆரோக்கிய உணவுமுறைகள் பற்றி நன்கு அறிந்தவர். மிக்கநன்றி.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி ரிஷான்.
ReplyDeleteநன்றி அண்ணாமலையான்.
ReplyDeleteவாங்க சரவணக்குமார் வாழ்த்துக்கு நன்றி.
ReplyDeleteவாண்டுகளைச் சலட் சாப்பிட வைக்க இதுதான் நல்ல வழிபோல் தெரிந்தது.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி ஜலீலா.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கண்மணி.
ReplyDelete