Saturday, January 2, 2010

முட்டையில்லாத ரிச் கேக்மேலை நாட்டிலிருந்து இறக்கி எமது வாழ்வின் அங்கமாகிவிட்ட பாண், பண், பிஸ்கட், கேக் இடையேயான வித்தியாசம் என்ன?

சோறு, அரிசிமா கூளுக்கும், களிக்கும், அரியதரத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் போலத்தான் என மேம்போக்காகச் சொல்லிவிடலாம்.

அங்கு அடிப்படை கோதுமைமா, எங்களுக்கு அரிசிமா.
Kaka என்பதே பின்னர் ஆங்கிலத்தில் Cake ஆக மாறியதாம்.

ஐரோப்பாவில் Gateau, Torte எனப்படுவனவும், ஆங்கில கேக்கும் அடிப்படையில் ஒன்றாயினும் அவற்றில் முட்டை, பட்டர், சோக்கிலட் போன்றவை கூடிய அளவில் இருக்கும். அவை கூடியளவில் pastry போலிருக்கும்.

ஜப்பானியரின் Kasutera ஆங்கில கேக்கின் மற்றொரு வடிவம்தான்.

ஆனால் அரிசியில் செய்யப்படும் பிலிப்பைன்ஸசின் Mooncakes மற்றும் Rice cakes அவர்களின் பாரம்பரிய சமையல் முறையில் பிறந்தது.

அதேபோல சமையல் முறையிலும் வேறுபாடுகள் உண்டு.

நாங்கள் நீரில் அவிப்பது, ஆவியில் அவிப்பது, எண்ணெயில் வேகவைப்பது என ஒரு திசையில் பயணப்பட்டோம்.

அவர்கள் சமையல் முறையில் போறணை முக்கிய பங்காக இருந்தது.

குளிரான பிரதேசத்தில் விறகை எரிப்பதால் பிறக்கும் வெப்பம் வீணாகாமல் போவதற்காக போறணை போல மூடி வைத்து அதற்குள் தயாரிக்க வேண்டியிருந்து. உணவை வைத்து வேகவைத்தார்கள்.

அதுதான் பேகிங்.

அதில் சமைப்பதின் ஆரம்பம் பாண்.
கூர்படைந்த வடிவம் கேக் எனலாம்.


தேவையான பொருட்கள்

ரவை – 500 கிராம்
மார்ஜரின் - 500 கிராம்
சீனி - 350 கிராம்
டே;டஸ் - 500 கிராம்
ரின் பால் - 1 ரின்
தண்ணீர் - 1 ரின் அளவு
தேயிலைச்சாயம் -1 கப்


பிரிசேவ்ஸ்

பம்கின் - 200 கிராம்
கன்டிட் பீல் - 200 கிராம்
சௌசௌ - 200 கிராம்
ஜின்ஜர் - 200 கிராம்
சேர்ரி - 200 கிராம்
ரெஸ்சின் - 200 கிராம்
கஜூ - 200 கிராம்

எசென்ஸ் வகைகள்

வனிலா – 4 ரீ ஸ்பூன்
ரோஸ் - 2 ரீ ஸ்பூன்
ஆமென்ட் - 2 ரீ ஸ்பூன்
கோல்டன் சிரப் - 2டேபிள் ஸ்பூன்

பவுடர் வகைகள்

பேகிங் பவுடர் - 4 ரீ ஸ்பூன்
சோடியம் பைகார்பனேட்- 2 ரீ ஸ்பூன்
ஸ்பைசெஸ் - 2 ரீ ஸ்பூன்

செய்முறை-

தயாரிப்பதற்கு 12 மணித்தியாலம் முன்பு டேட்சை சிறியதாக வெட்டி அல்லது அரைத்து எடுத்து வையுங்கள்.

ரீ சாயத்தில் சோடியம் பைகார்பனேடை கரைத்து எடுத்து டேட்ஸ் மேல் ஊற்றி பிரட்டி வைத்துவிடுங்கள். ரவையை லேசாக வறுத்து எடுத்து வையுங்கள்.

12 மணித்தியாலயத்தின் பின்பு மார்ஜரின், சீனி இரண்டையும் மெதுவாகும் வரை கலக்கி ரின் பால் சிறிது சிறிதாக விட்டுக் கலக்குங்கள்.

நன்கு கலங்கிய பின் தண்ணீர் ஒரு கப் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கலக்கிவிடுங்கள்.

ரவையில் பேகிங்கை போட்டு நன்னு சேர்த்துவிடுங்கள்.

அடித்த கலவையுடன் சிறிது சிறிதாக ரவையைப் போட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஊற வைத்த டேட்ஸ்சைப் போட்டு கலந்து விடுங்கள்.

பிரிசேவ் வகைகள் யாவற்றையும் சேர்த்து, கோல்டன் சிரப், ஸ்பைஸ் பவுடர், எசன்ஸ் வகைகள் யாவற்றையும் விட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பேகிங் ரேயின் அடியில் ஒயில் பேப்பர் வைத்து, மார்ஜரின் பூசி, கேக் கலவையை ஊற்றி 180 டிகிரியில் 45 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.


சாப்பிடுவதற்கு 2 வாரங்களுக்கு முன் செய்து கொள்ள வேண்டும்.
செய்து ஒரு வாரத்தின் பின் கட் பண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஓயில் பேப்பரில் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாரம் கேக்கின் மணத்தில் வாயையும் கையையும் கட்டி வைத்திருப்பது உங்களில்தான் தங்கியுள்ளது.

மிகவும் சுவையான முட்டையில்லாத சைவ ரிச் கேக் தயார்.

நாட்கள் செல்லச்செல்ல சுவையும் அதிகரிக்கும்.

1 ½ மாதம் அளவில் கெடாமல் இருக்கும். நீங்கள் சாப்பிட்டு முடிக்காவிட்டால்.

மாதேவி10 comments:

 1. அப்ப என்ன மாதிரி பேச்சலர்க்கு ரொம்ப உபயோகமான ஒன்னுனு சொல்லுங்க...
  என்ன நம்ம பக்கத்துல உங்க வருகைய கானோம்?

  ReplyDelete
 2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  நல்ல முட்டையில்லாத கேட் ரெசிப்பி சூப்பர்.

  ReplyDelete
 3. ஆகா, நாக்கில எச்சில் ஊறுதே

  regards
  www.hayyram.blogspot.com

  ReplyDelete
 4. It looks good on the image. hav to try.

  ReplyDelete
 5. ஆமாம். நன்றி அண்ணாமலையான்.

  ReplyDelete
 6. நன்றி vijis kitchen.

  உங்களுக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  சைவப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும்.

  ReplyDelete
 7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி hayyram.

  ReplyDelete
 8. நன்றி sarvan .முயற்சி செய்யுங்கள்.

  ReplyDelete
 9. நன்றி.... உங்க பொன்னான ஓட்ட போட்டீங்கன்னா என் உள்ளம் ஆனந்த கூத்தாடும். போடுவீங்களா?

  ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்