வெள்ளை நிறத்தில் கட்டையாக குண்டாக ஒரு வகை. கத்தரிப்பூ கலரில் நீண்டதாக இன்னொருவகை. இதைவிட கண்டங் கத்தரி என்பது சிறியதாக வெள்ளை மஞ்சள் நிறங்களில் இருக்கும். வட்டுக் கத்தரி பச்சை நிறத்தில் வெள்ளைக் கோடுகள் பூசியது போல பல்ப் வடிவில் இருக்கும்.
மிகவும் சிறியது சுண்டைக் கத்தரிக்காய்கள்.
தாவரவியல் பெயர்
பெரிய இலையுடைய மரத்தில் கொத்தாய் வெள்ளைப் பூக்கள் மலர்ந்திருக்கும். காய்கள் கொத்துக் கொத்தாய் பச்சை நிறத்தில் பட்டாணி போன்று இருக்கும்.
பறவைகள் உண்ணும்போது பரம்பலால் இயற்கையாகவே வளரக் கூடிய தாவரம் இது. இரண்டு மூன்று மீற்றர் உயரம் வரை வளரும். சொர சொரப்பாக இருக்கும் கிளைகளுக்கும் இலைகளுக்கும் காரணம் அவற்றின் மீதிருக்கும் நுண்ணிய வெள்ளை தும்புகளாகும். இரண்டு வருடம் வரை பலன் கொடுக்கக் கூடியது.
பச்சை நிறத்தில் உள்ள காய்கள் கனியும்போது மஞ்சள் நிறமாக மாறும்.
இது புளொரிடா, தெற்கு அலபாமா ஆகிய இடங்களைச் சார்ந்ததாகும். அங்கிருந்தே ஆபிரிக்கா. அவுஸ்திரேலியா, ஆசியா எனப் பரந்தது.
'சுண்டங்காய் காற் பணம், சுமை கூலி முக்காற் பணம்' என்பார்கள். எனினும் இது ஒதுக்கித்தள்ளக் கூடிய காய்கறி அல்ல. நார்ப்பொருள் நிறைய உள்ளது. அத்துடன் சுதேச வைத்திய முறைகளில் சிறு நீர் பெருகுவதற்கும், உணவைச் சமிபாடடையச் செய்வதற்கும், இருமலுக்கும், ஈரல் நோய்கள் ஆகியவற்றில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தூக்கத்தையும் வரச்செய்யக் கூடியது என சொல்கிறார்கள். வயிற்றுப் பூச்சிக்கும் சித்த ஆயுள்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.
இருந்தபோதும் நவீன மருத்துவத்தில் இது பற்றிய ஆய்வு ரீதியான தகவல்கள் கிடைக்கவில்லை.
முற்றிய காய்கள் கசக்கும்.
வாங்கியிருந்தால் என்ன செய்யலாம்?
அதற்கும் ஓர் வழி. காய்களை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டி எடுங்கள்.
ஒரு பலகைக் கட்டையின் மேல் வைத்து, தேங்காய் அல்லது சப்பாத்திக் குளவியால் குத்துங்கள். காய் உடைந்து முற்றிய விதைகள் வந்துவிடும்.
ஒரு வடியில் கொட்டி ஓடும் நீரில் அலசி எடுங்கள். வடிய விட்டு எடுத்து வதக்கிக் கொள்ளலாம். சுவையான குழம்பும் கிடைக்கும். இக் குழம்பு இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும் என்பது ++ செய்தியாகும்.
காய்களை உப்பு, மோர் இட்டு அவித்து எடுத்து வெய்யிலில் உலர்த்தி வற்றலாக்கி இரும்புச் சட்டியில் இட்டு வற்றல் குழம்பு செய்து கொள்வார்கள் எமது பாட்டிமார்.
கூட்டு, மோர்க் குழம்பு, சாம்பார்,பொரியல், அவியல் செய்து கொள்ளலாம். காரக் குழம்பு பிடிக்காதவர்கள் வதக்கி எடுத்து மஞ்சள்பொடி, தனியாப் பொடி சேர்த்து பால்க் குழம்பாகவும் செய்து கொள்ளலாம்.
தக்காளி சேர்த்துக் கொண்டால் சுவை மாற்றமாக இருக்கும்.
காய்க் காரக் குழம்பு
தேவையானவை
காய் - ¼ கிலோ
வாழைக்காய் - 1
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் - 1
பூண்டு – 4.5 பல்லு
வெந்தயம் - ½ ரீ ஸ்ப+ன்
கடுகு ¼ ரீ ஸ்ப+ன்
தேங்காய்ப் பால்- 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி-1 ரீ ஸ்ப+ன்.
மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்ப+ன்.
உப்பு புளிக்கரைசல் தேவையான அளவு.
கறிவேற்பிலை சிறிதளவு.
ஓயில் - 2 டேபள் ஸ்பூன்.
செய்முறை
பிஞ்சுக் காய்களாகப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். காம்பை உடைத்து அலசி வடிய விடுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், தனியே வெட்டிக் கொள்ளுங்கள். பூண்டு நசுக்கி வையுங்கள். வாழைக்காய் சிறியதாக வெட்டி வையுங்கள்.
ஓயிலில் காய்களையும் வாழைக்காயையும் நன்கு வதக்கி எடுத்து வையுங்கள். சிறிது ஓயிலில் கடுகு வெடிக்க வைத்து, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேற்பிலை போட்டு வதக்குங்கள்.
வெந்தயம் போட்டு வதக்கிய காய்களைக் கொட்டி, புளித் தண்ணீர் விட்டு உப்பு மிளகாய்ப் பொடி, மஞ்சள் தனியாபொடிகள் போட்டு கொதிக்க விட்டு, இறுதியில் தேங்காய்ப் பால் 2 டேபிள் ஸ்பூன் விட்டு இறக்குங்கள்.
பொரித்த வாசத்துடன் மணம்கமழும் குழம்பு உங்களைச் சாப்பிட அழைக்கும்.
கத்தரிச் சமையல் பற்றிய எனது முன்னைய பதிவுகள்
பொட்டுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்
சரக்குத் தண்ணி - பத்திய உணவு
பாட்டியின் மண் சட்டிக் கறி
கத்தரி கடலைக் குழம்பு
பைவ் ஸ்டார் சலட்
சுண்டைக்காய் எனக்குப் பிடிக்காத ஒண்ணு
ReplyDeleteசுண்டக்காய் வத்தல் குழம்பு செய்து இருக்கிறேன். அதை பற்றிய தகவல் பகிர்வுக்கு நன்றி. fresh காயாக இங்கே கிடைப்பதில்லை. அந்த குழம்பு படத்தை பார்த்தாலே. சூப்பர் ஆக இருக்கும் போல தெரியுது.
ReplyDeleteஉணவில் ருசியை கூட்டும்
ReplyDeleteசுண்டைக்காய் பற்றிய தகவல்களுக்கு நன்றி. காரக்குழம்பு அருமையா இருக்கு.
மாதேவி சுண்டக்காய் பற்றிய தக்வலும், குறிப்பும் அருமை
ReplyDeletewww.samaiyalattakaasam.blogspot.com
ReplyDeleteyour blog is very interesting.
ReplyDeletethis is my first visit.
thanks for sharing this recipe.
//காய்களை உப்பு, மோர் இட்டு அவித்து எடுத்து வெய்யிலில் உலர்த்தி வற்றலாக்கி இரும்புச் சட்டியில் இட்டு வற்றல் குழம்பு செய்து கொள்வார்கள் எமது பாட்டிமார்.//
ReplyDeleteஎமது பாட்டிமாரும் தான் மாதேவி. இப்பவெல்லாம் இதை யாரும் விரும்பறதில்லைன்னு தான் தோனுது.
காட்டுச் சுண்டை ரொம்ப கசக்கும்.!
முக்காற் பணத்தில் முழு விருந்து தான் மாதேவி.
ReplyDeleteஅருமையான குழம்பு.
எங்கள் பக்கத்தில் வேக வைக்காமல் பச்சையாய் மோரில் போட்டு சுண்டை வத்தல் செய்வார்கள்.
எவ்வளவு செய்திகள் சுண்டைப் பற்றி!
நன்றி மாதேவி.
பிடிக்காத காயைப் பற்றிப் படித்த உங்களுக்கு ஒரு சபாஸ்.
ReplyDeleteநன்றி LK.
கிடைக்காத காய் சுவை அதிகம் :)
ReplyDeleteநன்றி சித்ரா.
வாருங்கள் புவனேஸ்வரி ராமநாதன்.
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி.
நன்றி ஜலீலா.
ReplyDeleteவருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி சத்ரியன்.
ReplyDeleteவாருங்கள் கோமதி அரசு.வருகைக்கு மகிழ்ச்சி.
ReplyDeleteவத்தல் பற்றிய புதிய தகவல் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
எனக்கு பிடித்த குழம்பு!!
ReplyDeleteஉங்கள் சுண்டைக்காய் குழம்பு மிக அருமை.நான் அடிக்கடி செய்யும் சுண்டை வத்தக்குழம்பு,எனக்கு மிகவும் பிடிக்கும்,சுண்டையை பற்றி படித்ததை திரும்ப நினைவு படுத்தியது மகிழ்ச்சி.உங்கள் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ReplyDelete//வற்றல் குழம்பு செய்து கொள்வார்கள் எமது பாட்டிமார்.//
ReplyDeleteஇது எனக்கு மிகவும் பிடிக்கும், நாவில் நீர் வர வைத்து விட்டீர்களே!
வெறுமனே சமையல் குறிப்பு சொல்லாமல், சுண்டைக்காயின் வரலாறு, புவியியல் எல்லாம் தந்திருப்பது கூடுதல் சுவை..
ReplyDeleteஅம்மா பசிக்குது...
வாருங்கள் தெய்வசுகந்தி.
ReplyDeleteஎனக்கும் பிடிக்கும் :)
வருகைக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி ஆஸியா.
ReplyDeleteவாருங்கள் சைவகொத்துப்பரோட்டா.
ReplyDeleteஉங்கள் சுவையான பரோட்டாவை விடவா :)
வருகைக்கு மிக்க நன்றி பாரத்... பாரதி...
ReplyDeleteசெய்து சாப்பிடுங்க :)
சுண்டைக்காய் பற்றியதகவல்கள் அருமை மாதேவி.சுண்டைக்காய் பச்சையாக சமைக்காவிட்டாலும் சுண்டை வற்ற்ல் அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வோம்.
ReplyDeleteஊரில் இப்போதும் எங்கள் வீட்டில் சுண்டைக்காய் மரம் இருக்கு.இரண்டு கிழமைக்கு ஒரு தரமாவது நெத்தலியும் போட்டு சுண்டைக்காய்க் குழம்புதான்.நிறைய இரும்புச் சத்து என்று சொல்லிச் சொல்லியே சாப்பிட வைத்துவிடுவார் அப்பா.
ReplyDeleteஇந்த முறை ஊரிலிருந்து வரும்போது சுண்டைக்காயும்,வல்லாரையும் அப்பா பார்சலில் வைத்துவிட்டது ஞாபகம் வருது மாதேவி.எனக்கும் பிடித்த குழம்பு.வெள்ளையரிசிச் சோறோட சாப்பிட விருப்பம் !
வத்தலும் வித்தியாசமான சுவையைத்தருமே. நன்றி ஸாதிகா.
ReplyDeleteவாருங்கள் ஹேமா.
ReplyDeleteஆகா அசைவப்பிரியர்களுக்கு நெத்தலி போட்ட குழம்பு அருமையாக இருக்குமே. நல்ல குறிப்பு.
ஆமாம் ஊரில் எங்கள் வீட்டிலும் இருந்தது. இப்பொழுது இங்கு மாக்கட் இல்தான் வாங்குகிறோம்.
நன்றி ஹேமா.
சுண்டைக்காய் வற்றலும், வத்தக்குழம்புடன் சேர்த்தும் அடிக்கடி செய்வதுண்டு. தாவரவியல் பெயரோடு தந்திருக்கும் தகவல்கள் வழக்கம் போல அருமை. செய்முறை குறிப்புக்கும் நன்றி மாதேவி.
ReplyDeleteவாருங்கள் ராமலக்ஷ்மி. உங்கள் குறிப்பும் நன்று.வருகைக்கு நன்றி.
ReplyDeleteஎங்கள் பக்கத்து வீட்டில் ஒரு பாட்டி இருப்பார்கள். அவர்கள் சுண்டைக்காயை வதக்கி சாம்பார் சாத்துக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள். அந்தக் காட்சி என் கண்களில் வந்தது..
ReplyDeleteஇப்போது சுண்டைக்காய் சமைக்கத் தெரியாதவர்கள்தான் அதிகம்..
தெரிந்து கொண்டேன்.. நல்ல பதிவுக்கு ந்ன்றிங்க மாதேவி
ஆதிரா உங்கள் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது.
ReplyDeleteஆமா சாம்பார்சாதத்துக்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்...பல முறைகளில் சேர்த்துக்கொள்கிறார்கள்.நன்றி.
எங்கள் பாட்டி தூதுவளம்காய் வத்தலை (நன்றாய் கசக்கும்) நெய்யில் வதக்கி சாப்பிடுவார்.
பார்க்கவே ரொம்ப டேஸ்டா இருக்கே மாதேவி..
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
ReplyDelete-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com
தேனம்மை லெக்ஷ்மணன் வருகைக்கு மகிழ்கிறேன்.
ReplyDeleteசுவைத்ததற்கு மிக்கநன்றி.
சுண்டைக்காய் வற்றல் குழம்பு எனக்குப் பிடிக்கும். என் மகளும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள் சுண்டைக்காய். பகிர்வுக்கு நன்றி சகோ...
ReplyDeletehttp://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்
ReplyDeleteஉங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
மாதேவி...வருஷப்பிறப்புக்கு பதிவு போடுவீங்கன்னு வந்து வந்து பாத்திட்டு அலுத்திட்டேன்.
ReplyDeleteஎன்றாலும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள் தோழி !
மாதேவி உங்களை தொடர் பதிவிற்கு அழைதுள்ளேன்.
ReplyDeletehttp://asiyaomar.blogspot.com/2011/01/blog-post_08.html
http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html
ReplyDeleteஇங்கு நட்பு வட்ட விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளுங்கள்
அன்பு மாதேவி, மலை சுண்டைக்காய் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அவை கசப்பற்று இருக்கும். மதுரையில் ஆவணி,மாசி மாதங்களில் கிடைக்கும்.
ReplyDeleteமிக மிக நல்ல பதிவும்மா.
ஃப்ரெஷ் காயெல்லாம் சின்ன வயசுல பாத்தது.. வற்றல் குழம்பு மாசத்துக்கு ஒருதடவையாவது செஞ்சுடுவேன்.. எண்ணெய்யில் வறுத்தா தயிர்சாதத்துக்கும் தொட்டுக்கலாம். ஜோரா இருக்கும்..
ReplyDelete