தங்கம் போலத் தகதகப்பாள், முள் போன்ற மேனியாள் பச்சைக்கிரீடமும் உடையாள் அவள் …
அன்னாசி நெய்ச்சாதம்
தேவையான பொருட்கள்
அன்னாசி - 2 காய்ப் பழமாக
அரிசி – 1 கப் (சம்பா அல்லது பசுமதி)
ஸ்பிரிங் அனியன் - சிறுகட்டு – 1
மிளகாய்ப் பொடி – ½ தேக்கரண்டி
இஞ்சிப் பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1 ரீ ஸ்பூன்
நெய் - 3 டேபில் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
அன்னாசி ஒன்றை எடுத்து சிறுதுண்டங்களாக வெட்டியெடுத்து மிக்ஸியில் அடித்து ஒரு கப் ஜீஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
மற்றைய அன்னாசியை மூள், தோல் இருக்கத்தக்கதாக நன்றாகச் சுத்தப்படுத்தி உப்பு நீரில் கழுவியெடுங்கள். நீளவாக்கில் மூள் இருக்கத்தக்கதாக ¼ பாகம் வெட்டி எடுங்கள். இவ்வாறு வெட்டியெடுத்ததும் மிகுதி கோப்பை போலத் தோன்றும். இதன் உள் இருக்கும் சதையை கூரிய கத்தியால் கவனமாக கோப்பை சிதையாது வெட்டி எடுங்கள். இந்த துண்டுகளை மேலும் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயத் தாரையும் சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை நீளவாக்கில் நடுவே கீறிவிடுங்கள்.
பாத்திரத்தில் இரண்டு டேபில் ஸ்பூன் நெய் விட்டு, அதில் வெந்தயம் வறுத்து, இஞ்சிப் பேஸ்ட் சேர்த்து, பச்சைவாடை போகக் கிளறுங்கள். இனி அன்னாசி ஜீஸ் ஒரு கப் சேர்த்து, மேலதிகமாக ஒரு கப் தண்ணீரும் விட்டுக் கொள்ளுங்கள். உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து அவிய விடுங்கள். விரும்பினால் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். சாதம் அவிந்ததும் எடுத்து வையுங்கள்.
தாச்சியில் 2 ரீ ஸ்பூன் நெய் விட்டு, வெட்டிய அன்னாசித் துண்டுகளைச் சேர்த்து, ஓரு நிமிடம் கிளறி உப்பு சேர்த்து எடுத்து வையுங்கள். அதே தாச்சியில் வெங்காயத்தாரைப் பிரட்டி பச்சை நிறம் மாறுமுன் சாதத்தை தாச்சியில் போட்டு அன்னாசித் துண்டுகள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அன்னாசி நெய்ச் சாதம் தயார்.
குறிப்பு:- சைவப் பிரியர்களுக்கு உருளைக் கிழங்கு காரப் பிரட்டல் தொட்டுக் கொள்ள உகந்ததாக இருக்கும். அசைவ பிரியர்கள் சில்லி சிக்கன் அல்லது டெவில்ட் புரோன் சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.
மாதேவி
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்